*"இந்த விபூதியைத் தயங்காமல் கொண்டுபோய் கண்ணதாசன் நெற்றியில் பூசு. சூரியனைச் சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா?"*
சாண்டோ சின்னப்பா தேவரும் கண்ணதாசனும் மிக நெருங்கிய நண்பர்கள்.
இருவரும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது.
அதில் சின்னப்பாத் தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை.
ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.
காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும், அளவற்ற ஈடுபாடும் கொண்டவர் தேவர் அவர்கள்.
மருத்துவமனையிலிருந்து நேரே புறப்பட்டு, சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று விவரித்தார்.
சொன்ன மாத்திரத்தில், மற்ற எதையும் விசாரிக்காமல், ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர்.
கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.
தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து விட்டார்.
தான் முருகனாய் பாவித்து வழங்கும் பெரியவரை மறுத்துப் பேச துணிவின்றித் தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.
தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாதது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது.
விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி பெரியவரை இழிவுபடுத்திப் பேசியிருந்தார்.
எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.
ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா?
கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.
வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா.
ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா.
காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.
தேவர் மனந் தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார்.
நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார்.
அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.
மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார்.
தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.
நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப் பார்த்தார்.
வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர்.
திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை, ஐயோ....
என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார்.
"எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.
கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது.
மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன்.
சன்னி இஸ்லாமிய அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.
தப்லீக் அமைப்பு பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்று எனவும் சமூகத்துக்கு ஆபத்தானது என்றும் சவுதி அரேபிய அரசு கூறியுள்ளது.
மேலும் தப்லீக் அமைப்புக்கு எதிராக மக்களை எச்சரிப்பதற்காக அடுத்த வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்யுமாறு பள்ளிவாசல் போதகர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரத் துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சவுதி அரேபியாவில் தப்லீக் மற்றும் தாவா குழு உள்ளிட்ட பாகுபாடான குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகள் படிப்பு தடைபடாமலிருக்க மசூதியில் தொழுகைக்கானப் பாங்கு ஒலி நிறுத்தம்
பள்ளிக் குழந்தைகளின் படிப்பு தடைபடாமலிருக்க மசூதியில் தொழுகைக்கானப் பாங்கு ஒலி நிறுத்தப்பட்டுள்ளது. நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குடியில் நடைபெற்றுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்க மாநிலத்தில் ஜல்பாய்குடி அமைந்துள்ளது. இங்கு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் பெரிய வளாகத்துடன் ஒரு மசூதி அமைந்துள்ளது.
இதிலும், நாடு முழுவதிலும் உள்ளது போல், தொழுகைக்கான அறிவிப்பாக பாங்கு ஒலி எழுப்பப்பட்டு வந்தது. கரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு குழந்தைகளுக்கு இணையதள வகுப்புகள் நடைபெற்றன.
அமெரிக்கா முன் நின்று ஏற்பாடு செய்த ‘ஜனநாயக மாநாடு’ வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த இரண்டு நாள் (டிச 9-10) மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, "ஜனநாயகம் – ஒரு விபத்தினால் நிகழ்வது அல்ல; ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்; அதற்காகப் போராட வேண்டும்; அதனை வலிமையாக்க வேண்டும்; அதனை (தொடர்ந்து) புதுப்பித்தாக வேண்டும்” என பேசினார்.
மாலத்தீவு அதிபர் இப்ரஹிம் மொகமது சோலி முதல் (‘எமது நாட்டில் ஜனநாயகம் இப்போதைக்கு தொட்டில் குழந்தையாக இருக்கிறது; வளர்த்து எடுக்கிற முயற்சியில் தீவிரமாக இருக்கிறோம்’)
இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது : பிரதமர் உறுதி
பல்ராம்பூர் :''இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை யாராலும் தடுக்க முடியாது.
இந்தியர்களான நாம் ஒன்றுபட்டு உள்நாட்டு சவால்களையும், வெளியில் இருந்து வரும் சவால்களையும் சமாளித்து நாட்டை வளமாக்குவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு செயல்படுத்தப்பட்டுள்ள காகரா, சரயு, ராப்தி, பனகங்கா, ரோகிணி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர் பாசன திட்டத்தை, பல்ராம்பூரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
இஸ்லாத்தில் இருந்து விலகிய பிரபல திரைப்பட தயாரிப்பாளர்
திருவனந்தபுரம்:இஸ்லாத்தில் இருந்து விலகுவதாக மலையாள திரைப்பட தயாரிப்பாளர் அலி அக்பர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அலி அக்பர், அவர் கூறியதாவது:
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13பேர் இறந்தது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
ஆனாலும் சிலர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி இறந்ததை கொண்டாடும் வகையில் சமூக வலை தளங்களில் கருத்துக்களை பதிவிட்டது பெரும் வருத்தத்தை அளித்து உள்ளது.
சட்டத்தை திருத்தி நீங்களே வேந்தராகி விடுங்களேன் : கேரள முதல்வர் பினராயிக்கு கவர்னர் காட்டமான கடிதம்
திருவனந்தபுரம்: மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக சட்டத்தை திருத்தி நீங்களே பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயனுக்கு காட்டமாக கடிதம் எழுதியுள்ளார்.
கேரள பல்கலைகழகங்களில் உயர் பதவி நியனங்களில் அரசியல் குறுக்கீடு நடைபெற்று வருவதாகவும், இதில் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது.