பெரியார் | அம்பேத்கர் | அண்ணா | இசை | தமிழி
🖤 பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்கும் 🖤
Jan 22, 2022 • 21 tweets • 3 min read
ஜாதியப் படிநிலையும் பாலினப் படிநிலையும் பார்ப்பனிய சமூக அடுக்குமுறை உருவாக துணையாக இருந்தன. இந்த சமூக அமைப்புதான் பார்ப்பனிய ஆணாதிக்கம்!
1/n
தந்தைவழி வாரிசுமுறையைக் (Patrilineal Succession) காக்கவும், ஜாதிய உணர்வை வளர்க்கவும் பெண்கள் மீது பாலியல் ரீதியான கட்டுப்பாடுகளை விதிக்க, இந்தப் பார்ப்பனிய ஆணாதிக்கம் உதவுகிறது.
2/n
Jan 21, 2022 • 4 tweets • 2 min read
கீழடியில் ஏறத்தாழ 7000 ஆண்டுகள் (கிமு 5359) பழமையான படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அகரத்தில் கீழடிக்கும் முந்தைய (கிமு 5627) காலத்தைச் சேர்ந்த ”எரிந்த” எலும்புத்துண்டுகள் கிடைத்துள்ளன.
#கீழடி
1/4
சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களும், சீனா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இணைந்து இந்த ஆய்வைச் செய்துள்ளனர்.
2/4