ஸ்ரீகூரத்தாழ்வான் 1013ஆவது திருநட்சித்திரம்,தை ஹஸ்தம் இன்று
(23/01/2022)-பதிவு -3/3
🙏🌻🌼🌷🌺🙏
அண்ணலும் இளவலும்!!!
🎖👍☝️🖕👏👌🏅
இன்று (23/01/2022) தை ஹஸ்தம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமியின் 1013 ஆவது திருநட்சித்திரம்.ராமானுஜரை விட 8 ஆண்டுகள் மூத்தவரான கூரத்தாழ்வான்
ஸ்ரீராமபிரானின் அம்சமாக அவதரித்தார் என்பர்.
ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்த ராமானுஜர் திரேதாயுகத்தில்,
இளையபெருமாள் லட்சுமணராக
அவதரித்தார்.அப்போது ராம கைங்கர் யமே பிரதானம் என்று வாழ்ந்தார்.
அவர் செய்த கைங்கர்யங்களுக்கு
(சேவை) எதைக் கொடுத்தாலும்
ஈடாகாது என்று உணர்ந்த ராமர்,தாமே
மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து, லட்சமணராகத் தோன்றும், அவதார
புருஷருக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று சங்கல்பித்துக்
கொண்டார்.அந்த வகையில் கலியுகத்தில் 1017ஆம் ஆண்டில் அவதரிக்கப்போகும் ராமானுஜருக்குச் சேவை புரிவதற்காக,1009 ஆம் ஆண்டிலேயே,கூரேசர் ஆக,
காஞ்சிபுரத்துக்கு
அருகிலுள்ள கூரம் என்னும் ஊரில் அவதரித்தார்.மூத்தவ ராக இருந்தாலும்,ராமாநுஜருக்குக் கைங்கர்யம்செய்வதற்காகவே தோன்றியதால்,இவரை 'இளவல்'
ஆகவும்,அவரை 'அண்ணல்'ஆகவும் கொண்டோம். ராமாயண இளவல் லட்சுமணரின் கைங்கர்யங்களை,ராம கைங்கர்யங்களாகக் கூரேசர் எப்படி ஆற்றினார் என்பது பற்றிப் பார்ப்போம்!!
1.இணைபிரியாத இளவல்கள் :
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
தசரதரின் நான்கு குழந்தைகளையும்,
தனித்தனியாகத் தங்கத்தொட்டிலில் இட்டபோது,குழந்தைகள் அழுது கொண்டே இருந்தனவாம்.இரண்டிரண்டு குழந்தைகளை ஒரே தொட்டிலில்இட்ட போதும் அழுதன.வசிஷ்டரின் ஆலோசனைப்படி ராமரையும்,
லட்சமணரையும் ஒரே தொட்டிலில்
இட்ட போது அவர்கள் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்களாம் !
கைகேயி,சொன்ன தசரதரின் ஆணைக்கேற்ப ராமர் கானகம் செல்ல மரவுரி தரித்து வெளியே வர,லட்சுமணர் ஏற்கனவே மரவுரி தரித்துக்கொண்டு வில்/அம்புடன் தயாராக இருந்தாராம்.
ராமருடன் கானகம் சென்ற லட்சுமணர் சீதா,ராமர்களுடன் எப்பொழுதும்
இருந்து,
அனைத்துக் கைங்கர்யங்களையும் செய்து வந்தார்.இராவண வதம் முடிந்து அயோத்யா திரும்பி,11000 ஆண்டுகள் ராம ராஜ்யத்திலும் தொண்டு
புரிந்தார்.ராமர் வைகுண்டம் செல்வதற்கு சில காலம் முன்(அதுவும் ராமர் ஆணைப்
படி) லட்சுமணர் வைகுண்டம் புகுந்தார்.
கூரத்து 'ஆழ்வான்', சிறு வயதில்
இருந்தே
ராமாநுஜருடன் தொடர்பு கொண்டு பல சாஸ்திர அர்த்தங்களைத் தெரிந்து கொண்டிருந்தார்.காஞ்சியில் இளையாழ்வார்,துறவு பூண்டு எதிராஜராக மலர்ந்த நாளில் அவரது முதல் சீடராகச் சென்றார்.
முதலியாண்டான் ஸ்வாமியும் அப்போது
சீடரானார்.பின்னர் பல ஆண்டுகள் ராமாநுஜர் எங்கெங்கு சென்றாலும் அவருடன்
சென்று, உற்ற கைங்கர்யங்க ளை உவந்து செய்து கொண்டிருந்தார்.
