ஜாதியப் படிநிலையும் பாலினப் படிநிலையும் பார்ப்பனிய சமூக அடுக்குமுறை உருவாக துணையாக இருந்தன. இந்த சமூக அமைப்புதான் பார்ப்பனிய ஆணாதிக்கம்!
1/n
தந்தைவழி வாரிசுமுறையைக் (Patrilineal Succession) காக்கவும், ஜாதிய உணர்வை வளர்க்கவும் பெண்கள் மீது பாலியல் ரீதியான கட்டுப்பாடுகளை விதிக்க, இந்தப் பார்ப்பனிய ஆணாதிக்கம் உதவுகிறது.
2/n
பார்ப்பனிய ஆணாதிக்கம் எவற்றைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது?
1. தந்தைவழி வாரிசுமுறை: ஒரு சாதிக்குள் ஆண்கள் மட்டுமே செல்வத்தையும் சமூக அந்தஸ்தையும் பெறுவதற்கான நடைமுறை.
3/n
3. திருமணம்: பெண்களின் இனப்பெருக்கத் திறனைக் கட்டுப்படுத்த உயர்சாதி ஆண்களுக்கு உதவும் ஒரு நிறுவனம், ஜாதியப் படிநிலையில் கீழிறக்கப்பட்ட ஆண்கள் இந்தப் பெண்களிடம் பாலியல் அணுகலைப் பெற முடியாது.
5/n
4. பெண்கள் வெளியில் செல்வதைத் தடுத்தல், வீட்டிற்குள்ளேயே அடங்கியிருக்கச் செய்தல்.
6/n
5. பாலின படிநிலை: பாலின சமத்துவமற்ற சூழலை உருவாக்கி ஆண்களுக்குப் பெண்களை அடிமையாக்குதல்.
7/n
6. சொத்துகளின் மீதான குடும்பத்தின் பிடிமானத்தை இழக்காமலிருக்க குழந்தை பெற்றுக்கொள்ளுதல்.
8/n
7. பெண்கள், குழந்தைகளைப் பெற்ற பிறகு, அவர்களைப் பேணிக்காத்தல், வளர்த்தல், தந்தைவழி குடும்ப நடைமுறையை பாதுகாத்தல்.
9/n
8. ஒருவன் தன் மனைவியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஜாதிய நிலையைப் பேணிக்காத்தல்.
10/n
9. உடலுழைப்புப் பணிகளில் ஜாதிய படிநிலையில் கீழிருப்பவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களை இனப்பெருக்கம் மற்றும் பொருள் வளங்களைப் பெறுதலிலிருந்து விலக்குதல்.
11/n
10. சடங்கு/சாதி தூய்மை: சமூக நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கான வெகுமதியாக அடையப்படும் ஒரு உயர்ந்த ஆன்மீக நிலை (இந்த விதிமுறைகள் பெண்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒடுக்குகின்றன).
12/n
11. பெண்களின் பொருளாதார சார்பு:
பெண்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படாமலிருத்தல் அல்லது ஊதியம் வழங்கப்படாத வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துதல்.
13/n
12. பெண்களைக் கட்டுப்படுத்த மத நூல்களிலிலேயே பரிந்துரைக்கப்படும் வன்முறை.
14/n
13. பெண் தூய்மை (ஸ்திரீதர்மம்):
பெண்கள் விரும்பத்தக்கவர்களாக இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைப் பெண்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைக் கீழ்படியவைத்தல்.
15/n
14. சமூக மரியாதை:
ஜாதி மற்றும் பாலின நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது சமூகத்தில் ஒருவரின் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் என்ற எண்ணம்.
16/n
15. ஜாதியப் படிநிலை: வெவ்வேறு மக்கள் குழுக்களுக்கிடையே வர்ணாசிரம அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பித்து, செல்வவளங்களை உயர் ஜாதியினரிடமே நிலைபெறச்செய்தல்.
17/n
பார்ப்பனிய ஆணாதிக்கத்தின் அடித்தளம் பெண்களையும் தாழ்த்தப்பட்ட ஜாதியினரையும் கூட்டாக அடிபணிய வைப்பது, இதனால் உயர்ஜாதி ஆண்கள் செல்வம் மற்றும் உழைப்பு இரண்டையும் கட்டுப்படுத்துவது.
18/n
மேற்கண்டவை, வரலாற்றாசிரியர் உமா சக்ரவர்த்தியின் ” Conceptualising Brahmanical Patriarchy in Early India - Gender, Caste, Class and State” என்ற கட்டுரையிலிருக்கும் கருத்துகளில் சில...
சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களும், சீனா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இணைந்து இந்த ஆய்வைச் செய்துள்ளனர்.
2/4
Geosystems and Geoenvironment என்னும் ஒரு சர்வதேச பல்துறை இதழில் இந்த ஆய்வு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.