#தெய்வத்தின்_குரல்
நிறைந்த ஆனந்தம்:
(முதல் பகுதி)
கிருதா யுகத்தில் பிருகு என்பவர் தம்முடைய பிதாவான வருணனிடத்தில் போய் “நிறைந்த வஸ்து எதுவோ அதை அப்படி அறிவது?” என்று கேட்டாராம். “நிறைந்த வஸ்து எதுவோ அது காலத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். தேகத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும்.
வஸ்துவிலும் நிறைந்து ஒரு குறை என்பதே இல்லாமல் இருக்க வேண்டும். அத்தகைய நிறைந்த வஸ்துவை எனக்குச் சொல்ல வேண்டும்” என்று பிதாவான வருணனிடத்தில் கேட்டாராம்.
“நீ போய் தபஸ் பண்ணு. அது உனக்கே தெரியும்” என்று வருணன் சொல்லிவிட்டாராம்.
“அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு பிருகு போய்த்
தபஸ் பண்ண ஆரம்பித்தார். முதலில் அதனால் அவருக்கு ஒன்று தெரிந்தது. ‘இந்தச் சரீரந்தான் உயர்ந்த வஸ்து. இதுதான் எல்லாவற்றையும் உணருகிறது. உணரப்படுகிற பொருளைக் காட்டிலும் உணர்ந்து கொள்கிற பொருள் உயர்ந்தது. அது இந்தத் தேகந்தான்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அப்பாவிடம் போய், “இந்தச்
சரீரம்தான் உயர்ந்த, நிறைந்த வஸ்து”என்று சொன்னாராம்.
அப்பா திரும்பவும்,“இன்னும் கொஞ்சம் தபஸ் பண்ணு” என்று சொல்லிவிட்டாராம்.
இப்படியே கொஞ்சம் ‘தபஸ்’ பண்ணுவது, உடனே தமக்குக் தோன்றியதைப் போய்ச் சொல்வது என்று ஐந்து தடவைகள்பிருகுசெய்தாராம். முதலில் உடம்புநிறைந்த வஸ்துவாகத்தோன்றிற்று.
இந்த உடம்பு ஒருநாள் பிரேதமாகிப் போவதுதானேயென்று யோசித்தபின், உடம்பு நிறைந்த வஸ்து இல்லை என்றும், பிராணன்தான் நிறைந்த வஸ்துவாகவும் தோன்றிற்று. அதன்பின் மனமே நிறைந்த வஸ்து என்று தோன்றியது. பிற்பாடு அறிவே நிறைந்த வஸ்துவாகத் தோன்றியது. ஐந்தாம் முறை போனபோது ஆனந்தாநுபவம்தான் நிறைவாகத்
தோன்றியது.
“நீங்கள் சொன்னபடி நான் இத்தனை நாட்களாகத் தபஸ் பண்ணினேன். இப்போதெல்லாம் நடுநடுவே ஏதோ ஒரு விதமான ஆனந்தம் ஸ்புரிக்கிறதே. இது என்ன?” என்று தந்தையைக் கேட்டாராம் பிருகு.
“உனக்கு ஒவ்வொரு சமயத்தில் கொஞ்சம் ஸ்புரிக்கிறது என்று சொல்கிறாயே அந்த ஆனந்தம்தான் வஸ்து. இது உனக்குத்
துளித்துளி உண்டாகிறது. இதுவே நிறைந்து விட்டதானால் அதைத்தான் பேரானந்தம் என்கிறோம். அந்தப் பேரானந்தம் எப்போதும் குறைவு இல்லாமல் காலத்தாலும் தேகத்தாலும் நிறைந்து இருக்கும்படியான ஒரே வஸ்து. சரீரம், பிராணன், மனசு, அறிவு எல்லாவற்றிற்கும் ஆதாரமாக, இவை எல்லாவற்றையும் கடந்த ஒன்று ‘ஆத்மா’
என்று இருக்கிறது. அது தன்னைத்தானே அறிந்து அநுபவிப்பதில்தான் இந்த ஆனந்தம் உண்டாகிறது” என்று பிதா சொன்னாராம். இப்படி உபநிஷக் கதை இருக்கிறது.
அந்தப் பேரானந்த சமுத்திரத்தின் ஏதோ ஒரு திவலை தான் நமக்கு எப்போதாவது உண்டாகிறது. கிளைகள், இலைகள் எல்லாம் அடர்ந்து இருக்கும் ஒரு மரத்தடியில்
உட்கார்ந்தால் கீழே கொஞ்சம்கூட வெயில் படாமல் நிழல் இருக்கிறது. காற்று அடிக்கும்போது, இலைகள், கிளைகள் நகர்ந்து விலகுகிற சமயத்தில் சூரியனுடைய வெயில் கீழே அந்த இடைவெளி அளவுக்கு விழுகிறது. அப்புறம் மறுபடியும் கிளைகள் மூடி, அது மறைந்து விடுகிறது. அந்த மாதிரியாகத் தான் நமக்கு ஆனந்தம்
அவ்வப்போது வந்து வந்து மறைந்து போகிறது.
