நேர்மையான அரசியல்வாதியாக #கக்கன்’ஐ நமக்குத் தெரியும்.
ஆனால், அவரது மகன் பி.கே.நடராஜமூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சுமார் 30 வருடங்களாக - அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில் - கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார் என்பது #தமிழர்’க்கு எவ்வளவு அவமானம்? இழப்பு??

1/13
#வருத்தமான #செய்தி

தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறார் அந்த அனுபவங்களைக் கேட்கச் சென்ற ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார் ...

2/13
"யாவரும் நலம்' படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார்.

அவர்தான் கக்கனின் மகன்

3/13
அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சரியான முறையில் நடத்துகிறார்களா? இல்லையே!.
அவர் சொன்ன சில கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.

அங்கிருக்கும் 3000 நபர்களில் சுமார் 500 முற்றிலும் குணமானவர்கள் அழைத்துச் செல்ல யாருமற்று மேலும் மனச் சிதைவுக்கு உள்ளாகிறார்கள்.

4/13
கீழ்ப்பாக்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. அந்தப் பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக் கேட்டபோது, அதற்கு அனுமதிக்க வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட சாதாரணமான மனிதர்கள் தானே...?

5/13
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும் இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால் அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. சிறிதளவு காற்றுகூட அந்தக் கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக மூடி இருக்கும்..

6/13
நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை. பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி போக முடியாது.

7/13
நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை. பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி போக முடியாது..

8/13
சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள். தோட்ட வேலை களைக் கூட அவர்கள்தான் செய்கிறார்கள். சும்மா ஒரு லாஜிக்கிற்காக
கேட்கிறேன்,அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால் அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய ஆயுதங்களைக் கொடுக்கலாமா?

9/13
காவலர்கள் எல்லாம் அடியாட்கள்போல இருப்பார்கள். ஒரு சிறிய தவறு நடந்து விட்டால் கூட நோயாளிகளை தூக்கிப் போட்டு ரத்தம் வரும் வரைக்கும் மிதிப்பார்கள். ஒரு நோயாளிக்கு அவர் விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக, அவரை எனது கண்முன்னால் அவர் மயக்கமாகும் வரைக்கும் அடித்தார்கள்.

10/13
இன்றுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள்
யாருமே செல்ல முடியாது. அங்கு நடக்கும் அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம் காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்..

11/13
ஒரு நோயாளி அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து சுமார் 10 வருடங்களாக யாருடனும் பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.

தமிழக அரசு இதில் தலையிட வேண்டும்.

ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுத்தால் என்னைப்போன்ற சக மனிதர்கள் வாழ்வு பெறுவார்கள்' என முடித்துக் கொண்டார்.

12/13
முழுவதும் படித்த நண்பர்கள் தயவுசெய்து மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

..முற்று

#மனிதநேயம் வளர்போம்..

@CMOTamilnadu @INCTamilNadu @EPSTamilNadu @mkstalin @MoHFW_INDIA @UN_HRC @UN @PMOIndia @AIADMKOfficial

13/13

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ஹுசைன்

ஹுசைன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(