“கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார்?” - பொய்ப் பிரசாரங்களை உடைக்கும் கட்டுரை!
தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளா அல்லது சித்திரை முதல் நாளா என்ற ஒரு விவாதம் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. தமிழறிஞர்கள்,
தை 1-ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று வலியுறுத்தி வந்தனர். அதனையடுத்து, 2008ம் ஆண்டு தை 1-ஐ தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, காழ்ப்புணர்ச்சியில் அதனை ரத்து செய்தது.
கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார் என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது.
மறைமலை அடிகளார், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், பேராசிரியர் கா.நமசிவாயர், இ.மு.சுப்பிரமணியனார், மு.வரதராசனார், இறைக்குருவனார், வ.வேம்பையனார், பேராசிரியர் தமிழண்ணல்,
வெங்காலூர் குணா, கதிர். தமிழ்வாணனார், சின்னப்பத்தமிழர், கி.ஆ.பெ.விசுவநாதர், திரு.வி.க, பாரதிதாசனார், கா.சுப்பிரமணியனார், ந.மு.வேங்கடசாமியார், சோமசுந்தர பாரதியார், புலவர் குழுவினர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்துரைத்தனர்.
மலையகத்தில் கோ.சாரங்கபாணியார், சா.சி.குறிஞ்சிக்குமரனார், அ.பு.திருமாலனார், பேராசிரியர் இர.ந. வீரப்பனார், கம்பார் கனிமொழி குப்புசாமி, மணி. வெள்ளையனார், திருமாறன், இரெ.சு.முத்தையா, இரா.திருமாவளவனார், இர.திருச்செல்வனார் உள்ளிட்ட
500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரிய திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் துவக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.
இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு அல்ல என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும்.
இந்த அறுபதில் எது தமிழ் வார்த்தை யாராவது சொல்ல முடியுமா?
தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரமிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்து வைத்திருந்தார்கள். வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள்.
அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன.
அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1,440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.
தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1,440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்துவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1,440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்)
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
இளவேனில் - (தை-மாசி)
முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
கார் - (வைகாசி - ஆனி)
கூதிர் - (ஆடி - ஆவணி)
முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
பின்பனி (கார்த்திகை - மார்கழி)
மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.
சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தை மாதத்தில் தொடங்கும் வெயிலை
'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.
காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.
இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினை கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம்.
தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
- பாவேந்தர் பாரதிதாசன்
அப்படி இந்த நாளை கொண்டாடித்தான் ஆகவேண்டுமெனில் சித்திரை திருநாளாகக் கொண்டாடுங்கள். பகுத்தறிவு என்பது கடவுளை மறுப்பது மட்டும் அல்ல, பகுத்து அறிவது நான் பகுத்தறிவு.
23-1-2008 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா ஆற்றிய உரையில், தமிழர்களுக்கென்று "திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால்;
தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது' என்றும் அறிவித்தார்.
மறைமலை அடிகள் தலைமையில் வி.கல்யாண சுந்தரனார், கா.சுப்பிரமணியப்பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, வெங்கடசாமி நாட்டார், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட கூட்டத்தில், திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது,
அதனையே தமிழாண்டு எனக் கொண்டாடுவது, வழக்கத்தில் திருவள்ளுவர் காலம் கி.மு.31-யைக் கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் என்பதனை மேற்கொள்வது என்பனவாகும்.
மலேசியா நாட்டில் தமிழர்கள் தற்போது தை முதல் நாளையே புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் செந்தமிழரெல்லாம் பெரு மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்ளத்தக்க வகையில் செய்யப்பட்ட அறிவிப்பாக,
கவர்னர் பர்னாலா அறிவிப்பு கருதப்பட்டு, தமிழ் மக்கள் எல்லாம் அந்த ஆண்டு பொங்கல் விழாவினை எப்போதும் இல்லாத வகையில் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக எப்படியெல்லாம் தி.மு.க. ஆட்சியிலே கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா நடத்த முற்பட்டாரோ, அப்படியே தமிழின அடையாளத்தைக் காட்டும் இந்த அறிவிப்புக்கும் மூடு விழா நடத்திட ஏற்பாடுகளை அவசர அவசரமாகச் செய்தார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, "தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது" என்றார்.
தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக ஜெயலலிதா ஆட்சியிலே அது மாற்றப்பட்டு விட்டது. அவரது அந்த அறிவிப்பினை பா.ஜ.க. அப்போதே அவசர அவசரமாக வரவேற்றது.
இந்த வரலாற்று உண்மையை மறைக்கத்தான் இன்றைக்கு இருக்கும் ஆட்சியாளர்கள் பெரு முயற்சி எடுத்து, சித்திரை தான் தமிழ் ஆண்டின் துவக்கம் என்று மாற்றி ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கைக்கு தமிழ்நாட்டு மக்கள் எந்த மரியாதையும் கொடுத்ததாக தெரியவில்லை.
