ரூ.21,000 கோடி ஹெராயின் கடத்தல்! முக பவுடர் எனச் சொல்லி நாடகமாடிய ஆந்திர ஜோடி கைது
புதுடில்லி :'முக பவுடர்' என்ற பெயரில் 3,000 கிலோ எடையுள்ள 21 ஆயிரம் கோடி மதிப்பு ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாக ஆந்திர ஜோடி, சென்னையில் கைது செய்யப்பட்டது.
சென்னை, ஆந்திராவில் இவர்கள் பெரிய இறக்குமதி நிறுவனங்களை நடத்தி வருவது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகள் அனுப்பி வைத்துள்ள இந்த போதைப் பொருள், குஜராத் துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஆமதாபாத், டில்லி, மும்பையில் பலர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தலிபானுக்கு நம் அண்டை நாடான பாக்.,கின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
இந்தியாவுக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவும் தலிபான்களை ஐ.எஸ்.ஐ., துாண்டி வருகிறது.
தலிபான்கள் ஈடுபாடு
அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் ஆதரவு மற்றும் நிதி உதவி இல்லாததால் ஆப்கானிஸ்தான் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. நிதி திரட்டுவதற்காக,
ஐ.எஸ்.ஐ., உதவியுடன் போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஏற்றுமதியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி அதிபராக இருந்தபோது தடை செய்யப்பட்ட ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள், தற்போது அதிகளவில் புழங்குகின்றன.
இந்நிலையில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு சமீபத்தில் வந்த சரக்கு கப்பலில், ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி முந்த்ரா துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டன.அதில் ஈரானில் இருந்து வந்த இரண்டு கன்டெய்னர்களில் 'முக பவுடர்' இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு துறையினர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து சோதனை நடத்தினர்.தலா, 40 டன் கொள்ளளவு உள்ள அந்த இரண்டு கன்டெய்னர்களில் 2,988 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப் பொருள்,
முக பவுடர்களுக்கு இடையே மறைத்து எடுத்து வரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் விலை 21 ஆயிரம் கோடி ரூபாய்.
தொடர் விசாரணை
இந்த முக பவுடரை ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது தெரிய வந்தது; அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த நிறுவனத்தை நடத்தி வரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்களும்,
சென்னையில் வசிப்பவர்களுமான மச்சாவரம் சுதாகர், அவரது மனைவி கோவிந்தராஜு துர்கா பூரண வைஷாலி ஆகியோர், சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் குஜராத்தின் புஜ்ஜில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டு 10 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத் தவிர டில்லி, மும்பை உட்பட பல இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு, ஆப்கானிஸ்தானியர்கள் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழக மாணவ – மாணவியர்களுக்கு… ஹீரோவா..? வில்லனா..?
நீட் – மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு..
சமீபகாலமாக தமிழக மாணவர்களுக்கு, “நீட்” தேர்வு வில்லனாக சித்தரிக்கப் படுகின்றது.
மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஒவ்வொரு மாணவரும், நீட் தேர்வு எழுதி, தேர்வு பெற்று தான் செல்ல வேண்டும் என்ற நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி இந்த சட்டம் இயற்றப்பட்டது.
மருத்துவ படிப்பு படிப்பதற்கு, நீட் கட்டாயம் என்று சொன்ன நாள் முதல், தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், தமிழகத்தில் மிகவும் வில்லனாகவே சித்தரிக்கப்படுகின்றது இந்த நீட் தேர்வு.
பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம்: 12 போ் குழுவை அமைத்தது மத்திய கல்வி அமைச்சகம்
புதுடில்லி: பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு, தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் மூலமாக, பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட வரைவுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும் - உண்மை நிலை என்ன?? - ஒரு அலசல்
1.தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் சுமார் 28000 கோடி. அதில் 60% க்கும் மேல் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது.
2. நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு நீட் தேர்வு வருவதற்கு முன்னால் 2006 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கல்லூரி மருத்துவ இடங்கள் (MBBS) -29925.
3. இந்த 29925 இடங்களில் அரசுப்பள்ளிகளில் படித்து MBBS இடங்கள் வாங்கியவர்கள் 213. சராசரியாக ஆண்டிற்கு 19 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் இருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வானார்கள். இது 0.7% சதவிகிதத்திற்கும் குறைவானதாகும்.
பைடன் - மோடி முதல் சந்திப்பு இருதரப்பு உறவை மேம்படுத்தும்
வாஷிங்டன் :'அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையேயான முதல் நேரடி சந்திப்பு, இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்தும்' என, அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஐ.நா., பொது சபை கூட்டம், 'குவாட்' அமைப்பின் மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அமைதியான சூழல்
வரும் 24ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து பேச உள்ளார்.இது குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளதாவது:இரு தலைவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பங்கேற்றுள்ளனர்.
இது உங்கள் இடம்: ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா? என்னங்க அரசின் நியாயம்?
எம்.கே.பார்த்தசாரதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஆயுள் முழுவதும் நாத்திகம் பேசி, பிராமண சமுதாயத்தை மட்டும் இழிவாக பேசி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வ உருவங்களை மட்டும் நிந்தித்து வாழ்ந்து,
மறைந்தவர், 'நாத்திக பேரொளி'யான தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி. அதாவது அவரை பொறுத்தவரையில் ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகம். மற்ற மதங்களை ஆதரிப்பார்.
கருணாநிதி வழியில் வந்த அவரது மகன் முதல்வர் ஸ்டாலினும், அதே கொள்கையை தான் கடைப்பிடிக்கிறார். முதல்வரானதும், கோவில்களில் மட்டும் தமிழில் அர்ச்சனை செய்யும்படியும், தமிழே சரியாக உச்சரிக்க தெரியாதோரை அர்ச்சகராக நியமித்தும் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பெயர் தான் மதசார்பின்மையா?
கோவில் நிலங்கள் அளவீடு: வரைபட தயாரிப்பு பணி தீவிரம்
சென்னை: தமிழகம் முழுதும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை 'ரோவர்' கருவி வாயிலாக அளந்து, வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அறநிலையத் துறை கோவில்களுக்கு 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றை ரோவர் கருவியால் அளவிடும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இதன் வாயிலாக எளிய முறையில் துல்லியமாக அளந்து, வரைபடங்கள் தயாரிக்கலாம்.
ஆக்கிரமிப்புகள் மற்றும் காணாமல் போன புல எல்லை கற்களை கண்டறியலாம்.இதற்காக வருவாய்த் துறை சார்பில், 4 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன ரோவர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.