#சோலார் மின்சாரம் எப்படி உற்பத்தி ஆகிறது என்று தெரியாதவங்க தெரிஞ்சுக்க பார்த்த, வேலைசெய்த அனுபவத்த இங்க #திரட்டாக பதிவு செய்கிறேன்..🙏
இந்த சோலார் பேனல் 6 அடி நீளம்,31/4 அடி அகளம் 370 வாட்ஸ் உள்ள பேனல்..முதல் போட்டோ பேனல் முன்சைடு. இரண்டாவது போட்டோ பேனல் பின்சைடு..👇
இந்த டிவைஸ் ஆப்டிமைசர் இந்த டிலைஸ்சில் இரண்டு பேனல்களை இனைக்க வேண்டும். வெயில் தகுந்தாட்போல பேனலில் இருந்து வரும் DC வோல்டேஜை இந்த ஆப்டீமைசர் சீராக அனுப்பும்.. 👇
இதே அலைவரிசைல 15 ஆப்டிமைசர்ல 30 பேனல்கள இனைச்சு 30பேனல் சீரியஸ்ல வர்ற DC வோல்டேஜ இந்த DC டிஸ்டிபூசன் பாக்ஸ்ல கனைக்ட் செய்யனும்..👇
இதே மாதிரி 300 பேனல்ல இருந்து 10 செட் கேபிள்கள இந்த DC டிஸ்டியூசன் பாக்ஸ்ல இணைச்சு..👇
டிஸ்டிபூசன் பாக்ஸ்ல இருந்து வர்ற DC வோல்டேஜ ரெண்டாக பிரிச்சு இந்த போட்டோல இருக்க லெப்ட்&ரைட்ல இருக்க கன்ட்ரோல் யூனிட்ல கொடுத்து..👇
அதில் இருந்து சென்டர்லயிருக்க இன்வெட்டர்க்கு வோல்டேஜ் போய் அந்த இன்வெட்டர் 100kw திறன் கொண்டது அந்த இன்வெட்டரில் இருந்து வரும் வோல்டேஜ்ஐ இந்த டிஸ்டிபுசன் பாக்ஸ்சில் கொடுத்து அதில் இருந்து வரும் வோல்டேஜை நாம் 100Hp க்கான லோடு கொடுத்து உபயோகிக்கலாம்..👇
இதே அலைவரிசைல 288 இருந்து 30 பேனல் வரைக்கு மாட்டும் போது 1 MW கான செட்டப் ரெடி ஆகும் நா இப்ப சொல்லிட்டு இருக்கர்து பேனல் ரூப்ல மாட்டி மின்சாரம் எடுக்கர்த பற்றி ஆகவே பேனல் ரூப் அளவுக்கு தகுந்த மாதிரி சின்ன மாற்றம் இருக்கும் 288 பேனல்ல இருந்து 300க்குள்ள வரும்..👇
10 இன்வெட்டரோட அவுட் புட்ட நம்ம லைன்ல சிங்கர்நைஸ் செஞ்சுட்டா சூரிய வெளிச்சம் ஸ்டாக் அனதில் இருந்து சோலார் மின் உற்பத்தி ஸ்டாட் ஆகும்..சரசரியாக காலை 6 30க்கு மேல் உற்பத்தி ஸ்டாட் ஆகும்..👇
அப்படி ஆரம்பமாகும் டைம் போக போக மின் உற்பத்தியோட கிராப் மேல போகும் மாலை 6:30 வரைக்கும் உற்பத்தி இருக்கும் நல்ல வெயில் காலங்களில் நாள் ஒன்றுக்கு 1MW சோலார் பிளான்ட்ல இருந்து 6k யூனிட் கிடைக்கும் மாத ஆவ்ரேஜாக 5,750 யூனிட் உறுதியாக கிடைக்கும்..ஆக மாதம் 1,72,500 யூனிட் கிடைக்கும்..👇
இதே இன்வெட்டர்,பேனல் எஇசென்சிய பொருத்து சில கெக்ரான்,மெக்ரான் இன்வெட்டர்க மாட்டனா பெரிய தலைவலி இருக்கு..1MW சோலார் (ரூப்ல) பிளாண்ட் போட 3.5c பக்கம் வரும்னு சொல்றாங்க இதுல கம்பெனிக்கு கம்பெனி விலை வித்தியாசம் இருக்கு..👇
இந்த 3.5c இன்வெர்ஸ் மெண்ட் செஞ்சா மூனு நாலு வருசத்துல ரிட்டன் எடுக்கலாம் பெரிய லெவல்ல மெயிண்டென்ஸ் இல்ல பேனல் கிளீனிங் மட்டுந்தான் அதுக்கும் ஆட்டோ ஸ்பிரிங்லர் போட்டாச்சுனா சுத்தமா கிளீன் பண்ணிடும்..👇
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சமீபத்துல தலைநகர்ல ஒரு அப்பாட்மெண்ட்ல கரண்ட் பில் அதிகமாக இருக்கு #சோலார் பிளாண்ட் போடனும்னு கேட்டாங்க..🔆
அவுங்க அப்பாட்மெண்ட்டோ பவர் காமன் யூசேஜ் பவர் அனளைஸ் செஞ்சு அவுங்களோட 4மாச கரண்ட் பில் வாங்கி அதோட நம்ம லோடு அனளைஸ் செஞ்ச டேட்டாவ இனைச்சு பாத்தோம்.🔆
முக்கியமாக வாட்டர் பம்ப் & WTP பிளாண்ட்டுக்கும் மட்டும் பல லட்சம் கட்டியிருக்காங்கனு டேட்டா கிடைச்சுது.. அவுங்க கிட்ட இருக்க இடத்துல 150kw சோலார் பேனல் போடலாம்..🔆
ஆதி மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய சக்தி, சூரிய வெளிச்சம் தான். அதன் பின்னரே சிக்கிமுக்கிக் கல்லால் தீ மூட்டும் அறிவு பெற்று நெருப்பு, நீர் எனத் தொடர்ந்து பல்வேறு சக்திகளை கண்டறிந்து பயன்படுத்தத் தொடங்கினான்..🔆
பிறகு நீர்நிலைகளிருந்து பெறப்படும் நீர் மின்சாரம், நிலக்கரியை எரித்து அதிலிருந்து அனல் மின்சாரம், அணுவைப் பிளந்து, அணு உலை வழியாக மின்சாரம் என முன்னேற்றமடைந்து கொண்டே இருந்தான். 🔆
அதேவேளையில் சுற்றுப்புறச் சூழலும் கெட்டுக்கொண்டே வந்தது. நிலக்கரியை எரிக்கும் போது அதிலிருந்து வரும் வெப்பம், சாம்பல், புகை ஆகியன சுற்றுப்புறச்சுழலைக் கெடுக்கும் வண்ணம் உள்ளது என்று உலக ஆய்வுகள் சொல்கின்றன.🔆
தொழில் நிறுவனங்கள்ல மெசின் என்ன மாதிரி லோடு எடுக்கு..?மோட்டாரோட எபிசென்சி சரியாக இருக்கா..? மோட்டாரோட hpக்கு மேல லோடு எடுக்குதா..? அதுவும் எந்த டைம்ல எடுக்குது...? வோல்டேஸ் ட்ராப் டைம்ல என்ன லோடு எடுக்குது..? 🔆
சீரான வேல்டேஜ் வரும் போது என்ன மாதிரி லோடு எடுக்குது.? இந்த லைன்ல ஆர்மோனிக் பில்டர் போடனுமா..? பவர் ஃபேக்ட் என்ன மாதிரி இருக்கு..?
அந்த மெசின்ல உற்பத்தி ஆகும் போருள்க்கு யூனிட் காஸ்ட் என்னனு அந்த மெசினோட புல் டேட்டாவ எடுக்கலாம்...🔆
அதற்கு பெரிய நிறுவனங்கள்ல ஒரு டீமே இருக்கும்.. அந்த டீமோட வேலையே தினமும் ஒரு மெசின்ல #Krykard#Load_Manager மாட்டி மெசினோட டேட்டாவ எடுத்து சிஸ்டத்துல கனைக்ட் செஞ்சு கிராப்போட பிரிண்ட் எடுத்து அந்த மெசின்ல என்ன என்ன பிரச்சனை இருக்குனு..🔆
உலகின் தலைசிறந்த 9+1 #சோலார்#இன்வெர்ட்டர் & சோலார் பேனல் உற்பத்தியாளர்கள். பற்றி பாத்தோம்னா முதல் இடத்துல இருக்கர்து #LG தென் கொரிய நிறுவனமாகும், 1958ல எலக்ட்ரானிக் சாதனங்களின் உற்பத்தியாளராக ஆரம்பிக்கப்பட்டது..⚡️
#சோலார் பற்றிய பெரிய லெவல்ல R&D க்கு பிறகு, #LG தனது முதல் #சோலார்#பேனலை 2009ல தயாரித்தது. #சோலார் உற்பத்தியாளராக தன்னை அறிமுகப்படுத்திய சிறிது காலத்திலேயே, #LG அதன் 14MV #சோலார் Farmயை தென் கொரியாவில் கட்டத் தொடங்கியது.⚡️
அப்போதிருந்து, #LG#சோலார் பவர் சிஸ்டத்திற்கான #சோலார் பேனல்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாறியுள்ளது, மேலும் இது உலகளவில் சிறந்த #சோலார்#இன்வெர்ட்டர் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்..⚡️
இந்தியாவோட #Renewable_Energy துறைல என்ன மாதிரீ முன்னேற்றம் 2021 டிசம்பர் வரைக்கும் அடைஞ்சிருக்கு இந்தியாவோடசோலார் பவர் & விண்டு மில் பவர் உற்பத்திலயும் உலக லெவல்ல நான்காவது இடத்தை தக்கவச்சிருக்கோம் அதோட புள்ளி விவரத்த இந்த #திரட்ல பாக்கலாம்..⚡️
#Renewable_Energy ஜென்ரேசன்எபிசென்சி கடந்த சில ஆண்டுகள்ல அதிகரித்துள்ளதுனு #CAGR டேட்டால இருக்கு இதுவே 17.33% ஒன்றிய அரசாங்கத்தின் ஆதரவுடன், அதிகரித்த பொருளாதாரம், பல முதலீட்டாளர்களின. வரவும் முன்னோக்கியே இருக்கு..⚡️
பாரிஸ் ஒப்பந்தத்தின் படி 175 GW , 2030ல 523 GW (ஹைட்ரோவிலிருந்து 73 GW உட்பட) #Renewable_energy efficiency நிறுவ நம்ம ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. 2021 அக்டோபர் சந்தை அளவு, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 1.49 GW அதே..⚡️
#சோலார்_பேனல் மாட்டி பவர் உற்பத்தி செய்யலாம்னு முடிவு செஞ்சுட்டீங்னா முக்கியமாக நம்ம என்ன மாதிரி பேனல், எந்த கம்பெனிய வாங்க போறோம்னு தேர்வு செய்யனும் ஏன்னா பேனல் எபிசென்சி கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும் இப்ப கரண்ட்ல இருக்க சோலார் பேனலோட #எபிசென்சி பற்றிய இந்த #திரட்ல பாக்கலாம்.🙏
சோலார் பேனல் எபிசென்சி மேல்படும் சன்லைட்ட எத்தனை % மாக மின்சாரமாக மாற்றப்படுகிறது என்பதற்கான மெசர்மெண்ட் ஆகும். இப்ப பயன்படுத்தப்படும் சோலார் பேனல்க தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தின் (NREL) படி, 16% டூ 22% வரை எபிசென்சி கொண்டவை. சராசரி எபிசென்சி 19.2% ஆகும்..⚡️
20% க்கும் மேல எபிசென்சி இருக்க சோலார் பேனல்கள் பிரீமியம் எபிசென்சி பேனல்களாகவும் விலையும் அதிகமாக வருகிறது, மேலும் #Sun_power , #LG_Solur , #REC இந்த கம்பெனிக பிரீமியம் எபிசென்சி பேனல்க தர்றாங்க. இதுல நம்ம முக்கியமாக கவனிக்க வேண்டியது..⚡️