" Can You fall in Love With Someone You Haven't Met? "
" நீங்கள் சந்திக்காத ஒருவரை காதலிக்க முடியுமா? "
ஆம் முடியும் என்கிறது இந்த Lunch Box, அதெப்டின்னு கேக்குறீங்களா!?
வாங்க கதைக்குள்ள போவோம்.
தன்னோட கணவனுக்கு லஞ்ச் செஞ்சு டப்பவாலா கிட்ட கொடுத்து அனுப்புற ஒரு நடுத்தர வயது குடும்ப பெண் தான் இலா (நிம்ரத் கர்).
(அதென்னடா டப்பவாலானு யோசிக்கிறீங்களா வட நாட்ல ஆஃபீஸ் போற ஆண்களுக்கு வீட்ல இருந்து சாப்பாடு கலெக்ட் பண்ணி ஆஃபீஸ்ல கொண்டு போய் சேக்குறவங்க
தான் டப்பாவாலா.)
இன்னொரு பக்கம் மனைவியை இழந்த 60 வயது மிக்க ஒரு பெரிய ஆள் தான் சாஜன் ஃபெர்னாண்டஸ் (இர்ஃபான் கான்).
ஒரு நாள் நம்ம இலா செஞ்சு அனுப்புற லஞ்ச் பாக்ஸ் காலியா வீட்டுக்கு வந்ததை நெனைச்சு சந்தோஷப்பட்றாங்க. வீட்டுக்கு வந்த கணவன் கிட்ட சந்தோசமா அதை கேட்க்கும் போது தான்
தெரியுது அனுப்புன லஞ்ச் அட்ரஸ் மாறி போய்ருக்குனு, அப்படி தவறா போன லஞ்ச் பாக்ஸ் நம்ம சாஜனுக்கு போய் சேருது.
அடுத்த நாள் அந்த லஞ்ச் பாக்ஸ்ல ஒரு லெட்டர் எழுதி அனுப்புறாங்க இலா, அதை படிச்சி பாத்துட்டு நம்ம சாஜனும் பதில் லெட்டர் அனுப்புறாரு. இப்படி ஒரு லஞ்ச் பாக்ஸ் லெட்டர் மூலமா
ஆரம்பிக்கிற இவங்க உறவு எங்க போய் முடியுது? அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு? அந்த லெட்டர்ல அப்படி என்ன பேசிக்கிறாங்கன்றத படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
1 மணி நேரம் 40 நிமிடம் தான் படம், அப்படியே கவிதை படிச்ச மாதிரி அழகா இருக்கும் 😍. நாலு முக்கியமான கேரக்டர் வச்சி அதை ரசிக்கும் படி
தந்திருக்காங்க.
இலாவா வர்ற நிம்ரத் கர், தன்னோட சமையலுக்கு கணவன் கிட்ட இருந்து பாராட்டு பெறனும்னு ஏங்குறதாகட்டும், முன்ன பின்ன தெரியாத ஒருத்தர் கிட்ட தன்னோட வாழ்க்கையை பத்தி பகிர்ந்துகிறதாகட்டும், அவர் கிட்ட இருந்து வர்ற லெட்டர்க்காக காத்திருக்கும் போதாகட்டும் அவ்ளோ அழாக,
சிம்பிளா ரசிக்கும் படி நடிச்சிருக்காங்க 😍👌🏼👏🏼.
சாஜனாக இர்ஃபான் கான், அந்த லஞ்ச் பாக்ஸ்க்காக வெயிட் பன்றதும், வந்தவுடனே ஆபிஸ் டைம்லயே அதை ஓபன் பண்ணி ஸ்மெல் பன்றதாகட்டும். முன்ன பின்ன தெரியாதவங்களுக்கா, அவங்களுக்கு என்ன ஆயிருக்குமோனு ஏங்கி தவிக்கிறதாகட்டும், வந்த லெட்டர சுத்தி
முத்தி யாரும் பாக்குறாங்களானு பாத்துட்டு அதுக்கு அப்பறம் படிச்சி பாத்துட்டு புன்னகைக்குறதும், கூட வேலை செய்யர ஒருத்தர் செஞ்ச தப்ப தாந்தான் செஞ்சேனு சொல்லி அவங்களை காப்பாத்துறதாகட்டும் " ச்ச என்ன மனுஷன் யா " அப்படின்ற அளவுக்கு அந்த சாஜன் ஃபெர்னாண்டஸாவே வாழ்ந்து ரசிக்க வைக்கிறார்
மனுஷன் 😍👏🏼👌🏼.
கடைசி வரை முகம் காட்டாத இலாவோட மேல் வீட்டு ஆன்டி, நவாசுதீன் சித்திக் ன்னு அனைவரும் ரசிக்கும் படி நடிச்சிருக்காங்க 👏🏼👌🏼.
