இதற்கு முந்தைய பதிவில் முதல் எட்டு படிகளை விவரித்தோம். இனி அடுத்த எட்டு படி மேலே ஏறுவோம்.'பஞ்சகம் எனும் ஐந்து ஸ்லோகங்களிலும் மொத்தம் நாற்பது படிகள்.
9. சத் சங்கம் என்று சொல்கிறோமே. நல்லவர்களோடு கூட்டு வைத்துக் கொள்ளவேண்டும்.
நமக்கு புதிதாக நல்ல பழக்கங்கள் வருவது லேட் ஆனாலும், இருக்கும் கெட்ட பழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிச்சயம் குறையும்.
10. பகவான் மேல் பக்தி விடாமல் வளரவேண்டும். கடவுள் நம்பிக்கை சத் சங்கத்தால் எளிதில் மலரும்.
11. மனம் வெவ்வேறு உணர்ச்சிகள் கிளப்பும் கொந்தளிப்பை தவிர்த்து
அமைதியை பெற முயற்சி செய்யவேண்டும்.
12. நமக்கு என்று சில கர்மாக்கள் இருக்கிறது. அதை விடவும் முடியாது. அதுவும் நம்மை விடாது. எதெல்லாம் விடமுடியுமோ அவற்றை ஒவ்வொன்றாக விட்டு விட வேண்டும்.
செய்யவேண்டிய கர்மாக்களை விடாது பற்றின்றி செய் என்கிறார் சங்கரர்.
13. கற்றறிந்த ஆச்சர்யனை
தேடி சரணடைந்து குருவாக கொள்.
14. ஆசார்யனின் பாதுகை கூட வழிபடுவதற்கு உரியது.
15. ஏக அக்ஷரமான ஓம் எனும் சக்தி வாய்ந்த பிரம்மத்தை அளிக்கும் மந்திரத்தை விடாமல் உச்சாடனம் செய்.
16. நமக்கு தெரியாவிட்டாலும் யாராவது வேதங்களை பாராயணம் செய்வதை காதால் கேட்போம். நல்ல சப்தம்
காதில் விழுந்தாலே நாம் கொஞ்சம் உயர்வோம்.
அடேயப்பா, ஆதிசங்கரரின் உபதேச பஞ்சகத்தில் இதுவரை பதினாறு படிகள் ஏறிவிட்டோமே. அடுத்த ஸ்லோகத்தில் இன்னும் கொஞ்சம் ஏறுவோம். ஒரு படிக்கட்டு - எட்டு படிகள் கொண்டது. சுலபமாக ஏறுவதற்கு மனதில் தெம்பை தருகிறார் ஆதி சங்கரர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய்
அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!
பொருள்:
ஒவ்வொரு தோழியாக எழுப்பிக் கொண்டு வருகையில் நந்தகி என்ற தோழியின் வீடு அடுத்து வருகிறது. அவளும் உள்ளே உறங்கிக்கொண்டிருக்கிறாள். அத்தோடு கதவும் அடைத்திருக்கிறது. அவளை வெளியிலிருந்தே அழைக்கின்றாள் ஆண்டாள்.
முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய்!
பொருள்:
ஏழு பாதாள உலகங்களையும் தாண்டி, சொற்களால் விவரிக்க முடியாத எல்லையையும் தாண்டி நிற்பன பெருமானது திருவடிகள்: நிறைந்த மலர்களால் அழகு செய்யப்பட்ட
அவனது திருமுடியோ அனைத்து பொருட்களின் முடிவுகளையும் கடந்தது. உமை அம்மையைத் தனது உருவத்தின் ஒரு பகுதியில் ஏந்தியுள்ள பெருமானின் திருவுருவம் ஒன்றல்ல. உலகிலுள்ள அனைத்து உயிர்களிலும் அவன் கலந்திருப்பதால். அனைத்து உயிர்களின் வடிவங்களும் அவனது திருவுருவங்கள். வேதங்கள், தேவர்கள், மற்றும்
எத்தனையோ அற்புத காவியங்கள் நூல்களை படைத்த ஆதிசங்கரின் ஒரு ஐந்து ஸ்லோகங்கள் இன்று அறிந்து கொள்வோம். சாதன பஞ்சகம் எனவும் உபதேச பஞ்சகம் என்றும் இதற்கு பெயர். வேதாந்தத்தை கசக்கி பிழிந்து சாரமாக ஐந்து ஸ்லோக ஏணிப்படிகள். .
ஒவ்வொன்றும் 4 வரி X ரெண்டு படிகள். எனவே ஐந்து ஸ்லோகங்களில் 40 படிகள் கடக்கவேண்டும். சாதனை அப்போது தான் பயன் தரும். படிகளில் ஏறுவோமா?
கிழக்கே வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன. எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். ஆனாலும் உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு,
உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமான கிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் ‘ஆஆ’ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே!
கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்!
பொருள்:
கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன.வெண் சங்குகள் முழங்குகின்றன.
இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம்.
அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய்.
உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.
பனிபடர்ந்த இருள் சூழ்ந்த மார்கழி காலையை சூரியன் எப்படி பிரகாசமாக்குகிறானோ, அதுபோல் ஆணவம், பொறாமை, அறியாமை ஆகிய இருள் சூழ்ந்த மனதை
#தெய்வத்தின்_குரல்
நிறைந்த ஆனந்தம்:
(முதல் பகுதி)
கிருதா யுகத்தில் பிருகு என்பவர் தம்முடைய பிதாவான வருணனிடத்தில் போய் “நிறைந்த வஸ்து எதுவோ அதை அப்படி அறிவது?” என்று கேட்டாராம். “நிறைந்த வஸ்து எதுவோ அது காலத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். தேகத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும்.
வஸ்துவிலும் நிறைந்து ஒரு குறை என்பதே இல்லாமல் இருக்க வேண்டும். அத்தகைய நிறைந்த வஸ்துவை எனக்குச் சொல்ல வேண்டும்” என்று பிதாவான வருணனிடத்தில் கேட்டாராம்.
“நீ போய் தபஸ் பண்ணு. அது உனக்கே தெரியும்” என்று வருணன் சொல்லிவிட்டாராம்.
“அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு பிருகு போய்த்
தபஸ் பண்ண ஆரம்பித்தார். முதலில் அதனால் அவருக்கு ஒன்று தெரிந்தது. ‘இந்தச் சரீரந்தான் உயர்ந்த வஸ்து. இதுதான் எல்லாவற்றையும் உணருகிறது. உணரப்படுகிற பொருளைக் காட்டிலும் உணர்ந்து கொள்கிற பொருள் உயர்ந்தது. அது இந்தத் தேகந்தான்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அப்பாவிடம் போய், “இந்தச்