ராம் ராம்🙏
🕉️
இந்த கீச்சின் நோக்கம் யாரையும் குறை சொல்வதற்க்கோ, நம்முள்ளே பொதிந்துள்ள conscious bias அல்லது unconscious bias ஐ வெளிச்சம் போட்டு காட்டுவதற்க்கோ அல்லது, "எனக்கு எவ்வளவு தெரியும் பார்!" என்று அதிமேதாவித்தனத்தை உரைப்பதற்க்கோ அல்ல. 1/n
மாறாக,நம் வேதம் எவ்வளவு ஸனாதனமானது,அது எவ்வளவு சூக்ஷ்மார்த்தங்களை தன்னுள்ளே கொண்டது,போகிற போக்கில் பொருள் சொல்ல முடியா ஞான பொக்கிஷம் என்பதை உணர்த்த..
மன்னிக்கவும்..உணர(என்னையும் சேர்த்துத்தான்🙂)
ஸ்ரீ ருத்ரம்:
விலையுயர்ந்த ரத்னமொன்று நம்மிடமிருந்தால் வீட்டிலே எங்கே வைப்போம்?2/n
வாசலில் வைப்போமா? அல்லது தோட்டத்தில் வைப்போமா? ரொம்பவும் ஜாக்கிரதையாக வீடு மத்தியில் இருக்கிற அறையில் இரும்புப் பெட்டியில் தானே பாதுகாப்பாக வைப்போம்!
அப்படியே, வேதமம் தன் ஜீவரத்னத்தை,அது ரொம்பவும் ஜாக்கிரதைப்படுத்தி வைத்திருக்கிறது. 3/n
நான்கில் பாதி இரண்டு. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். யஜுஸிலேயே சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், என்று இரண்டு இருப்பதால் நான்கு வேதத்தை ஐந்து என்று ஆக்கினாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வம் என்ற ஐந்தில் நட்ட நடுவாக வருவது மூன்றாவதான க்ருஷ்ண யஜுர் வேதம் தான்.4/n
இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மொத்தம் 7 காண்டம். அதில் நடு அதன் 4ஆவது காண்டம். அதனின் மத்திய பகுதி 5ஆவது ப்ரச்னம். இதன் நடுவில் காணப்படுவது தான் "ஸ்ரீ ருத்ரம்".
இதற்குள்ளும் ஒரு நடுநாயகம் ஒன்று உண்டு. அது தான் பஞ்சாக்ஷர மந்த்ரம் என அடுக்குகிறார் மஹாபெரியவர்.5/n
ஸ்ரீ ருத்ரம் அல்லது ஸ்ரீருத்ர ப்ரஷ்னத்தில் இரண்டு பகுதிகள். ஒன்று நமகம், இன்னொன்று சமகம்.
ஈஸ்வரனை நமஸ்கரிப்பது "நமகம்". ஆதலால் தான் "நமோ", "நம:" என்ற பதங்கள் மிகுதியாய் காணப்படுகிறது.
அவரிடம் பிரார்த்தனை செய்வது "சமகம்". அதனால் தான் "ச மே" என்ற பதங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.6/n
பொதுவாக "ச" என்ற சொல்லுக்கு "மற்றும்","and"
"மே" என்ற சொல்லுக்கு "எனக்கு கொடு/அருள்" என்று பொருள்.
ஆக, "ச மே" என்ற பதத்திற்கு "எனக்கு இதுவும்/இதையும் கொடு/அருளு" ( "Let I be blessed with this/that " or "Let these be granted to me" ) என்று பொருள் சொல்கிறார்கள் வேத பண்டிதர்கள்.7/n
இங்கு ஒரு அழகான கேள்வி..
ஒருவர் தம்மை நமஸ்கரித்து இறைவனின் பாதாரவிந்தங்களில் ஶரணடைந்த பின், இன்னது வேண்டும் என்ற பிரார்த்தனையும் வேண்டுமோ ?
ஆக, சமகம் என்பது ஶரணாகதி அடைந்தவர்களுக்கு, ஈஸ்வரனின் க்ருபை இன்னது தான் என்று சொல்ல முடியா/எண்ண முடியா, "அருட்கொடையின், நிகரில்லாஅளவே!" 8/n
ஒருவரால் பகவானிடம் 15 நிமிடத்தில் எவ்வளவு நமஸ்காரங்கள் செய்ய முடியும் ?
மற்றும் இன்னொரு 10 நிமிடங்களில்இன்னவைகள் யாவும் வேண்டும் என்று அட்டவணை போட முடியும்?
பதில் :
நமகத்தில் "நம:" என்று 187 நமஸ்காரங்களும்,சமகத்தில் 347 பிரார்த்தனைகளும்/ஆசிகளும் ("ச மே") உள்ளன.9/n
சமகத்தில் உணவில் இருந்து ஆரம்பித்து, சராசரி வாழ்க்கைக்கு உண்டான பொருள்கள்/தேவைகள் மட்டும் அல்லாது.. இக,பர சௌபாக்யங்களுக்கு தேவையான புருஷார்த்தங்கள் (Spiritual goals)வரை வேண்டப்படுகிறது/அருளப்படுகிறது.
இவ்வற்றில் சொல்லாதது இவ்வுலகிலேயே இல்லை எனலாம். 10/n
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற முதுமொழிக்கு ஏற்ப சமகத்தில் உள்ள 11வது அனுவாகத்தின் (பகுதி) அர்த்தபுஷ்டியை அனுபவிக்க சற்றே ஆசை. 11/n
அனுவாகம்:
ஏகா॑ சமே(1)தி॒ஸ்ரஶ்ச॑ மே॒(3)பஞ்ச॑ ச மே(5) ஸ॒ப்த ச॑ மே॒(7)
நவ॑ சம॒(9) ஏகா॑த³ஶ ச மே॒(11)த்ரயோ॑த³ஶ ச மே॒(13) பஞ்ச॑த³ஶ ச மே(15)
இந்த அனுவாகம் முழுவதும் "ஒன்றை" கொடு, "மூன்றை" கொடு, "ஐந்தை" கொடு என்று ஆரம்பித்து பிறகு 7,9,11,13,15,17,19,21,23,25,27,29,31,33 என்று ஒற்றைப்படை எண்களுடன் தொடங்கி "நான்கை" கொடு,8,12,16,20,24,28,32,36,40,44,48 என்று நான்கு இலக்கம் எண்களுடன் முடிகிறது.15/n
ஒரு ஒற்றைப்படை எண்ணையும் இன்னொரு ஒற்றைப்படை எண்ணையும் கூட்டினால் ஒரு இரட்டைப்படை எண் வரும். (odd +odd =even number )
அது போலவே இரண்டு இரட்டைப்படை எண்களை கூட்டினால் இன்னொரு இரட்டைப்படை எண்ணே வரும். (even+even =even).
இதுவே இந்த பிரபஞ்ச ஸ்ருஷ்டியின் அடிப்படை!
16/n
இங்கு ஒற்றைஇலக்க எண் தேவதா மூர்த்திகளையும் இரட்டை இலக்க எண் மனுஷ்ய ஜென்மங்களையும் குறிக்கிறது.
அதாவது.. ஆரம்ப காலத்தில், மனித ஸ்ருஷ்டி தேவதைகளிடமிருந்தும் பின் மனிதர்களிடமிருந்து மனிதர்கள் தோன்றினார்கள் என்ற ப்ரபஞ்ச அவதார ரஹஸ்யத்தை இது உரைப்பதாய் கூறுகிறார்கள்.
17/n
சில அறிஞர்கள் இன்னும் ஒரு படி மேலே போய், இந்த ஒற்றை படை எண்கள் (1-33) (DNA மூலக்கூறின் அமைப்பில் உள்ள 33000 mitochondrial base pairs அடிப்படை ஜோடிகளைகுறிப்பிடுவதாய் சொல்கிறார்கள்.
இங்கு 33ஐ முப்பத்தி முக்கோடி தேவர்கள் என்று உணரலாம்.
18/n
இரட்டை இலக்க எண்கள் 48 லட்ச base pairகளை குறிப்பதாகவும்..அதாவது, மனித மரபணுவில் உள்ள மிகச்சிறிய குரோமோசோமான, குரோமோசோம் 21, சுமார் 48மில்லியன் அடிப்படை ஜோடிகளைக் கொண்டுள்ளது என்று இதைத்தான் அறிவியல் கூறுகிறது என்று உரைக்கின்றனர்.
இதை, இப்படியே நிறுத்தி வைப்போம்.
19/n
ஒரு கணக்கு புதிர் போடலாமா ?
சமகத்தில்,எப்படி சரியாக ஒரு எண்ணிற்கு பின் இன்னொரு எண் வந்தது ?
எப்படி ஒற்றைப்படை,இரட்டைப்படை வரிசையும் கூட்டுத்தொடராக ஆகுகிறது.
படத்தை பார்க்கவும்.
கடைசி இரண்டு நெடுவரிசைகள் (columns) தான் சமகத்தினுள் உள்ள 11வது அனுவாகத்தில் இடம்பெற்றுள்ளது.20/n
இப்படி, சமகத்தின் ஒற்றைப்படை எண் வரிசை (N+1)^ 2 - N^2 அல்லது 2N - 1 என்ற formula படி அமைந்துள்ளதையும், இரட்டை இலக்க எண்வரிசையோ ஒற்றை இலக்க என் வரிசைகளின் தொடர் கூட்டு வரிசையாக அமையப்பெற்றுள்ளது.
இது எதனைக் குறிக்கிறது ?
21/n
தர்ம, அர்த்த, காமங்களான நம் புருஷார்த்தங்களை அடைய முயலும் ஒவ்வொரு ஜீவனின் மோக்ஷ சாயுஜ்யத்தை நோக்கி செல்லும் பாதையாம்.. பிறப்பு,இறப்பு சுழற்சிகளின் பயனாய் நாம் எடுக்கும் பிறவிகளையே குறிக்கிறது. சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் ஒரு ஜென்மா படுகின்ற அவஸ்தையை சொல்லித்தான் மாளுமா ?