ஆனந்தம் என்பது எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கும் படியான வஸ்து. ஆனால் நம்முடைய கெட்ட கர்மா,மனம், புத்தி இவற்றினால் அது நம்மிடம் படாமல் மறைந்திருக்கிறது. ஒரு க்ஷணம் நாம் பண்ணியிருக்கிற புண்ணிய கர்மாக்களினாலேஅவை விலகும்போது,காற்று அடித்து
இலைகள் விலகும்போது, சூரிய ஒளி அதன் வழியாக வருவது போல், நம்முடைய கர்மாக்கள் விலகியதால், எங்கும் பரவிய ஆனந்தத்தின் திவலை நமக்கு உண்டாகிறது. இதுவே வளர்ந்து விட்டால் பேரானந்தமாகிறது. அந்த ஆனந்த சமுத்திரத்தின் லவலேசத்தைத்தான் நாம் எப்போதாவது அடைந்தவுடன் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்
என்று சொல்லிக் கொள்கிறோம். தபஸ் பண்ணிப் பண்ணி விசாரம் செய்தால் எப்போதும் ஆனந்த மயமாக இருக்கும் சமுத்திரத்திலேயே கலந்து அதாகவே இருக்கலாம்.
ஹர ஹர சங்கர!!
ஜெய ஜெய சங்கர!!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள் தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தை முறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
2. புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான்
திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.
3. ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகம கடைப்பிடிக்கப்படும். ஆனால்
திருவெண்காடு தலத்தில் 3 வகை ஆகமங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன.
4. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
பிரபஞ்சத்தை நடத்தி இத்தனை காரியங்களை செய்தும், கவனித்தும் பலனளித்தும் வந்தாலும் ஸ்வாமி இதனால் எல்லாம் மனம் சலிக்காமல் சாந்தமாக இருக்கிறார். ஈச்வரனை ‘ஸ்தாணு’ என்பார்கள். ‘கட்டை மரம்’, ‘பட்ட கட்டை’ என்று அர்த்தம். உயிரோட்டம் உள்ள மரம்தான்; ஆனாலும் உணர்வில்லாத
மாதிரி இருக்கிறது. இந்தக் கட்டையை சுற்றிக் கொண்டிருக்கும் கொடி, அம்பாள். அந்தக் கொடிக்கு ‘அபர்ணா’ என்று ஒரு பெயர். அதாவது, ‘இலை இல்லாதது’ என்று அர்த்தம். உயிரோட்டத்துடன், ஆனால் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இல்லாத பராசக்தி என்ற கொடியானது உயிரோட்டம் இருந்தாலும் உணர்ச்சி இல்லாதது
போலிருக்கும்பரம்பொருளைச் சுற்றிக்கொண்டிருக்கிறாள். ஸ்வாமீஎன்றுநினைக்கும்போதே ஞானம் சாந்தம் என்ற இரண்டுபாவமும்நம்மனசிலும் வருகின்றன.எனவே,ஸ்வாமியைத் தியானம் செய்யச்செய்ய ஞானம்,சாந்தம்இந்தஇரண்டும் நமக்குநன்றாகஸித்திக்கின்றன.இதற்கேஸ்வாமிவேண்டும்.அவரது ஸ்மரணையானபக்தி வேண்டும்என்கிறேன்
கொடுப்பவன் பகவானாக இருந்தாலும், அந்த பகவானே உபாயம் என்பதில் நமக்கு
உறுதியான எண்ணம் இருக்க வேண்டும் அல்லவா?
அந்த உறுதியான எண்ணத்தை, அதாவது உபாய நிஷ்டையை நமக்கு அருள்பவள் மஹாலக்ஷ்மி பிராட்டியார்தான் !
மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தால் பகவானிடம் உறுதியான பக்தி ஏற்பட்டு விட்டபிறகுநடப்பது
நடக்கட்டும் என்று
கவலை இல்லாமல் விச்ராந்தியாக இருந்துவிடலாம்.
இல்லையென்றால்,
கவலைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
ஒருவர் காலையில் எழுந்ததில் இருந்தே எதற்காவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார். அதேசமயத்தில்
பகவான் கிருஷ்ணர் அருளிய,
ஸர்வதர்மான் பரித்யஜ்ய
மாமேஹம் சரணம் வ்ரஜ
அஹம்த்வா ஸர்வபாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மாஸுச:
என்ற சுலோகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்.
’உன்னுடைய எல்லா பாவங்களில் இருந்தும்
உன்னை நான் விடுவிக்கிறேன். அப்படி இருக்க நீ ஏன் சோகப்படுகிறாய்?’
கிருஷ்ணர் அருளிய இந்த
முக்திக்கு வழிகாட்டி
ராம நாமம் ஒன்றுக்கே தாரக மந்திரம் என்கிற சிறப்புப் பெயர் உண்டு.தாரக என்ற சொல்லுக்கு படகு அல்லது மோட்சம் அளிக்க வல்லது என்று பொருள். ராம நாமத்தால் மட்டுமே இந்த சம்சார கடலிலிருந்து நம்மை கரை சேர்க்க முடியும் என்பதால், இது
தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது.
அனைத்து நாமங்களையும் உள்ளடக்கியது
ராம நாமத்தை ஜெபிப்பதாலேயே கடவுளின் ஆயிரம் நாமங்களை ஜெபிப்பதின் புண்ணியம் கிடைக்கிறது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த உண்மையை விளக்கி இருக்கிறார்.
(“சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே“)
தவறான உச்சரிப்பினால் பலன் குறையாது
வழிப்பறியில் ஈடுபட்ட ரத்னாகரன், ரிஷி நாரதரின் உபதேசத்தின் மூலம் வால்மீகி முனிவராக மாறி ஆதிகாவியமான இராமாயணத்தை எழுதினார். தன பாபச்சுமையால் ராம நாமத்தை சொல்ல முடியாததால் நாரதர் அவருக்கு (‘மரா மரா’) என்று