பின்னணி இசையும், ஒளிப்பதிவும் ரசிக்கும் படி இருக்கு 👌🏼.
இப்படி கவிதை மாதிரி இருக்க இந்த படத்தை எப்டி எவ்ளோ நாளா மிஸ் பன்னேனு தெரியல 😓🤧.
இணைப்பு வேண்டும் என்பவர்கள் எனை ஃபாலோ செய்து ரிப்ளை செய்யவும்.
கேரளால இருக்க "கட்டாடி TMT ஸ்டீல் கம்பெனி" யோட ஓனர் தான் ஜான் கட்டாடி (மோகன்லால்), அவரோட மனைவி அன்னம்மா கட்டாடி (மீனா), அவரோட பையன் ஈஷோ ஜான் கட்டாடி (பிரித்வி ராஜ்). இவங்க ஒரு சந்தோசமான குடும்பமா இருக்காங்க.
ஜான் கட்டாடியோட நெருங்கிய நண்பர் தான் குரியன் மலியேக்கள் (லாலு அலெக்ஸ்) இவரு ஒரு விளம்பர கம்பெனி நடத்திட்டு வர்றாரு, இவரோட மனைவி எல்சி குரியன் (கனிகா), இவரோட பொண்ணு அன்னா (கல்யாணி பிரியதர்ஷன்). இவங்களும் ஒரு சந்தோசமான குடும்பமா தான் வாழ்ந்து வர்றாங்க.
குரியன் தன்னோட பொண்ணுக்கு
கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்லிட்டே இருக்காரு, அதுக்கு அவரு பொண்ணு அன்னா எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லி மறுத்துட்டே இருக்காங்க.
இவங்க ரெண்டு குடும்பமும் இவங்க ஃபேமிலி டாக்டர் பையனோட கல்யாணத்துக்கு போறாங்க. அங்க வச்சி அன்னாவ பாத்ததும் ஜான் கட்டாடி மனைவி அன்னாக்கு
படத்தோட ரிவ்யூ போற முன்னாடி படம் பாக்கதவங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இது ஒரு டைம் லூப் திரைப்படம் என்பதால், டைம் லூப் என்றால் என்ன என்பதை நன்கு தெரிந்துக்கொண்டு அதன் பிறகு படம் பாருங்கள். டைம் லூப் பற்றிய புரிதல்
இல்லாமல் படத்திற்கு சென்று விட்டு, வந்த காட்சியே வருகிறது நல்லாவே இல்லை என்று ஒரு நல்ல படத்தை பற்றி தவறான விமர்சனம் செய்திட வேண்டாம் 🙏🏼.
#Maanaadu
நண்பரோட காதலை சேர்த்து வைப்பதற்காக துபாயில் இருந்து இந்தியா வருகிறார் #STR , காதலை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும் வேளையில்
எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தால் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, இறந்தும் விடுகிறார்கள். அங்கிருந்து துவங்குகிறது நாயகன் #STR க்கு டைம் லூப் ♾️. அது ஏன் நடக்கிறது? இவர்கள் சந்தித்த பிரச்சனை என்ன? நாயகனுக்கு ஏன் டைம் லூப் உருவாகிறது? இறுதியில் அந்த டைம் லூப்பில் இருந்து எப்படி
எல்லோரும் அரைச்சு ஓஞ்ச மா(ரிவ்யூ)வ தான் நா இன்னைக்கு அரைக்கப் போறேன், ஏன்னா நா இப்போ தான் பாத்து முடிச்சேன் அதான் 😌.
சின்ன பசங்க விளாட்ற விளையாட்ட பெரியவங்களோட, பிரைஸ் மணி வச்சி, கொஞ்சம் சீரியஸா
விளையாண்டா எப்டி இருக்கும்?! அதான் இந்த #SquidGame .
பணத்தேவை இருக்குற கொஞ்சம் நடுத்தர மக்களா பாத்து டார்கெட் பண்ணி இந்த கேம் குள்ள இழுக்குறாங்க. அப்படி அவங்கள இந்த கேம் குள்ள இழுக்க அதுக்கு ஒரு சின்ன கேம வச்சி அதுல ஜெய்ச்சா இவளோ பணம் தர்றேன்னு சொல்லி ஆரம்பிக்கிறாங்க.
அவங்களும் பணத்தேவைக்காக ஒத்துக்கிட்டு விளாட்றாங்க, அதுல ஜெய்ச்சி முடிச்சோன இந்த மாதிரி நெறைய விளையாட்டு இருக்கு அதுல நீங்க கலந்துக்கிட்டு ஜெயிச்சா இந்த மாதிரி நெறைய காசு சம்பாதிக்கலாம்ன்னு சொல்றாங்க. ஒத்துக்க மறுத்தோன ஒரு கார்ட் கைல கொடுத்து நீங்க மனசு மாறுனா இந்த நம்பர்க்கு கால்