வெளிநாட்டிலே வாழும் தமிழர்கள் கூட இந்த உண்மையை புரிந்து கொண்டு; தை முதல் நாள் தான் தமிழர்களின் திருநாள், தமிழ்ப்புத்தாண்டின் துவக்கம் என்று உறுதி செய்து கொண்டு, கொண்டாடுகிறார்கள். எனவே அ.தி.மு.க. அரசு அதை ஒப்புக்கொள்கிறதோ இல்லையோ,
அதைப்பற்றிக் கவலைப்படாமல், தை முதல் நாளை, தமிழர் திருநாளாக, தமிழ்ப்புத்தாண்டின் துவக்கமாகச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடிட தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கலைஞர் தெரிவித்துள்ளார்.
January , 2015
9-ந் தேதி அன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் பொங்கல் திருநாளை தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழர்கள் உள்ளம் தோறும் உவகைப் பெருக்குடன் இல்லந்தோறும் இன எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்று 3-வது தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்
தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே!
சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பென்பதும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 சுழலாண்டு முறையும் பார்ப்பனியம் திணித்த அறிவுகெட்ட முறையாகும்.
இதையும் ஆய்வு செய்து நம் அறிஞர்கள் 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஒரு புதிய முடிவுக்கு வந்தார்கள். தமிழறிஞர் மறைமலை யடிகள் தலைமையில் அக்கூட்டம் நடந்தது. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது அதையே தமிழ் ஆண்டு எனக் கடைப்பிடிப்பது.
திருவள்ளுவர் காலம் கி.மு. 31, தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்யப் பட்டது. பின்னர் 18.11.1935இல் திருவள்ளுவர் கழகத்தினர் நடத்திய திருவிழாவிற்குத் தலைமை வகித்த மறைமலையடிகள் மீண்டும் இதை உறுதி செய்து அறிவித்தார்.
திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு கிருத்து ஆண்டுடன் 31ஐக் கூட்டிக் கணக்கில் கொள்ள வேண்டும். 2011 + 31 = 2042.
நாமும் இதைச் செயல்படுத்துவோம்.
தமிழயரத் தாழ்ந்தான் தமிழன்;அவனே
தமிழுயரத் தானுயர்வான் தான் – பாவாணர்
ஆம் தோழர்களே, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் திருவிழா இரண்டும் தை முதல் நாளே
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், அதற்கு பொன்னி நதி என்றும் ஒரு பெயர் உண்டு. அதோடு மண்ணைப் பொன் கொழிக்கச் செய்வதாலும் காவிரியை பொன்னி ஆறு என கொண்டாடுகின்றனர்.
காவிரி உற்பத்தியாகும் குடகு மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் உள்ளது. அங்கு தலைக்காவிரி யில் புறப்பட்டு ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ. ஓடிவந்து தமிழ்நாட்டில் நுழையும் காவிரி ,
416 கி.மீ. பயணித்து காவிரிபூம்பட்டிணம் என்றழைக்கப்பட்ட பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. இரு மாநில எல்லையில் 64 கி.மீ. யும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ.
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
ஆசை இல்லா மனிதர் தம்மை
துன்பம் எங்கே நெருங்கும்
பொன்னில் இன்பம் புகழில் இன்பம்
என்றே நெஞ்சம் மயங்கும்
பூவை போல சிரிக்கும் உன்னை
கண்டால் உண்மை விளங்கும்
முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே
முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே
முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம்
வானில் நீந்தும் நிலவில்
நாளை பள்ளிக்கூடம் நடக்கும்
காற்றில் ஏறி பயணம் செல்ல
பாதை அங்கே இருக்கும்
எங்கும் வாழும் மழலை செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும்
இல்லை ஜாதி மதமும் இல்லை
என்றே பாடி சிரிக்கும்
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம்
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். ஆகவே, இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.
ரத்து
10.5% தீர்ப்பிற்கு பின்னர் வன்னியர் இட ஒதுக்கீட்டில் கல்வி அல்லது வேலை வாய்ப்பில் இடம் வழங்கிய உத்தரவுகள் குறித்து சில வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியபோது, சட்டமே ரத்தாகிவிட்டதால் அதன்மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளும் ரத்தாகிவிடும்
“நான் ஒரு வேளை இறக்க நேரிட்டால், என் உடலைத் தயவு செய்து காங்கிரஸ்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனக்கு உறுதுணையாக இருந்த கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படையுங்கள்”
பேரறிஞர் அண்ணா அவர்கள் விருதுநகர் சென்று அவரைச் சந்தித்தபோது, "அண்ணா! நீங்களாவது என்னுடைய 'தமிழ்நாடு' பெயர் மாற்றுக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு தீர்மானம்! பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஜூலை 18, 1967 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் "
தமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்
தெற்கு எல்லைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்திய நேசமணி தன் கையால் பெரியாருக்கு மட்டும்தான் மாலையிட்டார், வேறுயாருக்கு அவர் மாலையிட்டதே இல்லை
“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
அம்பேத்கரின் 15ஆவது தொகுதியில், 95ஆவது பக்கத்தில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுகிறேன்.
”தமிழ்மொழி முதலில் தமிதா என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர் தமிழாகி, திராவிட என்று உரு திரிந்தது. தமிழ் அல்லது திராவிடம் என்பதுதான் ஆரியர்கள் வருவதற்கு முன்னால் இந்தியா முழுவதும் பேசப்படுகிற மொழியாக இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்டு வந்தது தமிழ் ஆகும்.