படம் 2076 - ல் ஆரம்பிக்கிறது. உலகத்தில் மக்கள் தொகை எக்குத்தப்பாக பெருகி விடுகிறது. உணவு உற்பத்தி மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததால் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
IMDb 6.9 #tamil dub ❌
Available @PrimeVideoIN
ஒரு விஞ்ஞானி Dr. Nicolette Cayman (Glenn Close) ஒரு குடும்பம் ஒரு குழந்தை சட்டம் கொண்டு வருகிறார்.
இந்த சட்டத்தின் படி ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டுமே இருக்க முடியும். மீதம் உள்ள குழந்தைகள் கிரையோ ஸ்லீப் எனப்படும் மருத்துவ முறையான
இந்த சிக்கலான சூழ்நிலையில் Karen Settman எனும் பெண் ஒரே மாதிரியான 7 பெண் குழந்தைகளை பிரசவித்து விட்டு இறந்து விடுகிறார். இந்த குழந்தைகளின் தாத்தா Terrence (Willem Dafoe - Spider man)
அரசை ஏமாற்றி இந்த குழந்தைகளை வளர்க்க முடிவு செய்கிறார். 7 குழந்தைகள் என்பதால் இக்குழந்தைகளுக்கு கிழமைகளை பெயராக வைக்கிறார். உதாரணமாக Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday and Saturday.
Terrance - சில விதிகளை உருவாக்குகிறார் . அவரவர் பெயர் கொண்ட கிழமைகளில்
ஒருவர் மட்டுமே வெளியே போக வேண்டும் .
உதாரணமாக திங்கள் கிழமைகளில் Monday , செவ்வாய் கிழமைகளில் Tuesday வெளியே போக வேண்டும் மற்றவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் . வெளியே போய் திரும்பி வந்த உடன் அன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் மற்ற சகோதரிகள் உடன்
பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் அனைவரும் உயிர் வாழ்கிறார்கள்.
எல்லாரும் வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிடுகிறார்கள். பேங்கில் வேலை செய்யும் Monday ஒரு நாள் வேலைக்கு போனவள் திரும்ப வரவில்லை.
அவளுக்கு என்ன ஆகியிருக்கும் என்று தெரியாமல் பீதி ஆகின்றனர் மற்ற 6 பேரும்.
அவளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது மீதிக்கதை.
நல்ல ஒரு வித்தியாசமான செட்டப் உடன் ஆரம்பிக்கும் படம் நேரம் ஆக ஆக ஒரு வகையான ஆக்ஷன் படமாக மாறுகிறது.
6 பேர்களின் வேடங்களையும் ஒரே நடிகை Noomi Rapace ஏற்று நடித்துள்ளார்.
எல்லாரும் ஒரே மாதிரி இருந்தாலும் ஹேர் ஸ்டைல், மேக்அப், படிப்பாளியான பெண் , மூக்கு கண்ணாடி என சின்ன விஷயங்கள் மூலம் வேறுபடுத்திக் காட்டியது அருமை. ஆனால் கடைசி சண்டைக்காட்சியில் தான் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
மற்றபடி 2076 -ல் நடப்பதால் அந்த வருடங்களுக்கு
ஏற்றவாறு காட்டப்படும் கார்கள், டின்ஏ உடன் இணைந்த துப்பாக்கி, உள்ளங்கையில் வரும் டிஸ்பிளே என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
7 கதாபாத்திரங்கள் என்பதாலோ என்னமோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை போட்டுத்தள்ளி விடுகிறார் இயக்குனர்.
மற்றபடி வில்லனாக வரும் கோஷ்டி நன்றாக
வில்லத்தனம் காட்டி உள்ளனர். குறிப்பாக வில்லியாக வரும் Glenn Close.
நல்ல ஒரு வித்தியாசமான Sci Fi + Thriller+ Action படம். கண்டிப்பாக பார்க்கலாம்.
Director: Tommy Wirkola
Cast: Noomi Rapace, Marwan Kenzari, Willem Dafoe, Glenn Close, Christian Rubeck
Screenplay: Kerry Williamson, Max Botkin
Cinematography: Jose David Montero
Music: Christian Wibe
போன வாரம் washing machine வாங்க Show Room போனேன். ஓரளவு என்ன நமக்கு வேண்டும் என்ற ஐடியா இருந்தாலும் என்ன ப்ராண்ட் வாங்கலாம் என்பதில் கொஞ்சம் குழப்பம்.
ஏற்கனவே Direct Drive technology பத்தி படிச்சுட்டு போய் இருந்தேன் .
அவங்க காட்டுன DD model மற்றும் சேல்ஸ்மேன் சொன்ன விதம் எனக்கு கொஞ்சம் திருப்தியை கொடுத்தது.
அதனால் LG Front load with DD டெக்னாலஜி வாங்கியாச்சு. ஆனா சேல்ஸ்மேன் திரும்ப திரும்ப சொன்னது WiFi இருக்கு சார் நீங்க ஆஃபிஸ்ல இருந்தே கண்ட்ரோல் பண்ணலாம் என்று.
எனக்கு இதில் அவ்வளவு உடன்பாடில்லை மற்றும் அவ்வளவு பிஸியும் இல்லை . நான் அவர்ட்ட சொன்னது வாஷிங்மெசின்க்கு எதுக்கு பாஸ் WiFi. நாங்கள் வாங்கிய மாடலில் WiFi இருந்தது.
இது ஒரு சுவாரஸ்யமான Sci Fi படம்.
IMDb 7.9 #Tamil dub ❌
OTT ❌
Must Watch 🔥🔥🔥
2027 ல் நடக்கும் கதை. உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும் கருவுறும் திறனை இழந்து விடுகிறார்கள். அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் உலகம் மொத்தமும் பெரும் அழிவை சந்திக்கிறது.
உலகத்தில் கடைசியாக குழந்தை பிறந்து 18 வருடங்கள் ஆகிறது.
இந்த நிலையில் பிரிட்டன் தனது நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டவரையும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என அறிவித்து நாடு கடத்த தயாராகிறது.
ஹீரோ தியோ(கிளைவ் ஓவன்) ஃபிஷ்ஷஸ் எனும் ஒரு அமைப்பால் கடத்தப்பட்டு அதன் தலைவி ஜூலியனை (ஜுலியன் மூர்) சந்திக்கிறான்..
தியோ வின் நண்பன் வழியாக ஒரு அகதி பெண்ணுக்கு பயண அனுமதி பெற்று தருமாறு கேட்கிறாள். அவனும் அதை வாங்கி தருகிறான்.
டைரக்டர் பெயரே போதும் இந்த படம் பார்க்க. பிரபல இயக்குனர் Stanley Kubrick இயக்கத்தில் வந்த Sci Fi படம் தான் இது.
IMDb 8.3 ( #114 out of top 250 movies)
Tamil Dub ❌
OTT ❌
எதிர்காலத்தில் நடக்கும் கதை.ஒரு வன்முறை குணம் கொண்ட இளைஞனின் கதை தான் இது.
ஹீரோ தனக்குனு ஒரு குரூப் வச்சுக்கிட்டு ஏதாச்சும் ஒரு வீட்டுக்கு போய் கொடூரமா கற்பழிப்புனு , கொலை , திருட்டுனு சுத்துறானுக. அவனுக்கு பிடிச்சது மூணு Sex, Violence & Beethoven music.
என்ன பண்ண போகுதுனு யாரும் கண்டு பிடிக்க முடியாது. அது முக்கிய பாத்திரத்தில் நடிச்சு வந்துள்ள படம்.
ஆனால் இந்த படத்துல முக்கியமான கேரக்டர் இரண்டு Possums தான்.
எப்பவுமே விளையாட்டாக இருக்கும் Crash & Eddie ஒரு வேகத்தில் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள் எதிர்பாராத விதமாக பாதாள உலகிற்கு வந்து Buck உடன் இணைகிறார்கள்.
அந்த நேரத்தில் ஒரு அறிவாளி வில்லன் டைனோசர் பாதாள உலகத்தை #iceage
தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வர முயற்சி செய்கிறது. இதற்கு அங்கு உள்ள டைனோசர்களை ஒரு சின்ன ட்ரிக் வச்சு அடிமைப்படுத்தி தான் சொல்வதை கேட்க வைக்கிறது.இதை இந்த கூட்டணி எப்படி முறியடித்து என்பது தான் படம்.
Buck, Eddie, Crash என மூன்று கதாபாத்திரங்களை சுற்றி நகர்கிறது படம்.
#AppleTV ன் ஒரு Feel Good + Musical படம்.
IMDb 8.1 #Tamil Dub ❌
Tamil Sub ✅
ஹீரோயின் குடும்பத்தில் அவளை தவிர வேற யாருக்கும் காது கேட்காது.
இவளை நம்பி தான் குடும்ப பிசினஸ் இருக்கும் நிலையில் Passion க்காக குடும்பத்தை பிரிய நேரிடுகிறது.
இதனை மொத்தக் குடும்பமும் எவ்வாறு எதிர்கொண்டது என்பதை +VE சொல்கிறது படம்.
அருமையான ஃபீல் குட் படம்.
ஹீரோயின் குடும்பம் மீன்பிடிக்கும் தொழில் செய்கிறார்கள்.பொறுப்பான மகளாக காலையில் 3 மணிக்கு எழுந்து குடும்பத்துடன் கடலுக்கு போய் மீன் பிடித்துவிட்டு வந்து ஸ்கூலுக்கு போகிறாள் .
ஹீரோயினுக்கு Berklee காலேஜ்ஜில் மியூசிக் படிக்க ஆசை. ஆனால் அப்பா , அம்மா மற்றும் அண்ணண் என யாருக்கும் காது கேட்காது என்பதால் இவர் தான் மற்றவர்களுடன் பேச உதவி செய்ய வேண்டிய கட்டாயம்.
இந்நிலையில் ஸ்கூல் டீச்சர் மூலமாக Berklee college audition போக சான்ஸ் கிடைக்கிறது.