உ.பி.யில் ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசனத் திட்டம்: நாளை தொடக்கம்
உ.பி.யில் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் 5 நதிகளை இணைக்கும் நீர்பாசன திட்டப்ப பணிகள் 1978 இல் தொடங்கப்பட்டன. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு போதுமான கண்காணிப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியின்மை காரணமாக,
இத்திட்டம் தாமதமாகி, கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் முடிக்கப்படவில்லை.
2016 ஆம் ஆண்டு, பிரதமர் வேளாண் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கொண்டுவரப்பட்டது.
இந்த முயற்சியில், புதிய கால்வாய்களை அமைப்பதற்கும், திட்டத்தில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிரப்புவதற்கும், புதிய நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கும் புதுமையான தீர்வுகள் காணப்பட்டன.
இத்திட்டத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தியதன் விளைவாக, வெறும் நான்கு ஆண்டுகளிலேயே இத்திட்டம் முடிக்கப்பட்டது.
சரயு நஹர் தேசிய திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 9800 கோடி ஆகும். இதில் ரூ. 4600 கோடிக்கு மேல் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியின் நீர் ஆதாரங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைத்தலும் இத்திட்டத்தில் அடங்கும்.
இத்திட்டம் 14 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசனத்திற்கான தண்ணீரை வழங்குவதோடு, 6200க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 29 லட்சம் விவசாயிகள் பயனடைவதையும் உறுதி செய்யும்.
இது கிழக்கு உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச், ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர், கோண்டா, சித்தார்த்நகர், பஸ்தி, சந்த் கபீர் நகர், கோரக்பூர், மஹராஜ்கஞ்ச் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்குப் பயனளிக்கும்.
இத்திட்டத்தில் ஏற்பட்ட காலதாமதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட இப்பகுதி விவசாயிகள், தற்போது மேம்படுத்தப்பட்ட பாசனத் திறன் மூலம் பெரிதும் பயனடைவார்கள்.
இத்திட்டத்தினால் அவர்கள் இப்போது பெரிய அளவில் பயிர்களை சாகுபடி செய்ய முடியும். மேலும், பிராந்தியத்தின் விவசாயத் திறனையும் அதிகரிக்க முடியும்
இந்து
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சன்னி இஸ்லாமிய அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.
தப்லீக் அமைப்பு பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்று எனவும் சமூகத்துக்கு ஆபத்தானது என்றும் சவுதி அரேபிய அரசு கூறியுள்ளது.
மேலும் தப்லீக் அமைப்புக்கு எதிராக மக்களை எச்சரிப்பதற்காக அடுத்த வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்யுமாறு பள்ளிவாசல் போதகர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரத் துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சவுதி அரேபியாவில் தப்லீக் மற்றும் தாவா குழு உள்ளிட்ட பாகுபாடான குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகள் படிப்பு தடைபடாமலிருக்க மசூதியில் தொழுகைக்கானப் பாங்கு ஒலி நிறுத்தம்
பள்ளிக் குழந்தைகளின் படிப்பு தடைபடாமலிருக்க மசூதியில் தொழுகைக்கானப் பாங்கு ஒலி நிறுத்தப்பட்டுள்ளது. நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குடியில் நடைபெற்றுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்க மாநிலத்தில் ஜல்பாய்குடி அமைந்துள்ளது. இங்கு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் பெரிய வளாகத்துடன் ஒரு மசூதி அமைந்துள்ளது.
இதிலும், நாடு முழுவதிலும் உள்ளது போல், தொழுகைக்கான அறிவிப்பாக பாங்கு ஒலி எழுப்பப்பட்டு வந்தது. கரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு குழந்தைகளுக்கு இணையதள வகுப்புகள் நடைபெற்றன.
அமெரிக்கா முன் நின்று ஏற்பாடு செய்த ‘ஜனநாயக மாநாடு’ வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த இரண்டு நாள் (டிச 9-10) மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, "ஜனநாயகம் – ஒரு விபத்தினால் நிகழ்வது அல்ல; ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்; அதற்காகப் போராட வேண்டும்; அதனை வலிமையாக்க வேண்டும்; அதனை (தொடர்ந்து) புதுப்பித்தாக வேண்டும்” என பேசினார்.
மாலத்தீவு அதிபர் இப்ரஹிம் மொகமது சோலி முதல் (‘எமது நாட்டில் ஜனநாயகம் இப்போதைக்கு தொட்டில் குழந்தையாக இருக்கிறது; வளர்த்து எடுக்கிற முயற்சியில் தீவிரமாக இருக்கிறோம்’)
இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது : பிரதமர் உறுதி
பல்ராம்பூர் :''இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை யாராலும் தடுக்க முடியாது.
இந்தியர்களான நாம் ஒன்றுபட்டு உள்நாட்டு சவால்களையும், வெளியில் இருந்து வரும் சவால்களையும் சமாளித்து நாட்டை வளமாக்குவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு செயல்படுத்தப்பட்டுள்ள காகரா, சரயு, ராப்தி, பனகங்கா, ரோகிணி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர் பாசன திட்டத்தை, பல்ராம்பூரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
இஸ்லாத்தில் இருந்து விலகிய பிரபல திரைப்பட தயாரிப்பாளர்
திருவனந்தபுரம்:இஸ்லாத்தில் இருந்து விலகுவதாக மலையாள திரைப்பட தயாரிப்பாளர் அலி அக்பர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அலி அக்பர், அவர் கூறியதாவது:
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13பேர் இறந்தது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
ஆனாலும் சிலர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி இறந்ததை கொண்டாடும் வகையில் சமூக வலை தளங்களில் கருத்துக்களை பதிவிட்டது பெரும் வருத்தத்தை அளித்து உள்ளது.
சட்டத்தை திருத்தி நீங்களே வேந்தராகி விடுங்களேன் : கேரள முதல்வர் பினராயிக்கு கவர்னர் காட்டமான கடிதம்
திருவனந்தபுரம்: மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக சட்டத்தை திருத்தி நீங்களே பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயனுக்கு காட்டமாக கடிதம் எழுதியுள்ளார்.
கேரள பல்கலைகழகங்களில் உயர் பதவி நியனங்களில் அரசியல் குறுக்கீடு நடைபெற்று வருவதாகவும், இதில் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது.