பல தரப்பட்ட மொழிகள் கொண்ட மக்கள் வாழும் நம்தேசத்தில், இந்தி மொழியை திணிப்பதற்கான முயற்சிகள் காலங்காலமாக அரங்கேற்றப்பட்டு வரும் அவல நிலை நிலவுகிறது. அதன் நீட்சியாக தற்போது, 2021 அக்டோபர் மாத பட்டயக் கணக்காளர் இதழில் (Chartered Accountant Journal ), #HindiImposition 1/5
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAI ) தலைவர் திரு. சி.ஏ. நிஹார், இந்தி மொழியை பட்டயக்கணக்காளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொழி என்று அறிவித்துள்ளதோடு, பட்டயக் கணக்காளர்கள் ( Charted Accountants ) தங்களின் அன்றாட வேலைகளிலும், #hindi_imposition
2/5
நிறுவனத்தின் அலுவல்களிலும், மாணவர்களுடனும்,அரசுடனும், ஒழுங்குமுறையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்துரையாடும்போதும் இந்தி மொழியை மட்டுமே பின்பற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று மத்திய கவுன்சில் முடிவு செய்துள்ளதாகதெரிவித்துள்ளார். #இந்திதினிப்பு
3/5
அதன்படி, 'ராஜ்ய பாஷை' என்பதால் இந்தியை மட்டுமே தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தவும் ஊக்குவிக்கவும் உறுதிமொழி எடுக்குமாறு ICAI மத்திய கவுன்சில் தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ICAI, 1949ம்ஆண்டு பட்டயக் கணக்காளர்கள் சட்டத்தால் நாட்டில் பட்டயக் கணக்கியல் #இந்திதினிப்பு
4/5
தொழிலை
ஒழுங்குபடுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பு. இத்தகையதொரு அமைப்பில் அரங்கேற்றப்படும் இந்தி திணிப்பை ஒன்றிய அமைச்சர் மாண்பு மிகு @nsitharaman@Rao_InderjitS அவர்கள் கண்டித்து உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன்
5/5
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh