இந்திய சுதந்திர தியாகிகளில் 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரனார் மட்டுமே
அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!
அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!
ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!
வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை..
சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!
ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்.. ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது.
ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்து போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!
உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி..
அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.
சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும்.. இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை...
அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது..
அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை தடுத்துள்ளார்..
ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர்.. அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர்.. அதுவும் உச்சிவெயிலில்..
இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!
வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார்..
அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.
வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர்..
ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார்.. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம்.. இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!
அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...!
இதைவிட கொடுமை,
தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.
சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!
வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், 5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள்..
"எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர்.. லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!
ஆனால் அந்த பணத்தை காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம்.. "காந்தி கணக்கு" என்று நாம் சொல்கிறோமே..
அது இதுதான்! (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)
வஉசிக்கு இணையான ஒரு தியாகியோ, போர்க்குணமுள்ள ஒரு தலைவரோ இந்திய அரசியலிலேயே கிடையாது. ஆனாலும் சொந்த கட்சியில் உரிய மரியாதையை, அவர் இறந்தும்கூட தராதது வருந்தத்தக்கது..
சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பது கசப்பான உண்மை..!
உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!
பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு..!
இந்த தேசத்தின் தலைவராக உயர்ந்திருக்க கூடியவர் வஉசி.. ஆனால், வஉசியின் வரலாற்றை மறைத்துவிட்டு வாஞ்சிநாதனை பிரதானப்படுத்த காரணம் என்ன?
1806-ல் வேலூர் புரட்சியை அலட்சியப்படுத்திவிட்டு, 1857-ல் வந்த சிப்பாய் கலகத்தை பெரிதுபடுத்த காரணம் என்ன?
ஒன்று மட்டும் விளங்குகிறது.. எப்பேர்ப்பட்ட தியாகத்தையே செய்திருந்தாலும், அதை தீர்மானிப்பது இந்திய அரசியலின் "சாதி" தான்..!
இனியாகிலும் "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!
தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்..!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
” அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராயிருந்து நடத்திய கிளர்ச்சியின் போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக்கொண்டிருந்தேன். அவரையும் அவர் போன்றோரையும் கண்டே பொதுத்தொண்டில் இறங்கினேன்” – என்று சொன்னவர் பெரியார்.
அவர், அவர் என்று சொன்னது வ.உ,சி.யைத் தான்!
அத்தகைய பெருந்தலைவராம் வ.உ.சி., பெரியார் படத்துக்கு தேங்காய் உடைத்து விழுந்து வழங்கினார். பெரியாரையே பெருந்தியாகி என்றார். இவருக்கும் இடையிலான நட்பு என்பது கொள்கையைத் தாண்டிய அன்பு உறவாக இருந்துள்ளது.
கேரளாவில் நடந்த மாப்ள கலகத்த , அலங்கார ஊர்தியை #tablaue#RepublicDay-வில் காட்சிபடுத்துவதற்கும் தடை
விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமலே வரலாற்றை மறைத்து
சங்கிகளுக்கு மட்டுமமே தேசபக்தி இருப்பது போல் வேஷம் போட சதி செய்வது அம்பலம் 🙄
கேராளாவின் மலபார் பகுதியில் 1921-ம் ஆண்டு உள்ளூர் நில பிரபுக்களுக்கு எதிராகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் அங்குள்ள முஸ்லிம்கள் போராட்டம் நடத்த துவங்கினார்கள். சிறியதாக ஆரம்பித்த இந்த போராட்டம் பின்னர் பேரும் கலகத்தை உண்டாக்கி அடக்குமுறைக்கு எதிரான குரலை உயர்த்தி போராட வைத்தது
இந்த கலவரம் 'மாப்ளா கலவரம்' என்று அழைக்கப்படுகிறது. 1971-ம் ஆண்டில், கேரள அரசு இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று அங்கீகரித்தது.
சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக வேலை பார்த்த கா. நமச்சிவாயம் (முதலியார்) அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.81 ஆகவும், அதே நேரத்தில்
அக்கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக வேலை பார்த்த குப்புசாமி சாஸ்த்திரிக்கு மாதச் சம்பளம் ரூ. 300 ஆகவும் இருந்த கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் தனது குடி அரசில் எழுத, அதன் அடிப்படையில் நீதிக்கட்சி ஆட்சியில் முதலமைச்சராக
இருந்த பனகல் அரசர் அந்த வேறுபாட்டை நீக்கி உத்தரவு பிறப்பித்தார் என்பது கடந்த கால வரலாறு.
“இராமலிங்க அடிகள் வரலாறு” என்ற நூலை எழுதியவர் சன்மார்க்க தேசிகன் என்னும் ஊரன் அடிகளார் ஆவார். இந்த வாழ்க்கை வரலாற்றிலே சுவையான செய்தி ஒன்று சுட்டிக்காட்டப் படுகிறது.
இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய #சிறிய_கவுனில் இருக்கிறேன்.!
என் #வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!!
என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு #படுக்கையில் கிடக்கிறேன்.
பெரியார் எதிர்ப்பாளர்களின் கருத்தும்; உண்மையும்...
இன்றைய காலகட்டத்தில் இந்து சனாதனத்தை நிறுவ சனநாயகத்தை படுகொலை செய்துகொண்டிருக்கிறார்கள். தனிப்பெரும்பான்மை செருக்கு அவர்களுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும் அரணாகவும், அவர்களின் நோக்கத்தை சீர்குலைக்கும் தத்துவமாகவும் இருப்பது பெரியார்தான். பெரியார் இருந்த காலத்திலேயே அவரை நேரடியாக தாக்கினர், அவரின் கருத்தை மூர்க்கமாக எதிர்த்தனர், வசை பாடினர். மறைந்த பிறகும் அது தொடர்ந்தது.
பெரியார் என்ற தத்துவம் மட்டுமல்ல, பெரியார் என்ற பெயரே இருக்கக்கூடாது என பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற வெளிப்படையான அமைப்புகளும், நபர்களும் கூடவே நடுநிலை போர்வையிலிருக்கும் வலதுசாரி ஆதரவாளர்களும் நினைக்கின்றனர். அதற்கு தீவிரமாக முயற்சியும் செய்கிறார்கள்.