சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பட்டப் படிப்புக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகமாகிவருகிறது. மேலாண்மை சார்ந்த கல்வி, உலகச் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம், படிக்கும் போதே சுற்றுலா சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி, படித்து முடித்த உடன் வேலை,
எனப் பல சிறப்புகளைக் கொண்டு இருக்கும் சுற்றுலா படிப்புகள் உலக அளவில் அநேக மாணவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் படிப்பாக உள்ளது.
சுற்றுலா சார்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவிச் சிறப்பாகச் செயல்பட்டு,
வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துவருகின்றன. ஆனாலும், தமிழகத்தில் சுற்றுலா படிப்பைப் பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் அவ்வளவாக இல்லை என்பதே நிதர்சனம்
பிளஸ் டூ முடித்த மாணவர்கள், இளநிலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.
பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட்,
பி.பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட்,
பி.காம். டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட் எனப் பல பெயர்களில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கோவை அரசு கலைக் கல்லூரி உட்படப் பல அரசு,
தனியார் கல்லூரிகளில் பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட் என்ற மூன்று ஆண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் டூ வகுப்பில் எந்த பிரிவில் படித்த மாணவர்களும் இந்தத் துறையைத் தேர்தெடுத்துப் படிக்கலாம். தகவல் தொடர்புத் திறன், ஆளுமை மேம்பாடு, பயண நிறுவனம் மேலாண்மை,
உலகச் சுற்றுலாத் தலங்களைப் பற்றிய அறிவு , சுற்றுலா தொகுப்பு வடிவமைப்பு, சந்தைப்படுத்தல் மேலாண்மை, சுற்றுலா பொருளாதாரம், விருந்தோம்பல் மேலாண்மை, நிகழ்வு மேலாண்மை, விமான மற்றும் விமான நிலைய மேலாண்மை ஆகியவை சுற்றுலா பாடத்திட்டத்தில் உள்ள மிக முக்கியமான பாடங்கள்.
இந்தப் பாடப் பிரிவில் கற்றுத்தேர்ந்து சிறந்த அறிவும் ஆங்கில மொழிப் புலமையும் பேச்சுத் திறனும் வளர்த்துக்கொண்டால் சுற்றுலாத் துறையில் பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்
ஏதாவது ஓர் இளைநிலை பட்டம் பெற்ற பிறகும்கூட, முதுநிலை பட்டமாக சுற்றுலா படிப்புகளைப் படிக்கலாம்.
MTTM (Master of Tourism & Travel Management), MBA (Tourism), MA (Tourism) எனப் பல பெயர்களில் பல்கலைக்கழகம் சார்ந்து முதுநிலையில் சுற்றுலா படிப்புகள் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்
இந்தியச் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை கல்வி நிறுவனம் (IITTM) குவாலியர், நொய்டா, புவனேஸ்வர், கோவா, நெல்லூர் ஆகிய இடங்களில் சுற்றுலா சார்ந்த உயர் கல்வியை வழங்குகிறது.
புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுடெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்,
HNB கர்வால் பல்கலைக்கழகம், ஜம்மு மத்தியப் பல்கலைக்கழகம், ஹிமாச்சல் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய மத்தியப் பல்கலைக்கழகங்களில் சுற்றுலா சார்ந்த முதுநிலை பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை அரசு கலைக் கல்லூரியிலும்
சுற்றுலா சார்ந்த முதுநிலை பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன.
புத்தகப் படிப்பைத் தாண்டி செயல்வழி கல்விக்காகச் சுற்றுலா சார்ந்த பாடத்திட்டத்தில் இரண்டு மாத நிறுவனப் பணிப்பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் படிக்கும்போதே பணிக்குத் தயாராகிவிடுவார்கள்.
வெற்றி நிச்சயம்
சுற்றுலாத் துறையில் உள்ள ஏராளமான வேலைவாய்ப்புகளுக்கு, அபரிமிதமான மனிதவளம் தேவைப்படுகிறது. முதுநிலை சுற்றுலா பயின்ற மாணவர்கள், இந்தத்துறையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களால் மேலாண்மைப் பயிற்சியாளராகப் பணியமர்த்தப்படுகிறார்கள்.
உலகின் முன்னணி சுற்றுலா நிறுவனங்களான தாமஸ் குக், காக்ஸ்&கிங்ஸ், TUI பசிபிக் வேர்ல்ட், GOOMO, KUONI SOTC, FCM, MCI ஆகியவை இந்தியாவில் பல நகரங்களில் உள்ள கிளைகளில் பல வேலைவாய்ப்புகளை வழங்குகிறார்கள்.
பயண முகவர் (Travel agency and tour operation companies), சுற்றுலா ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் (Destination management companies), ஆன்லைன் பயண நிறுவனங்கள் (Online Travel Agents), நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் (Event management companies), விமான நிலையங்கள்,
விமான நிறுவனங்கள், ஹோட்டல், போக்குவரத்து மற்றும் சரக்கு நிறுவனங்கள் எனப் பல்வேறு நிறுவனங்களில் சுற்றுலா முடித்த மாணவர்களுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.
சுற்றுலாவில் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு அரசு,
பொதுத்துறை நிறுவனங்களான IRCTC, ITDC, TTDC ஆகியவற்றில் வாய்ப்புகள் உள்ளன.
மத்திய, மாநிலச் சுற்றுலாத் துறையில் சுற்றுலா அலுவலர்கள், உதவி சுற்றுலா அலுவலர்கள், தகவல் உதவியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் போன்ற பணிவாய்ப்புகள் உள்ளன.
புதுமையாக யோசிக்கும் திறன், ஆர்வம், விரல் நுனியில் உலக வரைபடம், உலகச் சுற்றுலாத் தலங்கள் பற்றிய அறிவு, ஆங்கில மொழி புலமை, அதனுடன் வெளிநாட்டு மொழிகளில் ஏதாவது ஒன்றைக் கற்றுத் தேர்ந்து இருந்தால் இந்தத்துறையில் பிரகாசிக்கலாம்.
கடல் சார்ந்த வணிகத்திலும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்திலும் தமிழர்கள் மிகச்சிறந்த ஞானம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. #ஒன்றியஉயிரினங்கள்
கடல் மற்றும் கடல் போக்குவரத்துத் தொழில்நுட்பத்தில் ஏராளமான வல்லுநர்கள் தமிழகத்தில் இருந்து தயாராகி உள்ளார்கள். கப்பல் சார்ந்த படிப்புகள் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சியையும் மாற்றங்களையும் கண்டு வருகிறது. அதற்கு ஏற்ப இந்தத் துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.
மரைன் எஞ்சினியரிங் படிப்பில் கப்பல்களின் தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு குறித்து தெரிந்துகொள்வதால் பரந்து விரிந்திருக்கும் இந்தக் கடல் பரப்பில் உலக அளவில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. +2வில் இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களும்,
தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, பெண்கள், குழந்தைகள், நலிவுற்றோர், ஏழைகள், மூத்தகுடிமக்கள், திருநங்கைகள் போன்றோரின் நல்வாழ்வை உறுதி செய்து வந்துள்ளது. பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மூலம்,
குடும்ப நலம், ஊட்டச்சத்து நிலை, கல்வி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கு பல வாய்ப்புகளும் வசதிகளும் அளித்து, கண்ணியமான வாழ்க்கை வாழவும் வழிவகுத்துள்ளதுதமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றார் போல்
ஒரு காலகட்டத்தில் மருத்துவம் சார்த்த படிப்புகளை படித்தால் மட்டுமே சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்ற நிலை இருந்தது. பள்ளியில் படிக்கும் #ஒன்றியஉயிரினங்கள்
ஒவ்வொரு மாணவரும் மருத்துவம் சார்ந்த படிப்புகளைப் படிப்பதையே குறிகோளாகக் கொண்டிருத்தனர். மற்றொரு காலகட்டத்தில் பொறியியல் சார்த்த படிப்புகளை படிப்பதையே மாணவர்கள் குறிக்கோளாக கொண்டிருந்தனர். பொறியியல் சார்ந்த படிப்புகளைப் படித்தாலும் காலகட்டத்திற்கு ஏற்ப ஏற்றதாழ்வுகள்
இருந்தது கொண்டேதான் இருக்கின்றன.
நாகரீகத்தின் பிரதிபலிப்பு ஆடை. இந்த துறை சார்ந்த படிப்புகள் சமீப காலமாக பிரபலமடைந்துள்ளது. காரணம் இத்துறையில் அதிகரித்து வரும் பிரகாசமான வேலைவாய்புகள். இந்த துறைதான் விவசாயத்துக்கு அடுத்து படியாக அதிக அளவிலான நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கித்
தமிழ்நாடு, பாரம்பரியமாக வலிமையான தொழில் அடித்தளம் பெற்று விளங்குவதால் நாட்டின் தொழில் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அங்கங்களான தொழில்துறை, தொழில்நுட்பம், வேளாண்மை போன்றவற்றின் வளர்ச்சிக்கு சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தமிழ் நாட்டில் சாலை கட்டமைப்பு மற்றும் சிறு துறைமுகங்களை நிர்வகித்து வருகிறது.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை பராமரிப்பதும், மேம்பாடு செய்வதும் மற்றும் கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலை அமைப்பதும் இத்துறையின் முக்கிய நோக்கங்களாகும்
Secretary to Government
திரு. மகேசன் காசிராஜன்
25672887
tdinfosec@tn.gov.in #ஒன்றியஉயிரினங்கள்
தமிழ் வளர்ச்சித் துறை வரலாறு
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது.
ஆட்சிமொழிக் குழுவின் தலைவராகத் திரு.என்.வெங்கடேசன் அவர்கள் பொறுப்பேற்றார்.
இக்குழு தமிழகம் முழுவதிலுமுள்ள அலுவலகங்களை ஆய்வு செய்து தமிழில் அலுவல்களை நடத்த அறிவுரையும், ஆட்சிமொழித் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைக் களைய அறிவுரையும்,
மக்கள் நலத்தைப் பேணுகின்ற மாநிலமான தமிழகத்தில், அரசின் முயற்சிகள் அனைத்தும் ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின், சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சமூக, பொருளாதார வளர்ச்சியே ஊரக வளர்ச்சியின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும், தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.