1. The Emerging Mind - ராமச்சந்திரன் 2. தமிழர் நாட்டுப்பாடல்கள் - நா.வானமாமலை 3. ஞானக்கூத்தன் கவிதைகள் 4. முக்தா சீனிவாசன் எழுதிய கதைகள் 5. தென்றல் வெண்பா ஆயிரம் - கவியரசு கண்ணதாசன் 6. Spartacus - Howard Fast
7. இடக்கை-எஸ்.ராமகிருஷ்ணன் 8. வாழ்வின் அர்த்தம் – மனிதனின் தேடல் - விக்டர் ஃபிராங்கல்
போன season 👇
1. The Plague - Albert Camus 2. 'அவமானம்' - மண்டோ படைப்புகள் 3. புயலிலே ஓரு தோனி - ப. சிங்காரம் 4. அடிமையின் காதல் - ரா. கி . ரங்கராஜன் 5. மிர்தாதின் புத்தகம் - Mikhail Nainy
6. கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்
7.எஸ்தர் - வண்ணநிலவன்
8.தொடுவானம் தேடி - ஏ.தில்லைராஜன், கே. அருண்குமார் , சஜி மேத்யூ 9. நாளை மற்றுமொரு நாளே - ஜி, நாகராஜன் 10. ஜே.ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி 11. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் 12. கூளமாதாரி - பெருமாள் முருகன்
13. நிறங்களின் உலகம் - தேனி சீருடையான் 14. வாசிப்பது எப்படி - செல்வேந்திரன் 15. அழகர் கோயில் - தொ. பரமசிவன் 16. வெண்முரசு நாவல்கள் - ஜெயமோகன்
கமல் இந்த வாரம் பரிந்துரைத்த நூல், Samuel Charles Hill எழுதிய Yusuf Khan; The Rebel Commandant.
Yusuf Khan: The Rebel Commandant (Classic Reprint) amazon.in/dp/1333683715/…
இந்த வார பரிந்துரை
"விக்ரமாதித்யன் கவிதைகள்" "மரபுக்கவிதைக்கும் நவீன கவிதைக்கும் பாலமாக இருந்தவர்" என்று இவரைக் கமல் குறிப்பிட்டார். amazon.in/dp/B09F5D1F1B/…
இந்த வாரம் கமல் பரிந்துரைத்த நூல், எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய ‘ரண்டாமூழம்’ என்கிற புதினம். ஞானபீட விருது பெற்ற நூல். ‘இரண்டாம் இடம்’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
'தமிழ்' பிக் பாஸ் மெதுவாக toxic ஆ மாறிக்கொண்டே வருகிறது. ஆரம்பத்தில் இது social experiment. வீட்டுக்குள் சின்ன சின்ன சவால்கள், ஒன்றாக வாழ்வதால் ஏற்படும் மோதல்கள் என நார்மல் ஆ இருந்தது. தினசரி சவால்கள் அதை எப்படி போட்டியாளர்கள் எதிர்கொள்கிறார்கள்.
அதில் எப்படி அவர்களது moral value வெளிப்படுகிறது. சவால்களை நேர்மையுடனும், மனிதாபிமானத்துடன் எதிர்கொள்பவர்களை மக்கள் ரசித்தார்கள் அதில் மக்களுக்கும் பாடம் இருந்தது.
ஆனால் சீசன் போக... போக... சுவாரசியம் வேண்டும், strategy, சண்டை, அடிதடி, என toxic participant களை மக்கள் ஆதரிக்கிறார்கள். எனவே அடுத்த அடுத்த சீசனில் toxicity அதிகரிக்கிறது.
அன்றைய கால school இன்றைய கால ஸ்கூல் மாதிரி கிடையாது. அன்று இருக்கும் தகவல்களை எல்லாம் எழுதி சேமித்து வைக்க record create பண்ணுவதற்கு எழுத படிக்க சொல்லி தருவார்கள். அவர்கள் பிரதி எடுக்கும்போது படித்து கொள்வதுதான்.
மற்றபடி உனக்கு science சொல்லி தரேன் நீ physics குரூப் அப்படி கிடையாது. இந்த வகையில் பார்க்கும்போது சுமேரியாவில் தான் முதல் பள்ளி இருந்தது அதன் பெயர் Edubbas (3500 BCE) இங்கு எழுத, படிக்க, வரவு செலவு பார்க்க கணக்கு சொல்லித்தரப்படும்.
பட்டியலிடப்பட்டு இருக்கும் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் புத்த பிட்சுக்களால், புத்த மத கருத்துக்களை புத்தகமாக எழுதவும், அவற்றை பல பிரதிகள் எடுக்கவும் பாதுகாத்து வைக்கவும் உருவாக்கப்பட்டவை. இவை எல்லாம் புத்த மத கல்வி நிலையங்கள் முதல் நூற்றாண்டுக்கு பின்னர் தோன்றியது.
நேற்று நடந்த விமான சம்பவத்தால் பலர் Captain Sully யை நினைவு கூறுகிறார்கள். நிஜ வாழ்வில் Sully நடத்திய 'Miracle on the Hudson river' எப்போது நினைத்தாலும் goosebumps incident. ஏன் goosebumps? ஒரு retired air force pilot, flight take off ஆகி 97 sec ல, ஒன்னு இல்ல, 2 என்ஜினும் அவுட்.
