அஜ்மீர் பிருத்திவிராஜனின் கோட்டை வாயிலில் அவர் நின்றுகொண்டிருந்த தருணத்தைத் தொட்டுப் பேசி இருக்கும் ஒரு மதச் சடங்கு என்னை அதிகம் இத்தொகுப்பில் பாதித்தது.
பலரால் பல முறை சொல்லி சொல்லி கேட்டுப் பழகிவிட்டதால்
என்னவோ உடன் கட்டை ஏறிய பெண்களின் தீக்காயமும், அலறலும் என்னை இப்பொழுதெல்லாம் அதிகம் தாக்குவதில்லை. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உடன்கட்டை ஏறிய பெண்களின் அந்த அலறல் சத்தத்தையும் அவர்களின் அபயக்
குரலையும் சை.பீர் அவர்களால் அந்தக் கோட்டை வாயிலில் அதன் உக்கிரத்தோடு கேட்க முடிந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அந்தச் சத்தங்களை அதே வலிகளுடன் கேட்டுணர அதன் வலிகளையும் துயரையும் மீட்டுப் பார்க்க சை.பீர் அவர்களுக்கு இருந்த சரித்திரப் பார்வை உந்தியுள்ளது.
ராஜபுத்திரர்களின் பாரம்பரிய வழக்கத்தில் இருக்கக்கூடிய நீதியின்மையை அதன் அரக்கத்தன்மையை நமக்கு உணர்த்த அஜ்மீர் நாயகத்தின் வரலாறும் கட்டுரையில் மிக சுறுக்கமாக வந்துபோகிறது. ஓர் இளம் பெண்ணின் கையையும் காலையும் கட்டி உடன் கட்டை ஏற்ற முயற்சிக்கும் வீரர்களிடமிருந்து
அஜ்மீர் நாயகம் காப்பாற்றுகின்ற வரலாறு அது. காப்பாற்றியவர் ஓர் உயிரைப் படைக்க எப்படி உனக்கு சக்தியில்லையோ அப்படியே அழிக்கவும் உனக்கு உரிமையில்லை எனக் கூறுகிறார். வரலாற்றில் இருக்கக்கூடிய இந்த வரியை தேடிப் பிடித்து சொல்வதன் வழியாக மத நம்பிக்கைகளுக்குள் மலிந்து போன
மனிதத்தை சை.பீர் அவர்கள் ஒரு சக மனிதனாக அடையாளம் காட்டுகிறார். முஸ்லீம்கள் நிறைந்து வாழும் அஜ்மீரில் அஜ்மீர் நாயகத்தின் அடக்க இடத்திற்குப் பக்கத்தில் கிருஷ்ணர் ஆலயமும் இருக்கிறது என்று தன்னுடைய பயணக்கால அறிதலையும் கட்டுரையில்
இணைத்துச் சொல்லி அஜ்மீர் நாயகத்தின் மத பேதமற்ற பண்பையே நிறுவியுள்ளார்.
முகலாய மன்னர் ஆட்சியையும் ராஜபுத்திரர்களின் ஆட்சியையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து அதன் முக்கியமான பகுதிகளை வாசகர்களுக்குத் தந்திருக்கும் இந்த முயற்சி நிச்சயம் பயன்மிக்கதுதான்.
இதில் வந்து போகும் சில மன்னர்கள் என்னை அதிகம் கவர்கின்றனர். அதில் சிலர் முற்றிலும் நான் முன்னமே அறிந்திடாத புதிய புரட்சிகரமான வழக்கங்களையுடையவர்களாக இருக்கின்றனர். பாபர், ஹுமாயும் ஆகியோருக்கு அடுத்து வரலாற்றில் மூன்றாம் முகலாய பேரரசராக அறியப்படும் அக்பர் கவனிக்கப்பட வேண்டியவர்.
1556 முதல் தன் வாழ்வின் இறுதி நாள் வரை பதவியில் இருந்தவர் அவர். 14 ஆவது வயதில் பதவியேற்ற அக்பருக்கு பக்கபலமாக பிரதம தளபதியான பைராம்கான் இருந்துள்ளார். அவரே ஆரம்பத்தில் அக்பரை வழிநடத்தியுமுள்ளார்.
