(எத்தனையோ மஹான்கள். அனைவருக்கும்
என் வணக்கங்கள் இது தான் அர்த்தம்)
பக்தி செய்வதில் பலவகை இருக்கிறது. இசையால் பக்தி
செய்வது அதில் ஒரு வகை.
ராமபக்திக்கு தியாகய்யர்
மிகச்சிறந்த உதாரணம். அதனால்
தான் இறைவன்
அவருக்கு தரிசனம்
தந்ததாக சொல்வார்கள்.
தியாகராஜரின் கீர்த்தனைகள் அனைத்தும் தெலுங்கில் இருந்தாலும் அவை தமிழர்கள் உட்பட அனைவராலும் ரசித்துக் கொண்டாடப்படுவதற்கான காரணம் அதிலுள்ள உணர்வுபூர்வமான பக்திரசம்தான். அப்பாடல்களில் இருக்கும் உயிரோட்டம், கேட்பவர்களின் ஆன்மாவுடன் கலந்து
வாழும் விருப்பத்தை அதிகரிக்கிறது.
இக்கீர்த்தனைகள் இறைவன் புகழைப் பாடுவதால் அனைவருக்கும் உரிமை உடையதாக நினைக்கிறார்கள். தனக்கு உரிமையானது என்பதால் நினைவில் நிரந்தர இடம் அளிக்கிறார்கள். அதிலும் பஞ்சரத்ன கீர்த்தனைகளில் உள்ள ‘எந்தரோ மகானுபாவுலு’ வாழ்வில் ஒரு முறை கேட்டுவிட்டால்,
அது உயிரோடு ஒட்டிக் கொண்டுவிடுகிறது.
இவருக்குச் சிறுவயதிலேயே ‘ராமநாம மந்திரம்’ அவரது தந்தை மூலம் உபதேசம் ஆனது. அவரது தந்தை குலவழியில் தான் பூஜித்து வந்த ஸ்ரீராம, சீதா, லஷ்மண, ஆஞ்சநேய சிலாரூபங்களை தியாகராஜரிடம் கொடுத்து தினமும் பூஜித்து வருமாறு கூறினாராம். நாள்தவறாமல் இதனைப்
பூஜித்து வந்த தியாகராஜர், இந்த தெய்வங்களை நேரில் காண விரும்பினார். ராமருடன் நேரடியாகப் பேசுவது போல பல கீர்த்தனைகளை இயற்றிய இவர், அந்த உரிமையில் ஒப்பந்தம் ஒன்றினை ராமருடன் போட்டுக் கொள்கிறார்.
ராம தரிசனம் !
கோடி ராமநாமம் ஜபித்து முடித்தால் தரிசனம் தர வேண்டும் என்பதே அந்த
ஒப்பந்தம். ஒரு நாள் மதியஉணவு உண்ண, தலைவாழை இலையின் முன் ‘ராமா’ என்று சொல்லிய வண்ணம் அமர்கிறார் தியாகராஜர். அப்போது ஜகத்ஜோதியாய் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தியாகராஜர் முன் தோன்றினார்களாம்.
திகைத்துப் போன தியாகராஜர், “தொன்னூற்றாறு லட்சம் ராம நாமம்தானே
ஜபித்து முடித்து இருக்கிறேன். ஒப்பந்தப்படி இன்னும் ஒரு கோடி முடியவில்லையே” என்று ராமரிடமே கேட்டாராம். அதற்கு ராமர், உட்காரும்போதும் எழும்போதும் ‘ராமா’ என்பாயே அதையெல்லாம் சேர்த்தால் ஒரு கோடி ஆகிவிட்டது. அதனால் நேரடியாக காட்சி அளிக்க வந்தேன் என்றாராம்.
ராமனை மனதில் வைத்து
சங்கீதம்
எனும் மலரால் துதித்திருக்கிறார்.
அந்த ராம பக்தனுக்கு மனமார்ந்த
அஞ்சலிகள்.....
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மனபயம் அச்சம் தீர்க்க லட்சுமி நரசிம்மர் வழிபாடு!!!ருணம் எனும் கடன் ரோகம் எனப்படும் வியாதிகள்
தீராத பிரச்னைகள், செவ்வாய் தோஷம் பிரச்சனைகள் தீரும் !
கடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு!!!
🪔🌺🙌🙏 "லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே " 🪔🌺🙌🙏
கடன் தொல்லையால்
அவதிபடுபவர்கள் இந்த வழிபாட்டை செய்து வந்தால் பலன் அடையலாம்.
