குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் 💣
// இந்திய அரசியல் சரித்திரத்தை மாற்றிய Bofors //
1.முகவுரை
1985 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் Bofors ஊழல், சீக்கியர்கள் மீதான தாக்குதல், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி, மூன்றாவது அணி ஆட்சி அமைப்பு,
மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்கப்பட்டது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. Bofors ஊழல் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. இப்புயலில் சிக்கிய ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் 1989 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.
இக்கட்டுரையில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட Bofors ஊழல் குறித்து சில செய்திகளை காண்போம்.
2.ஜெரால்டு புல் கைவண்ணம்
1970 இன் பிற்பகுதியில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனரும் (Space Research Corporation - SRC) கனடா ஆயுத பொறியாளருமான ஜெரால்ட் புல் முந்தைய பீரங்கிகளை விட மிக நீண்ட தூரம்
சென்றடையும் GC-45 என அழைக்கப்பட்ட 155 mm பீரங்கியை வடிவமைத்தார். ஜெரால்டு புல்லிடம் இருந்து GC-45 பீரங்கிக்கான வடிவமைப்பு உரிமையை ஆஸ்திரிய அரசுக்கு சொந்தமான Voest Alpine நிறுவனத்தின் ஆயுதப் பிரிவான Noricum கழகம் வாங்கியது.
3.ஈராக் பீரங்கி ஒப்பந்தமும் ரத்தும்
1980 முதல் 1988 காலகட்டத்தில் ஈரானுடன் போரில் ஈடுபட்டு கொண்டிருந்த ஈராக் அதிபர் சதாம் ஹுசைனுக்கு நிறைய பீரங்கி தேவைப்பட்டது. அவ்வகையில் ஜெரால்டு புல் நட்பு கிட்டியது. மிக நீண்ட தூரம் துல்லியமாக சென்றடையும் Voest Alpine நிறுவனத்தின் GHN-45
பீரங்கிகளை பராமரிப்பதும் எளிதாக இருந்ததை தொடர்ந்து ஜெரால்ட் புல் மேற்பார்வையில் ஈராக்கிற்கு பீரங்கிகளை உருவாக்க Voest Alpine நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். GC-45 பீரங்கி வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அதனை GHN-45 பீரங்கி என பெயரிட்டு ஈராக்கிற்கு அனுப்ப
பீரங்கி தயாராகி வந்தன.
இந்த சூழலில் 1979 இல் ஆஸ்திரிய நாடாளுமன்ற தேர்தலில் ஆஸ்திரிய மக்கள் கட்சி ஈராக்குடன் அனுதாபம் கொண்டிருந்தது. ஆனால் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி சார்பில் யூத மதத்தை சேர்ந்த புருனோ கிரேஸ்கி ஆஸ்திரிய அதிபராக மீண்டும் பதவியேற்றார். பதவிக்கு வந்த பிறகு
ஆஸ்திரியாவின் நடுநிலைச் சட்டங்களை ஈராக் மீறியதாக குற்றம்சாட்டி பீரங்கி ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வழிவகை செய்தார். இதனால் ஈராக்கிற்கு தயாரான 160 பீரங்கிகள் கிடப்பில் போடப்பட்டன.
4.ஜெரால்டு புல் படுகொலை
22-03-1990 அன்று பிரஸ்ஸல்ஸ் குடியிருப்புக்குள் நுழைந்தபோது முதுகில்
மூன்று முறையும் தலையில் இரண்டு முறையும் சுட்டுக் கொல்லப்பட்டார் ஜெரால்டு புல். கொலையாளி அடையாளம் காணப்படாத சூழலில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஜெரால்டு புல் வீட்டுக் கதவில் இன்னும் சாவி இருப்பதையும், திறக்கப்படாத அவரது பெட்டியில் $20,000 ரொக்கம் இருப்பதையும் கண்டனர்.
யாருக்காகவோ கொல்லப்பட்ட ஜெரால்டு புல் படுகொலைக்கு இஸ்ரேலிய உளவுத்துறை Mossad மீது குற்றம் சாட்டப்பட்டது. சதாம் ஹுசைன் வேண்டுகோளுக்கு இணங்க உலகின் அதி நவீன Supergun (Project Babylon) ஆராய்ச்சி அல்லது எறிபடையியல் ஏவுகணை (Ballistic Missile) தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சியில
ஈடுபட்டதன் காரணமாக கொல்லப்பட்டு இருக்கலாம் என்று பரவலாக கிசுகிசுக்கப்படுகிறது.
5.இந்திரா காந்தி அணுமுறை
1970 இல் சோவியத் யூனியன் தலைவர் லியோனிட் ப்ரெஷ்நேவ் (Leonid Brezhnev) பரிந்துரைத்ததன் பேரில் சோவியத் யூனியன் தயாரித்த Sukhoi Su-7 போர் விமானங்களை இந்திரா காந்தி வாங்கினார்.
1971 இல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக சோவியத் யூனியனின் போர் விமானங்களும் ஒரு காரணியாக இருந்தது.
இவ்வாறு இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்படும் நிகழ்வுகளை விட இரு நாட்டு
தலைவர்களுக்கும் இடையில் நேரடியாக ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்படுவது வாடிக்கையானது.
6.பீரங்கி வாங்க திட்டமிட்ட இந்திரா காந்தி
இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் நெருங்கிய நண்பரான ஆஸ்திரிய அதிபர் புருனோ கிரேஸ்கி ஈராக்கிற்கு தயார் செய்யப்பட்ட 160 பீரங்கிகளை பெற்றுக் கொள்ளும்படி
இந்திரா காந்தியிடம் கேட்டுக் கொண்டார். ஆயுத வியாபாரத்தில் இருந்து முற்றிலும் விலக எண்ணி பீரங்கி வடிவமைப்பு தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொடுத்திடவும் ஆஸ்திரிய அரசு முன்மொழிந்தது. இதற்கிடையே, 1983 இல் பிரதமர் இந்திரா காந்திக்கு 155 mm பீரங்கிகளை வழங்குவதற்கான வாய்ப்பை Bofors
நிறுவனத்திற்கு தருமாறு ஆதரித்து ஸ்வீடன் பிரதமர் ஓலோப் பால்மே கடிதம் எழுதியிருந்தார்.
இந்தியாவின் ஆயுதக் களஞ்சியத்தை எளிதில் மிஞ்சும் வகையில் 1977 இல் பாகிஸ்தானுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்றது அமெரிக்கா. இதையொட்டி, 1980 இல் மீண்டும் பிரதமரான இந்திரா காந்தி இந்தியாவுக்கு அதிநவீன
பீரங்கிகளை வாங்கிட முடிவு செய்தார். இந்திய அரசின் சார்பில் 1981 இல் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு 1983 இல் பிரான்சின் Sofma, ஸ்வீடனின் Bofors, இங்கிலாந்தின் International Military Services மற்றும் ஆஸ்திரியாவின் Voest Alpine ஆகியோரிடம் பீரங்கி வாங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.
இறுதியாக 1984 இல் பிரான்சின் Sofma மற்றும் ஆஸ்திரியாவின் Voest Alpine நிறுவனங்கள் டெண்டரில் கூறிய சலுகைகள் சிறந்ததாகக் கண்டறியப்பட்டது. பீரங்கிகளை கொள்முதல் செய்வதற்கு முன்னதாக 1983 இல் ஆஸ்திரிய நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் ஆட்சி அமைக்காமல் விலகினார்
புருனோ கிரேஸ்கி. மேலும் 31-10-1984 அன்று இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் பீரங்கி பேச்சுவார்த்தை முடிவு எட்டாமல் நின்று போனது.
7.ராஜீவ் காந்தியும் ஓலோப் பால்மேயும்
1984 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 31-12-1984 அன்று பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி 25-09-1985
அன்று பாதுகாப்புத்துறை பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இந்தியா பிரதமரான ராஜீவ் காந்தியுடன் நெருங்கிய நட்பு பாராட்டினார் ஸ்வீடன் பிரதமர் ஓலோப் பால்மே. 16-01-1986 டெல்லிலியில் நடைபெற்ற இந்திரா காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று ஓலோப் பால்மே உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
1980-1985 காலகட்டத்தில் ஸ்வீடன் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் இருந்ததோடு மட்டுமல்லாமல் 1985 செப்டம்பரில் பொதுத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்த ஓலோப் பால்மேயின் ஸ்வீடிஷ் சமூக ஜனநாயகக் கட்சியின் (Swedish Social Democratic Party-SSDP) கருவூலத்திற்கு பணமும் தேவைப்பட்டது.
இதற்கிடையே, ஸ்வீடனின் ஆயுத நிறுவனத்தில் வேலையின்மையும் நிகர லாபமும் கடுமையாக வீழத் தொடங்கிய சூழலில் பென்டகன் ஒப்பந்தத்தை நூலிலையில் Bofors தவறவிட்டது. இதன் பின் பீரங்கிகளை வாங்க திட்டமிட்டிருந்த இந்தியாவுக்கு தந்திரமான முறையில் பீரங்கிகளை விற்க ஸ்வீடனின் Bofors முடிவு செய்தது.
8.பீரங்கி வாங்க திட்டமிட்ட ராஜீவ் காந்தி
31-10-1984 அன்று இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பீரங்கி ஒப்பந்தம் குறித்து ஸ்வீடன் அரசு கலக்கமடைந்திருந்தது. ஆனால் ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த பிறகு பீரங்கி வாங்கும் அணுமுறையில் இந்திய அரசின் புதிய அத்தியாயம் தொடங்கியது.
ஸ்வீடனின் சதி வலைப்பின்னல் காரணமாக இந்தியாவுடன் ஒப்பந்தத்தை முடிக்க அதிக வாய்ப்பு பெற்றிருந்த மற்ற பீரங்கி நிறுவனம் குறித்த ஐயப்பாடுகள் பத்திரிகையில் பரவலாக எழுதப்பட்டன. தமது பீரங்கி குறித்த தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை Bofors திடீரென திருத்தியது. அத்துடன் திருத்திய விபரங்களை
மறு டெண்டருக்கு சமர்ப்பிக்காமல் மற்ற ஆயுத நிறுவனங்கள் விபரங்களை சமர்ப்பித்த பழைய டெண்டரிலே ஏல விபரங்களை மாற்றி எழுதியதாக Bofors மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தியாவுக்கு புதிய பீரங்கிகளை வாங்க திட்டமிட்ட ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு பீரங்கி தேர்வு செயல்முறையை
விரைவுபடுத்தியது. மேலும் பீரங்கி உற்பத்தியாளர்களின் முகவர்களுடன் தொடர்பு கொள்ள மாட்டோம் என்றும் எந்த அதிகாரிகளையும் சந்திக்க முகவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சகத்தில் பலகைகள் வைக்கப்பட்டன. எந்தவொரு விற்பனை மற்றும் வாங்குதல் செயல்முறையின் ஒருங்கிணைந்த
பகுதியாக முகவர்கள் இருக்கும் சூழலில் இந்த அசாதாரண நடவடிக்கை எடுக்கப்பட்டது சர்ச்சையானது.
9.Bofors பீரங்கி ஒப்பந்தம்
1985 இல் பீரங்கிகளை கொள்முதல் செய்ய பாதுகாப்பு செயலாளர் எஸ்.கே.பட்நாகர் தலைமையிலான ராணுவ ஆலோசனை குழுவை இந்திய அரசு அமைத்தது. எஸ்.கே.பட்நாகரின் குழு ஆஸ்திரியாவின்
Voest Alpine நிறுவனத்தை தவிர்த்துவிட்டு பிரான்சின் Sofma மற்றும் ஸ்வீடனின் Bofors நிறுவனங்களை பீரங்கி வாங்க சிறந்தவையாக தேர்வு செய்தது. இறுதித் தேர்வைச் செய்ய வேண்டிய நேரத்தில் குழுவுக்கு மத்தியில் இருவேறு கருத்து நிலவியது. ஜெனரல் சுந்தர்ஜி வெளிப்படையாக ஸ்வீடனின் Bofors
நிறுவனத்தை தேர்ந்தெடுத்தார். Sofma ஆதரவாளர்கள் சுந்தர்ஜியின் நோக்கமும் முடிவும் குறித்து கேள்விக்குள்ளாக்கினர் ஆனால் இறுதிச் சுற்றில் ராணுவ தலைமையகம் Bofors நிறுவனத்தை தேர்ந்தெடுத்தது.
நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இறுதியான Bofors முன்மொழிவை நிதியமைச்சர் வி.பி.சிங்,
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜீவ் காந்தி, பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அருண் சிங் ஆகிய மூவரும் அங்கீகரித்தனர். இதை தொடர்ந்து 24-03-1986 அன்று இந்திய ராணுவத்திற்கு 400 FH 77 பீரங்கிகளை வாங்கிட இந்திய அரசுக்கும் ஸ்வீடன் அரசின் Bofors நிறுவனத்துக்கும் இடையே ரூ.1,437 கோடி மதிப்பிலான
ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது அன்றைய காலகட்டத்தில் Bofors நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஒப்பந்தமாகும் அத்துடன் வெளிநாட்டு நிறுவனத்துடன் இந்தியா மேற்கொண்ட முக்கிய ஒப்பந்தமாகும். இதன் பின்னர் Bofors ஸ்வீடிஷ் சமூக ஜனநாயகக் கட்சிக்கு அதிகளவில் நிதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தம் இறுதியாவதற்கு முன்னர் வரை இந்தியா ராணுவம் பிரான்சின் Sofma அல்லது ஆஸ்திரியாவின் Voest Alpine பீரங்கிகளை வாங்கவே திட்டமிட்டு இருந்தது.
10.பீரங்கி வெடிப்பதற்கு முன் ஊழல் வெடித்தது
இத்தாலி தொழிலதிபர் ஒட்டாவியோ குவாட்ரோச்சி, Bofors முகவர் வின் சத்தா, Bofors தலைவர்
மார்ட்டின் ஆர்ட்போ, ஏ.சி.முத்தையா, இந்துஜா சகோதரர்கள், செயலாளர் எஸ்.கே.பட்நாகர், கூடுதல் செயலாளர் என்.என்.வோஹ்ரா, தளபதி சுந்தர்ஜி, பிரதமர் ராஜிவ் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், நிறுவன முதலாளிகள் இந்தியாவுக்கும் ஸ்வீடனுக்கும் இடையே பீரங்கி ஒப்பந்தம் உறுதியாக
ஒப்பந்தத்தை முறைகேடாக மேற்கொண்டதாகவும் சுமார் 64 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஒட்டாவியோ குவாட்ரோச்சி வழியாக சோனியா காந்திக்கு Bofors பணம் அனுப்ப ஏ.சி.முத்தையாவின் A.E. Services என்றொரு மோசடி நிறுவனம் இடைத்தரகு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
நாடாளுமன்றத்தில் பீரங்கி ஒப்பந்த விவகாரம் வெடித்ததால் Bofors ஊழலை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை (Joint Parliamentary Committee - JPC) உருவாக்க பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்புக்கொண்டார். அவ்வகையில், 06-08-1987 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணா சந்திரா பந்த் முன்வைத்த
பிரேரணையின் அடிப்படையில் பி.சங்கரானந்த் தலைமையில் JPC உருவாக்கப்பட்டது. JPC குழு 50 அமர்வுகளை நடத்திய பின்னர் Bofors ஒப்பந்தத்திற்காக ராஜீவ் காந்தி உட்பட யாருக்காகவும் பணம் கொடுக்கப்படவில்லை, வாங்கப்படவில்லை, கேட்கப்படவில்லை என்று இறுதி அறிக்கையை 26-04-1988 அன்று சமர்ப்பித்தது.
18-07-1989 அன்று நாடாளுமன்றத்தில் JPC அறிக்கையை நிராகரித்ததோடு காங்கிரஸ் ஆதரவாளர்கள் நிரம்பிய JPC குழு வெறும் கண்துடைப்பு நாடகம் என்று எதிர்க்கட்சிகள் எள்ளி நகையாடியது.
இதற்கிடையே, அ.தி.மு.க ஜானகி அணியைச் சேர்ந்தவரும் JPC குழு உறுப்பினருமான ஆலடி அருணா JPC குழுவின் கருத்துகளுடன்
உடன்படாததால் தன் ஆட்சேபனைகளையும் சேர்த்தே JPC குழு அறிக்கையில் வெளியிட வேண்டும் என்று முறையிட அதற்கு ஆதாரமற்ற குறுக்கீடு என்று JPC தலைவர் பி.சங்கரானந்த் கூறினார். ஆலடி அருணா ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம் என்று நாடாளுமன்ற தலைவர் பல்ராம் ஜாக்கர் அனுமதி கொடுத்த பின்னர் JPC குழுவினர்
நேர் வழியில் செயல்படவில்லை என்று 38 பக்க அறிக்கையை ஆலடி அருணா வெளியிட்டார்.
1989 இல் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு ஸ்வீடனின் Bofors ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு வழிவகுத்த செலவினங்களின் மதிப்பீட்டில் முறைகேடுகள் இருப்பதாதாகவும் பீரங்கி ஒப்பந்தம் அவசரக்கோலத்தில் விரைந்து
முடிக்கப்பட்டதாகவும் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) டி.என்.சதுர்வேதியின் சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியானது. CAG கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து ராஜிவ் காந்தியை ராஜினாமா செய்ய கூறியும் விசாரணையை முறையாக நடத்த கூறியும் எதிர்க்கட்சியை சேர்ந்த 73 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24-06-1989
அன்று ராஜினாமா செய்தனர். மேலும் “1989 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது ஏனெனில் இத்தகைய வழியே எங்களின் கடைசி வாய்ப்பாக கருதுகிறோம்” என்று பா.ஜ.க தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் பேசினார்.