தனது ஆட்சி காலத்தில் இந்து மனைவியைக் கட்டிக்கொண்ட அக்பர் நிச்சயமாக என்னுடைய பார்வையில் புரட்சிகரமானவர்தான். அவர் இந்துப் பெண்ணை மணந்ததால் மட்டும் அப்படிக் கூறவில்லை. அதன் பின் சில இந்து சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்த வரலாறும், அந்தப்புரங்களில் தீபாவளி
கொண்டாடப்படுவதற்கு அனுமதி கொடுத்த வரலாறும், நெற்றியில் சந்தனப்பொட்டோடு வந்து சமயவாதிகளுக்கு சங்கடம் தந்த வரலாறுமே அவரின் முற்போக்குச் சிந்தனையை எனக்கு அறிமுகம் செய்கிறது.
மத அடிப்படையில் மக்களைப் பிரித்துப் பார்க்காத அக்பரின் ஆட்சியில் பெருந்தளபதிகள் முதல் சாதாரண சிப்பாய்கள் வரை பெரும்பான்மையாக இந்துக்களே இருந்துள்ளனர். முகலாய சாம்ராஜியத்தில் மூத்த அமைச்சராக இருந்த தோடர் மாலும் ஓர் இந்து என சை.பீர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி மத பேதமின்றி ஆட்சி செய்ய அவர் திறமை உள்ள அனைவரையும் தட்டிக் கொடுக்க அறிந்த மன்னராகவும் வரலாற்றில் அறியப்படுகிறார். அரண்மனையில் குப்பை கூட்டும் பணியில் இருந்த ஒருவரின் மகன் ஓவியம் வரைவதைக் கண்டு கைத்தேர்ந்த ஓவியரிடம் பயிற்சி பெற வைத்து சிறந்த
ஓவியனாக்கியதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஆப்கானிய மன்னர்களிடமும் இப்படி திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பண்பு இருந்துள்ளது.
தனது இறுதி காலகட்டத்தில் விலங்குகள் புதைக்கும் இடுகாடாக தன் வயிற்றை மாற்ற விரும்பாத அவர் சைவ உணவை மட்டுமே உண்டு வாழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி இந்துக்களின் வழக்கத்தை மதிக்கவும் அதை பின்பற்றவும் முடிந்த அவரே உடன் கட்டை ஏறுவதைக் கடுமையான சட்டதால் தடை செய்தும் உள்ளார். அதைக் காட்டு மிராண்டித்தனம் எனவும் கூறியுள்ளார்.
ஆனால், அப்படி நீதியற்ற ஒரு பாரம்பரிய வழக்கத்தை எதிர்த்து வேற்று மதத்தவர்கள் போராடிய அதே அளவுக்கு இந்து மதத்துக்குள் உள்ளவர்களும் போராடி இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.
மேலும், ஜவஹார் (jauhar) என்றழைக்கப்பட்ட கூட்டமாக உடன்கட்டை ஏறும் பழக்கமும் ராஜபுத்திர வம்சத்தில் இருந்துள்ளது. இது ராஜபுத்திரர்கள் முகலாய மன்னர்களோடு போர் புரிந்த காலகட்டத்தில்தான் வளர்ச்சிக் கண்டுள்ளது.
ராஜப்புத்திர படை போரில் தோல்வியடைந்த செய்தி அறிந்து அரசிகள் கூட்டமாக அரண்மனையில் தீக்குளிக்கும் பழக்கமிருந்துள்ளது. கோரியுடன் செய்த போரில் பிருதிவிராஜனின் படை தோற்றதை அறிந்தபோது ராணி சம்யுத்தை உட்பட அரண்மனையில் இருந்த அனைத்து ராஜபுத்திரப் பெண்களும்
தீயில் கருகி மாண்டுள்ள வரலாறும் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
போர்க்கருவிகளை கலை நுணுக்கத்துடன் சேமித்து அதனைக் கையாளத் தெரிந்த சிறந்த போர் வீரராகவும் அக்பர் அறியப்படுகிறார். எனவே, ஒரு போர் வீரனுக்கு இருக்க வேண்டிய திடமான போர் குணமும் அவருக்கு இருந்துள்ளது.
ஆட்சியைக் காப்பாற்ற எதிராளியைக் கொள்ளத் துணிகின்ற மன்னர்தான் அவரும். சிறந்த போர் வீரரான அவருக்குள் கலைஞானமும் குடிகொள்ளவே செய்துள்ளது. எனவேதான், பல இலக்கியங்களை ஒரு சேர தொகுப்பதற்கு வழி வகை செய்துள்ளார்.