ஆழ்வான், அவரது 110 ஆவது வயதில் பரமபதம் எய்தும் வரை,(ராமாநுஜர் 12 ஆண்டுகள் மேல்கோட்டை சென்ற காலம் நீங்கலாக), அவரோடேயே இருந்து கைங்கர்யங்கள் யாவும் செய்து வந்தார்.
(நாசிக்) பஞ்சவடியில் சீதா,ராமர்களுக்கு பர்ணசாலை அமைக்கும்முன்,அண்ணல் ராமரிடம், ஒவ்வொன்றையும் ஆலோசித்து அனுமதி பெற்றே அமைத்தார்.பர்ணசாலை கட்டி முடித்தவுடன் ராமரை,அழைத்துச்சென்று
காண்பித்தார்.அங்கு ராமர் சொல்லாத, ஒரு அற்புதமான அறையும் இருந்தது.
ராமரும்,சீதையும் ஏகாந்தமாகஅமர்ந்து
உரையாடுவதற்காக அந்த அறையை அமைத்திருந்தார்.அப்படி ஒரு அறை வேண்டும் என்று ராமர் எண்ணிய போதும், அதை லட்சுமணரிடம்
சொல்லத் தயங்கினார்.ஆனால் அவர் திருவுள்ளம் அறிந்து அமைத்த பாங்கைப் போற்றி மகிழ்ந்தார் ராமர்.
ஆழ்வானும்,உடையவரும் காஷ்மீர் சரஸ்வதி பண்டாரம் சென்றனர்-பிரம்மசூத்திரத்திற்கா
ன போதாயனவிருத்தி கிரந்தம் என்னும் உரைநூலைப்(ஓலைச்சுவடி) பெற்று
"ஸ்ரீபாஷ்யம்"எழுத.காஷ்மீர் மன்னர் மூலம் அந்தச் சுவடிகளைப் பெற்றாலும்,
அங்கிருந்த பண்டிதர்கள், இவர்கள் திரும்புகையில் வழி மறித்து சுவடிகளை,அபகரித்துச்சென்று விட்டனர்.
ஸ்ரீபாஷ்யம் எழுத முடியாமல் போய் விடுமோ என்று
உடையவர் பெரிதும் கவலைப் பட்டார்.உடனே ஆழ்வான் அவரிடம், "ஸ்வாமி,அடியேன் அந்தச் சுவடிகளில் இருந்த உரைகள் யாவற்றையும்,தேவரீர் உறங்கிய பின், படித்துப் பார்த்து நெஞ்சில்
வைத்துள்ளேன்.அவை அனைத்தையும் இங்கு இப்போதே சொல்லவா?
இரண்டாற்றின் இடையே சொல்லவா?(காவிரி ஆற்றுக்கும்,கொள்ளிடம்
காஞ்சியிலிருந்து ஆழ்வான்,ஆண்டானு
டன் ஸ்ரீரங்கம் வந்த உடையவர்,
பெரிய கோவில் நிர்வாகத்தை பாஞ்சராத்ர முறைப்படி,சிறப்பாக
சீரமைக்க விழைந்தார்.ஆனால் கோவில் நிர்வாகத்தைக் கவனித்து வந்த பெரிய கோவில் நம்பி என்பவர் உடையவரின் முயற்சிக்கு ஒத்துழைக்கவில்லை.
அந்தச்சூழ்நிலையில் பெரிய கோவில் நம்பியின் தாயார் காலமாகிவிட்டார்.
அவருடைய 11 ஆவது நாள் கிரியையில் பங்கேற்றுப் பிரசாதம் பெற்றுக்கொள்ள ஒரு தகுதியான
ஸ்ரீவைஷ்ணவர் தேவைப்
ப்பட்டார்.உடையவரின் சீடர்களாக நிறைய ஸ்ரீவைஷ்ணவர்கள் இருந்ததால்,
அவர்களில் ஒருவரை அனுப்புமாறு,
உடையவரைக் கேட்டுக் கொண்டார்.
உடையவரிடம் 12000 சீடர்களும்,700 சந்யாசிகளும் இருந்த போதும்
,தம்முடைய மனத்துக்கு இனிய,
முதல்,பிரதான சீடரான ஆழ்வானை அனுப்பினார்.இந்த
மாதிரிக் கிரியைகளில் பங்கேற்றுப் பிரசாதம் பெறப் பெரும்பாலானோர் தயங்குவர்.
