23 மகான்களின் சமாதிகள் திருவண்ணமலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா ?
ஆமாம் உண்மை தான் .
நீங்கள் கிரிவலம் போகும் பாதையில் அமைந்துள்ளது சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம்
அந்த ஆஸ்ரமத்தில் தான் 23 மகான்களின் சமாதிகள் அமைந்துள்ளது .
1 ஸ்ரீ அப்புசாமி சுவாமிகள்
2 அய்யன் சுவாமிகள்
3 அவிநாசி லிங்கம் சுவாமிகள்
4 அருணாசல சுவாமிகள்
5 இராமலிங்க சுவாமிகள்
6 இராமகிருஷ்ண சுவாமிகள்
7 கண்ணப்ப சுவாமிகள்
8 சங்கலி சுவாமிகள்
9 பட்டாம்பி சுவாமிகள்
10 மணி சுவாமிகள்
11 சங்கர நம்பி சுவாமிகள்
12 சடைச் சுவாமிகள்
13 காளத்தி சுவாமிகள்
14 பிச்சாண்டி சுவாமிகள்
15 சுந்தர சுவாமிகள்
16 சிவனேசன் சுவாமிகள்
17 பத்தராசலம் சுவாமிகள்
18 லோகநாத சுவாமிகள்
19 சிவசாமி சுவாமிகள்
20 கண்ணாடி சுவாமிகள்
21 குட்டி சுவாமிகள்
22 சீனுவாச சுவாமிகள்
மற்றும்
23 சேஷாத்ரி சுவாமிகள்
இவர்கள் எல்லாம் அருணாச்சலத்தை தேடி வந்தவர்கள் , அருணாச்சலத்தோடு ஐக்கியமானவர்கள் .
இது போன்ற இடங்களை தரிசனம் செய்யாமல் கிரிவலம் செல்பவராக நீங்கள் இருந்தால் ,
அடுத்த முறை இந்த இடத்திற்கு சென்று வாருங்கள் .
மகிமையை உணர்வீர்கள
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அந்த காட்டில் ஒரு வேடன் மிருகங்களை வேட்டையாடி தம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருந்தான்.அவன் போதாத நேரம் அதே காட்டில் தவத்திற்காக தங்க வந்த ஒரு துறவி அவனிடம் , "இப்படி மிருக்கங்களைக் கொன்று பாவம் சேர்க்கிறாயே..இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற
நினைப்பு உன்னிடம் இல்லவே இல்லையா..?"என்றார்.
"சாமி...என்னைப் போல ஆட்களுக்கு எல்லாம் உங்களைப் போல பெரியவங்கதான் சாமி...எனக்கு எல்லாம் எப்படி சாமி கண்ணுக்குத் தெரிவார்.."
துறவிக்கு தவம் கெடக்கூடாது ...இவன் வேட்டை யாடுவது அவருக்கு இடைஞ்சல்,, .. "இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்...
உனக்கும் நேரில் வருவான்...நீ நாளை காலை சூரிய உதயத்தில் குளித்து ஈர ஆடையுடன் ஆற்றின் கரையில் வட திசை பார்த்து நில்..உன் கண்ணில் எது முதலில் படுகிறதோ அதையே நினைத்து 48 நாட்கள் தியானம் செய்..கடவுள் தோன்றுவார்..." என்று துறவி சொன்னார்.அவன் அப்படியே விடிந்ததும் குளித்து முடித்து
திருஞானசம்பந்தர் சுவாமிகள்
தேவாரத்திரட்டு
திருச்சிற்றம்பலம்
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சும்கீள்
உடையும் கொண்ட உருவம் என்கொலோ
🌹வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்களில் வாளை மீன்கள்
துள்ளிச்செல்கின்றன; பெண்கள் குளத்தில் குளிக்கின்றனர். இப்படி இருப்பது கோலக்கா என்னும் தலம். இங்கே இருக்கிறான் சிவன்.
இச்சிவன் சடையில் பிறை சூடி இருக்கிறான்; உடம்பில் விபூதி பூசி இருக்கிறான்; கீள்உடை கட்டி இருக்கிறான். இப்படிப்பட்ட உருவத்தை ஏன் கொண்டான்?
நலங்கொள் காழி
🌹🌹**
பல நன்மைகளை உடையது சீர்காழியில்
உள்ளவர் ஞான சம்பந்தர். அவர் திருக்கோலக்கா இறைவனைப் பாடி இருக்கிறார். அத்தலம் பெருமை உடையது. அவர் பாடிய பாடல்கள் வலிமை உடையவை.
_*சிவத்தைப் பெறுவதற்கு முதலில் நாம் என்ன செய்ய வேண்டும்?*_
முதலில் நாம் " விட " பழகிக்கொள்ளவேண்டும். கைவிட முயல்வோம்.
குரங்கு ஒன்று அந்த விவசாயிக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தது. குரங்கைப் பிடிக்க திட்டமிட்டார் விவசாயி.
குரங்கு பார்க்கும் வண்ணம் ஒரு கண்ணாடி ஜாடியில் அதற்கு மிகவும் பிடித்த வாழைப்பழங்களை வைத்தார். ஜாடிக்கு மூடி போடவில்லை. ஜாடியின் வாய் சற்றே சிறியது.
இதைப் பார்த்த குரங்கு ஆசைப் பட்டு அந்த வாழைப்பழத்தை பற்றியது. அதைப் பார்த்த விவசாயி அதனருகே வந்தார். அவர் வருவதற்குள் குரங்கு
வாழைப்பழத்தை விட்டுவிட்டு கையை வெளியே எடுத்து இருந்தால் தப்பித்து இருக்கலாம். ஆனால் ஆசை கொண்ட குரங்கோ அதை விட மனமில்லாமல் வாழைப் பழத்தோடு கையை வெளியே எடுக்க முயன்றது. முயற்சியில் தோல்வியுற்றது. விவசாயிடம் அகப்பட்டுக் கொண்டு அடி வாங்கியது.