தந்தைப் பெரியாரால் "சுதந்தரத் தமிழ்நாடு ஏன்?" என்று 'குடியரசு வெளியீடு' மூலம் 1960ஆம் ஆண்டில் வெளியிட்டப்பட்ட நூலின் நிமிர் வெளியீட்டின் மறுபதிப்பிலிருந்து.
நாங்கள்தானே இந்த ஜாதி இழிவு, மதம், சாஸ்திரம், புராணம் இவைகளைப் பற்றியும் இந்தப் பார்ப்பனர்கள் அக்கிரமங்களைப் பற்றியும் துணிந்து எடுத்துச் சொல்லிக்கொண்டு வருகிறோம். மற்றவர்கள் யாரும் இதைப் பற்றி சிந்திப்பதே இல்லை.
2/n
அந்தக்கவலை இருப்பதாக கூட தெரியவில்லையே. இப்போது என்கிற சட்டம் இந்து லா(Hindu Law) என்றால் அது மனு தர்மம்தான். அதேபோல் இந்திய அரசியல் சட்டம் என்றால் அதுவும் மனு தர்மம் தான்.
3/n
நாங்கள் இருந்து கூப்பாடு போடும் போது மறைவாக உள்ள இவைகள், நாங்கள் இல்லாவிட்டால் வெளிப்படையாகவும் வந்துவிடும்? அப்போது அசல் மனுதர்ம ஆட்சி தானே நடக்கும்?
4/n
நாம் கேட்பது தனிநாடே:
இன்னொன்றையும் விளங்க வேண்டும் அதாவது முன்பு திராவிட நாடு கேட்டார். இப்போது அதையும் விட்டு விட்டார். தமிழ்நாடு கேட்கிறார் என்று சிலர் சொல்லுவார்கள். இது பெரும்பாலும் குறும்புக்காகக் கேட்கப்படுகின்ற கேள்வியாகும்.
5/n
தமிழ் நாடு திராவிட நாடு தான். முன்பு தெலுங்கன், மலையாளி, கன்னடியன் எல்லாம் நம்முடன் சேர்ந்து இருந்தான். அவர்கள் எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படி நாம் திராவிட நாடு என்று சொன்னோம்.
6/n
இப்போது அவனவன் பிரிந்து அவனவன் தனிநாடு பெற்று இருக்கின்றான். 'தமிழ் நாடு' என்று சொல்லும்படியாக இப்போது இருக்கிறது. ஆகவே தமிழ் நாடு என்று சொல்லுகிறோம்.
7/n
கூட்டாட்சியின் கேடுகள்:
இப்போது திராவிட நாடு தான், மற்ற நாடுகளும் சேர்ந்ததுதான் வேண்டும் என்ற உணர்ச்சி உண்டா, ஏற்பட்டிருக்கிறதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படியே திராவிட நாடு பிரிந்தால் நமக்கு என்ன லாபம்?
8/n
இன்று எப்படி தமிழ்நாடு பார்லிமெண்டில் மற்ற 14 நாட்டுக்கும் அடிமையாக இருக்கிறதோ அதேபோல், நாளை மற்ற மூன்று நாடுகளுக்கும் அடிமையாகத் தான் இருக்கவேண்டி வரும்.
9/n
தமிழ் நாடு 3 கோடி ஜனத்தொகை. மலையாளி 1.25 கோடி, கன்னடியன் 2 கோடி, ஆந்திராக்காரன் 3.5 கோடி. இவர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன நிலை? மற்றவர்கள் அவன் 6.75 கோடி. தமிழன் 3 கோடி. நாம் மற்றவர்களுக்கு மைனாரிட்டியாகத்(Minority) தானே இருப்போம்.
10/n
அவர்கள் 3 பேரும் சேர்ந்து பார்லிமென்ட் மெம்பர்கள் 87 பேர்கள். நம் தமிழ்நாட்டிற்கு 41 பேர்கள்தான். அதே மாதிரி சட்டசபை மெம்பர்கள். அவர்கள் மூன்று பேரும் சேர்ந்தால் சுமார் 600 பேர்கள். நமக்கு 207 தான்.
11/n
மற்றபடி கடவுள், மத சாஸ்திர இழிவு ஒழிப்பு உணர்ச்சியோ, இந்தியை எதிர்க்கும் உணர்ச்சியோ, அந்த நாட்டுக்காரர்களுக்கு கிடையாது. அப்புறம் எதற்காக ஒரே ராஜ்யம்? எதற்காக கூட்டுவேணும்?
12/n
திராவிட நாடு கேட்பது நமக்கு இடையூறு செய்யவே:
ஆகவேதான் சும்மா திராவிட நாடு என்று சொல்லுவது நம்முடைய காரியத்தைக் கெடுக்கத்தான் பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது என்பதை அறிய வேண்டும்.
13/n
பர்மாவை, பாகிஸ்தானைப் பார்! :
நேற்று பர்மா பிரிந்ததே என்ன கெட்டுப்போச்சு? நம்முடைய நாட்டில் நாட்டுக்கோட்டை செட்டிமார்களுடைய நிலத்தையெல்லாம் பிடுங்கிக் கொண்டு ஓடுங்கள் என்று தைரியமாக அவன் விரட்டவில்லையா? அங்கே 2 கோடி மக்கள் தானே இருந்தனர்.