அப்படியிருக்க உடையவரின் அந்தரங்க சீடரான தம்மை அனுப்புவதின் நோக்கம் உணர்ந்த ஆழ்வான், உவகையுடன் சென்றார். பிரசாதம் ஸ்வீகரித்தபின்,
நம்பி, ஆழ்வானுக்குப் பொன்னும்,
பொருளும் நிறையக் கொடுத்து,
"திருப்தியோஸ்மி?
(திருப்தியா)"
என்று கேட்டார்.ஆழ்வான் "அதிருப்தியோஸ்மி!(திருப்தி இல்லை)என்றார்.திடுக்கிட்ட நம்பி
"உம் திருப்திக்கு என்ன வேண்டுமானாலும் கேளும் தருகிறேன்"
என்றார்.ஆழ்வான் பெரிய கோவில் நிர்வாகப் பொறுப்பையும்,
சாவியையும் கேட்டார்.புரிந்து கொண்ட நம்பி, தந்தோம் என்றுகூறி,
கோவில் சாவியையும் தந்துவிட்டார். திருப்தியடைந்த ஆழ்வான், கிடைத்த
பொன்னையும்,பொருளையும் காவிரியில் வீசிவிட்டு,கோவில் சாவிக்கொத்தை உடையவரிடம்
சேர்ப்பித்து விட்டார்!!!.அந்தப் பெரிய கோவில் நம்பி தான், இராமானுச நூற்றந்தாதி பாடிய திருவரங்கத்து அமுதனார்!அவர் உடையவர் நியமனப்படி,
ஆழ்வானையே ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்.
3.ஆலோசனை வழங்கிய அமைச்சர்கள்!
☝️👉☝️👉
அண்ணல் 'இட்ட வழக்காக' இருந்து அவர் உகந்தவண்ணம் கைங்கர்யம் செய்து வந்த அடியார்கள்,அமைச்சர்களான நிகழ்வுகளும் உண்டு.
மாரீசன் பொய்மான், என்று ராமரைத் தடுத்தார், இளைய பெருமாள்.(அவர் சொல்லைக்
கேட்டிருந்தால் நல்லது தான்.
ஆனால் அவதார நோக்கம்-ராவண வதம் நடக்காதே!). ராமரை நாட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த பரதனையும், சரணடைய வந்த விபீஷணரையும்
முதலில் சந்தேகப்பட்டுப் பேசிய லட்சுமணர் பின்னர் ராமர் சொல்லப்,புரிந்து கொண்டார்.
ஸ்ரீரங்கம் கோவிலில், ராமாநுஜர் தாம் நினைத்தவாறு,
சீர்திருத்தம் செய்ய முடியவில்லையே என்னும் விரக்தியில்,காஞ்சிக்குத் திரும்பி விடலாம் என்று ஆழ்வானிடம் கூறினார். ஆழ்வான் சிறிது பொறுக்கவும்;
கோவில் நிர்வாகி, பெரிய கோவில் நம்பியையும் திருத்த முடியும் என்று நம்புவதாகக் கூறினார்.(பின் நடந்தவை குறிப்பு 2ல்).ஸ்ரீ பாஷ்யத்தை
ராமாநுஜர்
சொல்லச் சொல்ல,ஆழ்வான் எழுதி(பட்டோலைப்படுத்தி) வந்தார்.
அப்படி எழுதி வரும்போது, ஓரிடத்தில் உடையவர் பக்தியை-சேஷத்வத்தை- விட,ஞானமே பிரதானம் என்றார்.
ஆழ்வான் அதை ஒத்துக் கொள்ளாமல், எழுதுவதை நிறுத்திவிட்டார்.
தாம்சொன்னதை எழுதாததால், ஆழ்வானை வெளியேறுமாறு கூறிவிட்டார் உடையவர்.வெளியே
வந்த ஆழ்வான் திண்ணையில் இரண்டு நாட்கள் காத்திருந்தார். தெருவில் போவோர் "உடையவர் உம்மைக் இப்படிப்
போகச் சொல்லி விட்டாரே",என்று கேலியாகப்பேச,"அடியேனின் ஆசார்யர் இட்ட வழக்காக இருப்பதே சொரூபம்"
என்றுரைத்து அவர்களை அடக்கினார்.
பின்னர் உடையவரே,தாம் சொன்னது தவறு, என்று உணர்ந்து,
ஆழ்வானை உள்ளே அழைத்து,பக்தியே பிரதானம் என்று எழுதச் சொன்னார்!!
ஸ்ரீபாஷ்யம் தொடர்ந்தது.
4.இளவலை அவயத்து முந்தி
இருத்திய,அண்ணல்!!
