பல கோடி பேரை தொற்றி கொண்ட 'கொரோனா', கடந்த வாரம் என்னையும் தொற்றி கொண்டது. கடந்த 06/09/2021 அன்று ஞாயிறு இரவு கடும் காய்ச்சல் மற்றும் உடல் அசதி ஏற்பட்டது. உடனடியாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். மறுநாள் காலை வரை காய்ச்சல் நீடித்த காரணத்தால், உடனடியாக சென்னை பொது மருத்துவமனை(1/9)
தலைமை மருத்துவர் @ETRajan1 அவர்களை தொடர்பு கொண்டேன். 'தாமதப்படுத்தாமால் உடன் வருக' என்றார். சென்னை அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களின் வழக்கமான கனிவான மற்றும் இன்முகத்தோடு கூடிய பரிசோதனைகள். அன்று மாலையே கொரோனா தொற்று உறுதி(2/9)
என்றார் மருத்துவர் @ETRajan1 . வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள சொல்லி அறிவுறுத்தப்பட்டதன் பேரில் கடந்த பத்து நாட்களாக தனிமைப்படுத்திக்கொண்டேன். முதல் மூன்று நாட்கள் காய்ச்சல் மற்றும் .குளிர் இருந்தது. பிறகு பிரச்சினை எதுவும் இல்லை. மருத்துவர் அறிவுறுத்தலின் பேரில்(3/9)
இன்று மீண்டும் பொது மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டேன். கொரோனா என்னை விட்டு விலகி விட்டது என்று உறுதி செய்து கொண்டேன்.
பல கோடி மக்கள் பல இடர்பாடுகளை எதிர் கொண்ட போதிலும், ஓரிரு நாட்கள் உடல் அயர்ச்சி இருந்த போதிலும், கடும் பிரச்சினைகளை நான் சந்திக்கவில்லை. இதற்கு ஒரே (4/9)
காரணம் இரு தடுப்பூசிகளையம் உரிய நேரத்தில் நான் செலுத்தி கொண்டது தான். உரிய நேரத்தில் எனக்கு சிகிச்சை அளித்த பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் @ETRajan1 அவர்கள், மருத்துவர் திருமதி.பவித்ரா அவர்கள் மற்றும் என் குடும்ப மருத்துவர் திரு. டி எஸ் கண்ணன் ஆகியோருக்கு என் (5/9)
மனமார்ந்த நன்றிகள்.
உடல் சோர்வு இருந்த போதிலும் மனம் உற்சாகமாக இருந்ததால், தூங்கிய நேரம் போக மற்ற நேரங்களில் சமூக ஊடகங்களில் கவனம் செலுத்தி கொண்டிருந்தேன். கடந்த இரு நாட்களாக ஒரு சில ஆங்கில தொலைக்காட்சிகளில் நேரலையில் நீட் குறித்து விவாதங்களில் இணைய வழியாக கலந்து கொண்டேன்.(6/9)
சில கட்சி இணைய கூட்டங்களில் கலந்து கொண்டேன்.

கொரோனா தொற்றிலிருந்து நான் அதிக சிரமமில்லாமல் விடுபட மிக முக்கிய காரணம் தடுப்பூசி செலுத்தி கொண்டது. மேலும், தாமதப்படுத்தாது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றது. அதோடு பதட்டப்படாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.(7/9)
என் உடல்நலம் குறித்து அவ்வப்போது கவலையோடு விசாரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்னும் ஓரிரு தினங்களில் உடல் சோர்வும் நீங்கி மீண்டும் என் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவேன்.(8/9)
தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள், தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். தடுப்பூசியை செலுத்தி கொள்ளுங்கள்.

எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

நாராயணன் திருப்பதி.(9/9)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Narayanan Thirupathy

Narayanan Thirupathy Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Narayanan3

14 Nov 20
மொழி அரசியலை முன்னெடுக்கும் தி மு க தலைவர் @mkstalin ஸ்டாலின் அவர்களுக்கு என் கேள்விகள்.

1.கேந்திர வித்யாலயா பள்ளிகள்,பாதுகாப்பு துறை அதிகாரிகளின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது என்பதும்,பணி மாற்றத்தின் அடிப்படையில் அவர்கள் எங்கு சென்றாலும் ஒரே சீரான பாடத்திட்டத்தில் பயில(1/8)
வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதும் பின்னர் மத்திய அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்காக அதே நோக்கத்தில் விரிவுபடுத்தப்பட்டது என்பதும் உங்களுக்கு தெரியுமா, தெரியாதா?

2. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் படித்தால் மட்டுமே கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் மூன்றாவது (2/8)
மொழி பயிற்றுவிக்கப்படும் என்ற விதி, மாநிலத்திலும், மத்தியிலும் தி மு க ஆட்சியில் இருந்த பொது இருந்ததா இல்லையா? அப்போது ஏன் எதிர்க்கவில்லை?