மற்ற மன்னர்களிடம் இல்லாத கலைரசனையும் அக்பரிடம் இருந்துள்ளது. அவர் சீக்கிய மதத்தினருக்கும், முஸ்லீம் அறிஞர்களும், இந்து மதத்தினருக்குமிடையே வாதங்கள் நடத்திப் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். மேலும், அக்பர் ‘தீன் இலாஹி’ என்ற புதிய மதக் கொள்கையையும் கடைப்பிடித்துள்ளார்.
தீன் இலாஹி என்பதற்கு தெய்வீக நம்பிக்கை என்பதே பொருள். இது தனித்துவம் வாய்ந்த கொள்கைகளை உடையதாக இருந்தாலும் அவருக்குப் பிறகு அவை மறைந்து போயின.
போர்க்களத்தையும் அரசவையையும் மட்டுமே மன்னர்களை அறியும் களமாகக் காட்டிய பல வரலாற்றுக்கு மத்தியில் ஒரு மன்னனின் கனிவான முகத்தையும் கவனிக்கக் கற்றுக்கொடுக்கிறது இந்தத் தொகுப்பு. அதுபோல அக்பரின் அரசியல் முகமும் அவசியம் அறியப்பட வேண்டியதே.
இந்து பெண்களை அவர் மணந்ததற்குப் பின்னால் அவரது மத பேதமற்ற குணம்தான் இருக்கிறது என்பதைவிட அதற்குள் ஒரு அரசியல் சிந்தனையும் இருந்திருக்கவே செய்துள்ளது. அதன் வழி அவர் ராஜபுத்திரர்களுடன் அனுக்கமான நட்பை வளப்படுத்தியுள்ளார்.
இரண்டாவது பானிபாட் போரில் தோற்கடிக்கப்பட்ட ஹெமு கொலை அவ்வளவு சாதாரணமானதல்ல. சந்தர்ப்பவசத்தால் கண்களில் அம்பு பட்டு சுயநினைவுத் தப்பிய நிலையில் அவரது தலை கொய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல் துண்டு துண்டாக்கவும்பட்டு தலை டெல்லியின்
டர்வாஷாவிற்கு வெளியே தொங்கவிடப்பட்டுமுள்ளது. அக்பரே தன் வாளால் ஹெமுவின் தலையைத் துண்டாக்கிய வரலாறையும் பின் அதை மறுக்கின்றவேறு சில வரலாறையும் சை.பீர் அவர்கள் கட்டுரையில் முன்வைத்துள்ளார்.
அக்பர் ஹெமுவின் கழுத்தில் சம்பிரதாயமாக வாளை வைத்து எடுத்தபின் பைராம்கானின் வாளே ஹெமுவின் தலையைத் துண்டித்ததாக மாற்று வரலாறுகள் கூறுகின்றன.
வரலாறு ராஜபுத்திரர்களின் தோல்விக்குக் காரணமாக அவர்களின் சில அலட்சியங்களை, ஒற்றுமையின்மையையும் முன்வைத்துள்ளது. முக்கியமாக ஆப்கானிய மன்னர்கள் ஒவ்வொரு முறை டெல்லியை நோக்கி படையெடுக்கும் போதும் அதற்கு நுழைவாயிலாக இருக்கும்
கைபர் கணவாயையும் கோமால் கணவாயையும் காக்க அவர்கள் ஒரு சிறு கோட்டையைக் கூட எழுப்பவில்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது. ஆனால், இவற்றைத் தாண்டி போரின்போது அவர்கள் கடைப்பிடித்து வந்த போர் தர்மமும் அவர்களின் தோல்விக்குக் காரணமாகவே அமைந்துள்ளது.
போரில் தோற்ற மன்னனைக் கொல்லாமல் விடுவதும் அவர்களின் போர் தர்மம்தான். அப்படி பிருதிவிராஜ் மன்னனால் மன்னித்து விடப்பவன்தான் கோரி. ஆனால் பின்னாட்களின் நடந்து மற்றொரு போரில் பிருதிவிராஜ்
மன்னரின் சாம்ராஜியத்தைக் கைப்பற்றி அவரது கண்களையும் தோண்டி எடுத்துக் கைது செய்தது மன்னித்து விடப்பட்ட அதே கோரிதான் என்கிறது வரலாறு.
எனவே, எதிரிகளை மன்னித்து விடும் பெரும்பிழையை ஒரு போதும் செய்யாத அக்பர் போன்ற சில முகலாய மன்னர்களின் ஆட்சியே நிலைத்துள்ளது. நாம் இப்படி அக்பரின் இன்னொரு அரசியல் முகத்தையும் அதன் வழி நம் ராஜபுத்திரர்களின் பெரும்பிழைகளையும் ஒப்பீடாக்கி அறிய முடிகிறது.
அக்பருக்குப் பிறகு முகலாயர் ஆட்சியில் கொஞ்சம் ஈர்க்கவும் அதே அளவு அதிசயிக்கவும் வைத்த மன்னனாக அவரது மகன் ஜஹாங்கீரை சொல்ல வேண்டும். ஜஹாங்கீர் ஒரு மன்னராக நம்மைக் கவரக்கூடியவரல்ல.
800 மனைவிகளை உடைய அவர் மதுப்பழக்கதிற்கு அடிமையாகவே இருந்திருக்கிறார். தனது மணிமகுடத்திற்குப் போட்டியாக வந்துவிடுவானோ என்ற சந்தேகத்தில் தன் மகனைப் பழிவாங்கும் ஜஹாங்கீர் மிகவும் குரூரமாக நமக்கு அறிமுகமாகிறார்.
தன் மகனை தனியறையில் வைத்து பூட்டிய அவர் பின் ஒருநாள் புத்திர பாசத்தில் அவனை விடுவித்து அவனைத் தன்னோடு வேட்டைக்கு அழைத்துச் செல்கிறார். ஜஹாங்கிரின் மகன் குஸ்ரு தளபதிகளின் துணையுடன் ஜஹாங்கீரின் தலையைச் சீவ திட்டமிட்டதை அறிந்து அவனது இரு கண்களை
பழுக்கக் காய்ச்சிய கம்பியால் குத்திக் குருடனாக்கச் சொல்லுக்கிறார். அது நிறைவேற்றவும்படுகிறது. ஆனால் கருணையின் பேரில் ஒரு கண்ணை முழுமையாகவும் மறுகண்னை பாதியாகவும் குருடாக்கினர் பணியாட்கள்.
இப்படி தந்தை மகன் என்ற பேதமில்லால் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் போகத் துணியும் ஒரு மன்னராக ஜஹாங்கீரை அறிய முடிகிறது.
1600 ஆம் ஆண்டில் அக்பர் குறிக்கோள் பயணமாக தலைநகரத்தை விட்டு சென்றிருந்தபோது சலிம் ஒரு வெளிப்படையான கிளர்ச்சியை ஏற்படுத்தி தன்னைத்தானே பேரரசர் என அறிவித்துக்கொண்டார்.[4] அக்பர் விரைவாக ஆக்ராவிற்கு திரும்பி அந்த ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
அச்சமயம் அக்பர் அவரது முதல் பேரனான குஸ்ரா மிர்ஸாவை சலீமிற்குப் பதிலாக அரியணை ஏற்ற திட்டமிட்டிருந்தார்.[5] அவரது தந்தை இறந்து எட்டு நாட்களுக்குப் பிறகு 1605 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி இளவரசர் சலிம் வலுக்கட்டாயமாக அரியணையை ஏறினார்.
சலிம் அவரது 36 ஆவது வயதில் நூர்-உத்-தின் முகமது ஜஹாங்கிர் பாதுஷா காஜி என்ற பெயருடன் அரியணை ஏறினார். இதன் மூலம் அவரது 22-ஆண்டு கால ஆட்சி தொடங்கியது. அதற்குப்பின் விரைவில் ஜஹாங்கிரின் மகனான இளவரசர் குஸ்ரா மிர்ஸா தானே அக்பருக்குப் பிறகு அரியணைக்கு அடுத்த வாரிசு
என உரிமை கோரியதை நிராகரித்தார். 1606 ஆம் ஆண்டு குஸ்ரா மிர்ஸா ஆக்ரா கோட்டையை வீழ்த்தி தன் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தார்.
பின்னர் தப்பியோடிய குர்ஸா மிர்ஸா பார்க்கச் சென்ற சீக்கிய குரு அர்ஜூன் (அச்சமயத்தில் உட்குழுவின் சமயம் சார்ந்த தலைவர்) மிர்ஸாவிற்கு பணம் கொடுத்து உதவியதற்காக குரு அர்ஜூனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.
