மருத்துவரை கடத்திய அராஜக திமுக ஒன்றிய செயலாளர் கைது !
#விடியல்
அரசு மருத்துவரை கடத்திச் சென்று தாக்கியதாக, திமுக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த பத்மநாபன் மகன் முருகப்பெருமாள் (25). இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பல் மருத்துவராக பணிபுரிகிறார்.
கடந்த 18-ம் தேதி பணியை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, ஒரு காரில் வந்த 3 பேர் இவரை கடத்திச் சென்றனர்.ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.சித்திரவதை செய்ததோடு அவரிடமிருந்த, ரூ70 ஆயிரம்,
மதிப்புள்ள செல்போன் மற்றும் மணி பர்சை பறித்துக் கொண்டு மீண்டும் காரில் ஏற்றி அதே அரசு மருத்துவமனை வளாகத்தில் கொண்டு விட்டு சென்றனர்.அப்போது அவர்கள், ’’ஒரு மணி நேரத்தில் நீ தூத்துக்குடியை விட்டு ஓடிவிட வேண்டும்.இங்கு நடந்ததை யாரிடமாவது சொன்னால்,உன்னையும் உன் குடும்பத்தையும்,
கூண்டோடு அழித்துவிடுவோம்’ என்று மிரட்டிவிட்டு அதே காரில் சென்றுவிட்டனராம்.அதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர் முருகப்பெருமாள் உயிருக்குப் பயந்து காயத்துடன் மதுரையில் உள்ள அவரது உடன் படித்த நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று நடந்த விபரத்தை அங்கு கூறியிருக்கிறார்.
அதன் பிறகு தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடிக்கு வந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பயிற்சி மருத்துவர் கடத்தி, தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணையில்,
மருத்துவர் முருகப்பெருமாளை கடத்திச் சென்று தாக்கியது, ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவரும்,ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலருமான இளையராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என விசாரணையில் தெரியவந்தது.இதையெடுத்து,தென்பாகம் போலீஸார் இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயிற்சி மருத்துவர் முருகப்பெருமாள் தன்னுடன் பயிலும் மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி வருவதாகவும், அது அப்பெண்ணின் தந்தைக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் அவர்களின் குடும்ப நண்பரான இளையராஜாவிடம் இது குறித்து தெரிவித்ததின் அடிப்படையில் அவர், பயிற்சி மருத்துவரை கடத்தி மிரட்டியுள்ளதாக,
போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான அனிதாராதாகிருஷணனின் ஆதரவாளர்தான் இந்த இளையராஜா. ஏற்கனவே அதே அமைச்சரின் ஆதரவாளர் பில்லாஜெகன், விருந்தினர் மாளிகையில் தகராறு செய்த விவகாரத்தில் சிறையில் இருக்கிறார்.
தற்போது அதே அனிதாராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் சிக்கலில் சிக்கியிருக்கிறார்.இச்சம்பவம் நடந்த உடன் அது குறித்த தகவல் கட்சி தலைமைக்கு சென்றதாம். தலைமையின் அனுமதியுடன்தான் பயிற்சி மருத்துவர் அட்மிட் மற்றும் புகார் நிலைக்கு சென்றார் என்கிறார்கள்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களால் தூத்துக்குடி மாவட்டத்தில் உண்டாகும் பிரச்சனைகளால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது திமுக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

ஒரே தேசம் செய்திகள்
@oredesam

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saran Modi🇮🇳🚩

Saran Modi🇮🇳🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SaranModi7

26 Nov
உபியில் 330 இடங்களை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்த அமித் ஷா! முக்கிய 2 MLA க்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்!
@BJP4UP
அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். உத்திர பிரேதசம். 23 கோடி மக்கள் தொகையை கொண்ட மாநிலம் ஆகும். மினி இந்தியா என்றே அழைக்கலாம். உத்திர பிரேதச தேர்தல்கள் தான் இந்தியாவின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியை கொண்டது.
மேலும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் பிரமாண்ட வெற்றியை பெறவும் தேர்தல் பொறுப்பாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஆட்டத்தை ஆரம்பித்துளார்.

உத்தரபிரதேசத்தில் சோனியாவின் ரேபலி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ரேபரலி சட்டமன்ற காங்கிரஸ் எம்எல்ஏ அதிதிசிங்,
Read 12 tweets
26 Nov
மதமென பிரிந்தது போதும்.. அக்னி குண்டத்தில் நெய் ஊற்றிய ஜமாத் தலைவர் இஸ்லாத்தில் இருந்து நீக்கம்! சமூக நீதி காவலர் திருமா எங்கே?
@thirumaofficial
குமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் மத்தியில் தனிப்பெரும் செல்வாக்குமிக்க சதாவதானியின் பேரன் பாவலர் சித்திக்,வல்லமை பொருந்தியவர் மத நல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்ற அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாவலர் சித்திக் எப்போதும் நடக்கும் மத நல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்பது வழக்கம்.
அதுபோல் மும்மதத்தினரும் அவரைப் பேசவும், சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் அழைப்பார்கள். பாவலர் சித்திக், கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் ஜமாத் தலைவராகவும் உள்ளார்.
அண்மையில், நடைபெற்ற நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி மன்றம் சார்பில்,
Read 13 tweets
25 Nov
2026-ல் தமிழகத்தில் நாங்கள்தான் ஆட்சி ! 150 இடங்களை பெறுவோம் ! மாஸ் காட்டிய அண்ணாமலை !
@annamalai_k
திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்ட பா.ஜ.க அலுவலக திறப்புவிழா மற்றும் பா.ஜ.க., செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திருப்பூருக்கு வந்திருந்தார்.

பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,
நட்டா வந்திருப்பது திருப்பூர் மக்கள் செய்த பாக்கியம் என்று பேச்சை தொடங்கினார். “இந்த உலகத்துலயே மிகப்பெரிய கட்சி பா.ஜ.க. 18 கோடி பேர் உறுப்பினராக இருக்கிறோம்.ஒரு சாதாரண செருப்பு தைக்கின்ற குடும்பத்தில் பிறந்து, பா.ஜ.க.,வால் கண்டெடுக்கப்பட்டு படிப்படியாக ஒவ்வொரு நிலையாக உயர்ந்து,
Read 9 tweets
25 Nov
நேற்று தமிழகத்தில் மாபெரும் ஆச்சரியம் ஒன்றை செய்து காட்டியிருக்கின்றது பாஜக கட்சி, நிச்சயம் அவர்களுக்கு இது மிக உற்சாகமான ஒன்று, தமிழகத்துக்கு அதிசயமான ஒன்று.
@annamalai_k
@BJP4TamilNadu
👇
நேற்று கோவையில் நடந்த நிகழ்வில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் நட்டா முன்னிலையில் இணைந்திருக்கின்றார்கள் பல பிரமுகர்கள்

இவர்களில் அதிமுக முன்னாள் எம்.எ.ஏக்கள் முதல் அமமுகவினர் பாமகவினர் என பெரும் கூட்டம் ஓடி வந்து இணைந்திருக்கின்றது
👇
மாற்றுகட்சியினர் ஒரு கட்சி தேடி வருகின்றார்கள் என்றால் அக்கட்சி வளர்கின்றது, அதற்கு மிகபெரிய எதிர்காலம் இருப்பதாக நம்பபடுகின்றது என்பதே அரசியல் அர்த்தம்

இந்த விழாவில் நட்டா பேசியதுதான் ஹைலைட்

பாஜக தலைவரான நட்டா திமுகவினை குறிவைத்து பேசினார்,
👇
Read 13 tweets
24 Nov
ஊடகங்களை ஒருமையில் பேசி அடக்கிய தி.மு.க அமைச்சர் வைரலாகும் வீடியோ..மயான அமைதி ஊடகவியாளர்கள்..
சமூக வலைத்தளங்களில் திமுக அமைச்சர் நாசர் பத்திரிகையாளர்களை யோவ் ஒழுங்கா கீழே உட்காரு என கூறி மிரட்டும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.உவமைக் கவிஞர்’ என அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அசோக் பில்லர்,மாநகராட்சி பூங்கா அருகில் அமைந்துள்ள,
அவரது திருவுருவச் சிலைக்கு நாளை (23.11.2021) நேற்றைய தினம் காலை 9.30 மணியளவில், தமிழக அரசின் சார்பில், திமுகஅமைச்சர் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினார்கள்.இந்த நிகழ்ச்சியில்,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பியமணியன்,பால்வளத்துறை அமைச்சர் நாசர்,
Read 9 tweets
24 Nov
சாமானியன் நிலத்தை ஆக்கிரமிக்க முயலும் தி.மு.க எம்.பி…மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிக்க முயன்ற சாமானியன்…பரபரப்பு சம்பவம்..
திமுக எம்.பி நில அபகரிப்பு செய்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் முன்பு தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்திய கணேஷ் குமாரை மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி அழைத்து பேசினார்.ராஜபாளையம் அருகே தேவதானம் சாஸ்தா கோவில் நீர்தேக்கம் அணை பருவ மழை காரணமாக முழு கொள்ளவு எட்டியதையடுத்து,
அணை விவசாய பயன்பாட்டிற்க்காக இன்று (நவம்பர் 22) திறந்து வைக்கப்பட்டது. அணை திறப்பு நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, திமுக தங்கபாண்டியன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு அணையை திறந்தனர்.அணை திறப்பு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் திரும்பிக்கொண்டிருந்தபோது,
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(