🖕👌👍👏
கானகத்தில் பட்சிராஜா ஜடாயுவைச் சந்தித்த போது,அவர் ராம சகோதரர்
களை யார் என்று வினவ,ராமர் கண்ணசைவில் லட்சுமணர் தாங்கள் யார்,
குடிப்பிறப்பு, வம்சம் எல்லாம் சிறப்பாகச் சொன்னார்.கேட்ட ஜடாயுவும்,
ராமரும் பெரிதும் உகந்தனர்.
கிஷ்கிந்தா நாட்டின்அமைச்சர்,
இளைய திருவடி ஆஞ்சநேயரை,
ரிஷ்யமுகபர்வதத்தில் எதிர்
கொண்ட போதும்,லட்சுமணரே தங்களை அறிமுகப்படுத்தினார். லட்சுமணரின் சொல்/பொருள்வளம்,சொல்லின் செல்வர் அநுமரே,
வியக்கும் வண்ணம் இருந்தது.
உடையவரும்,ஆழ்வானும் பல இடங்களுக்கு/அவைகளுக்கு ஒன்றாகச் சென்றிருந்தாலும்,பணிவே வடிவெடுத்த
ஆழ்வான் எங்கும்,எந்த நிலையிலும் முன்னால் வரமாட்டார்.ஆழ்வான் மேன்மை அவயம் அறிய வேண்டியே
நடந்தது போல,உடையவர் மேல்கோட்டை சென்றதும், ஆழ்வான் சோழமன்னன் அரசவைக்குச்
சென்றதும் இருந்தது எனலாம்! சோழன் அரசவைக்கு,
உடையவர் போலக் காஷாயம் உடுத்தி வந்த ஆழ்வான் எம்பெருமான் பரத்வம்/எம்பெருமானாரின் மேன்மையை நிலைநாட்ட தம் கண்களையே இழந்தார்.
மிக முக்கியமாக,ஸ்ரீமந்நாராயணனே
பரமாத்மா-அவருக்கு மேல் ஓர் தெய்வம் இல்லை என்பதை ஆழ்வான் பல்வேறு பிரமாணங்களை-வேதம்/
உபநிஷத்/திவ்யப் பிரபந்தங்களிலிருந்து,எடுத்து வைத்து நிலைநாட்டினார்.அந்த உரையே ஒரு மிகச் சிறந்தபிரமாணமாக அமைந்தது. உடையவரைப் பிரிந்து இருந்த அந்தக் காலத்தில் தான், ஆழ்வான் பஞ்ச ஸ்தவங்கள், என்று போற்றப்படும் ஐந்து கிரந்தங்களை இயற்றினார்.
ஆழ்வான் பிரார்த்தனையை ஏற்று,பெருமாள்
அவருக்கு மோட்சம் அளிக்க இசைந்தார் என்பதை அறிந்த உடையவர், ஸ்ரீரங்கம் வீதியில் தம் உத்தரீயத்தை தூக்கிப்போட்டு ஆடினாராம்! ஆழ்வானுடன் தமக்கு உண்டான சம்பந்தத்தால் தமக்கும் மோட்சம் கிட்டுமே என்று ஆனந்தப் பட்டாராம்.நம்பெருமாளால் மோட்ச அதிகாரியாக நியமிக்கப்பட்ட,
உடையவரே, ஆழ்வானின்
சம்பந்தத்தால் தமக்கு மோட்சம் கிட்டும் என்று சொன்னார் என்றால் ஆழ்வானின் மேன்மை எத்திறம்! எத்திறம்!!
ஒரு சமயம் உடையவர் சொன்னது: "சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆழ்வானின் அறிமுகம் கிடைத்திருந்தால் அவரை ஆசார்யராக ஏற்று,அடியேன் அவரது சீடன் ஆகி இருப்பேனே!!"
5.கைங்கர்ய ஸ்ரீமான்களுக்கும்
கோபம் வந்தது!வெளிப்படுத்திய விதம் வேறு!!
👊🤜🤛🙏🙏🙏
ஆதிசேஷ அவதாரமான லட்சுமணர் சீறாமல் இருப்பாரா?
கைகேயி மீது சீற்றம்,மந்தரை மீது சீற்றம்,சற்றே பரதன் மீது கூட,
சூர்ப்பணகையின் மீது வந்த சீற்றம் கொடிது.அவளது மூக்கு,காது,
ஸ்தனங்களை அறுத்து விட்டார்.விராதன் மீதும்,கர தூஷணர்கள்
மீதும் வந்த சீற்றத்தை ராமர் திருப்பிவிட்டார்.