மேலும் தண்டனையாக குர்ஸா மிர்ஸா குருடாக்கப்பட்டார். ஜஹாங்கிரின் ஆட்சியானது அவரது தந்தை அக்பரைப் போன்றே சமய சகிப்புத்தன்மை கொண்டு விளங்கியது. முன்பு அவரது ஆட்சியில் மோசடி செய்த சீக்கியர்களை மட்டும் அவர் எதிர்த்தார்
தமிழ் சினிமாவின் மார்க்கேண்டயன் எனும் சிவகுமார் கோவை 27 OCT 1941 ராக்கிய கவுண்டர் -பழனியம்மாள் தம்பதியர்களின் மகன் பழனிச்சாமியாக பிறந்தவர் .
கொங்கு வெள்ளாள கவுண்டர் (OBC)
ராமதாஸ் சூலை 25, 1939(BC ↪️🔀SC)
கீழ்சிவிரி என்னும் ஊரில். சஞ்சீவராயக் கவுண்டர்-நவநீத அம்மாள் (அரிஜன பட்டியல் வகுப்பை சார்ந்த )தம்பதியர்களின் மகனாக பிறந்து தேவேந்திரர் SC பிரிவில் மருத்துவம் பயின்றவர் .
இது டாக்டர் ராமதாஸ் 1991 யில் கொடுத்த பேட்டியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் ஆகும்.
1. டாக்டர் ராமதாஸ் ஜூலை 25, 1939 மிக எளிய குடும்பத்தில் பிறந்தார்.
2.முதலில் மொளவு கவுண்டர் என்பவர் நடத்திய திண்ணை பள்ளிக்கூடத்தில் பயின்றார்.
இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - மனித துயரங்களில் குளிர் காய்ந்த வரலாறு பற்றி அறியப்படாத தகவல்கள்
அது பதினாறாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டு. உலகின் மொத்த பொருட்களின் உற்பத்தியில் கால் பகுதி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. இதே காரணத்திற்காக, இந்த நாடு தங்கப் பறவை என்று அழைக்கப்பட்டது. அப்போது, முகலாய பேரரசர் ஜலாலுதீன் முஹம்மது அக்பர் டெல்லியில் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
உலகின் பணக்காரப் பேரரசர்களில் ஒருவராக இருந்தார். மறுபுறம், பிரிட்டன் உள்நாட்டுப் போரினால் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதன் பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்தே இருந்தது. உலகின் மொத்த உற்பத்தியில் மூன்று சதவீதம் மட்டுமே அங்கு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
மருத்துவர் இராமதாசும் வன்னியர்களை அழித்த வரலாறும் :-
வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் செங்கல்வராயன் நாயக்கர் அறக்கட்டளையின் இயக்குநராகவும் இருந்தவர் ஏ.கே.நடராசன்.
பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட இந்த அறக்கட்டளையைக் கைப்பற்ற முயன்றார் இராமதாஸ். தனது மகள் கவிதாவின் சின்ன மாமனாரும் (சம்பந்தி) முன்னாள் டி.ஜி.பி.யுமான ராஜ்மோகன் என்பவரை அறக்கட்டளையின் தலைவராக்கச் சதித் திட்டம் போட்டார். விளைவு,
1996ஆம் ஆண்டு ஏ.கே.நடராசன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை நையப் புடைத்து மாடியிலிருந்து தூக்கி எறிந்தனர். படுகாயம் அடைந்த ஏ.கே.நடராசன் மூன்று ஆண்டுகள் கோமாவில் இருந்தார்.
Castes and Tribes of Southern India, Edgar Thurston, 1909, volume 1
அக்னி என்பது குருபர், ஹொல்லர் பள்ளிகளில் ஒரு வகை. அக்னி பள்ளி போயர்கலாக அறியப்படுகின்றனர். பள்ளிகள் தங்களை அக்னிக்குல சத்திரியர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
“மாதொரு பாகன்” நாவலை தடை செய்யுமாறும், நூலை எரித்தும் திருச்செங்கோட்டில் போராட்டம் நடைபெற்றதை அறிந்திருப்பீர்கள். நாமக்கல் வருவாய்த்துறை அலுவலகத்தில் அரசு அதிகாரத்தினால் நாவலாசிரியர் பெருமாள் முருகன் சித்ரவதை செய்யப்பட்டதும்,