இப்படி நடக்கிறதுக்கு வாய்ப்பே இல்ல. 'அதெப்டிங்க ஒரே நேரத்துல 2 என்ஜினும் போகும்'ன்னு, இந்த மாதிரி சம்பவத்திற்கு எந்த training ம் குடுத்து இல்லை. Sully, 20000 மணி நேரம் flight ஓட்டிய அனுபவஸ்தர். ஆனா, ஒரு என்ஜின் fail ஆனா கூட எப்படி இருக்கும்ன்னு அவரு பாத்தது இல்ல.
take off ஆகி Hudson river ல இறக்கினத்துக்கு இடைப்பட்ட மொத்த நேரமும் வெறும் 5 நிமிஷம்! இந்த 5 நிமிஷத்துல, வாத்து மோதினத்தை பார்த்து அதிர்ச்சியாகி, அது cockpit windshield ல மோதி, என்ஜின் ல மோதி அந்த damage அ assess பண்ணி, என்ஜின் ல இருந்து லீக் ஆகுற fuel அ கணக்கு பண்ணி,
Vikings: Valhalla (Netflix ) series, வரலாற்றை சுவாரசியத்திற்காக கொஞ்சம் மாத்தி எடுத்து இருக்கறாங்க அது இப்போ முக்கியம் இல்ல. அதுல வர்ற King Canute தான் இங்கிலாந்தின் முதல் Viking ராஜா.
அவரை Scandinavia ல "Knut the Great" ன்னு கூப்பிட்டாலும், இங்கிலாந்தில் அவரை நக்கலடிக்க ஒரு கதை சொல்லுவாங்க. ஒருமுறை Canute கடலுக்கு போய் அலைகளை பார்த்து, "நில்! நில்!" ன்னு கத்துனாறாம்.
'நீ பெரிய ராஜாவா இருக்கலாம். அதுக்காக, நீ நில்லுன்னு சொன்னா, அலை நின்னுடுமா? லூசுப்பைய!' அப்படிங்ற மாதிரி இங்கிலாந்து மக்கள் இந்த கதையை சொல்லி சிரிப்பாங்க. ஆனா, உண்மையில் நடந்தது என்ன? Viking ராஜாவை தாஜா பண்ண, இங்கிலாந்து அரசவை மக்கள் ரொம்ப புகழாரம் வீச...
4 ஆம் நூற்றாண்டு பொ.ஆ.மு வில் Spartan கள் எழுச்சி அதிகமாக இருந்தது. அப்போது Spartan களை எதிர்கொள்ள, கிரேக்க நாடான தீப்ஸ் ல் Gorgidas என்னும் தலைவரால் உண்டாக்கப்பட்ட ஒரு படை தான் "The Sacred Band of Thebes." இந்த படையில் 300 வீரமிக்க இளைஞர்கள் இருந்தார்கள்.
அந்த 300 பேரும் காதல் ஜோடிகள். அதாவது, 150 காதல் ஜோடிகளை கொண்ட படை இந்த Sacred Band. அன்றைய Theban army யில் இது ஒரு elite unit. நாட்டுக்காக சண்டையிடுவதை விட தனது துணையின் உயிருக்காக சண்டையிடும்போது வீரம் துணிச்சல் அதிகரிக்கும் என Gorgidas நினைத்தார்.
அவர் நினைத்ததை போலவே 40 வருடங்கள் தோல்வியே கண்டிராத படை இந்த படை. செல்லும் இடம் எல்லாம் வெற்றி தான். கடைசியாக 338 BCE யில் Philip II of Macedon விடம் Battle of Chaeronea வில் தோற்றது.
ஆல்பா ஆண் என்ற சிந்தனை ஆரம்பகால சிந்தனை. வனவிலங்கு ஆய்வாளர்கள் ஆரம்பத்தில் ஓநாய்களில் ஆல்பா ஆண் என்னும் தலைவன் இருக்கும் அதை பின்பற்றியே அதன் கூட்டம் இயங்கும். அந்த ஆல்பா ஓநாய் முரட்டுத்தனமானது, மற்ற ஆண் ஓநாய்களிடம் சண்டையிட்டு அதன் இடத்தை தக்க வைத்து கொள்ளும்,
தனது அதிகாரத்தை மற்ற ஓநாய்களின் மேல் செலுத்தும் என்று சொன்னார்கள். ஆனால் இந்த கருத்து தவறானது என தற்போதைய வனவிலங்கு ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வனவிலங்கு ஆய்வாளர்கள் இப்போது ஆல்பா என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை.
மனிதர்களிடையே இருப்பதை போல ஓநாய்களிடமும் குடும்பம் என்ற அமைப்பு இருக்கிறது. மனித குடும்பத்தில் தந்தை எப்படி குடும்பத்தை வழிநடத்துகிறதோ அதே போல அங்கும் ஓநாய் தந்தை அந்த குடும்பத்தை வழிநடத்துகிறது.
இந்த ஆல்பா என்ற சொல், ஓநாய்களை பிடித்து, அடைத்து, அதை ஆராய்ந்த போது வந்த சொல்.