ஹிஜாப் பிரச்சினையை களமாக வைத்து "ஹிஜாப் தேவையா? இல்லையா?" என்று இடதுசாரிகள் பேச வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதே வலதுசாரிகள் தான்.
சுருங்கச் சொன்னால் "ஹிஜாப் தேவையா? இல்லையா?" என்ற விவாதத்தை கிளப்பிய வகையில் அரசியல் காய் நகர்த்தலில் வலதுசாரிகள் வெற்றி பெற்றுவிட்டனர்.
ஹிஜாப் தேவையா? இல்லையா? என்று மதத்தை முன்னிலைப்படுத்தாத இடதுசாரிகள் பேசும் கொள்கை வேறு.
ஹிஜாப் தேவையா? இல்லையா? என்று இந்துத்துவா அல்லது இஸ்லாம் மதத்தை முன்னிலைப்படுத்தும் வலதுசாரிகள் பேசும் கொள்கை வேறு.
இடதுசாரிகள் பேச பேச வலதுசாரிகளுக்கு லாபம் தான்.
ஏன் அப்படி?
வலதுசாரி பா.ஜ.க தான் ஒன்றியத்தில் ஆட்சியை நடத்தி வருகிறது.
ஐந்து மாநில தேர்தல் நடக்க இருக்கிறது.
வட இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் மதம் சார்ந்த வலதுசாரி மனநிலையில் தான் இருக்கின்றனர்.
மத வெறுப்பு சூழ்ச்சிகளின் மன்னன் பா.ஜ.க என்றால் அது மிகையல்ல.
இந்து மதத்தின் மீதான விமர்சனங்களை மடைமாற்றும் வகையில் ஹிஜாப் பிரச்சினையை ஒரு தீப்பொறி ஆக்கியது பா.ஜ.க.
இதன் மூலம் இடதுசாரிகள் நல்லெண்ண அடிப்படையில் இஸ்லாம் மதத்தின் மீதான குறைகளை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்தால் அதை இந்து மதவாதிகளான வலதுசாரிகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.
மேலும் ஹிஜாப் உடையை விமர்சனம் செய்தாலே அவர் இந்துத்துவாவாதி என்று முடிவு கட்டும் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வேறு. இவர்கள் பா.ஜ.கவின் எண்ணத்திற்கு ஆதரவாக செயல்படுவது இவர்களுக்கே தெரியாமல் இருப்பது வருத்தத்துக்குரியது.
வர வர இப்படி ஆளுக்கு ஒரு நீதி ஆளுக்கு ஒரு சாக்கு போக்கு.
நம் தெருவில் உள்ள குப்பையை சுத்தம் செய்த பின்னர் பக்கத்து தெருவில் உள்ள குப்பையை சுத்தம் செய்தால் இரண்டு தெருவிற்கும் ஒரே காலத்தில் நலம் பயக்கும்.
சுருங்கச் சொன்னால் ஹிஜாப் உடை சர்ச்சையான விவகாரத்தில் இடதுசாரிய பார்வையை கூட நேரம் பார்த்து Dilute செய்ய முயலுகிறது வலதுசாரியம்.
ஹிஜாப் உடையை தவறு என்பவர் ஒன்று உடை சுதந்திரத்தை கோரும் நபராக அல்லது மத சடங்கை ஏற்காத நபராக இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஹிஜாப் உடை மீதான குறையை நாம் சுட்டிக் காட்டும் போது எதிர் தரப்பு திரும்பி கேட்கும் கேள்விக்கு நம்மால் பதில் கூட தர முடியாத நிலை ஏற்படலாம். 😷
அதற்காக நாம் பயந்து ஒடுங்கி எதையும் சுட்டிக் காட்டாமல் இருக்கக்கூடாது என்றில்லை.
ஆனால் தற்சமயம் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியின் கீழ் பொதுவாக எதைப் பற்றி பேசினாலும் அதை ஊடகங்கள் எளிதாக திரித்து வெளியிடும் சூழல் உருவாகி வருகிறது.
அதனால் இந்த உடை விஷயத்தை கொஞ்சம் காலம் விட்டு பிடிப்பது நல்லதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
நமக்கு தேவை 2024 இல் ஆட்சி மாற்றம். அதை நோக்கி நம் வெற்றிப் பயணம் அமைய வேண்டும்.
மொத்தத்தில் ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையில் பயணத்தை மேற்கொள்வோம்.
1947 முதல் நாட்டுப் பற்றை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்துத்துவாவாதிகள் இஸ்லாமியர்களை தள்ளிவிட்டதே கேவலமான அரசியல்.
இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில் நாம் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால்!
இந்த ஹிஜாப் உடை விஷயத்தில் மட்டும் நாம் சற்று அடக்கி வாசிப்பது தற்சமயம் நலம் பயக்கும். அதாவது விட்டு பிடிப்போம்.
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்.
பாடுற மாட்டை பாடி கறக்கணும்.
உங்கள் பாதையில் வெற்றி பெற
இடம்
பொருள்
ஏவல்
கோட்பாட்டை மறவாதீர்!
தயவு செய்து இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்ட நண்பர்களும் பா.ஜ.கவின் சூழ்ச்சி வலைப்பின்னலை அறிந்து நடந்து கொள்வது நலம் தரும்.
2024 தேர்தலே நமக்கான Target. Until then let's wait and see how the Karnataka (India) politics moves on. But, காலத்திற்கு ஏற்ப நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வோம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1.முகவுரை
2.தொடக்க காலம்
3.இளமைக் காலம்
4.சிந்தித்து முடிவெடுத்தார்
5.சிகையலங்கார நிபுணரின் பார்வை
6.முயற்சியும் வெற்றியும்
7.உடலால் மறைந்தார்
8.புகழுரைக்கு உரியவர்
9.சதி கோட்பாடுகள்
10.முடிவுரை
11.இதர செய்திகள்
12.விவரணைகள்
1.முகவுரை
என்னடா “மந்திரி ஆகாத ஒரு ராஜாவின் கதை” என்று தலைப்பே பீடிகையாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஹா ஹா. 1970களில் உலக திரைப்பட ரசிகர்களின் மனதில் மந்திரி ஆக கட்டி ஆண்ட ராஜாவான ஒருவரை பற்றி தான் காண இருக்கிறோம்.
தற்காப்பு கலைஞர், திரைப்பட நட்சத்திரம், திரைப்பட தயாரிப்பாளர், தற்காப்பு கலை பயிற்சியாளர், விடா முயற்சியாளர் மற்றும் சிந்தனையாளர் என்று அறியப்படும் அந்த ஒருவர் வேறு யாருமல்ல மகா கலைஞன் புரூஸ் லீ தான்.
இலை நண்பரிடம் "உங்க ஏரியா எப்படி இருக்கு? என்ன சொல்றாய்ங்க" என்று வினவினேன்.
அவரும் "கண்டிப்பா அண்ணன் ஜெயிச்சுருவாப்லன்னு சொல்றாய்ங்க" என்றார்.
திரும்ப "ஓ! யாருங்க சொன்னா?" என்று வினவினேன்.
அவரும் "நம்ம அண்ணன் கூட வீதியில் உடன் வர ஆளுங்க தான் குஷியாக சொன்னாய்ங்க" என்றார்.
நான் "ஏங்க! கூட வந்த பயலுக அண்ணன் ஜெயிச்சுருவாப்லன்னு தான் சொல்வாய்ங்க அப்புறம் தோப்பாருன்னு வேற சொல்வாய்ங்களா? ஆனா பாருங்க தேர்தல்ல வெற்றி தோல்வி என்பது உடன் சுத்தும் ஆதரவாளர்கள் தீர்மானிப்பது இல்ல. எவன் என்ன கட்சின்னு கணிக்க முடியாத பொதுமக்கள் தீர்மானிக்க வேண்டியது" என்றேன்.
சிவாஜி தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் தோற்ற பிறகு "சக ஆதரவாளர்கள் Soap போட தனிக்கட்சி ஆரம்பித்து தோற்றுப் போனேன்" என்றார்.
அரசியலில் ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கோஷம் போடவும் எங்கள் தெய்வமே என்று Cut-out வைக்கவும் தான் முயல்வார்கள். சிலர் விதிவிலக்காக இருக்கலாம்.
1. 1952 முதல் 1969 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னமாக பூட்டிய இரட்டை காளை மாடுகள் இருந்து வந்தது.
2. 1969 இல் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (R) மற்றும் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் (O) என்று காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தது. இந்திரா காங்கிரஸ் (R) கட்சியின் சின்னமாக “பசுவும் கன்றும்” ஸ்தாபன காங்கிரஸ் (O) கட்சியின் சின்னமாக “கை ராட்டை சுற்றும் பெண்” இருந்து வந்தது.
3. 1977 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் (R) பிளவுபட்டது. அதை தொடர்ந்து உருவான இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (I) கட்சிக்கு “கை” சின்னம் கிடைத்தது. அதுவே மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாக மாறி தேர்தலில் “கை” சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
இந்திய வரலாற்றில் சில வழக்குகளும் அதன் தீர்ப்புகளும் தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளாக மாறி இருக்கிறது.
இதையொட்டி, தி.மு.கவுக்கு ஒரு அருமையான நல்வாய்ப்பு காத்திருக்கிறது.
அது என்ன? ⬇️
நீட் தேர்வில் விலக்கு கோரி ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக மாநில தி.மு.க அரசு முன்னெடுக்க போகும் சட்ட போராட்டத்தில் வரப் போகும் இறுதித் தீர்ப்பு நிச்சயம் சரித்திரம் போற்றும் தீர்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அது என்ன சரித்திரம் ஆகும்? ⬇️
ஒன்றிய அரசான பா.ஜ.க வகுத்த ஒரு திட்டத்தை (இவ்விடத்தில் நீட் தேர்வு) எதிர்த்து ஒரு மாநில அரசான தி.மு.க சட்டப்படி போராடி நீட் விலக்கு பெற்றுவிட்டால் அது மாநில சுயாட்சி கோரும் மாநிலங்களுக்கு ஒரு அரும்மருந்தாக அமையக்கூடும்.