சொன்ன நேரத்துக்கு வராமல் மாதங்கள் கடத்திய சுக்ரீவன் மீது குணங்களின் சிகரமான ராமருக்கே கோபம் ஏற்பட்டது. அவர் லட்சுமணரிடம், சுக்ரீவனைப் பார்த்துவிட்டு வருமாறு சொல்ல,ராமரின் கோபத்தையும் சுமந்து கொண்டு கோப வடிவெடுத்து சுக்ரீவன்
மாளிகைக்குச் சென்றார்.லட்சுமணனின் கோபா வேசத்தைக் கண்டு,அனைத்தையும்
,அனைவரையும் சமாளிக்கும் திறமை கொண்ட அநுமரே பின் வாங்கிவிட்டார். வாலியின் மனைவி, தாரையை லட்சுமணரை வரவேற்க அனுப்பினார் ஆஞ்சநேயர். தாரையின் தாய்போன்ற சாந்தமான பெண்முகம் லட்சுமணரை அமைதிப் படுத்தியது. இலங்கை யுத்த
களத்திலும் லட்சுமணரின் கோபமுகம் பல இடங்களில்.
ஆழ்வானுக்கும் கோபம் வந்தது !!
'வஞ்ச முக்குறும்பு அறுத்த' ஆழ்வானும் கோபம் அடைந்தாரா?
ஆம்;சோழராஜன்,அரசவையில்,
ஆழ்வானின் கண்களைப் பறிக்குமாறு,தன் வீரர்களுக்குக் கட்டளையிட,"உமது ஆட்களின் நீசக்கை
களில் பறிப்பது என்ன?யாமே பறித்துக்
கொள்கிறோம்" என்று கூறித் தம்கையாலேயே தம் கண்களைப் பறித்து
எறிந்தார்!! கண்பார்வை இழந்து, ஸ்ரீரங்கம் வந்த ஆழ்வான் பெரிய
பெருமாளைச் சேவிக்கப் பெரிய கோவில் சென்றார். அந்த சோழராஜா, ராமாநுஜ சம்பந்தம் உடையவர்கள் யாரையும் கோவிலுக்குள் விடக்கூடாது,என்று ஆணயிட்டிருந்தான்.ஆனாலும் கோவில்
காவலன் ஆழ்வான் ராமாநுஜ சம்பந்தியாக இருந்தாலும்,ஒரு சிறந்த ஸ்ரீவைஷ்ணவராக இருப்பதால் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளித்தான்.இதைச் செவியுற்ற ஆழ்வான் ராமாநுஜ சம்பந்தி என்பதைத் துறந்து, கோவிலுக்குள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை;
தம்மைப்பொறுத்தளவில் உறங்கும் பெருமாளான அரங்கனை விட,உலாவும்
பெருமாளான ஜகதாசார்யர் ராமாநுஜரே உயர்ந்தவர் என்று கூறித் திரும்பி விட்டார்!!
இவ்வாறாகத் தம் கோபத்தின் வீச்சைத், தம் மீதே வெளிப்படுத்தினார்.
திருப்பாவை ஜீயரின்,திறன்மிகு சீடரான ஆழ்வான், திருப்பாவையின் உயிர்ப்பாசுர
மான "எல்லே இளங்கிளியே!"
வின் சாரமான "நானே தான் ஆயிடுக
"என்பதற்குத் தகுந்த மாதிரி வாழ்ந்து காட்டினார்!!
(Exemplary way of Anger/Stress Management!!).
6.'கைங்கர்ய ஸ்ரீ'ஐ பெயரிலேயே கொண்ட பேராளர்கள்!!
🙏💐🌺🌻🌹🙏
தசரதரின் நான்கு குமாரர்களுக்கும்,
அவர்களின் குணங்களைப் பிரதி பலிக்கும் பெயராகச் சூட்டினார் வசிஷ்டர்.
'லட்சுமணன்'என்னும் பெயர் 'லக்ஷ்மி சம்பத்'ஐ உணர்த்தும் பெயர்.செல்வ வளம் பெற்றவர் என்று பொருள்.அப்படி என்ன செல்வம் பெற்றிருந்தார்?
கோசல நாட்டின் இளவரசராக இருந்தும்,தசரத சக்ரவர்த்தியின் தவப்புதல்வராக இருந்தும்,அவர் பெரிய சுகம்/செல்வம் ஒன்றும் அனுபவிக்க
வில்லை.ராமருக்கு சேவை
செய்வதிலேயே தம் வாழ்க்கையைக் கழித்தார். ராமருடன் கானகம் சென்று, 14 ஆண்டுகள்,ஒரு நாளும்/இரவும் தூங்காமல் அனைத்து வேலைகளை யும்(பல வேலைக்காரர்கள் செய்ய வேண்டியவற்றைத்)தாம் ஒருவரே செய்தார்.பிறகு என்ன செல்வவளம்? இப்படிப்பட்ட ராம கைங்கர்யமே 'ஸ்ரீ'-செல்வம்' ஆகப்பெற்றதால் அவரே சிறந்த
மேலும் கூரேசரின்இயற்பெயர்
'ஸ்ரீவத்ஸன்'='திருமருமார்பன்'
என்பதாகும்.திருமகளான மகாலட்சுமித் தாயாரின் வத்ஸ
ஸ்தலமாகிய,
ஸ்ரீ நிவாசனின் மார்பைத் தாங்குபவர் என்பதுபொருள்.ஸ்ரீமந்நாராயணனுக்கு'அகலகில்லேன் இறையும் என்று
எந்நேரமும்சேவை யாற்றிவரும் மகாலட்சுமித் தாயாரின் பெயர் மற்றும் குணத்தைக் குறிக்கும் 'லக்ஷ்மி' 'ஸ்ரீ' என்று பெயர் பெற்றனர் இந்த இரண்டு
ஸ்ரீமான்களும்!!.
7.அண்ணலை எதிர்கொண்டு
வரவேற்க,ஸ்ரீவைகுண்டம் சென்று சேர்ந்த இளவல்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ராமர் அவதார காலம் முடிந்து, ஸ்ரீவைகுண்டம் செல்லும் போது,தம் சகோதரர்களுடன்,அயோத்தியில் வாழும் எல்லா ஜீவராசிகளையும்-"புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே,நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்"அழைத்துச்
சென்றார்.ஆனால் இரண்டு கைங்கர்ய ஸ்ரீமான்கள் அவருடன் செல்லவில்லை.
ஒருவர் என்றும் சிரஞ்ஜீவியான ஆஞ்சநேயர்.இன்னொருவர் ஏற்கனவே பரமபதம் சென்றுவிட்ட லட்சுமணர்!
அவதார காலம் முடியும் சமயம் நெருங்குவதை ராமரிடம், சொல்ல விஷ்ணுலோகத் தூதுவர்கள் அயோத்தி
வந்தனர்.அவதார ரகசியம்
பேசுவதால் அவர்களுடன் இருக்கும் போது,யாரையும் உள்ளே அனுப்ப வேண்டாம், என்று லட்சமணரிடம் கூறி அவரையே காவலுக்கு வைத்தார். யாராவது
உள்ளே வந்தால்,வருபவர் உயிர் துறக்க நேரிடும் என்றும் கூறி விட்டார்.
லட்சுமணர் கவனமாகக் காத்து வந்த சமயத்தில், துர்வாச முனிவர் அங்கே வந்து ராமரை உடனே
சந்திக்க வேண்டும் என்றார். லட்சுமணர் அவரைப் பொறுத்திருக்கும்படி எவ்வளவோ சொல்லியும்,அவர் கேட்கவில்லை.
கடுங்கோபம் கொண்டு ,லட்சுமணரை சபித்து விடுவதாகச்சொன்னார்.வேறு வழியில்லாமல் ராமரிடம் அனுமதி கேட்க,லட்சுமணர் உள்ளேசென்றார்.
லட்சுமணரே, தாம் இட்ட நிபந்தனையை மீறி உள்ளே வந்தது
ராமருக்கு உகப்பாயில்லை.மனத்துக்கு இனிய இளவலாகவே இருந்தாலும்,அவர் இட்ட நிபந்தனைப்படி லட்சமணர் உயிர் துறக்க வேண்டிய நிலை.ராமரை வணங்கி சரயுநதியில் இறங்கி உயிர்துறந்து பரமபதம் எய்தினார்.அவர் சரயுவில் இறங்கிச் சென்ற இடம் 'லட்சுமண் காட்'எனப்படுகிறது.
திருவாய்மொழியில், நம்மாழ்
வார் "வந்தவர் எதிர்கொள்ள மாமணி மண்டபத்து,அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை" என்று பாடியபடி,
லட்சுமணர் ஸ்ரீவைகுண்டத்
துக்கு முதலிலேயே வந்து,
ஸ்ரீராமரையும் அவரது அடியார்களையும்,
எதிர்கொண்டு வரவேற்றார்!!
மிக வயது முதிர்ந்தநிலையில், பரமபதம் செல்ல விளைந்த, கூரத்தாழ்வான்
அரங்கரிடம் சென்று உடனே மோட்சம் சித்திக்க வேண்டினார். நம்பெருமாளும் தந்தோம் என்று கூறிவிட்டார்.தம் தேவியர் ஆண்டாளிடமும்
,திருக்குமாரர்கள் பராசரபட்டர்,
வேதவியாச பட்டரிடமும் விடை கூறிவிட்டார்.இதைச் செவியுற்ற
ராமாநுஜர் ஓடோடி வந்து புலம்பினார்.
"நீர் எப்படி இவ்வளவு சீக்கிரம்
பெருமாளிடம் கேட்டீர்?
அதுவும் அடியேனை விட்டுச் செல்ல எப்படித் துணிந்தீர்?ஆசார்யர் இருக்க சீடன் எவ்வாறு செல்லலாம்?உம்மை
விட்டு அடியேன் எப்படித் தரிப்பேன்?"என்று பலவாறாக அரற்றினார்.அப்போது
ஆழ்வான் "ஸ்வாமி!நம்மாழ்வார் கூற்றுப்படி பரமபதம் வந்தவர்கள்,
வருபவர்களை எதிர்கொண்டு
அழைப்பது வழக்கம்.எனவே தேவரீரின் சீடனான அடியேன், முதலில் அங்கு சென்று இருந்து, தேவரீர் வரும்போது எதிர்கொண்டு வரவேற்பதே பொருத்தமானது"என்று சாதித்தார்.சிறிது நேரத்தில் ஆழ்வானின் ஆத்மா தேகத்தை விட்டுப் பிரிந்து பரமபதம் எய்தினார்.ராமானுஜர் முற்றும், முக்காலமும் அறிந்த ஜகத்குருவாக
இருந்தாலும், ஆழ்வானின் பிரிவாற்றாமைபா யால் அழுதார்.அவர்
திருமுடியைத் தம் மடியில் கிடத்தி,
"ஒரு மகள்தன்னையுடையேன்,
உலகம் நிறைந்த புகழால்,
திருமகள் போல வளர்த்தேன்,
செங்கண்மால் தான் கொண்டு
போனான்,
பெருமகளாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற
யசோதை,
மருமகளைக் கண்டுகந்து
மணாட்டுப்புறம் செய்யும் கொலோ?" என்று ஆண்டாளைப் பிரிந்து பெரியாழ்வார் பாடிய பாசுரத்தைப்(பெரியாழ்வார் திருமொழி 3-8-4) பாடினார்.
ஸ்ரீராமபிரான் திருவடிகளே சரணம்!
இளையபெருமாள் ஸ்ரீ லட்சுமணர் திருவடிகளே சரணம்!
இளையாழ்வார் ஸ்ரீராமாநுஜர் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே
சரணம்!!!
(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
1.அண்ணலும்,இளவலும்.
2 .சீதா,ராம லட்சுமணர்கள்- பத்ராசலம்--லட்சுமணர் தம் ஆதிசேஷ சொரூபத்துடன் இருக்கிறார்.
சீதைக்கும்,ராமருக்கும் குடையாக இருந்து கைங்கர்யம் ஆற்றுகிறார்.
3.பஞ்சவடி(நாசிக்) பர்ணசாலை.
4.பரமாத்மா(ராமர்)வுடன்,ஜீவாத்மா(லட்சுமணர்)வை,புருஷகாரம்செய்து இணைத்து வைக்கும் தாயார் நடுவில்.
ஓம்'என்னும்
பிரணவத்துக்கான விளக்கம்.
5.லட்சுமண்காட்,அயோத்யா.
6.கூரத்தாழ்வான்-கூரம்.
7.அண்ணலும்,இளவலும்,கூரம்
8,9:கூரத்தாழ்வான் திருமாளிகை,
ஸ்ரீரங்கம்
10,11.ஸ்ரீ பெரும்புதூர்-
மனபயம் அச்சம் தீர்க்க லட்சுமி நரசிம்மர் வழிபாடு!!!ருணம் எனும் கடன் ரோகம் எனப்படும் வியாதிகள்
தீராத பிரச்னைகள், செவ்வாய் தோஷம் பிரச்சனைகள் தீரும் !
கடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு!!!
🪔🌺🙌🙏 "லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே " 🪔🌺🙌🙏
கடன் தொல்லையால்
அவதிபடுபவர்கள் இந்த வழிபாட்டை செய்து வந்தால் பலன் அடையலாம்.