11.வி.பி.சிங் விலகல்
31-12-1984 முதல் 23-01-1987 வரை நிதியமைச்சராக வி.பி.சிங் இருந்த
காலத்தில் வணிக ஒழுங்குமுறையை எளிமையாக்கியது, வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்காணித்து வழக்கு தொடர்வது, தங்கக் கடத்தலைக் குறைக்க தங்க வரியைக் குறைத்தது போன்ற நற்காரியங்களை ஆற்றினார். மேலும் வரி ஏய்ப்பாளர்கள் என சந்தேகித்து திருபாய் அம்பானி, அமிதாப் பச்சன் உட்பட பல பிரபலங்கள் மீது
உயர்மட்ட சோதனைகளை நடத்தினார். இடைவிடாமல் காங்கிரஸுக்கு வரும் நிதி கேள்விக்குள் ஆகிவிடும் என்பதால் நிதியமைச்சர் பதவியிலிருந்து வி.பி.சிங் நீக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து ராஜீவ் காந்தி தனது பாதுகாப்புத்துறை இலாகாவை 24-01-1987 அன்று வி.பி.சிங்கிடம் ஒப்படைத்தார். 24-01-1987 முதல்
12-04-1987 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக வி.பி.சிங் இருந்த காலத்தில் HDW நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் Bofors விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் பாதுகாப்புத்துறை மோசடிகளை விசாரிப்பதில் ஆர்வம் காட்டிய வி.பி. சிங் HDW நீர்மூழ்கிக் கப்பல் விவகாரத்தில் இந்திய முகவர்கள் பணம்
பெற்றார்களாக என்று தன்னிச்சையாக விசாரிக்க ஆணையிட்டார். வி.பி.சிங்கின் நோக்கம் ஒப்பந்தம் குறித்த பொருளாதார விசாரணையா அல்லது ராஜீவ் காந்தி அரசுக்கு எதிராக வழக்கைத் தயாரிப்பதா என்று புகைச்சல் கிளம்பியது. அதை தொடர்ந்து அமைச்சக தகவல்களை சுதந்திரமாக கையாள்வதில் எழுந்த கருத்து
வேறுபாடுகள் காரணமாக ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இருந்து வி.பி.சிங் ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தார். 18-04-1987 அன்று வி.பி.சிங்கிற்கு பதிலாக கிருஷ்ணா சந்திரா பந்த் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
12.அமிதாப் பச்சன் விலகல்
1984 இல் அமிதாப் பச்சன் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து நீண்ட கால குடும்ப நண்பரான ராஜீவ் காந்திக்கு ஆதரவாக அரசியலில் நுழைந்தார். 1984 இல் அலகாபாத் நாடாளுமன்ற தொகுதியில் லோக் தளம் கட்சியை சேர்ந்த உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் எச்.என்.பகுகுணாவை எதிர்த்து
போட்டியிட்டு 68.2% வாக்குகளைப் பெற்று அதிக வெற்றி வித்தியாசத்தில் அமிதாப் பச்சன் வெற்றி பெற்றார். அலகாபாத் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை அமிதாப் பச்சன் இன்னும் வைத்திருக்கிறார்.
1987 இல் அமிதாப் பச்சன் சகோதரரும் தொழிலதிபருமான அஜிதாப் பச்சன் சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார் என்று The Indian Express கூறியதை தொடர்ந்து Bofors ஊழல் விவகாரத்தில் அமிதாப் பச்சன் ஈடுபட்டிருக்கலாம் என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது. Bofors விவகாரம்
வெடித்ததை தொடர்ந்து ஜூலை 1987 இல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அமிதாப் பச்சன் ராஜினாமா செய்து அரசியலை விட்டு ஒதுங்கினார்.
இதற்கிடையே, 1990 இல் Bofors ஊழலில் அஜிதாப் பச்சன் பணம் பெற்றதாக ஸ்வீடன் செய்தித்தாள் Dagens Nyheter செய்தி வெளியிட்டது. உடனடியாக அஜிதாப் பச்சன் லண்டன்
நீதிமன்றத்தில் Dagens Nyheter செய்தித்தாள் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். பச்சன் கதை இந்திய புலனாய்வாளர்கள் இடமிருந்து வந்ததாக கூறிய Dagens Nyheter அஜிதாப் பச்சனிடம் பகிரங்க மன்னிப்பு கோரியதால் அஜிதாப் பச்சன் அவதூறு வழக்கில் வெற்றி பெற்றார்.
13.அரசியல் சதுரங்க விளையாட்டு
25-09-1985 முதல் 18-07-1987 வரை பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக இருந்த அருண் சிங் வெளியிடப்படாத தனிப்பட்ட காரணங்களால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் ராஜினாமா செய்ய பாதுகாப்பு அமைச்சகம் விவகாரம் காரணமல்ல என்றார்.
ராஜீவ் காந்தி அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த முப்தி முகமது சயீத் 1987 இல் ராஜீவ்-ஃபாரூக் உடன்படிக்கை (ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஒப்பந்தம்) மீது அதிருப்தி ஏற்பட்டதால் அமைச்சர் பதவியையும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா
செய்தார். இவருடன் Bofors ஊழலை எதிர்த்து 1987 இல் காங்கிரசில் இருந்து சத்ய பால் மாலிக் விலகினார்.
பிரதமர் ராஜீவ் காந்தி மீது அதிருப்தியில் உள்ள ஒரு சில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜீவ் காந்திக்கு எதிராக ஒருங்கிணைத்து ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாக கட்சித்
தலைமைக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது. அதை தொடர்ந்து 14-07-1987 அன்று கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அருண் நேரு, ஆரிப் முகமது கான் மற்றும் வி.சி.சுக்லா ஆகிய மூன்று முன்னணி அதிருப்தியாளர்களை காங்கிரஸில் இருந்து ராஜீவ் காந்தி வெளியேற்றினார்.
ராஜீவ் காந்தியின் உறவினரான அருண் நேரு முதலில் ஆட்சிக்கு வந்த போது பிரதமரின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராகச் செயல்பட்டார். மேலும் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஆனால் அக்டோபர் 1986 இல் அமைச்சரவை மறுசீரமைக்கபட்ட போது உடல்நிலை காரணமாக கூறப்பட்டு
கைவிடப்பட்டிருந்தார்.
1985 இல் ஷா பானோ தீர்ப்பை தொடக்கத்தில் ஆதரித்து பின்னர் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு ஒரு வருட விவாதத்திற்குப் பிறகு சர்ச்சைக்குரிய முஸ்லீம் பெண்கள் (விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 மசோதாவை நிறைவேற்றியது. இம்மசோதாவை எதிர்த்தும்
ராஜீவ் காந்தியின் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்தும் எரிசக்தி துறை இணை அமைச்சராக இருந்த ஆரிப் முகமது கான் ராஜினாமா செய்திருந்தார்.
ராஜீவ் காந்தியின் கட்சி பொறுப்புணர்வு குறித்து தொடர்ந்து புகார் கூறிவந்த வி.சி.சுக்லா 1987 இந்தியா ஜனாதிபதித் தேர்தலில் ராஜீவ் காந்தியின்
வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஆர்.வெங்கடராமனுக்கு எதிராக இரண்டாவது முறையாக போட்டியிட ஜெயில் சிங்கை சமாதானப்படுத்துவதன் மூலம் காங்கிரஸ்ஸை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியுற்றதாக கூறப்படுகிறது.
Bofors ஊழல் விவகாரம் வெடித்த காலகட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர்
ராஜினாமா செய்தாலும் சிலர் வெளியேற்றப்பட்டாலும் அவர்கள் அனைவரும் அரசியலில் தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொண்டனர். காங்கிரஸுடன் நல்லுறவை முறித்துக்கொண்ட அருண் நேரு, ஆரிப் முகமது கான், வித்யா சரண் சுக்லா, முப்தி முகமது சயீத், சத்யபால் மாலிக் உட்பட சிலர் விஸ்வநாத் பிரதாப் சிங்
தலைமையில் ஒருங்கிணைந்து ஜன் மோர்ச்சா கட்சியை 1987 இல் தொடங்கினர். 1988 இல் ஜனதா கட்சி, லோக் தளம், ஜன் மோர்ச்சா கட்சிகளை இணைத்து விஸ்வநாத் பிரதாப் சிங் தலைமையில் ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்டது.
14.1989 தேர்தல் முடிவை மாற்றிய Bofors
பா.ஜ.க தலைமையிலான எதிர்க்கட்சிகளின் தொடர்
நடவடிக்கைகள் காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கையையும் ராஜீவ் காந்தி மீதான பிம்பத்தையும் அசைத்து பார்த்தது. அதையொட்டி, பீரங்கிகளை வாங்கியதில் லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படும் Bofors ஊழல் இந்திய அரசியலில் புயலை கிளப்பியது, 1989 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை மாற்றியது, பல தசாப்தங்களாக
இந்திய அரசியலின் முகத்தை மாற்றியது. Bofors ஊழல் விவகாரமே 1989 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்விக்கு வழிவகுத்ததாக நம்பப்படுகிறது.
எவ்வாறாயினும் Bofors ஊழல் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பலர் விசாரிக்கப்பட்டு ஒட்டாவியோ குவாட்ரோச்சி உட்பட சிலர் கைது செய்யப்பட்டு
இருந்தாலும் இறுதி விசாரணையில் ராஜீவ் காந்தி உட்பட யார் மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
15.ஆட்சியமைத்த தேசிய முன்னணி
1989 நாடாளுமன்ற தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத சூழலில்
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு மாற்றாக ஜனதா தளம் தலைமையில் தேசிய முன்னணி என்ற மூன்றாவது அணி உருவானது. தேசிய முன்னணியின் தலைவராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என்.டி.ராமாராவ் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஜனதா தளம் கட்சி தலைவர் வி.பி.சிங் பொறுப்பேற்றனர். தமிழ்நாட்டில்
நாடாளுமன்ற தொகுதிகளில் பெரும் தோல்வியை தழுவினாலும் தேசிய முன்னணியின் அரசியல் செயல்பாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
Bofors ஊழலை அணுகிய விதமும் Mr.Clean பிம்பமும் தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங் பிரதமர் ஆகுவதில் மிக முக்கியப் பங்கு வகித்தது.
அதையொட்டி, 26-12-1989 அன்று Bofors இந்தியாவுடன் எந்தவொரு பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் நுழைய அனுமதி இல்லை என்று ஆணை பிறப்பித்தது வி.பி.சிங் அரசு. பிரதமர் பதவிக்காலத்தில் மண்டல் ஆணைக்குழுவின் அறிக்கைப்படி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று 07-08-1990 அன்று பிரதமர் வி.பி.சிங்
அறிவித்தார். மேலும் பிரதமர் வி.பி.சிங் ஆதரவளிக்க பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் 23-10-1990 அன்று அயோத்தியில் உள்ள பாபர் மசூதி பகுதிக்கு செல்லவிருந்த ராம ரத யாத்திரையை தடுத்து நிறுத்தி பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானியை சமஸ்திபூரில் கைது செய்தார். அதை தொடர்ந்து வி.பி.சிங்
அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க வாபஸ் பெற்றதால் 07-11-1990 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இதற்கிடையே பிரதமர் பதவி மீது கண் வைத்திருந்த சந்திரசேகர் வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்ட இரு நாட்களுக்கு முன்னர் 05-11-1990
அன்று ஜனதா தளத்தில் பிரிந்து சமாஜ்வாதி ஜனதா கட்சியை (ராஷ்ட்ரிய) தொடங்கினார். 10-11-1990 அன்று காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமர் ஆனார். நாளடைவில் ஜனதா தளம் பல கட்சிகளாக பிரிந்தது தனிக்கதை.
16.சித்ரா சுப்ரமணியம்
1979 இல் இந்தியா டுடே இதழில் நிருபராகச் சேர்ந்தார் சித்ரா
சுப்ரமணியம். 1983 இல் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (UN) நிருபராக இருந்தபடி தி இந்து உட்பட சில பத்திரிகைகளுக்கு செய்திகளை எழுதி வந்தார். 16-04-1987 அன்று ஸ்வீடன் வானொலியில் “இந்தியாவில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு வழங்கிய கணிசமான லஞ்சத்தால் Bofors பீரங்கி ஒப்பந்தம்
சாத்தியமானது” என்று அநாமதேய நபர் குற்றம் சாட்டினார். ஸ்வீடன் வானொலியில் ஒளிபரப்பான Bofors செய்தி இந்திய மக்களின் காதுகளுக்கு எட்டுவதற்கு முன்னர் ஐரோப்பாவில் வசித்த இந்திய பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் காதுகளுக்கு இந்த வானொலி செய்தி எட்டியது. அதை தொடர்ந்து ஜெனீவாவில் இருந்து
புறப்பட்டு ஸ்வீடனுக்குச் சென்று அநாமதேய நபருடன் தொடர்பு கொண்டு பீரங்கி ஒப்பந்தம் குறித்து சுமார் 350 அசல் ஆவணங்களை கைப்பற்றி Bofors ஊழல் குறித்து ஆராய தொடங்கினார். 09-10-1989 அன்று ஆசிரியர் என்.ராமுடன் இணைந்து The Hindu பத்திரிகையில் Bofors ஊழல் விவகாரத்தை புலனாய்வு செய்து
வெளியுலகுக்கு முதலில் சித்ரா சுப்ரமணியம் தெரியப்படுத்தினார். இதை தொடர்ந்து, Bofors சர்ச்சை குறித்து பத்திரிகையில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வந்தார்.
பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் Bofors ஊழல் குறித்து 10 வருடங்கள் புலனாய்வு செய்ததில் The Hindu ஆசிரியர் என்.ராம் உடன்
முதல் 20 மாதங்கள் வேலை செய்தார். Bofors மீதான புலனாய்வில் தனக்கு முக்கிய ஆதாரமாக விளங்கியது ஸ்வீடன் வானொலியில் பேசிய ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் என்றும் ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் பெயரை தன்னிடம் கலந்தாலோசிக்காமல் டெல்லி வட்டாரத்தில் ஆசிரியர் என்.ராம் பகிர்ந்து கொண்டார் என்றும் சித்ரா
சுப்ரமணியம் குற்றம் கூறினார். நாளடைவில் இருவருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்ட பின் The Hindu பத்திரிகை Bofors ஊழல் குறித்து சித்ரா சுப்ரமணியம் எழுதிய கட்டுரைகளை மிகவும் சர்ச்சைக்குரியது என்று கூறி வெளியிடுவதை நிறுத்தியதும் அதை தொடர்ந்து The Indian Express பத்திரிகையில் எழுதி
வந்ததும் குறிப்பிடத்தக்கது.
2014 இல் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் மற்றும் விக்னேஷ் வெள்ளூர் ஆகியோருடன் இணைந்து The News Minute என்ற இணைய பத்திரிகையை சித்ரா சுப்ரமணியம் தொடங்கினார். தற்போது அர்னாப் கோஸ்வாமி நிர்வகித்து வரும் Republic TV ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கிறார்.
17.ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம்
1987 காலகட்டத்தில் ஸ்வீடன் அரசியலில் புயலை கிளப்பிய Bofors வழக்கை விசாரித்து வந்த ஸ்வீடன் காவல்துறை தலைவர் ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் (Sten Lindstrom) என்பவரே ஸ்வீடன் வானொலியில் பேசிய அநாமதேய நபர் என்ற தகவல் 2012 இல் வெளியானது.
இந்திய புலனாய்வாளர்கள் Dagens Nyheter பத்திரிகை வெளியிட்ட Bofors ஊழல் செய்திக்குறிப்பில் பச்சன் குடும்பத்தினரை பொய்யாக விதைத்தனர் என்றும் இரு நாடுகளும் உரிய விசாரணையை மேற்கொள்ள வாய்ப்பில்லை என கருதியே 1987 ஸ்வீடன் வானொலியில் Bofors விவகாரம் குறித்து பொதுமக்களிடம் பகிர்ந்து
கொண்டேன் என்றும் அந்த காலகட்டத்தில் Bofors விவகாரத்தில் இருநாட்டையும் சேர்ந்த சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் தண்ணீரை சேறும் சகதியுமாக ஆக்கினார்கள் என்றும் 2012 இல் ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் பேசினார்.
18.ராஜீவ் காந்தி படுகொலை
இந்தியாவுக்கு பீரங்கிகளை வாங்க
ஆஸ்திரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படுவதற்கு முன்பே 31-10-1984 அன்று இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். 1984 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராஜீவ் காந்தி, ஆஸ்திரியாவை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, இந்தியாவுக்கு பீரங்கிகளை வாங்க
ஸ்வீடனுடன் ரூ.1,437 கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஸ்வீடன் பிரதமர் ஓலோப் பால்மே மற்றும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோர் பீரங்கி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் உறுதியாக பணியாற்றினர்.
ஸ்வீடன் ஒப்பந்தம் உறுதி செய்யப்படுவதற்கு இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முகவர்களும்
ரூ.64 கோடி லஞ்சம் பெற்றதாக ஊழல் குற்றம் சாட்டப்பட்ட சூழலில் ஓலோப் பால்மே 28-02-1986 அன்று படுகொலை செய்யப்பட்டார் மற்றும் ராஜீவ் காந்தி 21-05-1991 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்திரா காந்தி படுகொலை தொடங்கி நெருங்கிய நண்பர்களான ஓலோப் பால்மே மற்றும் ராஜீவ் காந்தி படுகொலைக்கு
பீரங்கி தொடர்பாக இணைப்புப் புள்ளிகள் இருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியத்திற்குரியது. மேலும் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் அரசியல் ஆதாயம் அடைந்தவர்கள் யார் யார் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Bofors ஊழல் வெடித்த பிறகும் ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகும் இந்த 32 வருடங்களில் காங்கிரஸ் 15 வருடங்கள் தான் ஆட்சி செய்துள்ளது. குறிப்பாக ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகு நேரு காந்தி குடும்பத்தில் இருந்து ஒருவரும் பிரதமர் பதவியை அலங்கரிக்கவில்லை.
