#அறிவோம்கடை - #CocoLagoon By Great Mount , Pollachi
நம்ம டீசர் லையே சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள்👌
இது பொள்ளாச்சியில் இருந்து 10km ல இருக்கு. மிக பிரீமியம் ரிசார்ட் இது. சரி இங்க தங்க என்ன விலை, உணவு வகைகள், வசதிகள் என்ன என்ன இருக்கு? எல்லாத்தையும் பார்க்கலாம்
இங்க இருக்கும் ரூம் மற்றும் அதன் விலை (Per Night for 2 persons) :
✴️Executive Deluxe (Free Breakfast) - Rs.7499 and Rs.8899(With B.F & Buffet Dinner) and Rs.10,299(B.F,Lunch & Dinner)
✴️Royal Suite - Rs.11k to Rs 13,800
✴️Presidential Suite - Rs.11k to Rs.13,800
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா...Royal Suite ல் தான் இந்த படுத்துட்டு குளிர்க்கற டப் option இருக்கு🛀
✴️ Pool Villa - 18k starting.
ரூம் ல 24x7 AC பயன் படுத்திக்கலாம்.. Tv , heater, wifi இப்படி காமன் ஆக எல்லா ரிசார்ட் லையும் இருக்கற வசதியும் இருக்கு.
அடுத்து முக்கியமான விசயம் இந்த swimming pool 🏊
இங்க போறது னு முடிவு செஞ்சுட்டா .. போகும் போது கண்டிப்பா ஜெர்ஸி cloth (Tshirt + Shorts) எடுத்துட்டு போயிருங்க..காட்டன் dress ல குளிக்க அனுமதி இல்லை. அங்கேயே வாடகைக்கும் கிடைக்கும்..எதுக்கு extra செலவு). So plan perfect ah😊
நாங்க போன டைம் (After Corona and lockdown restrictions) swimming pool ல குளிக்க slot booking அதாவது நீங்க உங்க ரூம் ல இருந்து போன் செஞ்சு ஒரு time புக் செஞ்சுகனும்.. அப்போ அந்த time ல நீங்க மட்டும் தான் allowed.பேமிலி யா போகும் போது இது மிக நல்ல விசயமா இருந்துச்சு. 👨👩👦👦Privacy
உணவு வகைகள் :
நம்ம Check-in செய்யும் போதே ஒரு தேங்காய் தொட்டி ல ஒரு பாணம் கொடுப்பாங்க🍮
இங்க food zone ஸ்விம்மிங் pool பக்கத்தலையே இருக்கும். Evening snacks வேற லெவல் ல இருக்கும்(Separate Bill)
We tried Chicken Nuggets,Chicken Pakoda, French Fries,Special Tea. எல்லாமே சூப்பர்👌
Night Dinner :
Due to Covid..They served to our table (Instead of Buffet spread)
இங்க serve செய்யற staffs மிக மிக அருமை. குழந்தைக்கு தோசை வேணும் னு கேட்டோம்..யோசிக்காம செஞ்சு தந்தாங்க(Its not in their regualr buffet menu)
இங்க stay செஞ்சா ரொம்ப நேரம் தூங்கிறாதீங்க😇 ஏன் னா? மதியம் 12 மணி வரைக்கும் தான் River Walk அனுமதி உண்டு. இவர்களே நம்மை அங்கு கூப்பிட்டு போவாங்க🏞️
குழந்தைகளுடன் சென்றால் மிக மிக கவனம் அவசியம்.
இங்க குழந்தைகள் விளையாட ஊஞ்சல், ஸ்லைடர் , ஜம்பிங் நெட் எல்லாம் இருக்கு. மாலை நேரம் இங்க விளையாட ரொம்ப நல்லா இருந்திச்சு😍
Useful Bike and Car Accessories - #ArivomGreatSummerSale
பைக் மற்றும் கார் வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதா இருக்கும் இந்த thread. நம்ம வாகனங்களை நல்ல முறையில் பராமரிக்க , பாதுகாப்பா வண்டி ஓட்ட தேவைப்படும் பொருட்கள் எல்லாம் இந்த பதிவுல இருக்கும் . அதிலும் இந்த #AmazonGreatSummerSale ல நல்ல offer ல கிடைக்கும் பொருட்கள் எல்லாம் கொடுத்து இருக்கேன் . தேவைப்படும் நண்பர்கள் மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
1. Car Vacuum cleaner - #ArivomGreatSummerSale
Car க்கு நல்ல suction power உடன் இருக்கும் நல்ல vacuum cleaner வாங்க நினைத்தால் கண்டிப்பா இந்த 3 options consider செய்யலாம்.
🔅TUSA (Rs.2999) : amzn.to/3YprUtx
🔅Woscherr 2in1 Tyre Inflator & Car Vacuum Cleaner (Offer Price : Rs.1899 | Normal Price: Rs.2199) : amzn.to/42L6XeR
🔅YEARWIN 4 in 1 - Wet/Dry Use (Offer Price: Rs.2655 | Normal Price: Rs.2745) : amzn.to/44qWtm3
2. Car wash Shampoo (1 Litre)
வெளியில் கொடுத்து கார் wash அடிக்கடி செய்ய முடியாது. இதை வாங்கி வெச்சிட்டா atleast எதாவது முக்கியமான function அல்லது meeting எல்லாம் போகும் போது நாமலே Car wash செஞ்சுக்கலாம். This shampoo removes Tough Dirt & Road Grime on all types of Cars, Giving a clean and dust free look.
Normal Price : Rs.706
Offer Price: Rs.655
Reviews : 4.4* | 36,613 Ratings
Link to Buy : amzn.to/3KvKVD8
போன வருடம் எப்படி ஒரு AC வாங்க வேண்டும் ? வாங்கும் போது என்ன எல்லாம் கவனிக்க வேண்டும் என்று விரிவாக எழுதி இருந்தேன் . அதே மாதிரி இந்த வருடம் Ceiling Fan வாங்கும் போது எதை எல்லாம் மனதில் வைத்து தேர்வு செய்ய வேண்டும் என்று தான் இந்த பதிவு . Fan வாங்கும் ஐடியா ல இருக்கீங்க இல்லை புது வீடு கட்டி அதில் ceiling fan போடனும் னு இருக்கீங்க என்றால் மறக்காமல் இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க . இந்த Thread முடிவுல சில நல்ல ceiling fans options கொடுத்து இருக்கேன் . அதனால் கடைசி வரை படியுங்கள்.
Size of Blade :
முதலில் நாம் எந்த size fan வாங்கனும் என்பதை தான் தெரிந்து கொள்ள வேண்டும் . Fan Size என்பது அதன் Blade size வைத்து தான் முடிவு செய்யறாங்க.
Most Common Size 1200 mm / 47 Inches :
இது சின்ன size ல இருந்து medium size rooms க்கு செட் ஆகும். உதாரணத்துக்கு சின்ன size bedroom , Study room ல எல்லாம் இந்த size fan தேர்வு செய்யலாம் .
1400 mm / 55 Inches :
உங்க Living Room/Hall அல்லது Master Bedroomக்கு Fan வாங்க நினைத்தால் கண்டிப்பா இந்த size fan வாங்குங்க. இது தான் அதிக range cover செய்யும்.
1200 mm / 47 Inches :
சிலர் வீடு கட்டும் போதே Kitchen பக்கத்துல Living + Dining னு common area ஆக partition கொடுத்து கட்டி இருப்பாங்க. அவர்களுக்கு இரண்டையும் சேர்த்தி cover செய்ய ஒரு Fan போதாது . . அவர்கள் இரண்டு Fan 1200mm ல தேர்வு செஞ்சுக்கலாம் . அல்லது சின்ன area தான் ஒரு Fan மாட்ட தான் provision இருக்கு என்றால் மேல சொன்ன 1400 mm / 55 Inches Fan தேர்வு செஞ்சுக்கலாம் .
900 mm / 35 Inches :
நிறைய பேர் கேட்கும் ஒரு suggestion , அம்மாக்கு அல்லது மனைவிக்கு kitchen ல வேலை செய்யும் போது வியர்க்காமல் இருக்க ஒரு நல்ல Fan சொல்லுங்க என்று தான் . அவர்கள் இந்த size தேர்வு செய்தால் போதும்.
Power Consumption :
அடுத்து நாம் கவனிக்க வேண்டியது ஒரு fan எவ்ளோ electricity consume செய்யுது என்று ?
இரண்டு வகையான FAN இருக்கு . ஒன்று BLDC FAN மற்றொன்று NON BLDC FAN. முதலில் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும் .
இப்ப உதாரணத்துக்கு ஒரு NON BLDC FAN (1 to 4 Star Rating) Consumes 50 to 60watts of electricity என்றால் BLDC FAN வெறும் 30 to 40 Watts தான் consume செய்யும். இதனால் BLDC FAN ல Current Bill குரைவாக தான் வரும் . இதனால் முடிந்த அளவு BLDC fan தேர்வு செய்யுங்க .
Summer Essentials For Adults - Part 1 :
ஏற்கனவே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது . இனி மார்ச் , ஏப்ரல் , மே மாதம் எல்லாம் என்ன ஆக போறமோனு தெரியல. முடிந்த அளவு மதியம் வெளிய போகும்படி எந்த வேலையும் வெச்சுக்காதீங்க , தண்ணீர் முடிந்த அளவு எவ்ளவு குடிக்க முடியுமோ அவ்ளோ குடிங்க . . இந்த Summer சமாளிக்க தேவைப்படும் பயனுள்ள products இந்த thread ல கொடுத்து இருக்கேன் . எது உங்களுக்கு தேவைப்படுமோ அதை வாங்கிக்கங்க . மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க .
1. Sunscreen (Premium):
இந்த Summer க்கு மிக முக்கிய product என்றால் Sunscreen தான் . இந்த மாதிரி உயர்ரக sunscreen வாங்கி பயன்படுத்துங்கள்..
#AmazonGreatRepublicDaySale - DAY 3 - #ArivomRepublic
இந்த முறை TWS, Water Heater எல்லாம் வாங்காதீங்க , விலையை எல்லாம் இஷ்டத்துக்கு உயர்த்தி வெச்சிருக்காங்க. இந்த பதிவுல உண்மையாகவே நல்ல offer ல கிடைக்கும் பயன் உள்ள products ஒரு thread ஆ கொடுத்து இருக்கேன். உங்களுக்கு தேவையானதை வாங்கிக்கங்க.
1. Large Reversible Baby Play Mat #ArivomRepublic
இந்த MAT ஏற்கனவே நிறைய முறை suggest செஞ்சிருக்கேன். முன்ன இதன் விலை Rs. 999 இருந்திச்சு. இப்போ #AmazonGreatRepublicDaySale ல Rs.899 க்கு கிடைக்குது. உண்மையாகவே நல்ல offer. உங்க வீட்டில் குழந்தைகள் இருந்தால், நண்பர்கள் குழந்தைக்கு பயன் உள்ள gift கொடுக்க நினைத்தால் கண்டிப்பா இதை consider செய்யலாம். தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க.
2. Study Table for Students / Foldable Laptop Table Desk - #ArivomRepublic
ஏற்கனவே இந்த table நிறைய முறை suggest செஞ்சிருக்கோம். அப்ப எல்லாம் இதன் விலை Rs.599 இருந்திச்சு. இப்போ #AmazonGreatRepublicDaySale ல Rs. 499 க்கு கிடைக்குது. உண்மையாகவே நல்ல offer. தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க.
Arivom Dubai - Day 2:
என்னுடைய துபாய் பயணம் Day 1 பற்றி எழுதிய பதிவு நிறைய பேர் Bookmark செஞ்சு வெச்சிருக்கீங்க. இன்னும் அதை படிக்காதவங்க, அதை படித்துவிட்டு இதை தொடருங்கள். இந்த பதிவையும் மறக்காமல் bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
நாங்க Trip plan செய்யும் போதே. பெரியவர்களுக்கு தனி schedule, குழந்தைகளுக்கு தனி schedule... common ஆக எல்லாரும் போகும் இடத்திற்கு தனி schedule னு தெளிவா பிரித்து கொண்டோம். காரணம் - தேவை இல்லாமல் பணத்தையும் நேரத்தையும் வீண் அடிக்க கூடாது என்று தான். உதாரணத்துக்கு , வயதானவர்களால் இந்த Desert safari செய்ய இயலாது. கூடவே ATV rides, Camel ride எல்லாம் போக மாட்டாங்க.. அதனால் அவ்வளவு தூரம் travel செஞ்சு கூட்டிட்டு போவது not advisable. நீங்க போவதாக இருந்தாலும், இதே அட்வைஸ் தான். வயதானவர்களை கூட்டி சென்று அவதி பட வேண்டாம்.
இரண்டாம் நாள், மாலை தான் நாங்க Desert Safari போகனும் என்பதால்.. ஒரு batch காலை தங்கம் வாங்க போயிட்டோம், இன்னொரு batch Dolphinarium போயிட்டாங்க. முதலில் இந்த தங்கம் வாங்குவது பற்றி எழுதிடறேன். ஏன் என்றால் நான் துபாய் ல இருக்கும் போதே நிறைய பேர் சீக்கிரம் பகிருங்கள் னு கேட்டு இருந்தீங்க.
Location : Gold Souk
துபாய் ல தங்கம் வாங்குவதால் என்ன லாபம்?
முதலில் இதை புரிந்து கொண்டாலே துபாய் போனால் தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்று நீங்க முடிவு செஞ்சுக்கலாம்.
1. Tax Benefits:
நீங்க வாங்கும் தங்கத்தின் VAT திரும்ப பெற்று கொள்ளலாம் (At Airport VAT REFUND COUNTER). அதனால் எந்த காரணத்துக்காகவும் Bill இல்லாமல் தங்கம் வாங்க வேண்டாம்.
One of the primary advantages of buying gold in Dubai is the absence of Value Added Tax (VAT) on gold transactions. While tourists can get a VAT refund in Dubai, in India, gold purchases are subject to a Goods and Services Tax (GST), which is currently at 3% for gold.
2. Lower Gold Prices:
இது எல்லா கடைகளுக்கும் , எல்லா நகைகளுக்கும் பொருத்துமா என்று கேட்டால்? இல்லை என்பது தான் பதில். ஆனா பொதுவான கருத்து என்னனா ? இந்தியாவின் விலையை விட துபாயில் தங்கத்தின் விலை குறைவு என்பது தான்.
3. No Making Charges or Less Making Charges:
இது தான் மிக முக்கிய காரணம் என்று நான் சொல்லுவேன். எல்லா கடைகளிலும் "No Making Charges For Selective Designs" னு போட்டு வெச்சிருப்பாங்க. அதாவது எல்லா நகைகளுக்கும் பொருந்தாது.. ஒரு சில collections க்கு மட்டும் கொடுத்து இருப்பாங்க. ஒரு சில கடைகளில் மட்டும் எந்த நகை வாங்கினாலும் No Making Charges. அப்படிப்பட்ட ஒரு கடை தான் "ANWAR LUXURY" இந்த கடை திறப்பதற்கு முன்னையே கூட்டமா மக்கள் queue ல நிற்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த கடையில் நாங்களும் தங்கம் வாங்கினோம்.. ஆனா இங்க இருக்கும் collections எல்லாம் அவ்ளோ நல்லா இல்லை.. விலை குறைவாக, Making charges இல்லாமல் கிடைத்தது என்று மட்டும் வாங்கிட்டோம்.
இது இல்லாமல் நிறைய Reputed Gold Shops இருக்கு. Thangals , Joyalukkas, Damas, and Malabar Gold & Diamonds னு நிறைய நல்ல கடைகள் இருக்கு. இங்க collections எல்லாம் ரொம்ப நல்லா இருந்திச்சு. ஆனா நீங்க மறக்காமல் செய்ய வேண்டியது "Bargaining to reduce wastage Charges"கண்டிப்பா செய்வாங்க.
நாங்க Thangals ல தான் எல்லா நகைகளையும் வாங்கினோம். Collections ரொம்ப நல்லா இருந்திச்சு. இவங்களுக்கு நிறைய branch இருக்கு. அதனால் ஒரு கடையில் பிடிக்கவில்லை என்றால் மற்ற கடைக்கு இவர்களே கூட்டிட்டு போறாங்க. முடிந்த அளவு நேரத்துலையே போயிடுங்க.. கூட்டம் அதிகம் ஆக ஆக உங்களுக்கு எடுத்து காட்ட கொஞ்சம் நேரம் எடுத்துக்குவாங்க. அதனால் தான்.
Kids Educational Games and Toys Collections :
நிறைய பேர் கேட்ட suggestion னு கூட சொல்லாம் . குழந்தைகள் நிறைய நேரம் mobile பயன்படுத்தறாங்க.. அவர்களை engage செய்ய நல்ல Educational board games நிறைய suggest செய்யுங்கனு . இந்த thread முழுவதும் படியுங்கள்.. உங்க குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற board games வாங்கி கொடுங்க.. குறிப்பா வாங்கி கொடுத்து அவர்களுடன் நேரம் ஒதுக்கி விளையாடுங்க. மறக்காமல் இந்த பதிவை Bookmark ல kids னு save செஞ்சு வெச்சுக்கங்க.
1.Creative Fun with Words | 3 Letter Words (Age :4+ Years)
How to Play : Build 3-letter words by assembling beautifully illustrated pictures of objects relating to child’s immediate environment.
Skills Developed : Letter recognition, Letter sounds, Spelling Reading