#அருள்மிகு_சிவன்மலை
#சுப்பிரமணியர்_திருக்கோவில்

#தல_வரலாறு:

சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும்.
மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பட்டாலி என்ற கிராமமே சிவன்மலை அமைந்துள்ள பகுதியாகும்.

பால்வளம் மிக்க வனத்தில் கோவில் கொண்டுள்ள நல்ல மங்கை உடனமர் சிரவனீஸ்வரர் மகனே, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி.
மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது.
பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார்.
#உத்தரவு_பெட்டி

சிவன்மலை கோவில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து,
தனக்கு இன்ன பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். அதன்படி, சுவாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டு, உத்தரவானதும் குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை,
பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

#பிரார்த்தனை :

திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது.
வக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம். சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார். மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து,
இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.

#தலச்_சிறப்பு :

மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே. மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே. நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன.
அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும் இங்கு கிடைக்கும்.

#சிவன்மலை_ஆண்டவனுக்கு
#அரோகரா🙏🙏🙏 நன்றி அண்ணா @Pvd5888 🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கண்ணன்தேவன்

கண்ணன்தேவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kannanthvan

13 Sep
குறுக்குத்துறை முருகன் கோயில்..

முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லி தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் இருக்கின்றன.
அவற்றில் ஒரு கோயில்தான் இந்த முருகன் கோயில். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தை எதிர்த்து பல நூறு ஆண்டுகளாக இந்த கோயில் எந்தவித சேதமும் இன்றி நிலைத்து நிற்பதன் அதிசயத்தை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி தூத்துக்குடி பகுதியில் உள்ள துணைக்காயம் எனும் இடம்வரை பயணிக்கிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆற்றுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள இந்த முருகன் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Read 10 tweets
12 Sep
தென்னாடுடையசிவனேபோறி
காஞ்சிபுரம்_மாவட்டத்திலுள்ள 108_சிவாலயங்கள்
இந்துக்களுக்கு வட நாட்டு புனித தலங்களில் பிரதானமானது காசி. அதை போலவே தென்னாட்டு புனித தலங்களில் பிரதானமானது காஞ்சிபுரம். சைவர் வைணவர், சமணர் மற்றும் பெளத்தர் போற்றும் ஒரே புனித தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு 1008 சிவ தலங்களும், 108 வைணவ தலங்களும் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றில் சொற்ப அளவிலானவை தான் இன்று உள்ளன என்றாலும், பல தொன்மையான, பாடல் பெற்ற கோயில்கள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ளன. இவற்றில் 108 சிவாலயங்களை இங்கே காணலாம்
01. பிரம்மபுரீஸ்வரர்
02. வேதவநேஸ்வரர்
03. புன்னியகொட்டீஸ்வரர்
04. மணிகண்டீஸ்வரர்
05. மார்கண்டேஸ்வரர்
06. பணாமணிஸ்வரர்
07. கணிகண்டீஸ்வரர்
08. பணாமணிஸ்வரர்
09. அத்தீஸ்வரர்
10. குச்சிஸ்வரர்
11. காசிபேஸ்வரர்
12. ஆங்கீரீஸ்வரர்
13. சாந்தாலிஸ்வரர்
14. வசிட்டேஸ்வரர்
15. லட்சுமி ஈஸ்வரர்
Read 10 tweets
11 Sep
#ஓம்_சரவணபவ

ஈரோடு மாவட்டம் பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி ஆலயம்

மூலவர் : சுப்பிரமணிய சுவாமி
உற்சவர் :
அம்மன்/தாயார் : வள்ளி தெய்வயானை
தல விருட்சம் : கடம்பம்
தீர்த்தம் : சரவணதீர்த்தம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் Image
புராண பெயர் : -
ஊர் : பச்சைமலை
மாவட்டம் : ஈரோடு
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா

பிரதோஷம் தேய்பிறை அஷ்டமி கிருத்திகை சஷ்டி, விசாகம், அமாவாசை ஆகிய நாட்களில் அந்தந்த தெய்வங்களுக்கு சிறப்பு. அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. Image
இத்தலத்தில் முருகனுக்குகந்த விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தை மற்றும் ஆடிக் கிருத்திகை நாட்களில் சத்ரு சம்ஹார ஹோமம், முருகனின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று லட்சார்ச்சனை, பவுர்ணமி அன்று கல்யாண சுப்ரமணியசுவாமி தம்தேவியருடன் திருவீதி Image
Read 35 tweets
5 Sep
நாச்சியார் கோவில், கும்பகோணம்
----------------------------------------------------------------

காண்போரை வியக்க வைக்கும் அதிசய கல் கருடன்!

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த காற்றை சுவாசிக்கும் கல் கருடன் <<
செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்’ என்றும், ‘காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழன்.

தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன் மயூரசன்மன். முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும்
கரதலப் பாடமாக அறிந்தவன்.

அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன். நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும்
தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்" என்றவர், சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி,
Read 19 tweets
4 Sep
#இனிய_காலை_வணக்கங்கள்

#இன்று_சங்கடம்_தீர்க்கும்
#சனி_மஹா_பிரதோஷம்.

அழியா வரம் வேண்டி அசுரர்களுடன் சேர்ந்து தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது ஆல கால விஷம் உருவானது அந்த விஷம் உலகை அழித்துவிடாதபடி அதை ஒன்றுதிரட்டி அருந்தி விட்டார் சிவபெருமான்.
அதைக்கண்டு பதறிய பார்வதி தேவி, விஷம் உள்ளே இறங்கி விடாமல் கழுத்தைப் பற்றி, விஷம் அவருடைய கண்டத்தில், அதாவது கழு த்திலேயே தங்கும் படி செய்தாள். இதையொட் டியே சிவனாருக்கு திருநீலகண்டன் என்றும் திருப்பெயர் உண்டு.

விஷம் அருந்திய சிவப்பரம்பொருளின் அரு ளாடல் தொடர்ந்தது.
அதீத களைப்பு மேலிட்டது போல் அப்படியே படுத்துவிட்டார் சிவனார். இதனால் ஆதிசக்தி முதலாக அண்டபகிரண் டமும் கலக்கம் அடைந்தது. விரைவிலேயே அவர்கள் கலக்கம் நீங்கும் வகையில் கண்வி ழித்த சிவனார் ஆனந்த தாண்டவம் புரிந்தார். அப்படி, அவர் ஆனந்தத்துடன் திருநடனம் புரிந்தது பிரதோஷ காலம்.
Read 29 tweets
3 Sep
*சூரிய ஒளி வீசும் சிவன் கோவில்*

ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி அன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசுகிறது.

இத்தகைய அதிசயம் நிகழ்வது, அம்ருதாபுரா அம்ருதேஸ்வரா கோவிலில் தான். இது சிக்மகளூரு மாவட்டம் தரிகெரேயில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கி.பி.1196-ம் ஆண்டு ஒய்சாலா மன்னர் அமித்தையா என்பவரால், அழகிய சிற்பக்கலையுடன் இக்கோவில் கட்டப்பட்டது.

கிழக்கு முகம் நோக்கி அமையப் பெற்றுள்ள இந்தக் கோவிலின் நடுவில் சிவன் சன்னிதியும், வலதுபக்கம் விஷ்ணு சன்னிதியும், இடதுபக்கம் பிரம்மன் சன்னிதியும் உள்ளன.
கோவில் கருவறையில் குடிகொண்டிருக்கும் சிவன் சிலை மிகவும் பிரசித்திப்பெற்றது ஆகும்.

அதாவது அக்னி சிவன் எனப்படும் இந்த சிவன் சிலை, மும்மூர்த்திகளின் சக்தி அடங்கியது என கூறப் படுகிறது.

இந்த சிவன் சிலையானது நேபாளத்தில் உள்ள கன்டக்கி நதியில் இருந்து கொண்டு வரப்பட்டு,
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(