வாடகை செலுத்தாத 94 வயது முதியவர் ஒருவரை , தனது வீட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்த அந்த வீட்டின் உரிமையாளர் , அந்த முதியவர் பயன் படுத்திய பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், தட்டு குவளைகளை வீட்டிற்கு வெளியே போட்டு விட்டார்.
சிறிது கால அவகாசம் தருமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறார் முதியவர்.
வேடிக்கை பார்த்த சிலர் பரிதாபப் பட்டு சிறிது கால அவகாசம் தரச் சொல்ல - வேண்டா வெருப்பாக அந்த முதியவரின் சாமான்களை மீண்டும் அனுமதித்தார் உரிமையாளர்.
இதை பார்த்துக் கொண்டிருந்த , அவ்வழியே சைக்கிளில் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர், அந்த காட்சிகளை படுமெடுத்து , தனது பத்திரிக்கையில் வெளியிட நினைத்து
- " கொடூர நிலக்கிழார், பரிதாப நிலையில் முதியவர் " என்றெல்லாம் தலைப்பு ரெடி செய்து, பத்திரிக்கை ஆசிரியரிடம் சென்று , நடந்தது குறித்து விளக்கமளித்து , படங்களை காட்டினார்.
படங்களை பார்த்த ஆசிரியர், அதிர்ந்து போனார். இவர் யாரென்று தெரியுமா ..? என செய்தியாளரை கேட்க - தனக்கு எதுவும் தெரியாது என்றார் செய்தியாளர்.
இந்தியாவில் இரண்டு முறை இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரிலால் நந்தா தான் அவர். நேரு இறந்த போதும், சாஸ்திரி இறந்த போதும், இவரைத்தான் பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள். பொருளாதாரம் படித்த சிறந்த தொழிற்சங்கவாதி.
HMSS தொழிற்சங்கத்தில் அகில இந்திய தலைவராக இருந்தவர். 1948 ல் இவரது தலைமையில் தான் கொல்கத்தாவில் INTUC திறப்பு விழா கண்டது. பல காலம் மத்திய அமைச்சராக இருந்தவர்.
ஆக, பத்திரிக்கையில் செய்தி வந்தது - அவரது வீட்டின் முன்பு அரசு அதிகாரிகளும், VIP வாகனங்களும் வந்து குவிவதை கண்ட வீட்டு உரிமையாளர் மிரண்டு போனார்.
பிறகு தான் அவருக்கே தெரிந்தது - இருமுறை பிரதமராக இந்த நந்தா தான் இவர் என்று.
நீண்ட காலம் மத்திய அமைச்சராக இருந்த இவரது நிலையையும் - இன்றிருப்போரின் நிலையையும் நினைத்துப் பார்க்கிறேன் ...
சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு ஓய்வூதியமாக முன்பு தந்த 500 ரூபாயையும் வாங்க மறுத்து விட்டார். சுதந்திரத்துக்காக போராடினேனே தவிர இந்த 500 ரூபாய்க்காக அல்ல என்று கூறிவிட்டார்.
ஆக, அரசு இல்லத்துக்கு வாருங்கள் என வந்த அதிகாரிகளும் , அரசியல்வாதிகளும் எவ்வளவோ கெஞ்ச, " இந்த வயதில் அந்த வசதியெல்லாம் எதற்கு ..?" என மறுத்து விட்டார்.
இதையெல்லாம் கண்ட, அந்த வீட்டின் உரிமையாளர் நந்தாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
இறுதிவரை உண்மையான காந்தியவாதியாக , சாதாரண குடிமகனைப் போல் வாழ்ந்த இவருக்கு 1997 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
பாரத ரத்னா குல்சாரிலால் நந்தா, தமிழ்நாட்டில் காக்கன், காமராஜ் போன்றோர், காங்கிரஸ் தலைவர்கள், பெறும் பதவியில் இருந்தவர்கள், மிக எளிய, ஏழ்மையான வாழ்ங்கையினையே விரும்பி பிறர் உதவிகளை ஏற்க்க மறுத்து ஏழ்மையிலேயே வாழ்ந்து மறைந்த
இந்தியமண்ணில் நானும் இருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமை ..!.. வாழ்க இந்திய தியாகத் தலைவர்கள்......
..... #படித்ததில்_பிடித்தது 🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சிவபெருமான் - பார்வதிதேவி திருமணத்தின்போது ஈசனின் ஆணைக்கேற்ப அகத்திய முனிவர் தென்னாட்டுக்கு வந்தார்.
🙏🇮🇳1
வடக்கையும் தெற்கையும் சமமாக்கினார். நிறைவாகப் பொதிகை மலையில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார்.
அகத்தியப் பெருமானுக்கு ஈசனின் தன் திருமணக் கோலத்தை எண்ணற்ற தலங்களில் அருளினார்.
🙏🇮🇳2
பொதிகையில் உற்பவித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்தோடும் வற்றாத ஜீவநதியான பொருநை எனப்படும் தாமிரபரணி நதியின் இரு கரைகளிலும் 200க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பும், புராணப் பழமையும் கொண்ட சிவாலயங்கள் உள்ளன.