3. மூன்றாவது மொழி பயிற்றுவிக்க தற்காலிக ஆசிரியர்கள் என்பது 40 வருடங்களுக்கும் மேலாக உள்ள நடை முறை என்பதை மறந்து விட்டீர்களா?(3/8)
Read 8 tweets
17 Oct 20
மிகுந்த கவலையோடு இதை பதிவிடுகிறேன்.
தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க இனி மேலும் இது அதிகரிக்கும். ஆனால் பாஜகவினர் உட்பட அனைத்து கட்சியினரும் சமூக விலகலை கடைபிடிப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை.(1/8)
அதே போல் முக கவசங்களை அணியாமல் இருப்பது, கழுத்தில் தொங்க விட்டு கொள்வது, கைகளில் பத்திரமாக வைத்து கொள்வது என்று அலட்சியப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதிக அளவு மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்த நிலையிலும் இறப்பு சதவீதம் குறைவாகவே உள்ளது என்பது (2/8)
குறிப்பிடத்தக்கது. ஒரு உயிர் மறைந்தாலும், அது பேரிழப்பே. ஆனாலும் உயிரிழப்பை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம். மத்திய மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவிற்கு செயல்பட்டாலும், மக்களின் ஒத்துழைப்பே மிக அவசியம். ஆனால் அரசுக்கு நாம் ஒத்துழைக்கிறோமா என்றால், உறுதியாக இல்லை என்று தான் (3/8)
Read 8 tweets
17 May 20
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டிலிருந்து ஒப்படைக்கப்படும் இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டையும் செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்(1/9)
தி மு க தலைவர் @mkstalin ஸ்டாலின் அவர்கள்.

2013-14 ம் ஆண்டு இந்தியாவில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் 24, 242. தற்போது 36,192. தி மு க + காங்கிரஸ் ஆட்சியில் 2012 ம் ஆண்டிலிருந்து 2014 ம் ஆண்டு வரை முறையே41,39,43இடங்கள் தான் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு(2/9)
ஒதுக்கப்பட்டது. 2015 முதல் இன்று வரை மூன்றில் ஒரு பங்கு இடங்களை 5 வருடங்களில் 11,950 இடங்களை அதிகரித்துள்ளது பாஜக அரசு. அதில் 27 சதவீத இடங்களை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. 2015 முதல் 2018 வரை முறையே 42,76,78,84 என்று அதிகரித்தே வந்திருக்கிறது என்பதை(3/9)
Read 9 tweets
9 May 20
DMK leader Stalin has urged the AIADMK government should strongly oppose the amendment to the Electricity act as it would usurp the powers of the State governments and would endanger the free electricity supply for farmers and the one hundred unit free electricity scheme for(1/9)
the poor and also demanded that the BJP government with draw the proposal. I am of the view that either Mr. Stalin would not have gone through the draft proposal fully or he has given this statement intentionally after reading and understanding that this amendment bill if(2/9)
passed will eradicate corruption in the power department in different states, benefit people with new reforms and will help discoms get more healthy and get more Investments.

Since the BJP government came to power in 2014, supply of uninterrupted electricity to the nook &(3/9)
Read 10 tweets
8 May 20
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் திட்டங்களுக்கு ஆபத்தான மத்திய அரசின் மின்சாரச் சட்டத்திருத்தத்தை அதிமுக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.மாநிலங்களை ஓரம்கட்டும் இச்சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்(1/9)
என்று கூறியிருக்கிறார் தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்கள். தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள், இந்த சட்ட திருத்த பரிந்துரையை படித்து பார்த்தாரா அல்லது படித்து விட்டு வேண்டுமென்றே இந்த அறிக்கையை விடுத்துள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது. மின்சாரத்துறையின் மூலம்(2/9)
மக்களின் நிதி, 'ஓரம் கட்டப்பட்டுவிடக்கூடாது' என்பதையே இந்த சட்ட திருத்த பரிந்துரை கூறுகிறது என்பதை ஸ்டாலின் அவர்கள் அறிந்து கொண்டிருப்பார். ஒரு வேளை, அதனால் தான் எதிர்க்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது?

2014ல் பாஜக அரசு வந்த நாள் முதல் இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம்(3/9)
Read 9 tweets
29 Apr 20
Opposition parties are spreading rumors that the write-off is a loan waiver. 'Loan Write off' is not 'Loan Waiver'. Those evil forces not willing to repay the loans they have accumulated are misleading people against the government with the help of opposition. The corrupt(1/10)
are against write off that clears the system of healthy banking. opposition parties are spreading rumors as they are not able to bear the fact that the bankruptcy law enacted by BJP government is effectively recovering the debts. It is not a write-off for the Debtor where(2/10)
as it is a write off from the Balance sheet of the Banks to the stressed account poll in order to strengthen the bank to perform better.

It was very clearly explained in the past by Late.Shri.ArunJaitley that Write off's do not lead to loan waivers and in fact the exercise(3/10)
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(