கதை 1935யில் நடக்கிறது. நாயகன் green mile எனும் சிறைச்சாலையில் சிறை அதிகாரியாக பணி செய்கிறான். அவனுடன் இன்னும் சில அதிகாரிகள் பணி செய்கிறார்கள். அவனுக்கு மேல் வார்டனும் உண்டு.சிறையில் நடக்கும் சம்பவங்களை அவருடன் நாயகன் பகிர்ந்துகொள்வான்.இந்த சிறைசாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட
கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருப்பர். அதில் ஒருவன்தான் ஜான் coffey. இரண்டு பெண் பிள்ளைகளை கொடூரமான முறையில் கொன்ற காரணத்திற்காய் மரண தண்டனை பெற்றவன். இவனுடன்.. ஒரு psycho, எலி வளர்க்கும் வயதான கைதி. இன்னும் சிலர். நாயகனுக்கு ஒரு யூரின் செல்கயில் தீவிரமான வலி ஏற்படும். அதனால்
அவன் வேதனையில் துடிப்பான். இதை உணர்ந்த John Coffey அந்த வலியினை நீக்கி நாயகனை குணமாக்குவான்.கிறுக்கு சிறை அதிகாரியால் கொல்லப்படும் எலிக்கு உயிர் கொடுப்பான் ஜான் coffey. முரட்டுதனமா உடல் இருந்தாலும்,மற்றவர்கள் வலி உணர்ந்து அவர்களுக்கு உதவிசெய்து குணமாக்கும் சக்தி,John Coffeyக்கு
நாயகன் உணர்ந்து கொள்கிறான்.வார்டன் அதிகாரி மனைவியின் புற்றுநோயும் Johன் coffey தொடுதல் மூலம் குணமாகிறது.அவன் மூர்க்க குணம்கொண்டவன் அல்ல என்பதை உணரும் நாயகன்,Johncoffey காப்பாற்ற என்ன செய்தான்?எடுத்த முடிவு என்ன?இருசிறுமிகளின் கொடூரமரணத்திற்கு யார் காரணம்?இறுதியில் என்னவாயிற்று?
ஸ்டீபன் கிங் நாவல்களில் சிறப்பாக இயக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. படம் mystery emotional thriller.. கண்டிப்பா உலக சினிமா ரசிகர்கள் நிறைய பேர் பார்த்து இருப்பிங்க. பார்க்காதவங்க என் bio ல லிங்க் இருக்கு பார்த்து கருத்துக்களை சொல்லுங்க. நம்பி பார்க்கலாம்
🔞காட்சிகள் இல்லை..
ஒரு நல்ல காமெடி திரில்லர் movie பார்க்கணும்னு ஆசைப்படுறவங்க கண்டிப்பா இந்த படம் பார்க்கலாம். நாயகன் காவல்துறை அதிகாரி. கிரிமினல் நண்பனை நம்பி பணத்தை இழந்து வீடு ஏலம் போகும் சூழல். காவல் நிலையத்தில் லஞ்சம் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் டீம் விசாரணைக்கு செல்ல வேண்டிய சூழல்.
வீட்டில் எங்கும் வெளிய கூட்டிட்டு போகலன்னு மனைவியின் புலம்பல்.அதே நேரம் தேடப்படும் குற்றவாளி philipines நாட்டில் இருப்பதாக தகவல். இங்கு காவல்துறை நண்பர்கள் பணம் சேர்த்து நாயகன் குடும்பத்தை philipines நாட்டுக்கு சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.நாயகனின் நண்பன் ஒரு புதையல்
கண்டுபிடித்து அதை பற்றிய தகவலை நாயகனுக்கு அனுப்பிவைக்கிறான்.நாயகன் philipines வந்ததும் அவன் நினைத்ததுக்கு மாறாக நடக்கிறது.இறுதியில் நாயகன் எல்லா பிரச்சனையும் எப்படி சமாளித்து ஜெயித்தான் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்க.முக்கியமா நாயகன் பாதுக்காவலர்கள்😂😂,அப்புறம் நண்பன் 😍😍
நம்ம எல்லாரோட நட்பு வட்டத்துலேயும் ஒருத்தன் இருப்பான்.அவன் நாமாககூட இருக்கலாம்.அவனுக்கு எதுவுமே உருப்படியா தெரியாது.ஆனால் எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பில்டப் பண்ணி காரியத்தை சாதிச்சுருவான். இதே ஏன் இப்ப சொல்றேன்னா இந்த கதையின் நாயகனும் அந்த ரகத்துக்குள்தான் வருவான்.நம்ம Oldboy ஹிரோ
நம்ம ஆளு சுங்கத்துறைல வேலை பார்க்கிறாரு..அப்ப ஒரு கேங்ஸ்டர்கூட பழக்கம் கிடைக்குது.அவரோட பழக்கத்தை வைச்சு அவன்கூட பார்ட்னர் ஆகுறாரு.நாயகனுக்கு யார்கிட்டே அதிகாரம் பண்ணனும்னு தெரியாது.சண்டை போட தெரியாது. கடத்தல் தொழிலைப் பற்றி சுத்தமா தெரியாது.கட்டப் பஞ்சாயத்தும் தெரியாது.ஆனால்
Gangster ah உருவாகுறான்..அது எப்படி?.அதான் கதை.படத்துல நாயகன் ஒரு கைத்துப்பாக்கி வைச்சிருப்பான் தோட்டா இல்லாமல் இருக்கும்.படத்தோட கிளைமேக்ஸ் வரைக்கும் அது அவன்கூடவே இருக்கும்.அது ஏன்னு படம் பார்த்துட்டு சொல்லுங்க.இந்த படத்தை பற்றி காலைலே ஒருத்தர் பதிவிட்டிருந்தார் அவருக்கு நன்றி.