உலகை நகைக்க வைத்த சீனாவின் அறிவிப்பு

அமெரிக்கா முன் நின்று ஏற்பாடு செய்த ‘ஜனநாயக மாநாடு’ வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த இரண்டு நாள் (டிச 9-10) மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, "ஜனநாயகம் – ஒரு விபத்தினால் நிகழ்வது அல்ல; ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்; அதற்காகப் போராட வேண்டும்; அதனை வலிமையாக்க வேண்டும்; அதனை (தொடர்ந்து) புதுப்பித்தாக வேண்டும்” என பேசினார்.
மாலத்தீவு அதிபர் இப்ரஹிம் மொகமது சோலி முதல் (‘எமது நாட்டில் ஜனநாயகம் இப்போதைக்கு தொட்டில் குழந்தையாக இருக்கிறது; வளர்த்து எடுக்கிற முயற்சியில் தீவிரமாக இருக்கிறோம்’)
நியுசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் வரை (‘அனைத்து முனைகளிலும், உலகின் ஆகச் சிறந்த ஜனநாயகமாக தொடர்ந்து முன்னேறி வருகிறோம்’) பல உலகத் தலைவர்கள் காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டுக்கான அவசியம் என்ன..?

‘ஃப்ரீடம் ஹவுஸ்’ அமைப்பு வெளியிட்ட ‘உலகில் சுதந்திரம் 2021’ அறிக்கையின்படி, 2005-ல் இருந்து 2020 வரையிலான 15 ஆண்டுகளில், சுதந்திரமற்ற நாடுகளின் எண்ணிக்கை, 45-ல் இருந்து 54 ஆக உயர்ந்து இருக்கிறது.
‘ஓரளவு சுதந்திரம்’ உள்ள நாடுகள் 58-ல் இருந்து 59 ஆகி இருக்கிறது. அதாவது கடந்த 15 ஆண்டுகளில், 10 நாடுகளில் மக்களின் சுதந்திரம் பறி போயிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான், சார்பு நிலையற்ற நீதியம், நடுநிலையான துணிச்சல் மிக்க ஊடகங்கள் உள்ளிட்ட வலுவான ஜனநாயக அமைப்புகள், சம உரிமை நல்கும் சட்ட நடைமுறைகள், குடிமக்களின் குரலைப் பிரதிபலிக்கும் சமூகக் கூட்டமைப்புகள்,
ஊழலற்ற வெளிப்படையான அரசு நிர்வாகம் ஆகியன சேர்ந்த ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு ஆதரவாய் நல்ல ஆலோசனைகள், திட்டங்கள், வழிமுறைகளைப் பன்னாட்டுத் தலைவர் கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
எதிர்பார்த்தாற் போலவே, இந்த மாநாட்டை சீனா கடுமையாக எதிர்க்கிறது. ‘தாராளமான ஜனநாயக அமைப்புமுறை’ மக்களுக்கு நன்மை பயக்காது என்பது சீனாவின் வாதம்.

கடுமையான எதிர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மாநாட்டுக்கு ஒரு வாரம் முன்பாக சீன அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டது.
‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நடைமுறை கொண்ட நாடு’ என்று தன்னைத் தானே கொண்டாடிக் கொண்டது. இதுதான் மிகப் பெரிய நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனாவின் அசாத்திய சாதனைகளை யாரும் மறுக்கவே இல்லை. கடந்த சில பத்தாண்டுகளில் சிறந்த திட்டமிடல், கடுமையான உழைப்பு மற்றும் திறமையான நிர்வாகம் மூலம் மிக வலுவான நாடாக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளது.
இதிலும் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் தன்னை ஒரு ஜனநாயக நாடாகவும் மனித உரிமைகளின் பாதுகாவலன் ஆகவும் சீனா கூறிக் கொள்வதைத் தான் சர்வதேச சமூகம் ஏளனமாகப் பார்க்கிறது.
தனது நாட்டில், 2016, 2017-ம் ஆண்டுகளில் 90 கோடிக்கு மேற்பட்டோர் பங்கு பெற்ற ‘தேர்தல்’ நடந்ததாக சீன அரசு கூறுகிறது. ஆனால், உயர்மட்ட, அடிமட்ட ‘காங்கிரஸ்’, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ அமைப்புகளாக மட்டுமே செயல்பட முடியும் என்பதையும், ‘அதிபர்’, பிரதமர்’
பதவிகளுக்கு ஒரு நபர் மட்டுமே போட்டியிடுகிற விந்தை பற்றியும் வெள்ளை அறிக்கையில் எதுவும் குறிப்பிடாதது ஏன்? என்று சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன.
1989 ஜூன் 4 (மே 35) தியானன்மென் சதுக்கப் போராட்டத்தில், ஜனநாயக உரிமைகள் கோரி போராடிய தனது நாட்டுக் குடிமகன்கள் மீது சீன அரசு நடத்திய கொடூரத் தாக்குதல் தொடங்கி,
தற்போது சில நாட்களாக ஹாங்காங் நகரில் நிகழ்ந்து வரும் ஜனநாயக விரோத சம்பவங்கள் வரை எதுவுமே சர்வதேச அரங்கில் சீனாவுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.

கரோனா நோய்த் தொற்று குறித்து முதலில் அறிவித்த ஆய்வக விஞ்ஞானி முதல் மிகப் பெரும் வணிக நிறுவன உரிமையாளர்,
உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீராங்கனை வரை, சீன அரசுக்கு எதிராகப் பேசுகிற பலர் அவ்வப்போது காணாமல் போகிற சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன.
இத்துடன், தான் வழங்கிய நிதியுதவியின் மீது அநியாய வட்டி விதிப்பது, ஏற்றுக்கொள்ள இயலாத நிபந்தனைகளுக்கு உட்படுத்துவது உள்ளிட்ட மிரட்டல் நடவடிக்கைகள் குறித்து சீனாவின் நட்பு நாடுகளுமே கூடப் புகார் தெரிவித்து வருகின்றன.
ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள், சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பு குறித்த தனது எதிர்ப்பு, மனத்தாங்கலைப் பல்வேறு போராட்டங்களின் மூலம் வெளிப்படையாகவே பல முறை பதிவு செய்துள்ளனர்.
திபெத், தைவான், ஹாங்காங், தென் சீனக் கடல். இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளின் மீது சீனாவின் அணுகுமுறை தொடர்ந்து சர்வதேச அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகவே அமைந்து உள்ளன.
உலகின் பல நாடுகளில், பல பகுதிகளில் தனது சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் அச்சத்துடன் வாழ்கிற, விடுதலை உணர்வு கொண்ட சீனப் பிரமுகர்கள் எத்தனை பேர்..? இந்தப் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.
இத்தகைய சூழலில் தனது போக்கைச் சற்றும் மாற்றிக் கொள்ள முன்வராத சீன அரசு, உலக ஜனநாயக மாநாட்டைக் கடுமையாக எதிர்க்கிறது. முழு இறையாண்மை கொண்ட நாடாக சீனாவுக்கு மிக நிச்சயமாக இதற்கான உரிமை இருக்கிறது.
ஆனால், இந்தியா உள்ளிட்ட பிற ஜனநாயகக் குடியரசு நாடுகளின் செயல்பாடுகளைக் குறைகூறவோ, அது குறித்து கிண்டல் செய்யவோ எந்தத் தார்மீக உரிமையும் இல்லை.
மற்றபடி, தானே உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற சீன அரசின் வெள்ளை அறிக்கை அறிவிப்பு, இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அவல நகைச்சுவை அன்றி வேறில்லை. ஒப்புக் கொள்வோம் - இதற்கும் கூட சீனாவுக்கு ‘ஜனநாயக உரிமை’ இருக்கிறது.

இந்து

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

12 Dec
*"இந்த விபூதியைத் தயங்காமல் கொண்டுபோய் கண்ணதாசன் நெற்றியில் பூசு. சூரியனைச் சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா?"*
சாண்டோ சின்னப்பா தேவரும் கண்ணதாசனும் மிக நெருங்கிய நண்பர்கள். 

இருவரும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. 

அதில் சின்னப்பாத் தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை.
ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும், அளவற்ற ஈடுபாடும் கொண்டவர் தேவர் அவர்கள்.
Read 24 tweets
12 Dec
தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை

சன்னி இஸ்லாமிய அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.

தப்லீக் அமைப்பு பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்று எனவும் சமூகத்துக்கு ஆபத்தானது என்றும் சவுதி அரேபிய அரசு கூறியுள்ளது.
மேலும் தப்லீக் அமைப்புக்கு எதிராக மக்களை எச்சரிப்பதற்காக அடுத்த வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்யுமாறு பள்ளிவாசல் போதகர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரத் துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சவுதி அரேபியாவில் தப்லீக் மற்றும் தாவா குழு உள்ளிட்ட பாகுபாடான குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Read 7 tweets
12 Dec
பள்ளிக் குழந்தைகள் படிப்பு தடைபடாமலிருக்க மசூதியில் தொழுகைக்கானப் பாங்கு ஒலி நிறுத்தம்

பள்ளிக் குழந்தைகளின் படிப்பு தடைபடாமலிருக்க மசூதியில் தொழுகைக்கானப் பாங்கு ஒலி நிறுத்தப்பட்டுள்ளது. நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குடியில் நடைபெற்றுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்க மாநிலத்தில் ஜல்பாய்குடி அமைந்துள்ளது. இங்கு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் பெரிய வளாகத்துடன் ஒரு மசூதி அமைந்துள்ளது.
இதிலும், நாடு முழுவதிலும் உள்ளது போல், தொழுகைக்கான அறிவிப்பாக பாங்கு ஒலி எழுப்பப்பட்டு வந்தது. கரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு குழந்தைகளுக்கு இணையதள வகுப்புகள் நடைபெற்றன.
Read 7 tweets
12 Dec
இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது : பிரதமர் உறுதி

பல்ராம்பூர் :''இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை யாராலும் தடுக்க முடியாது.
இந்தியர்களான நாம் ஒன்றுபட்டு உள்நாட்டு சவால்களையும், வெளியில் இருந்து வரும் சவால்களையும் சமாளித்து நாட்டை வளமாக்குவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு செயல்படுத்தப்பட்டுள்ள காகரா, சரயு, ராப்தி, பனகங்கா, ரோகிணி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர் பாசன திட்டத்தை, பல்ராம்பூரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
Read 14 tweets
12 Dec
இஸ்லாத்தில் இருந்து விலகிய பிரபல திரைப்பட தயாரிப்பாளர்

திருவனந்தபுரம்:இஸ்லாத்தில் இருந்து விலகுவதாக மலையாள திரைப்பட தயாரிப்பாளர் அலி அக்பர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அலி அக்பர், அவர் கூறியதாவது:

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13பேர் இறந்தது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
ஆனாலும் சிலர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி இறந்ததை கொண்டாடும் வகையில் சமூக வலை தளங்களில் கருத்துக்களை பதிவிட்டது பெரும் வருத்தத்தை அளித்து உள்ளது.
Read 4 tweets
12 Dec
சட்டத்தை திருத்தி நீங்களே வேந்தராகி விடுங்களேன் : கேரள முதல்வர் பினராயிக்கு கவர்னர் காட்டமான கடிதம்
திருவனந்தபுரம்: மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக சட்டத்தை திருத்தி நீங்களே பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயனுக்கு காட்டமாக கடிதம் எழுதியுள்ளார்.
கேரள பல்கலைகழகங்களில் உயர் பதவி நியனங்களில் அரசியல் குறுக்கீடு நடைபெற்று வருவதாகவும், இதில் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(