ஜாதகம் என்பது லக்னத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
ராசி என்பது இரண்டேகால் நாளைக்கு ஒன்று வீதம் வரும்.
லக்னம் என்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒன்று வீதம் வரும்.
அதுவும் அம்சலக்னம் 13நிமிடத்திற்கு ஒன்று வீதம் வரும்.
இன்னும் சொல்லப்போனால் சஷ்டியாம்ச லக்னம் என்பது 2நிமிடத்திற்க் ஒன்று வீதம் ஒரு நாளைக்கு 720லக்னங்கள் வரும்.ஆகவேதான் ஒரே ராசியில் பிறந்த எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி அமைவதில்லை.
ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஒவ்வொரு விதமாக அமைகிறது.ஒரே லக்னத்தில் ஒரே நட்சரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைமுறைக் கூட வேறு பட்டுள்ளது.ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் வாழ்வில்தான் எவ்வளவு வித்தியாசம்! .
கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் முதல் மனிதன் வரை பிறப்புகள் 84லட்சம் என்கிறது சாஸ்த்திரம்.அவை என்னென்ன வடிவம்,குணம்,செயல்பாடுகள்.ஒரே நாளில் எத்தனை விதமான படைப்புகள்.!
காந்தி பிறந்த அன்று எத்தனை ஆயிரம் பிறவிகள் நிகழ்ந்திருக்கும்.அவர்கள் எல்லோருமா மகாத்மா ஆகிவிட்டார்கள்?அல்லது அவரைக் கொன்ற கோட்சை பிறந்த அன்று எவ்வளவு பேர் பிறந்திருப்பார்கள்.அவர்கள் எல்லோரும் கோட்சே போல கொலையாளி ஆகிவிட்டார்களா? இல்லையே!, இதற்கு காரணம் பிறந்த நேரம்தான்.
இதை விளக்குவதற்கு ஒரு அழகான கதை உண்டு.
கேரளத்தில் "சுவாதி திருநாள்"என்ற ஒரு அரசன் இருந்தான்.அவன் கோயிலுக்குச் சென்று ஆண்டவனை வணங்கி விட்டு வெளியே வந்தபோது ஒரு பிச்சைக்காரன் அவர் காலை கெட்டியாகப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டு கதறினான்.
அதாவது சுவாதி நட்சத்திரத்தில் ஆண்டவன்,அரசன்,ஆண்டி மூவரும் பிறந்துள்ளனர்.அவனுக்கு மட்டும் ஏன் இந்த இழி நிலை என்ற வருத்தம்.
அரசனுக்கு அந்த பிச்சைக்காரன் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.எனவே அவனை அரண்மனை ஜோதிடரிடம் கொண்டு வந்து விட்டான்.விளக்கம் தருமாறு கேட்டான்.
ஜோதிடர் ஒரு நிமிடம் யோசித்தார்.பின் ஒரு நாணயத்தை எடுத்து உயரே சுண்டி விட்டார்.அந்த நாணயம் உயரே சென்று பின் கீழே தரையில் வந்து விழுந்தது.பின் விளக்கினார்.
"அரசே! இந்த நாணயத்தை நான் சுண்டிய கணத்தில் பிறந்தவன் ஆண்டவன்.
அந்த நாணயம் மேலே உயரே போன போது பிறந்தவன் அரசன்.
நாணயம் கீழை விழுந்த போது பிறந்தவன் இந்த ஆண்டி.
ஆக,இந்த கண நேர வித்தியாசத்தில் ஆண்டவனும் பிறப்பான்,அரசனும் பிறப்பான்,ஆண்டியும் பிறப்பான்."என்றார்.அது அவரவர் ஊழ்வினைப் பயன்.இறைவன் வகுத்த காலக்கணக்கு அவ்வளவு சூட்சுமமானது.
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சன்னி இஸ்லாமிய அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.
தப்லீக் அமைப்பு பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்று எனவும் சமூகத்துக்கு ஆபத்தானது என்றும் சவுதி அரேபிய அரசு கூறியுள்ளது.
மேலும் தப்லீக் அமைப்புக்கு எதிராக மக்களை எச்சரிப்பதற்காக அடுத்த வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்யுமாறு பள்ளிவாசல் போதகர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரத் துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சவுதி அரேபியாவில் தப்லீக் மற்றும் தாவா குழு உள்ளிட்ட பாகுபாடான குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகள் படிப்பு தடைபடாமலிருக்க மசூதியில் தொழுகைக்கானப் பாங்கு ஒலி நிறுத்தம்
பள்ளிக் குழந்தைகளின் படிப்பு தடைபடாமலிருக்க மசூதியில் தொழுகைக்கானப் பாங்கு ஒலி நிறுத்தப்பட்டுள்ளது. நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குடியில் நடைபெற்றுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்க மாநிலத்தில் ஜல்பாய்குடி அமைந்துள்ளது. இங்கு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் பெரிய வளாகத்துடன் ஒரு மசூதி அமைந்துள்ளது.
இதிலும், நாடு முழுவதிலும் உள்ளது போல், தொழுகைக்கான அறிவிப்பாக பாங்கு ஒலி எழுப்பப்பட்டு வந்தது. கரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு குழந்தைகளுக்கு இணையதள வகுப்புகள் நடைபெற்றன.
அமெரிக்கா முன் நின்று ஏற்பாடு செய்த ‘ஜனநாயக மாநாடு’ வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த இரண்டு நாள் (டிச 9-10) மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, "ஜனநாயகம் – ஒரு விபத்தினால் நிகழ்வது அல்ல; ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்; அதற்காகப் போராட வேண்டும்; அதனை வலிமையாக்க வேண்டும்; அதனை (தொடர்ந்து) புதுப்பித்தாக வேண்டும்” என பேசினார்.
மாலத்தீவு அதிபர் இப்ரஹிம் மொகமது சோலி முதல் (‘எமது நாட்டில் ஜனநாயகம் இப்போதைக்கு தொட்டில் குழந்தையாக இருக்கிறது; வளர்த்து எடுக்கிற முயற்சியில் தீவிரமாக இருக்கிறோம்’)
இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது : பிரதமர் உறுதி
பல்ராம்பூர் :''இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை யாராலும் தடுக்க முடியாது.
இந்தியர்களான நாம் ஒன்றுபட்டு உள்நாட்டு சவால்களையும், வெளியில் இருந்து வரும் சவால்களையும் சமாளித்து நாட்டை வளமாக்குவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு செயல்படுத்தப்பட்டுள்ள காகரா, சரயு, ராப்தி, பனகங்கா, ரோகிணி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர் பாசன திட்டத்தை, பல்ராம்பூரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
இஸ்லாத்தில் இருந்து விலகிய பிரபல திரைப்பட தயாரிப்பாளர்
திருவனந்தபுரம்:இஸ்லாத்தில் இருந்து விலகுவதாக மலையாள திரைப்பட தயாரிப்பாளர் அலி அக்பர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அலி அக்பர், அவர் கூறியதாவது:
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13பேர் இறந்தது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
ஆனாலும் சிலர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி இறந்ததை கொண்டாடும் வகையில் சமூக வலை தளங்களில் கருத்துக்களை பதிவிட்டது பெரும் வருத்தத்தை அளித்து உள்ளது.
சட்டத்தை திருத்தி நீங்களே வேந்தராகி விடுங்களேன் : கேரள முதல்வர் பினராயிக்கு கவர்னர் காட்டமான கடிதம்
திருவனந்தபுரம்: மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக சட்டத்தை திருத்தி நீங்களே பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயனுக்கு காட்டமாக கடிதம் எழுதியுள்ளார்.
கேரள பல்கலைகழகங்களில் உயர் பதவி நியனங்களில் அரசியல் குறுக்கீடு நடைபெற்று வருவதாகவும், இதில் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது.