H.A.L. 9000 Profile picture
Feb 17, 2022 12 tweets 4 min read Read on X
Washing Machine ல WiFi எதுக்கு ?

போன வாரம் washing machine வாங்க Show Room போனேன். ஓரளவு என்ன நமக்கு வேண்டும் என்ற ஐடியா இருந்தாலும் என்ன ப்ராண்ட் வாங்கலாம் என்பதில் கொஞ்சம் குழப்பம். 

ஏற்கனவே Direct Drive technology பத்தி படிச்சுட்டு போய் இருந்தேன் .
அவங்க காட்டுன DD model மற்றும் சேல்ஸ்மேன் சொன்ன விதம் எனக்கு கொஞ்சம் திருப்தியை கொடுத்தது. 

அதனால் LG Front load with DD டெக்னாலஜி வாங்கியாச்சு. ஆனா சேல்ஸ்மேன் திரும்ப திரும்ப சொன்னது WiFi இருக்கு சார் நீங்க ஆஃபிஸ்ல இருந்தே கண்ட்ரோல் பண்ணலாம் என்று.
எனக்கு இதில் அவ்வளவு உடன்பாடில்லை மற்றும் அவ்வளவு பிஸியும் இல்லை . நான் அவர்ட்ட சொன்னது வாஷிங்மெசின்க்கு எதுக்கு பாஸ் WiFi. நாங்கள் வாங்கிய மாடலில் WiFi இருந்தது.

வாஷிங்மெஷின் உபயோகிக்க ஆரம்பித்தாயிற்று. சரி சேல்ஸ்மேன் WiFi WiFi னு சொல்லிட்டே இருந்தாரேனு டிரை பண்ணினேன்.
எந்த அளவுக்கு உபயோகமா இருக்குனு பாக்கலாம்.‌

LG ThinQ என்று ஒரு ஆஃப் ரெடி பண்ணிருக்காங்க. 

Remote control option நமக்கு தேவையில்லை என்பதால் வேறு என்ன இருக்கு என்று பார்த்தேன்.
முதலில் ஆஃப்ல் கண்ணில் பட்டது Smart Diagnosis 
இதன் மூலம் வாஷிங்மெஷினில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். 

ஏதாவது பிரச்சினை இருந்தால் கண்டிப்பாக இதில் காட்டிவிடும் Customer Support ல் சொல்வதற்கு ஈஸியாக இருக்கும்.
இதனுடைய Diagnosis  Logs அனுப்பவும் வசதி இருக்கும் என நம்புகிறேன். 

2. Cycles Used 
எப்ப எத்தனை தடவை எந்த மோடில் வைத்து மெஷினை  பயன்படுத்தி இருக்கிறோம் என்று சொல்கிறது.இதனால் பெருசா உபயோகம் இல்லை என்றாலும் .. ஓரளவு வாஷிஙமெஷின் எவ்வளவு உபயோகிக்கிறோம் என தெரிந்து கொள்ளலாம்.‌
3. Energy Monitoring 
இந்த Graph சரியா புரியல. இன்னும் கொஞ்சம் டைம் ஓடுன அப்புறம்  இந்த Graph உபயோகம் ஆகும் என்று நினைக்கிறேன். ஆனால் போன மாசம் இவ்வளவு ஓடிருக்கு இந்த மாசம் ஏன் இவ்வளவு ஓடிருக்கு என்ற Analysis பண்ண உபயோகமாக இருக்கும்.
4. Tub Clean Coach 
இது நல்ல ஒரு ஆப்ஷன் என நினைக்கிறேன். நமக்கு எப்பவுமே ஒரு டவுட் வரும் எப்ப லாஸ்ட் டைம் டப் க்ளீன் பண்ணுணோம் என்று. இந்த ஆப்ஷன் எப்ப அடுத்த முறை க்ளீன் பண்ணணும் என்று சொல்கிறது. Notification அனுப்புனா இன்னும் சிறப்பா இருக்கும்.
5. Download Cycles
Pre-program செய்யப்பட்ட துவைக்கும் ஆப்ஷன்கள். வாஷிங்மெஷினில் 10 ஆப்ஷன்கள் உள்ளன . அது போக நிறைய option களை Download செய்து வாஷிங்மெஷினில் செட் செய்து துவைத்துக் கொள்ளலாம்.  நிறைய பேருக்கு உபயோகம் ஆகும் என நினைக்கிறேன்.
Samsung mobile la Smart Devices option ல இருந்தே washing machine access பண்ணிக்கலாம்.
நான் நினைச்ச அளவுக்கு Wi-Fi தேவையே இல்லாத ஆணி இல்ல.

Wi-Fi வைச்சதுக்கு கொஞ்சம் ரிப்போர்ட்டிங் ஆப்சன், Diagnosis மற்றும் Pre Programmed washing options கொடுத்து Justify பண்ணிருக்காங்க.

இனிமே வாஷிங் மெஷின் வாங்க போறவங்களுக்கு இந்த தகவல் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன் .
ஒரே பேஜ் ல படிக்க : tamilhollywoodreviews.com/2022/02/washin…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with H.A.L. 9000

H.A.L. 9000 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @tamilhollywood2

Sep 30, 2023
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே பால்கோவா என்ற ஒரு பெயர் உள்ளது.

சொல்லப்போனால் இந்த பால்கோவா மற்ற அனைத்தையும் மறைத்து விட்டது எனலாம்.

இதை மாற்றும் விதமாக மற்ற திண்பண்டங்கள் மற்றும் ஹோட்டல்களை பற்றிய பதிவு இது‌ 🏃🏃

கொஞ்சம் நீளமான பதிவு....

Image
Image
Image
மதுரையில் இருந்து வரும் போது ராமகிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் எதிர்ப் பக்கம் "சுந்தரம் கடை" (ஆனால் ஃபோர்டு இருக்காது) அங்க
மெதுவடை , காரா வடை, இனிப்பு அப்பம் தரமா இருக்கும்.

அப்படியே முன்னாடி வந்தா "மகாலட்சுமி ஸ்வீட்ஸ்" .
இங்கு அல்வா, பால்கோவா, பால் அல்வா, கேரட் அல்வா என அனைத்தும் ப்ரஷ்ஷா கிடைக்கும். இதைவிட இவனுக ஸ்பெஷல் என்ன வென்றால் ஏதாவது ஒரு அல்வா எக்ஸ்பெரிமென்ட் பண்ணிட்டே இருப்பாங்க. இளநீர் அல்வா, கருப்பட்டி அல்வா, நொங்கு அல்வா, மாதுளை அல்வா, பூசணி அல்வா etc., என சீசனுக்கு ஏற்ற மாதிரி.
Read 19 tweets
May 19, 2023
Tatkal Booking in Mobile App - Tips

Before Booking:

1. முதலில் IRCTC App update ஆகி லேட்டஸ்ட் வெர்ஷன்ல இருக்கானு பாருங்க (Login Problem வந்தா இதுவும் ஒரு ரீசன்)

2. Login பண்ணதுக்கு அப்புறம் Bio Metric Authentication "ON" பண்ணுங்க.

👇
3. Master List ல Passenger details சேருங்கள் .

4. IRCTC Wallet ல் தேவையான அளவு பணத்தை லோட் பண்ணி வைச்சுக்கோங்க.

5. Logout - பண்ணிட்டு Finger Print வைச்சு லாகின் பண்ணி எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக் கொள்ளுங்கள்.

👇
During Ticket Booking:

1. மொபைலை Do Not Disturb (DND) Mode ல் போடுங்கள்.

2. 9.58 /10.58 மணிக்கு மேல் லாகின் செய்வது நல்லது.

3. அதற்கு முன்னாடி லாகின் பண்ணுணா அங்க இங்க கிளிக் பண்ணி Session Expire ஆகாம பார்த்துக் கொள்ளுங்கள்

4. 9.59 / 10.59 மணிக்கு From, To , Date , Tatkal
Read 9 tweets
May 17, 2023
நேத்து டிரெயின்ல ஒருத்தர் கூட வந்தாரு 45 - 50 வயது இருக்கும். துரைப்பாக்கம் போகனும் அப்படினு சொன்னார்

என் கூட வாங்க பஸ் ஏத்தி விடுறேனு சொன்னேன். வந்தவரு திடீர்னு நான் ஆட்டோல போறேன்னு சொன்னாரு. வேண்டாம்யா அவனுக அமௌன்ட் கூட கேப்பானுக நேரா பஸ் இருக்கு அதுல போனு சொன்னாலும்
கேட்குற மாதிரி இல்ல. நீங்க பேசி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அப்படினு சொன்னார். இவனுக கிட்ட எல்லாம் பேரம் பேச பிடிக்காம தான் நானே பஸ்ல போறேன் வேணும்னா நீங்களே பேசிக்கோங்கனு அனுப்பி விட்டேன்.

போறப்பவே ஒரு ஆட்டோ ஓட்டுநர் வந்து வழிய மறுச்சுட்டார்.. நான் மெதுவாக நடந்து போய்ட்டு
இருந்தேன். 2 நிமிஷம் கழிச்சு திரும்பி பார்த்தா அவரு வேக வேகமா நடந்து வந்துட்டு இருந்தாரு.

என்னிடம் வந்து பஸ் எங்க சார் நிக்கும் என்றார். ஆட்டோல போலயா என்றேன். அவரு 850 ரூபாய் கேட்குறாரு, 700 ரூபாய்க்கு வருவாராம் என்றார்.

850 ரூபாய் வேற லெவல் 😡
Read 4 tweets
Apr 4, 2023
Day Trading - Basics

⚠️ long Thread ⚠️

இந்த போஸ்ட் Day Trading பண்ணுங்கனு சொல்றதுக்கு இல்ல. சில பேர் புதுசா டே டிரேட் பண்ணலாம்னு நெனப்பாங்க ஆன அத பத்தி எங்க படிக்கிறதுனு தெரியாம இருப்பாங்க.

ஆர்வத்துல காசு தொலைக்கவும் வாய்ப்பு இருக்கு.

#trading
இத படிச்சுட்டு போய் காசு தொலைச்சாலும் அளவோட தொலைக்கலாம்..ஏதோ கத்துக்கிட்டோம்னு திருப்தி இருக்கும்.. அத சரி பண்ண வாய்ப்பு இருக்கு.

It's not day trading recommendation post ☺️ just for awareness and learning.
முக்கியமான விஷயம் நான் ட்ரேடிங் விட்டு வெளிய வந்து 2 வருஷத்துக்கு மேல ஆச்சு. இப்ப முதலீடு பண்றதோட சரி

ட்ரேட் பண்ண சமயத்தில் பெருத்த நஷ்டம் இல்ல அது போல பெரிய லாபமும் சம்பாதிக்கவில்லை. போதுமான நேரம் ஒதுக்க முடியவில்லை மற்றும் வேலை பார்த்துக்கொண்டு ட்ரேடிங் செய்வது ரொம்பவே கஷ்டம்.
Read 21 tweets
Apr 2, 2023
Mutual Funds Investing

நேரடியா இன்வெஸ்ட்மென்ட்ல இறங்க கூடாது. முதலில் கொஞ்சம் அடிப்படைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள். மார்க்கெட், Stock market, பொருளாதாரம் என அடிப்படைகளை படிங்க.

@ZerodhaVarsity - ஒரு அருமையான தகவல் தரும் தளம்‌.
zerodha.com/varsity/
MF ல ரிஸ்க் இருக்கு. இது ஒரு awareness post.. நீங்களும் படிச்சுக்கோங்க.

நானும் Financial Advisor எல்லாம் இல்ல நானே படித்து சாதக பாதகங்களை தெரிந்து முதலீடு செய்கிறேன் அவ்வளவு தான்.

நீங்க ஒரு ஃபண்டு சொல்லி இது வாங்கலாமா என்று கேட்டால் அதுக்கு பதில் சொல்ல மாட்டேன் ☺️
Do your own research before buying anything..அதுக்கான‌ Reference & Links இந்த திரெட்ல இருக்கு.

Mutual Funds பத்தி 2 த்ரெட் முன்னாடி எழுதி இருக்கிறேன். இதையும் படித்து பாருங்கள்.

tamilhollywoodreviews.com/2021/11/mutual…

tamilhollywoodreviews.com/2021/11/mutual…

Index Funds : zerodha.com/varsity/chapte…
Read 4 tweets
Mar 28, 2023
MLM/Ponzi விழிப்புணர்வு பதிவு - Repost

இந்த டாபிக் பத்தி நேத்து பேச்சுகள் வந்தது. இதுல இன்வெஸ்ட் பண்ணிருக்கேன் ரிட்டர்ன்ஸ் வந்ததுனு வேற சிலர் சொன்னார்கள்.

அதுனால இது எப்படி செயல்படுகிறது என்று பாக்கலாம்.

இது ஒரு வகையான மக்களை ஆசை காட்டி ஏமாற்றும் வழி

#mlm #ponzischeme
இந்த பேரை பெரும்பாலும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்படி இல்லனா Pyramid Scheme, MLM Scheme னு ஏதாச்சும் ஒரு பேருல சுத்திக்கிட்டு இருக்கும்.

இந்த Ponzi அப்படினு எப்படி பேர் வந்துச்சு ?
இது இன்னிக்கு நேத்து ஆரம்பித்தது இல்லை.1869 களிலேயே ஜெர்மனியில் இந்த மாதிரி ஸ்கீம் நடத்தி
ஏமாத்துனாதா ரெக்கார்ட்ஸ் இருக்கு.

1920 களில் இத்தாலியை சேர்ந்த Charles Ponzi னு ஒருத்தர் தான் அமெரிக்காவில் பக்காவா ப்ளான் பண்ணி லம்ப்பா காச அடிச்சு மாட்டிக்கிட்டான். அவரோட ஞாபகார்த்தமாக தான் Ponzi Scheme னு செல்லமாக அழைக்கப்படுகிறது.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(