22/n
மேற்சொன்ன DNA Structure ஆகட்டும், அல்லது இந்த கணக்கு சூத்திரம் ஆகட்டும் இவை இரண்டும் சமகம் உணர்த்தும் ஷூக்ஷ்மார்தத்தின் ஒரு சிறு துளியே என்றால் அது மிகையில்லை.
23/n
சமகத்தின் ஒரு அத்யாயத்திற்கே நம் எட்டா அறிவிற்கு எட்டுவது ஒரு சிறு துளி என்றால், முழு சமக்கத்தின் பொருள் கூற யாரால் முடியும் ? வேதத்தின் மஹாத்ம்யத்தை யாரால் இன்னது தான் என சொல்ல இயலும் ?
24/n
இவ்வளவுஆழ்ந்த பொருள் பொதிந்த விஷயங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால் தான் இதை "மறை" என்று கூறினார்களோ !!?? அந்த பரப்ரும்மத்திற்கு தான் வெளிச்சம்!
இப்பேற்பட்ட வேதத்தை போகிற போக்கில் பொருள் சொல்லிவிட்டு போவது அல்லது இது இன்னது தான் என சிறுமைப் படுத்துவது எவ்வளவு பெரிய அநீதி,பாபம் ?
25/n
ஸ்ரீ பகவந்நாம போதேந்திராள், "அஷ்ரத்தா ஸ்ருதி" என்று இதைத்தான் தன் "நாமபராத தசத்தில்" சொல்லியுள்ளார்.அதாவது, வேதத்தை தூஷணை செய்வது, தவறாக திரித்து கூறுவது, அலட்சியப்படுத்துவது, சிறுமைபடுத்துவது போன்றவைகள் வேதத்திற்கு செய்யும் அபசாரம் மட்டும் அல்ல..
26/n
என்று நாம் தினமும் எளியதாய் சொல்கிறோமே "பகவந்நாமா" அதற்கு செய்யும் அபசாரம் என்று உரத்துக்கூறுகிறார்.
மேற்சொன்ன இவையாவும் இச்சிறியேனின் சொந்த சரக்கோ, நம் மூளையில் உதயமானதோ அல்ல.28/n
இவை யாவும் நாம் படித்து, நம் ஆச்சார்யர்கள் சொல்லி குடுத்து, நம் குடும்ப பூர்வகளின் அனுக்ரஹத்தால் ஏதோ உள்ளே சென்றவையின் ஒரு சிறு வெளிப்பாடே அன்றி வேறெதுவும் இல்லை. இதில் உள்ள நிறைகள் யாவும் அவர்களையே சாரும்.
பிழை, குறையேதும் இருந்தால் அவையாவும் என்னையே சாரும்.29/n
References : 1. From the classes of Swargeeya BhramaShri. Kannan Sastrigal and Bhramashri. Chandramouli Sastrigal 2. Shri Rudram, Sri Anna, Ramakrishna Mission 3. Chamaka Ghanam - @Ghanapaati Shri. Dr.K. Suresh
30/n
வேதங்கள்:
வேதம், உலகிலேயே முதன்முதலில் தோன்றிய இலக்கியம். இதன் மொழி, சமஸ்கிருதத்திற்கும் தாயான மொழி. எப்படி நம் மதத்திற்கு ஒரு பெயர் இல்லையோ, வேத மொழிக்கும் பெயர் இல்லை எனலாம். இதையே "வேதபாஷை" என்று பிற்காலங்களில் சுட்டுவதற்காக அழைக்கலானார்கள். #அத்யாத்மபாரதம் #ஆன்மீகஇந்தியா
வேதத்தின் காலமும் நிர்ணயம் செய்ய முடியாத ஒன்றே. அனாதியாய் காலம் கடந்து இருப்பது இதன் சிறப்பு.
எவ்வளவு இழுத்துப் பிடித்தாலும் எல்லா ஆராய்ச்சியாளர்களும் வந்து நிற்கும் இடம் கி.மு3000க்கும் மேல் தான்.
இவை யாவும் அனுமானமே அன்றி தீர்மானம் இல்லை. #அத்யாத்மபாரதம் #ஆன்மீகஇந்தியா
வேதம் ஒன்று தான். ஒரு காலத்தில் வேதத்தை முழுமையாக மனனம் செய்ய முடியாத நிலை வந்ததும், ரிஷிகள் யாவரும் ஈஸ்வரனை நோக்கி தவம் செய்ய, யாமே தோன்றி வேதத்தை பிரித்து தருகிறோம் என்று "கிருஷ்ண த்வைபாயணர்" எனும் வியாசராக பிறந்து நமக்கு பகுத்து கொடுத்தார். #அத்யாத்மபாரதம் #ஆன்மீகஇந்தியா