கடன்பட்டார் நெஞ்சத்தை உவமையாக கம்பர் ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன்தொல்லையில் இருந்து மீள ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.
இந்த துதி சமஸ்கிருதத்தில் இருப்பதால், படிக்க இயலாதவர்களுக்கு எளிமையான பரிகாரம் இருக்கிறது.
"லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே "
என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை பாராயணம் செய்யவேண்டும்.
அப்போது லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் (எலுமிச்சை சாறு,
காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா. அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது, அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால், அவர்களுக்கு
அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார்.
அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு ' *தேவதாரு மரம்* '.
அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான *"தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம்*", போன்ற அனைத்தும் '
*திருத்தோடகன்* ' என்னும் பொற்கொல்லரால் பிரத்தியேகமாக அகத்தியருக்காக செய்து கொடுக்கப்பட்டது.
அகத்தியர் அணிந்திருக்கும் பூணூலானது, விபூதி கலந்த ஒரு நிறத்தில் இருக்கும். இதன் பெயர் ' *திரிபூரணம்* ' என்பதாகும். இது *கௌதம முனிவரால்* கொடுக்கப்பட்டது.
ஸ்ரீகூரத்தாழ்வான் 1013ஆவது திருநட்சித்திரம்,தை ஹஸ்தம் இன்று
(23/01/2022)-பதிவு -3/3
🙏🌻🌼🌷🌺🙏
அண்ணலும் இளவலும்!!!
🎖👍☝️🖕👏👌🏅
இன்று (23/01/2022) தை ஹஸ்தம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமியின் 1013 ஆவது திருநட்சித்திரம்.ராமானுஜரை விட 8 ஆண்டுகள் மூத்தவரான கூரத்தாழ்வான்
ஸ்ரீராமபிரானின் அம்சமாக அவதரித்தார் என்பர்.
ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்த ராமானுஜர் திரேதாயுகத்தில்,
இளையபெருமாள் லட்சுமணராக
அவதரித்தார்.அப்போது ராம கைங்கர் யமே பிரதானம் என்று வாழ்ந்தார்.
அவர் செய்த கைங்கர்யங்களுக்கு
(சேவை) எதைக் கொடுத்தாலும்
ஈடாகாது என்று உணர்ந்த ராமர்,தாமே
மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து, லட்சமணராகத் தோன்றும், அவதார
புருஷருக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று சங்கல்பித்துக்
கொண்டார்.அந்த வகையில் கலியுகத்தில் 1017ஆம் ஆண்டில் அவதரிக்கப்போகும் ராமானுஜருக்குச் சேவை புரிவதற்காக,1009 ஆம் ஆண்டிலேயே,கூரேசர் ஆக,
காஞ்சிபுரத்துக்கு
நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள்.
தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா
பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.
சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக்
கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து
ஃ பணம் , பதவி, அதிகாரத்தை காந்தம் போல் இழுக்கும் சூரியகாந்தக் கல் :-
ஃ நவகிரகங்களில் முழுமுதற் கிரகமான சூரிய பகவான் மட்டும் நமக்கு பலமாக இருந்து விட்டால் போதும் மற்ற 8 கிரகங்களின் பாதிப்புகள், கெடு பலன்கள் நம்மை அண்டாது. நம்முடைய
முன்னோர்கள் ஆதிகாலம் முதலே கண்கண்ட தெய்வமாக சூரிய பகவானை வணங்கினர் ஏனெனில் சூரியனும்- சிவனும்- பெருமாளும் ஒன்று இதனால் தான் சிவசூரிய நாராயணன் என சொல்கிறோம். இத்தகைய சக்திவாய்ந்த சூரிய பகவானின் ஆதிக்கம் நிறைந்த சூரியகாந்த கல்லை கையில் பிரேஸ்லெட்டாகவோ , கழுத்தில் மணிமாலையாகவோ
அணிந்து கொள்ள சூரியனை போல பவர் கிட்டும். அரசு வேலைக்காக காத்திருப்போர், அரசியலில் சாதிக்க நினைப்பவர்கள், அணிந்து கொள்ள அரசு, அரசியலில் வெற்றி பெறுவது 100% உறுதி. இதை அணிபவர்களின் நவகிரக தோசங்கள், வறுமை, கடன் பிரச்சனைகள் நீங்கி பணம், பதவி , அதிகாரத்தை ஈர்த்து கொடுக்கும்