அண்ணன் பெயர் அமனுல்லா..
ஆற்காடு சாலையில் இருந்து ஸ்ரீதேவி குப்பம் சாலை நுழையும் வழியில் முகப்பிலே புட்டு கடை வைத்திருக்கிறார்..
கடை என்றால் திறந்தவெளியும் ஒரு மேசையும் மட்டும்தான்.
அதற்கு வாடகையும் உண்டு..
ஒருநாள் அந்த வழியாக வந்தபோது என் மனைவிதான் அந்த கடையை பார்த்துவிட்டு ,
"புட்டு சாப்பிடலாமா பாலா.." என்று கேட்டார்.
"சரி சாப்பிட்டுதான் பார்ப்போம் " என்று முடிவு செய்து, கூட்டத்திற்கு நடுவில் புகுந்து புட்டும் பருத்திப்பாலும் வாங்கி சாப்பிட்டோம்..
அப்படி ஒரு அற்புதமான ருசி.. அதன்பிறகு அந்த வழியாக எப்போது போனாலும் வீட்டுக்கு புட்டு வாங்கிச் செல்வது வழக்கம்..
இங்கு சொல்ல வந்த விசயம் இதுவல்ல..
நேற்றும் அந்த கடையில் புட்டு வாங்கினோம்.. வழக்கமாக கூட்டம் இருக்கும்.. நேற்று கொஞ்சம் நெரிசல் இல்லாமல் இருந்தது..
அதனால்
அமனுல்லா அண்ணனிடம்..
"எந்த ஊர்ண்ணே.." என்று பேச்சு கொடுத்தேன்..
"தஞ்சாவூர் தம்பி.. "
"எப்போ இருந்து இந்த கடை வச்சுருக்கீங்கண்ணே."
"ஒரு ஆறு வருசம் ஆச்சு தம்பி"..
"அதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்க."
"முன்னாடி அரிசி வியாபாரம் செஞ்சுட்டு இருந்தேன்..நிறைய ஏமாற்றம்..
தொழில் நஷ்டமாகிடுச்சு..
என்ன செய்யுறதுனு தெரியல.. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட சிரமம்.. பொண்ணு , பையன்னு இரண்டு குழந்தைங்க வேற..
வாழ்ந்தாகணும்..
அப்போ என் மனைவிதான் வீட்டு பக்கம் இப்படி ஒரு கடை போடலாம்னு சொன்னாங்க..
என் மனைவி புட்டு நல்லா பண்ணுவாங்க..
அவங்கதான் எனக்கு சொல்லி கொடுத்தாங்க..
அப்படி வீட்டு பக்கத்தில் வியாபாரம் ஆரம்பிச்சோம்.. நல்லா போச்சு..
அப்படியே மெயின்ரோடு பக்கம் கடை போடலாம்னு வந்து போட்ட கடை தம்பி இது..
கட்டடத்துக்குள்ள கடை வைக்க வசதி இல்லையே தவிர , பயன்படுத்தும் பொருள் எல்லாம் தரமானது..
விலை அதிகம் வச்சு விக்க மாட்டேன்.. முதல் போக அந்த மாச செலவுக்கு கையில் பணம் இருக்கும்.. அவ்வளவுதான்.. பசங்களை எப்படியோ படிக்க வச்சுட்டேன்..
உங்களை மாதிரி ஒரு தடவை சாப்பிட்டு ருசி பார்த்தவங்கதான் திரும்ப திரும்ப வருவாங்க..
சென்னைக்கு எட்டு வயசுல வந்தேன்..
இப்போ 58 வயசாகுது.
இதுவரை சொத்துனு எதுவும் சேர்க்கல..
அதே மாதிரி கடனும் இல்ல.. " என்று புன்னகையுடன் சொல்லி முடித்தார் அமனுல்லா அண்ணன்..
"சொத்துமில்ல..கடனுமில்ல.. " என்று அமனுல்லா அண்ணன் சொன்ன வார்த்தை சமூகத்துக்கு எவ்வளவு முக்கியமான வார்த்தை.அந்த வார்த்தைதான் என்னை இந்த பதிவு எழுத தூண்டியது.
இன்றைய தேதிக்கு கடன்.. இ எம் ஐ என்று எந்த தொந்தரவும் இல்லாத வாழ்வுதான் பெருவாழ்வு..
அண்ணன் அமனுல்லா அப்படியொரு வாழ்க்கை வாழ்கிறார்..
என் வார்த்தையை நம்புபவர்கள் அண்ணன் கடையில் புட்டு சாப்பிட்டு பார்க்கலாம்..
அவரும் அவர் குடும்பமும் இன்னும் மகிழ்ந்திருக்கட்டும்..
இன்ஷா அல்லா.. :)
-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா
25-1-22
( நண்பர்கள் கேட்டதால் அவர் தொடர்பு எண் 9840899210 )
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#அறிவோம்கடை : UK Kitchen, Ramanathapuram, Coimbatore.
இவங்க கிட்ட நிறைய முறை வாங்கி இருக்கோம். இப்போ சமீபத்தில் வாங்குன பனை ஓலை சிக்கன் பிரியாணி காம்போ வீடியோ தான் இது. வீடியோ பாருங்க...கீழ இன்னும் விரிவா எழுதறேன்.
சிக்கன் பிரியாணி:
Serves 5 னு போட்டிருக்காங்க ஆனா அளவு அவ்ளோ இல்லை.. 4 பேர் நல்லா சாப்பிடலாம்.
பனை ஓலையில் தருவது மிக நல்ல முயற்சி👌 கூடவே அவரை விதைகள் இலவசமாக கொடுத்தார்கள். அருமை👌
Pumpkin Halwa :
இவங்க கொடுக்கற ஸ்வீட் எப்பவும் ரொம்ப சூப்பரா இருக்கும்.. ஆனா இந்த முறை சுவை கொஞ்சம் குறைவு. ஆனா ஸ்வீட் texture பார்க்கவே செம tempting ஆக இருந்தது👌
#அறிவோம்கடை - #CocoLagoon By Great Mount , Pollachi
நம்ம டீசர் லையே சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள்👌
இது பொள்ளாச்சியில் இருந்து 10km ல இருக்கு. மிக பிரீமியம் ரிசார்ட் இது. சரி இங்க தங்க என்ன விலை, உணவு வகைகள், வசதிகள் என்ன என்ன இருக்கு? எல்லாத்தையும் பார்க்கலாம்
இங்க இருக்கும் ரூம் மற்றும் அதன் விலை (Per Night for 2 persons) :
✴️Executive Deluxe (Free Breakfast) - Rs.7499 and Rs.8899(With B.F & Buffet Dinner) and Rs.10,299(B.F,Lunch & Dinner)
✴️Royal Suite - Rs.11k to Rs 13,800
✴️Presidential Suite - Rs.11k to Rs.13,800
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா...Royal Suite ல் தான் இந்த படுத்துட்டு குளிர்க்கற டப் option இருக்கு🛀
✴️ Pool Villa - 18k starting.
ரூம் ல 24x7 AC பயன் படுத்திக்கலாம்.. Tv , heater, wifi இப்படி காமன் ஆக எல்லா ரிசார்ட் லையும் இருக்கற வசதியும் இருக்கு.