// அண்ணா பேசியதை இன்று ராகுல் காந்தி பேசுகிறார் //
ராகுல் காந்தி பேசுவதில் மகிழ்ச்சி ஆனால் ஆச்சரியம் இல்லை.
காரணம்? காலம் நம்மை இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
அதனால் கள யதார்த்தத்தை அறிந்து ராகுல் காந்தி அவ்வாறு பேசி இருக்க வேண்டும்.
அவருக்கு நம் நன்றி.
ஆனால் 1930-1940-1950-1960 காலகட்டத்தில் சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழி உரிமை பற்றி அண்ணா பேசியுள்ளார் என்பதில் தான் நமது தமிழ் நாடு ஏன் Economically மட்டுமல்ல Socially முன்னேறி இருக்கிறது என்று உணர முடிகிறது.
பல்வேறு திராவிட இயக்கத் தலைவர்கள் இதை பற்றி பேசியுள்ளனர்.
நிற்க! பேசியுள்ளனர் மட்டுமல்ல இன்றும் பேசி வருகின்றனர்.
பெரியார் வழியில் வந்த அண்ணா அரசியல் ரீதியாக கொள்கைகளை வகுக்க கலைஞர் அதை வீறு கொண்டு பரப்பிட இன்று காங்கிரஸ் காதுகளுக்கு நம் கொள்கைகள் சென்று அடைந்திருக்கிறது என்பது மட்டற்ற மகிழ்ச்சி.
இந்தி திணிப்பு எதிர்ப்பு, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, அனைவரையும் உள்ளடக்கி சமூக நீதி நலன் இந்தியாவின் கொள்கையாக மாற வேண்டும் அதற்கு ராகுல் காந்தி பேச்சோடு நிற்காமல் களத்திலும் துணை நிற்பார் என்றே தெரிகிறது.
பழைய காங்கிரஸை விடுங்கள், இது ராகுல் காந்தி காங்கிரஸ். ❤️
2024 தேர்தலில் தெரியும் ஒளியை அணைக்காமல் "அனைக்க" நாம் ஒன்றாக செயல்பட வேண்டும்.
ராகுல் காந்திக்கு ஒரு வாய்ப்பு தாருங்களேன்?
1989 க்கு பிறகு நேரு-காந்தி குடும்ப வாரிசு நேரடியாக தான் ஆளட்டுமே?
1. 1952 முதல் 1969 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னமாக பூட்டிய இரட்டை காளை மாடுகள் இருந்து வந்தது.
2. 1969 இல் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (R) மற்றும் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் (O) என்று காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தது. இந்திரா காங்கிரஸ் (R) கட்சியின் சின்னமாக “பசுவும் கன்றும்” ஸ்தாபன காங்கிரஸ் (O) கட்சியின் சின்னமாக “கை ராட்டை சுற்றும் பெண்” இருந்து வந்தது.
3. 1977 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் (R) பிளவுபட்டது. அதை தொடர்ந்து உருவான இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (I) கட்சிக்கு “கை” சின்னம் கிடைத்தது. அதுவே மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாக மாறி தேர்தலில் “கை” சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
இந்திய வரலாற்றில் சில வழக்குகளும் அதன் தீர்ப்புகளும் தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளாக மாறி இருக்கிறது.
இதையொட்டி, தி.மு.கவுக்கு ஒரு அருமையான நல்வாய்ப்பு காத்திருக்கிறது.
அது என்ன? ⬇️
நீட் தேர்வில் விலக்கு கோரி ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக மாநில தி.மு.க அரசு முன்னெடுக்க போகும் சட்ட போராட்டத்தில் வரப் போகும் இறுதித் தீர்ப்பு நிச்சயம் சரித்திரம் போற்றும் தீர்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அது என்ன சரித்திரம் ஆகும்? ⬇️
ஒன்றிய அரசான பா.ஜ.க வகுத்த ஒரு திட்டத்தை (இவ்விடத்தில் நீட் தேர்வு) எதிர்த்து ஒரு மாநில அரசான தி.மு.க சட்டப்படி போராடி நீட் விலக்கு பெற்றுவிட்டால் அது மாநில சுயாட்சி கோரும் மாநிலங்களுக்கு ஒரு அரும்மருந்தாக அமையக்கூடும்.
# 24 காரட் தங்கக் கட்டியை பொறுத்த வரையில் Online Based Buy & Sell Rate மற்றும் Shop Market Based Buy & Sell Rate நடப்பில் வெவ்வேறாக இருக்கும்.
# எடுத்துக்காட்டாக London Rate, Mumbai Rate, Chennai Rate எல்லாம் வெவ்வேறு.
# அதனால் அவரவர் தோதுக்கும் (Convenience) தேவைக்கும் (Demands) ஏற்ப முன்ன பின்ன தான் விலை வைப்பார்கள்.
# விலை நிர்ணயம் Standard கிடையாததால் தங்கக் கட்டிகளை வாங்கி சில மாதங்களில் கைமாற்றி விற்பது என்பது வங்கி வட்டியை விட சுமாரான லாபமாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.