*ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் சாப்பிட்டு முடித்தவுடன் பாக்கெட்டை தடவிய போது, அங்கு பர்ஸை காணவில்லை !!!. யாரோ பிக்பாக்கெட் அடித்து இருந்தார்கள் !
*சுற்றிலும் கூடிய ஆட்கள் மத்தியில் அவமானப்பட்ட அந்த நபர் ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டினார் !!!. இறுதியில் உள்ளாடை மட்டுமே எஞ்சியிருந்தது !!!. அதையும் அவிழ்க்குமாறு ஹோட்டல் முதலாளி கூற அங்கு சுற்றி நின்ற பார்வையாளர்களுக்கு ரசனையாக இருந்தது !!!.*
*இறுதியில் வேறு வழியின்றி அதையும் அந்த மனிதர் கழற்ற தொடங்கிய போது பார்வையாளர்களில் ஒருவர் அவரை தடுத்து சாப்பிட்ட உணவுக்கான பணத்தை முதலாளியிடம் கொடுத்து விட்டு அந்த நபரை வெளியே அழைத்துச் சென்றார் !!!.*
*ஆள் நடமாட்டம் இல்லாத வெறிச்சோடிய இடத்தை அடைந்ததும்,
அவர் தன்னிடமிருந்த பத்துக்கும் மேற்பட்ட பர்ஸ்களை வெளியே எடுத்து, "இவற்றில் எது உன்னுடைய பர்ஸ்" என்று கேட்டார் !!!.*
*தனது பர்ஸ் திரும்ப கிடைத்த போது பாதிக்கப்பட்ட நபருக்கு மட்டற்ற மகிழ்ச்சி !!!. பிக்பாக்கெட் காரன் மீது கடவுளுக்கு ஒப்பான நேசம் ஏற்பட்டது !!!.*
*பெட்ரோல், டீசல் முதலான எரிபொருள் விலையை அபரிமிதமாக ஏற்றியவனே கொஞ்சம் குறைத்ததற்காக மோடிக்கு நன்றி சொல்லும் அனைவருக்கும் இந்த கதை சமர்ப்பணம் !!!.*
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh