எல்லா ராஜாக்கள் போலவே, யவனராஜாவுக்கும் வேட்டை என்றால் ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் வேட்டைக்குச் செல்வார். அன்றைக்கு, வேட்டைக்காகக் காட்டுக்குள் வந்து நாளே முடியப்போகிறது. ஒரு விலங்கும் கண்ணில் படவில்லை. வெறுங்கையுடன் திரும்பினால், பெரிய அவமானமாகப் போய்விடும் எனத்
தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு மரத்தின் பின்னால் ஏதோ சத்தம் வந்தது. காவலாளிகள் சூழ அங்கே சென்றார் மன்னன் யவனராஜா. அங்கே சின்ன முயல் ஒன்று, கண்களில் பயத்துடன் நின்றிருந்தது. இனி தப்பிக்க முடியாது என நினைத்த முயல்,
என்னைக் கொல்லாமல் விட்டுவிடுங்கள் ராஜா என
முன்னங்கால்களைத் தூக்கிக் கெஞ்சியது. பேசும் முயலைப் பார்த்து அதிசயித்தார் ராஜா. அதைக் கொல்லாமல், தன் தோளில் உட்காரச் செய்தார். தப்பிக்க முயன்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டினார். காட்டிலிருந்து வெளியே வந்த ராஜாவை, பாதையின் இருபுறமும் நின்று மக்கள் வாழ்த்தி வரவேற்றனர். இதைப் பார்த்த
முயல், ராஜா, உங்களை இப்படி வரவேற்றால் பிடிக்குமா எனக் கேட்டது. ராஜாவும் பெருமையாக, ஆமாம் என்றார். முயல் தயங்கியபடி, ராஜா, நீங்கள் வருகிறீர்கள் என்றால் நாட்டில் எல்லோரும் மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள். ஆனால் காட்டில், இந்தப் பௌர்ணமிக்கு யாரையெல்லாம் கொல்லப் போகிறீர்களோ என்று
அழுவோம். அதனால், நிலா வளர வளரக் காட்டின் இன்னொரு பக்கம் போய்விடுவோம். முதலில் வயதான விலங்குகள், அடுத்து, மெதுவாக நடக்கும் விலங்குகள், கடைசியாகப் பறவைகள் என எல்லோரும் போய்விடுவோம். பெளர்ணமி முடிந்து இரண்டு நாள் கழித்துத்தான் வருவோம் என்றது. என்னைப் பார்த்து உயிருக்கு அஞ்சி ஓடும்
நிலை என் நாட்டுக்குள்ளேயே இருக்கிறதா என ராஜா வெட்கப்பட்டு பகவான் ஸ்ரீமந் நாராயணனிடம் தன் தவறுக்காக மனம் வருந்தினார். அந்த முயலைத் திரும்பவும் காட்டுக்குள் விட்டுவிட்டு அரண்மனைக்குத் திரும்பினார். அதுவே அவரின் கடைசி வேட்டை! எளியோரை கருணையுடன் நடத்த வேண்டும் என்ற ஸ்ரீமத் பாகவத
கூற்றுபடி வாழ்ந்தார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
”மகா பெரியவாளோட அனுஷ ஜயந்தியை, வருஷம் தவறாம நடத்திண்டு வரேன். சில வருஷத்துக்கு முன்னால, ஜயந்தித் திருநாள் தருணத்துல நடந்தது இது. ஒரு மாலை நேரம். அன்பர் ஒருத்தர் அயோத்தியா மண்டபத்துக்கு வந்தார். ‘என் பேரு சுவாமிநாதன். நீங்க ஏன் மகாபெரியவாளோட பாதுகை யையும் திருவுருவப் படத்தையும்
வைச்சு அனுஷ ஜயந்தி நடத்தறேள்? பஞ்சலோக விக்கிரகம் பண்ணி, அதுக்குண்டான வழிபாடுகளைச் செஞ்சு ஜயந்தி விழாவை நடத்தலாமேன்னு என்னைக் கேட்டார். அதோட நிக்காம, ஒரு பையிலிருந்து ரெண்டு பித்தளை சொம்புகளை எடுத்துக் கொடுத்து, ‘மகாபெரியவாளின் பஞ்சலோக விக்கிரகம் செய்யறதுக்கு முயற்சி பண்ணுங்க.
நிச்சயம் அது கைகூடும். மாம்பலத்துலயே அவர் கோயில்ல குடியிருந்தபடி எல்லார்க்கும் அருள்பாலிக்கப் போறார், பாருங்க’ என்று சொல்லி, ஒரு ஓரமா இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.
பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா அங்கே அவரைக் காணோம்! மண்டபம் முழுக்கத் தேடியும் கிடைக்கலே. பக்தர்கள்கிட்ட
மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப் போல #பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. அதன் ரகசியம் என்ன? முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். ஒருசமயம் அவன் வஞ்சனையால்
பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான். அருணகிரியார் தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார். இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம்
செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில் அமர்த்திக் கொண்டார். இந்த அமைப்பில், தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன்காட்சி தருகிறார். #கந்தர்_அனுபூதி
ஆனா அமுதே அயில் வேலரசே
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆஞ்சநேயர் சிவ கடாக்ஷம் பெற்றவர். மகேசனின் மற்றொரு ரூபம், சிரஞ்சீவி. ஹனன் - அழிப்பவர், மன் - மனம்.
தான் எனும் அகங்காரத்தை மனதிலிருந்து அழிப்பவராதலால்
ஹனுமான் என்று பெயர். கர்ணனைப் போலவே காதணிகளுடன் பிறந்தவர். வாயு, கருடனைவிட வேகமாகச் செல்லும் சக்தியை பிரம்மா
வரமாக கொடுத்துள்ளார். சூரியனைத் தன் குருவாகக் கொண்டவர். குருதட்சணையாக தன் மகன் சுக்ரீவனுக்குக் கடைசி வரை துணையாக இருக்கும்படி சூரியன் கேட்டுக் கொள்ள, அதன்படி வாலியிடமிருந்து அரசுரிமையைப் பெற்றுத் தந்தார். குருவணக்கமாக சூரிய நமஸ்காரத் தோத்திரத்தை பாடியவர். தகப்பனார் வாயு பகவானிடம்
இருந்து பிராணாயாமம் கற்று, பின் அதை மனித குலத்துக்கு அருளியவர். இலங்கேசுவரனின் பிடியிலிருந்து நவக்கிரகங்களை மீட்டதால், கோள்கள் அவருக்குக் கீழ்படியும் என்பது ஐதீகம். ஏழரை ஆண்டுச் சனியாக அனுமனைப் பிடித்த சனீஸ்வரன், ஏழரை நிமிடங்கள் கூட இவரிடம் தாக்குப் பிடிக்கமுடியாமல் விட்டு
இந்துவாக பிறந்த ஒவ்வொருவரது ஆசையும் வாழ்நாளில் ஒரு தடவையாவது #காசி_யாத்திரை செலஸ் வேண்டும் என்பது தான். காசியாத்திரை என்பது காசிக்கு மட்டும் செல்வது கிடையாது. காசியுடன் ராமேஸ்வரமும் செல்வது தான். அப்படியானால் காசி-ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி என்பதை காண்போம்:
காசி யாத்திரை
செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள அக்னி தீர்த்தமாகிய கடலில் நீராடி ஈர உடையுடன் கடலில் மூன்று தடவை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு தடவை மூழ்கும் போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுக்க வேண்டும். முதல் தடவை மூழ்கி எடுக்கும் மணலை சேது மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும்,
இரண்டாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை பிந்து மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், மூன்றாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை வேணு மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், கரையில் வைக்க வேண்டும். பின்னர் மூன்று லிங்கத்திற்கும் விபூதி சந்தனம் குங்குமம் இட்டு, வில்வ இலை போட்டு ஓம் நம சிவாய
#ஶ்ரீஹயக்ரீவர் ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் திருமாலின் பதினெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறது. பின் வலக்கரத்தில் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தையும், இடக்கரத்தில் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும், முன் வலது கரத்தில் ஏட்டையும் ஏந்தி மக்களுக்கு ஞானத்தை போதிக்கும் ஞான சொரூபியாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.
ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி ஞானத்தின் உறைவிடம் என்பதால் அவரைத் துதித்தால் முக்குணங்களில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். தனது இடது தொடையில் ஸ்ரீமஹாலட்சுமியை ஏந்தி, ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவராகத் திகழ்கிறார். சிவபெருமானின் அஷ்டாஷ்ட (64) மூர்த்தி பேதங்களில் ஒன்றான தட்சிணா
மூர்த்தி உருவத்தையே ஸ்ரீஹயக்ரீவரின் திருவுருவம் பிரதிபலிப்பதாக உள்ளது.
தட்சிணாமூர்த்திக்கும் சிவபெருமானின் அக்னி, மழுவோடு சின் முத்திரையும், ஏடும் கரங்களில் இருப்பது போல ஸ்ரீஹயக்ரீவரருக்கு திருமாலின் ஆயுதங்களான சங்கு சக்கரத்துடன் வியாக்கியான முத்திரை, ஏடு உள்ளன. இரண்டு
Not many know about the great stuti on Ambal, #MookaPanchaSathi There lived a man in Kanchipuram, who was speech impaired from birth so was called Muka Sankara.Mooka means one who cannot speak. Daily he will go to the temple and sit in front of Maa staring at her beauty for hours
together. One day a sadhakar came and began practicing rituals. Maa appeared in front of him with mouth full of thamboolam. As a present she took a small portion and offered it to the sadhakar who felt offended for giving “aparisudha” prasadam. We all know every mother bites and
also gives a little portion to the toddler. Maa immediately glanced at the Muka Sankara and offered it. Sarasa sahithya sagram began to overflow and Muka Sankara began to sing extempore on the vilasas of Kamakshi. The world renowned “Mooka Pancha Sathi” was the gift of Sankara to