Zomato நிறுவன ஊழியர் இந்தி தேசிய மொழி என்று வாடிக்கையாளர் ஒருவரிடம் கூறி சமூக வலைதளங்களில் பேசுபொருளான சில நிமிடங்களில் அந்த ஊழியர் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தனது twitter handle இல் வெளியிடுகிறது.அதாவது எந்த முன்னறிவுப்புமின்றி அந்த ஊழியர் பணியிலிருந்து…
…வெளியேற்றப்படுகிறார்.
'Natural justice' என்றொரு பதம் இருக்கிறது.குற்றம்சாட்டப்பட்டவரும்தன் பக்கம் இருக்கிற நியாயத்தை முன் வைப்பதற்கான வாய்ப்பு அது.எப்பேர்ப்பட்ட வழக்குகளில் சிக்கியவருக்கும் தன் பக்கம் இருக்கிற நியாயத்தை முன்வைக்க முழு உரிமை உண்டு.
Zomato விவகாரத்தில் வெளியேற்றப்பட்ட ஊழியருக்கு தன் பக்க நியாயத்தை முன்வைக்கிற வாய்ப்பே கொடுக்கப்படாதது அவலம்.அவருடைய பிரச்சினையை பேசுவதற்கு அமைப்போ,சங்கமோ இல்லாமல் போனது அவலத்திலும் அவலம்.'What is our national language' என்று ஒட்டுமொத்த Zomato ஊழியர்கள் மீது cyber bullying…
…நடந்தபோதும் அதை முறையிட கூட முடியாமல் அதற்கு 'there is no national language' என்று பதில் அனுப்பிக்கொண்டிருந்த ஊழியர்கள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள்.
மொழி சார்ந்த உரையாடல் முக்கியமானதுதான்.அதே நேரத்தில் ஒரு தனியார் நிறுவனம் தனது ஊழியர்களை எப்படி சுயமரியாதையற்றவர்களாக நடத்துகிறது,தொழிலாளர் நல சட்டங்களை காலில் போட்டு மிதிக்கிறது என்கிற உரையாடலும் அப்போதைய சூழலில் நடந்திருக்க வேண்டும்.தனியார்மயம்,தாராளமயம்,gig economy போன்ற…
…வார்த்தைகள் இந்திய உழைக்கும் வர்க்கத்தை எவ்வளவு கீழ்மையாக நடத்துகிறது என்பதற்கு Zomato விவகாரம் ஒரு முக்கியமான சாட்சி.
Labour codes பற்றிய உரையாடல்கள் நடக்கிற சூழலில்,ஒரு இலட்சம் கோடி market capitalisation' உடன் இயங்கும் ஒரு public listed நிறுவனம் தன்னுடைய அத்தனை ஊழியர்களையும்
Gig workers என்று கொத்தடிமைகளாக நடத்துவது பற்றிய விவாதங்களும் நடக்க வேண்டும்.
சில நாட்களுக்கு முன் கருவாடு விற்கும் ஒரு பாட்டியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் நியாபகம் இருக்கிறதல்லவா...
இதேப்போல கருவாடு விற்ற பாட்டி ஒருவரின் கதை எனக்கு தெரியும்.வேதாரண்யம் இந்தியன் வங்கிக்கு மிக அருகில்தான் அந்த பாட்டி கருவாடு கூடை ஒன்றை வைத்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருப்பார்.ஒவ்வொரு முறை அந்த வங்கியின் ஊழயர்கள் வெளியில் செல்லும்போதும் எழுந்து ஒரு வணக்கம் வைப்பார்…
…பாட்டி.அந்த வங்கிக்கும் பாட்டிக்குமான உறவு இதுதான்.