19.Bofors மற்றும் அரசியல் சடுகுடு
Bofors ஊழல் குறித்து பரப்புரை செய்தே மூன்றாவது அணி சார்பில் தேசிய முன்னணி முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. Bofors விவகாரத்தை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சென்ற வாஜ்பாய் இவ்விவகாரத்தில் சிக்கிய இந்துஜா சகோதரர்களை மட்டும் காப்பாற்ற பிரயத்தனம்
செய்தது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க சார்பில் 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் Bofors விவகாரத்தில் ராஜீவ் காந்தி அரசை குற்றம் சாட்டிய தலைமை கணக்குத் தணிக்கையாளர் டி.என்.சதுர்வேதிக்கு 2002 - 2007 வரை கர்நாடகா ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது.
18-04-1987 முதல் 03-12-1989 வரை ராஜீவ் காந்தி அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை அலங்கரித்த கிருஷ்ணா சந்திரா பந்த் திட்டமிடல் ஆணையத்தின் 23 வது துணைத்தலைவராக பொறுப்பு கொடுக்கப்பட்டது.
1957 முதல் சட்டமன்ற உறுப்பினர், ஆந்திர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர்,
பாதுகாப்புத்துறை, வெளியுறவு, உள்துறை அமைச்சர் பதவிகளில் பணியாற்றிய நரசிம்ம ராவ் 1990 காலகட்டத்தில் அரசியலை விட்டு விலகியே இருந்தார். ஆனால் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்த நரசிம்ம ராவ் பிரதமர் பதவியை அலங்கரித்தார்.
Bofors ஊழல் காரணமாக 1989 இல் காங்கிரஸின் தேர்தல் தோல்வி இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க வழிகளில் எண்ணற்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. 1989 முதல் தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பிம்பம் சிதறடிக்கப்பட்டு அரசியலில் எதிர்நீச்சல் அடிக்க மாநில கட்சிகளுடன் கூட்டணி வைப்பது
அவசியம் என கண்டறியப்பட்டு இந்தியா கூட்டணி அரசியலின் சகாப்தத்தில் நுழைந்தது.
20.முடிவுரை
ஊதி பெரிதாக்கப்பட்ட Bofors ஊழலால் 1989 நாடாளுமன்ற தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் வெற்றியை இழந்தது. இந்தியாவில் ராஜீவ் காந்தி காலத்தில் Bofors ஒரு பழமொழியாகவே மாறிப்போனது. ஊதி
பெரிதாக்கப்பட்ட 2G ஊழலால் 2011 சட்டமன்ற தேர்தலில் கலைஞர் தலைமையிலான தி.மு.க மற்றும் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் வெற்றியை இழந்தது. 5G வந்துவிட்ட காலத்திலும் 2G பற்றிய பேச்சுக்களை கேட்க முடிகிறது.
தற்போது வரை காங்கிரஸ் மீது Bofors மற்றும் 2G ஆகிய இரண்டையும் மிகப்பெரிய
ஊழல்களாக குற்றம் சட்டப்பட்டாலும் யார் மீதான குற்றச்சாட்டும் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை. ஏனெனில் அவை அனைத்தும் எதிர்கட்சிகளாலும் குறிப்பிட்ட ஊடகத்தாலும் ஊதி பெரிதாக்கப்பட்டவை. குறிப்பாக எதிர்கட்சியான பா.ஜ.கவை பொறுத்தமட்டில் காங்கிரஸ்ஸை சுற்றி சதி வலைப்பின்னி ஊழல் கதையை
ஊதி பெரிதாக்குவத்தில் வல்லமை பொருந்தியது. இப்படி காங்கிரஸ் மீதான ஊழல் கதைகளால் அரசியல் லாபம் அடைந்தது பா.ஜ.க என்றால் அது மிகையல்ல.
துல்லியமான தாக்குதல்களுக்கு பெயர் போன ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் இடமிருந்து கொள்முதல் செய்த பா.ஜ.க அரசு மீது இன்றைய எதிர்க்கட்சி காங்கிரஸ்
தரப்பிலிருந்து ஆதாரங்களுடன் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. ஆனால் ஊடக ஆதரவு இல்லாத காரணத்தால் பா.ஜ.க மீதான ஊழல் குற்றச்சாட்டு புஸ்வாணமாகி போனது ஏன்? என்பதை ஆராய்ந்தாலே தற்போதைய இந்தியா அரசியல் குறித்து நன்கு விளங்கிக் கொள்ளலாம்.
21.துணுக்குச் செய்தி
தொடக்கத்தில் தடைப்பட்டாலும் பின்னர் சதாம் ஹுசைன் ஆண்ட ஈராக்கிற்கு GHN-45 பீரங்கிகளை தயாரித்து 1984 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் Voest Alpine நிறுவனம் விநியோகம் செய்தது. ஈரான் - ஈராக் போரில் ஈராக்கை ஆதரித்த அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனின் நிர்வாகம்
ஈராக்கிற்கு GHN-45 பீரங்கிகளை விற்பனை செய்வதை சத்தமின்றி எளிதாக்கியது. இதன் பின்னணியில் Noricum ஊழல் பிரசித்தி பெற்றது தனிக்கதை.
Bofors ஊழல் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் பாகிஸ்தானுக்கு எதிரான 1999 கார்கில் போரில் Bofors பீரங்கி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
மேலும் கார்கில் போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுக்கு உறுதியான வெற்றியை அளித்தது.
இன்று வரை நிரூபிக்க முடியாத Bofors விவகாரத்தை பொறுத்தவரையில் ஒன்று Bofors ஒப்பந்தத்தில் ராஜீவ் காந்தி அரசில் யாருமே தவறு செய்யவில்லை என்று பொருள்படும் அல்லது ராஜீவ் காந்தியின் அரசியல்
பிம்பத்தை சீர்குலைக்க பா.ஜ.கவாலும் ஊடகத்தாலும் பின்னப்பட்டது என்று பொருள்படும்.
யூகத்தின் அடிப்படையில் குற்றசாட்டுகளை எழுப்புவது தவறில்லை ஆனால் நீதிமன்றத்தில் குற்றங்களை நிரூபிக்க வேண்டியது குற்றம் எழுப்பியவரின் கடமையாகும். அவ்வகையில் ஆதாரங்கள் கொண்டு நிரூபிக்காமல் Bofors ஊழல்
நடந்தது என்று வாய் வார்த்தையாக சிலர் சொல்வதை உண்மை குற்றச்சாட்டாக கருத இயலாது ஏனெனில் அப்படி கருதுவது அடிப்படை சட்ட அமைப்பை கேள்விக்குள் ஆக்குவதாகும்.
22.விவரணைகள்
The Hindu Investigation Report about Bofors on 09-10-1989
1. முகவுரை 2. விஜயனும் குவேனியும் 3. குவேனியின் சாபம் 4. விஜயனின் வருகை அஞ்சல் தலை (1956) 5. இலங்கையில் பாண்டியர்கள் 6. இலங்கையில் சோழர்கள் 7. இலங்கை இராச்சியம் 8. இலங்கை காலனித்துவம் 9. பிரிட்டிஷின் கட்டுப்பாடு 10. பிரிட்டிஷுக்கு பிந்தைய காலம்
11. இலங்கை அரசு
தந்தை செல்வா
JVP கிளர்ச்சிகள் 11. உள்நாட்டுப் போர்கள் 12. ஆபரேஷன் பூமாலை 13. இந்திய அமைதி காக்கும் படை 14. ராஜீவ் காந்தி படுகொலை 15. படுகொலைக்குப் பின்னால் 16. பல்நோக்கு ஒழுங்கு விசாரணை ஆணையம் 17. ஈழ அரசியலில் தமிழ்நாடு 18. நார்வே அமைதிப் பேச்சு
19. விடுதலைப் புலிகள் 20. முடிவுரை 21. விவரணைகள்
முகவுரை
ஆரிய வரலாறை எடுத்துரைக்க “திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பு” என்னும் கட்டுரையை முன்னர் எழுதிருந்தேன். அது போல இலங்கை வரலாறை எடுத்துரைக்க “ஈழமும் சிங்களமும்” என்னும் கட்டுரையை இன்று எழுதியிருக்கிறேன்.
1.முகவுரை
2.ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு
3.போலி மனித உடல் பரிசோதனை
4.போலக்குளம் பீதாம்பரன்
5.ஆரம்பகட்ட விசாரணை
6.சிறப்பு குற்றப்பிரிவு விசாரணை
7.உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
8.உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
9.சி.பி.ஐ விசாரணை
10.இறுதியில் நடந்ததென்ன?
11.தடயவியல் மருத்துவர் உமாதாதன்
12.முடிவுரை
13.விவரணைகள்
# அனைத்து வழக்குகளின் தொடக்கமும் முடிவும் ஒன்றாக அமைய வேண்டிய கட்டாயமில்லை என்ற அடிப்படையில் இக்கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்.
முகவுரை
உலக சினிமாவில் கொலையை துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிப்பது மிக பிரபலமான கதைக்களங்களில் ஒன்றாகும். அவ்வகையில் சுவாரஸ்யமான துப்பறியும் திரைப்படங்களின் வரிசையில் மம்முட்டி நடித்த சி.பி.ஐ திரைப்படத் தொடர் மலையாள சினிமாவில் புகழ் பெற்றது. 1988 இல் சி.பி.ஐ திரைப்படத் தொடரின்
1.முகவுரை
2.நக்சல் தாக்குதல்
3.இரு மாணவர்கள் கைது
4.விசாரணை முகாம்
5.சித்தரிப்பும் உண்மையும்
6.மக்களின் குரல் ஓங்கியது
7.தந்தையின் போராட்டம்
8.இரு முதலமைச்சர்கள்
9.வேறுபட்ட வாக்குமூலங்கள்
10.முக்கிய சாட்சியங்கள்
11.உயர்நீதிமன்றம் ஆணை
12.பதவி விலகிய முதலமைச்சர்
13.கேரளா அரசின் பதில்
14.ஒப்புக்கொண்ட பிரதிவாதிகள்
15.இறுதி நடவடிக்கை
16.ராஜனின் உடல்
17.முடிவுரை
18.விவரணைகள்
1.முகவுரை
அரசியல் ரீதியாக சுதந்திர இந்தியாவின் கருப்பு பக்கங்களில் சாதி, மதம், இனம், வர்க்கம் சார்ந்த தாக்குதல்கள் போல
நெருக்கடி நிலை (State of Emergency from 25-06-1975 to 21-03-1977) கால தாக்குதல்களும் கவனத்திற்குரியது. நெருக்கடி நிலை காலத்தின் போது கேரளா காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது இறந்த ராஜன் என்பவர் குறித்த வழக்கும் விசாரணையும் கேரளா அரசியலை புரட்டி போட்டது.
இந்தியாவில் Unorganised Business Sector இல் Public Transportation முக்கிய இடம் வகிக்கிறது.
Lorry, Bus தொழில் பற்றி நன்கு அறிந்துள்ளேன்.
பல விதமான தொழிலிலும் ஈடுபடும் Reliance, Tata, Birla போன்ற Giant Corporates கூட தற்போது வரை Public Transportation தொழில் செய்யல. (இந்நிலை எதிர்காலத்தில் மாறினால் அப்போது பார்ப்போம்).
காரணம் இத்தொழில் இந்திய அளவில் அவ்வளவு Unorganised ஆ இருக்கு.
பல Driver's சொல்றத கேட்குறதில்ல.
Driver's உடன் கூட்டு சேர்ந்து Depot Supervisor "Lorry, Bus Repair Services" ன்னு பொய் சொல்லி காசை ஆட்டைய போடுறது எழுதப்படாத சட்டம்.
இவனுங்க ஒவ்வொரு பிரச்சினைக்கும் முழிய டைப் டைப்பா மாத்துவாங்க.
எல்லாரும் ஒன்று தான் என்று குற்றம் சாட்ட முடியாது ஆனால் பலரும் உண்டு.