கடன்பட்டார் நெஞ்சத்தை உவமையாக கம்பர் ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன்தொல்லையில் இருந்து மீள ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.
இந்த துதி சமஸ்கிருதத்தில் இருப்பதால், படிக்க இயலாதவர்களுக்கு எளிமையான பரிகாரம் இருக்கிறது.
"லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே "
என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை பாராயணம் செய்யவேண்டும்.
அப்போது லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் (எலுமிச்சை சாறு,
காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா. அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது, அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால், அவர்களுக்கு
அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார்.
அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு ' *தேவதாரு மரம்* '.
அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான *"தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம்*", போன்ற அனைத்தும் '
*திருத்தோடகன்* ' என்னும் பொற்கொல்லரால் பிரத்தியேகமாக அகத்தியருக்காக செய்து கொடுக்கப்பட்டது.
அகத்தியர் அணிந்திருக்கும் பூணூலானது, விபூதி கலந்த ஒரு நிறத்தில் இருக்கும். இதன் பெயர் ' *திரிபூரணம்* ' என்பதாகும். இது *கௌதம முனிவரால்* கொடுக்கப்பட்டது.
(எத்தனையோ மஹான்கள். அனைவருக்கும்
என் வணக்கங்கள் இது தான் அர்த்தம்)
பக்தி செய்வதில் பலவகை இருக்கிறது. இசையால் பக்தி
செய்வது அதில் ஒரு வகை.
ராமபக்திக்கு தியாகய்யர்
மிகச்சிறந்த உதாரணம். அதனால்
தான் இறைவன்
அவருக்கு தரிசனம்
தந்ததாக சொல்வார்கள்.
தியாகராஜரின் கீர்த்தனைகள் அனைத்தும் தெலுங்கில் இருந்தாலும் அவை தமிழர்கள் உட்பட அனைவராலும் ரசித்துக் கொண்டாடப்படுவதற்கான காரணம் அதிலுள்ள உணர்வுபூர்வமான பக்திரசம்தான். அப்பாடல்களில் இருக்கும் உயிரோட்டம், கேட்பவர்களின் ஆன்மாவுடன் கலந்து
வாழும் விருப்பத்தை அதிகரிக்கிறது.
இக்கீர்த்தனைகள் இறைவன் புகழைப் பாடுவதால் அனைவருக்கும் உரிமை உடையதாக நினைக்கிறார்கள். தனக்கு உரிமையானது என்பதால் நினைவில் நிரந்தர இடம் அளிக்கிறார்கள். அதிலும் பஞ்சரத்ன கீர்த்தனைகளில் உள்ள ‘எந்தரோ மகானுபாவுலு’ வாழ்வில் ஒரு முறை கேட்டுவிட்டால்,
நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள்.
தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா
பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.
சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக்
கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து
ஃ பணம் , பதவி, அதிகாரத்தை காந்தம் போல் இழுக்கும் சூரியகாந்தக் கல் :-
ஃ நவகிரகங்களில் முழுமுதற் கிரகமான சூரிய பகவான் மட்டும் நமக்கு பலமாக இருந்து விட்டால் போதும் மற்ற 8 கிரகங்களின் பாதிப்புகள், கெடு பலன்கள் நம்மை அண்டாது. நம்முடைய
முன்னோர்கள் ஆதிகாலம் முதலே கண்கண்ட தெய்வமாக சூரிய பகவானை வணங்கினர் ஏனெனில் சூரியனும்- சிவனும்- பெருமாளும் ஒன்று இதனால் தான் சிவசூரிய நாராயணன் என சொல்கிறோம். இத்தகைய சக்திவாய்ந்த சூரிய பகவானின் ஆதிக்கம் நிறைந்த சூரியகாந்த கல்லை கையில் பிரேஸ்லெட்டாகவோ , கழுத்தில் மணிமாலையாகவோ
அணிந்து கொள்ள சூரியனை போல பவர் கிட்டும். அரசு வேலைக்காக காத்திருப்போர், அரசியலில் சாதிக்க நினைப்பவர்கள், அணிந்து கொள்ள அரசு, அரசியலில் வெற்றி பெறுவது 100% உறுதி. இதை அணிபவர்களின் நவகிரக தோசங்கள், வறுமை, கடன் பிரச்சனைகள் நீங்கி பணம், பதவி , அதிகாரத்தை ஈர்த்து கொடுக்கும்