சில நாட்களுக்கு முன் கருவாடு விற்கும் ஒரு பாட்டியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் நியாபகம் இருக்கிறதல்லவா...
இதேப்போல கருவாடு விற்ற பாட்டி ஒருவரின் கதை எனக்கு தெரியும்.வேதாரண்யம் இந்தியன் வங்கிக்கு மிக அருகில்தான் அந்த பாட்டி கருவாடு கூடை ஒன்றை வைத்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருப்பார்.ஒவ்வொரு முறை அந்த வங்கியின் ஊழயர்கள் வெளியில் செல்லும்போதும் எழுந்து ஒரு வணக்கம் வைப்பார்…
…பாட்டி.அந்த வங்கிக்கும் பாட்டிக்குமான உறவு இதுதான்.
ஒருநாள் புதிதாக வந்த ஊழியர் ஒருவர் அந்த பாட்டியை கிளைக்குள் அழைத்துச்சென்று ஒரு வங்கிக்கணக்கை தொடங்கி பத்தாயிரம் ரூபாய் கடன் தொகையை யும் பெற்றுத் தருகின்றார்.கருவாட்டு கூடை ,கருவாட்டு 'கடையாக' பரிணாமம் அடைகிறது.பத்தாயிரம் ரூபாய் கடன் அடைந்த நேரத்தில் 50ஆயிரம் ரூபாய் கடன்,50…
…ஆயிரம் ரூபாய் கடன் அடைந்த நேரத்தில் அந்த பாட்டியின் மகனுக்கு மீன்பிடி படகு வாங்குவதற்கு கடன் என இந்தியன் வங்கிக்கும் அந்த பாட்டிக்குமான உறவு தொடர்ந்தது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை வங்கிக்கிளையின் முக்கியமான வாடிக்கையாளர்களை வைத்து 'customers meet' நடத்தப்படுவது வழக்கம்.வழக்கமாக வேதாரண்யத்தின் கோடிஸ்வரர்கள்,நிலச்சுவன்தாரர்கள்,மில் ஓனர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள்.
வாடிக்கையாளர்கள் கூட்டம் நடந்த அன்று அந்த பெரும்பணக்காரர்கள் உட்கார்ந்திருந்த அதேவரிசையில் கருவாடு விற்ற பாட்டிக்கும் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது.
இது இந்தியன் வங்கிக்கும்-கருவாடு விற்ற பாட்டிக்குமான கதை.
கருவாடு விற்ற பாட்டியை அழைத்து வந்து கணக்கு தொடங்கிய ஊழியர்-அதிகாரி இருவருமே reservation ஆல் வங்கி வேலை செய்யும் வாய்ப்பு பெற்றவர்கள்.அதாவது வங்கிகள் தேசியமயமானதால் கிடைத்த வாய்ப்பு.அதனால்தான் அவர்களால் இப்படி சிந்திக்க முடிந்தது.
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம்,இவர்கள் போன்ற பாட்டிகளை வங்கிகளிலிருந்து நிரந்தரமாக வெளியில் தள்ள போகிறது.அன்று பேருந்திலிருந்து வெளியில் தள்ளியதை போல.வங்கி ஊழியர்கள் மீது உங்களுக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அது நடந்துவிடாமல் இதுநாள் வரை தடுத்து வைத்திருப்பவர்கள்…
Zomato நிறுவன ஊழியர் இந்தி தேசிய மொழி என்று வாடிக்கையாளர் ஒருவரிடம் கூறி சமூக வலைதளங்களில் பேசுபொருளான சில நிமிடங்களில் அந்த ஊழியர் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தனது twitter handle இல் வெளியிடுகிறது.அதாவது எந்த முன்னறிவுப்புமின்றி அந்த ஊழியர் பணியிலிருந்து…
…வெளியேற்றப்படுகிறார்.
'Natural justice' என்றொரு பதம் இருக்கிறது.குற்றம்சாட்டப்பட்டவரும்தன் பக்கம் இருக்கிற நியாயத்தை முன் வைப்பதற்கான வாய்ப்பு அது.எப்பேர்ப்பட்ட வழக்குகளில் சிக்கியவருக்கும் தன் பக்கம் இருக்கிற நியாயத்தை முன்வைக்க முழு உரிமை உண்டு.
Zomato விவகாரத்தில் வெளியேற்றப்பட்ட ஊழியருக்கு தன் பக்க நியாயத்தை முன்வைக்கிற வாய்ப்பே கொடுக்கப்படாதது அவலம்.அவருடைய பிரச்சினையை பேசுவதற்கு அமைப்போ,சங்கமோ இல்லாமல் போனது அவலத்திலும் அவலம்.'What is our national language' என்று ஒட்டுமொத்த Zomato ஊழியர்கள் மீது cyber bullying…