அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வு காலத்துக்குப் பின், அதாவது 60 வயதுக்குப் பின் மாதம் ரூ. 1000 - 5000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பது தான். அதற்காக அரசு
எப்படி இணைவது?
எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, முகவரி சான்று, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தர வேண்டும்.
வங்கி உங்களுக்கு ஒரு ப்ரான் எண்ணை (PRAN Number) வழங்கும். அந்த ப்ரான் எண்ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ப்ரான் எண், நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.
யார், எவ்வளவு தொகை செலுத்தலாம்?
நாம் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும்
போதே 60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்பதைக் கேட்பார்கள். குறைந்தபட்சம் ரூ. 1000 தொடங்கி அதிக பட்சமாக ரூ. 5000 வரை ஒருவர் பென்ஷனாக பெற நினைக்கும் தொகையை குறிப்பிடலாம். பென்ஷனாக பெற நினைக்கும் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும்
பணம் கட்ட வேண்டியிருக்கும்.
முதல் முறையாக இந்தத் திட்டத்தில் இணைந்தவுடன், இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கு சாட்சியாக ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அது தான் ஒருவர் இத்திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். அதே போல் ஒவ்வொரு தவணை செலுத்தும் போதும் உங்களுக்கு ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோ
அனுப்பப்படும்.
எப்போது பணம் எடுக்கப்படும்?
நாம் முதல் முறையாக அடல் திட்டத்தில் இணையும் போது எந்த தேதியில் பணம் செலுத்துகிறோமோ, அந்த தேதி தான் நம் அடுத்தடுத்த மாதத்தின் கெடு தேதி. உதாரணமாக, ஜூன் மாதம் 8 ஆம் தேதி முதல் தவணை செலுத்தி இருந்தால், அடுத்தடுத்த மாதம் 8 ஆம் தேதி
அன்று தவணைக்கான பணம் எடுக்கப்படும்.
யார் நிர்வகிக்கிறார்கள்?
இத்திட்டத்தை வருங்கால வைப்பு நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்கிற அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 85% அரசு பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யப்படும்.
மீதமுள்ள 15% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
க்ளெய்ம் கிடைக்கும் நேரம்
இத்திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்குப் பின் இறந்துவிட்டால், அவரது இறப்பு சான்று, இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார் அட்டை விவரங்கள், நாமினியின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை
திட்டத்தை நிர்வகிக்கும் வங்கிக் கிளையில் சமர்பித்தால், வங்கி அந்த ஆவணங்களின் நகலை பிஎஃப்ஆர்டிஏவுக்கு (PFRDA) அனுப்பும். பிஎஃப்ஆர்டிஏ (PFRDA) சான்றிதழ்களை சரி பார்த்து பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும். ஒரு வேளை 60 வயதுக்கு முன் இறந்தால் அல்லது உயிர் போகக்கூடிய நோய் காரணமாக
பணத்தைத் திட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என்றால், திட்டத்தில் இணைந்தவர் எவ்வளவு தொகை செலுத்தினாரோ அந்தத் தொகையும், அரசு தன் சார்பாக வழங்கிய தொகை மட்டும் தான் வழங்கும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பட்டப் படிப்புக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகமாகிவருகிறது. மேலாண்மை சார்ந்த கல்வி, உலகச் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம், படிக்கும் போதே சுற்றுலா சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி, படித்து முடித்த உடன் வேலை,
எனப் பல சிறப்புகளைக் கொண்டு இருக்கும் சுற்றுலா படிப்புகள் உலக அளவில் அநேக மாணவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் படிப்பாக உள்ளது.
சுற்றுலா சார்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவிச் சிறப்பாகச் செயல்பட்டு,
Secretary to Government
திரு. மகேசன் காசிராஜன்
25672887
tdinfosec@tn.gov.in #ஒன்றியஉயிரினங்கள்
தமிழ் வளர்ச்சித் துறை வரலாறு
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது.
ஆட்சிமொழிக் குழுவின் தலைவராகத் திரு.என்.வெங்கடேசன் அவர்கள் பொறுப்பேற்றார்.
இக்குழு தமிழகம் முழுவதிலுமுள்ள அலுவலகங்களை ஆய்வு செய்து தமிழில் அலுவல்களை நடத்த அறிவுரையும், ஆட்சிமொழித் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைக் களைய அறிவுரையும்,
மக்கள் நலத்தைப் பேணுகின்ற மாநிலமான தமிழகத்தில், அரசின் முயற்சிகள் அனைத்தும் ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின், சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சமூக, பொருளாதார வளர்ச்சியே ஊரக வளர்ச்சியின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும், தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
உலகிலேயே அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்கிறது இந்தியா. உலகின் மொத்தப் பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 16 சதவீதம் ஆகும். பால்வளத்துறையானது ஆண்டுக்கு
இதனால், பால்வளத் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு நிறுவனமான ‘ஆவின்’, பால்வளத் தொழில்நுட்பப் பணிகளுக்கு, தமிழகத்தில் பால்வளத் தொழில்நுட்பப் படிப்பு (Dairy Technology) இல்லாத நிலையில்,
கர்நாடகம், அரியானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பால்வளத் தொழில்நுட்பம் படித்தவர்களைப் பணியமர்த்திவரும் நிலை இன்றுவரை தொடர்கிறது.
பால்வளத் துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தில் பால்வளத் தொழில்நுட்பப் படிப்பு இல்லை என்ற குறையைப் போக்கும் வகையிலும்
ரூ.25,000 தொகையும் (ரூ.15,000 காசோலையாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்பு சான்றிதழாகவும்) திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
ரூ.50,000 தொகையும் (ரூ.30,000 காசோலையாகவும் ரூ.20,000 தேசிய
சேமிப்பு சான்றிதழாகவும்) திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் ((1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
தகுதியுடைய பயனாளிகள்
சாதிகளுக்கிடையேயான திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்.
தகுதிகள்
கைத்தறி நெசவுத் தொழிலானது 65 இலட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உள்ளடக்கிய, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொழிலாகும். பாரம்பரியம் மற்றும் நேர்த்தியான கைவினை, நெசவு ஆகியவைகளின் அடிப்படையில் தமிழ்நாடானது கைத்தறி தொழிலில் இந்தியாவிலேயே முன்னினை மாநிலமாக உள்ளது.
பண்டைக் காலந்தொட்டே நேர்த்தியான நெசவுக்கு புகழ்பெற்றது கைத்தறி நெசவாகும். தமிழகத்தை பொறுத்தமட்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றுவதுடன் 3.19 இலட்சம் நெசவாளர்கள் உள்ளடக்கிய 1.89 இலட்சம் நெசவாளர் குடும்பங்கள் கொண்டது கைத்தறி தொழிலாகும்.