14/n
பாகிஸ்தான் பிரிந்ததே அது ஆளப்படவில்லையா? எதிலே ஓட்டை வந்தது? ஆகவேதான் தோழர்களே, நம்மைப் பிடித்துள்ள நோய்களுக்கெல்லாம் ஒரே மருந்து, நாட்டுப் பிரிவினை தான். அதை நீங்கள் நன்றாக மனதில் கொள்ளவேண்டும்.
15/n
இந்தியா படத்தைக் கொளுத்துங்கள்:
ஜூன் 5-ந்தேதி இந்தியா படத்தை சுட்டுப் பொசுக்கிச் சாம்பலாக்க வேண்டும். இப்போது நெருப்புப் பிடித்தால் அது அவ்வளவு சுலபமாக அணைந்து விடாது. அருமையான சந்தர்ப்பம் இது. இந்த வாய்ப்பை நீங்கள் நழுவ விட்டு விடக்கூடாது.
16/n
இப்போதே இந்த கருத்து ரொம்ப பரவிவிட்டது. இதன் மூலம்தான் உலகுக்கு இந்த டெல்லி ஆட்சியை வெறுப்பவர்கள் தமிழ் நாட்டில் இவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்பது புரியும்.
17/n
வெற்றியே காணும் எங்கள் கிளர்ச்சிகள்:
நாங்கள் எவ்வளவோ கிளர்ச்சிகளை இதுவரை நடத்தி இருக்கிறோம். இராமாயண கீதை எரிப்பு, பிள்ளையார் உடைப்பு, இராமன் பட எரிப்பு, இந்தி போர்டு அழிப்பு, பிராமணாள் பலகை அழிப்பு இவை அத்தனை கிளர்ச்சிகளும் வீண் போகவில்லை.
18/n
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பலன் தந்திருக்கிறது.
எங்கள் கிளர்ச்சியினால் இதுவரை, யாருக்கும் எந்தவித நஷ்டமும் ஏற்பட்டதில்லை. வீதியில் போகிறவனுக்கு ஒரு சிறு அடி கூட விழுந்ததில்லை. பொதுச் சொத்துக்கும் நாசம் விளைந்ததில்லை.
19/n
பொது மக்களுக்கு எந்த வகையிலும் தீங்கோ கேடோ ஏற்பட்டதில்லை, அந்த வகையில்தான் நாங்கள் கிளர்ச்சிகள் நடத்துகிறோம். யோசனை செய்து பாருங்கள்."
இந்தியை தமிழர்கள் மீது திணிக்கும் முயற்சி நடக்கும் போதெல்லாம் ஒரு மொழி என்பதற்காக மட்டும் இந்தியை நம் முன்னோர்கள் எதிர்க்கவில்லை. அதன் பின்னால் இருக்கும் ஆதிக்கத்திற்காகத்தான் எதிர்த்தார்கள்.
உதாரணமாக 1920இல் யங் இந்தியா பத்திரிக்கையில் எழுதிய காந்தி
”திராவிடர்கள் சிறுபான்மையினர். ஆகவே இந்தியாவில் இருக்கிற பிறபகுதிகளில் உள்ளவர்கள் திராவிடர்களுடன் பேசவேண்டுமென்றால் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றை கற்றுக்கொள்ளவேண்டும். அது சிரமம்.
அதற்கு பதிலாக திராவிடர்கள் தேசிய மொழியான இந்தியை கற்றுக்கொள்ளலாம். அதுதான் தேசிய பொருளாதாரத்திற்கு உகந்தது”.
இதில் மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றோடு முடிந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் காந்தி ’தேசிய பொருளாதாரத்திற்கு நல்லது’ என்கிறார். அது என்ன தேசிய பொருளாதாரம்.
இந்தியை தமிழர்கள் மீது திணிக்கும் முயற்சி நடக்கும் போதெல்லாம் ஒரு மொழி என்பதற்காக மட்டும் இந்தியை நம் முன்னோர்கள் எதிர்க்கவில்லை. அதன் பின்னால் இருக்கும் ஆதிக்கத்திற்காகத்தான் எதிர்த்தார்கள்.
உதாரணமாக 1920இல் யங் இந்தியா பத்திரிக்கையில் எழுதிய காந்தி,
”திராவிடர்கள் சிறுபான்மையினர். ஆகவே இந்தியாவில் இருக்கிற பிற்பகுதிகளில் உள்ளவர்கள் திராவிடர்களுடன் பேசவேண்டுமென்றால் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றை கற்றுக்கொள்ளவேண்டும்.
அது சிரமம். அதற்கு பதிலாக திராவிடர்கள் தேசிய மொழியான இந்தியை கற்றுக்கொள்ளலாம். அதுதான் தேசிய பொருளாதாரத்திற்கு உகந்தது”.
இதில் மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றோடு முடிந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் காந்தி ’தேசிய பொருளாதாரத்திற்கு நல்லது’ என்கிறார்.
"ஈழத்தமிழரை இலங்கைத் தமிழர் என்று சொல்லும் வழக்கைத் தவிர்க்கக் கோரும் வேண்டுகோளாகத் தான் தோழர் திருமுருகன் முன்வைத்தார்.
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்; இந்த மேடையில் வீற்றிருக்கும் தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு சக்திகளின் பங்களிப்புப் பற்றி வரலாறு பேசும்."
1/
"காங்கிரஸ் ஆனாலும், பாஜக ஆனாலும் ஈழத்திற்கு எதிராகத்தான் இந்தியரசு இருக்கிறது என்பதை, இன்றளவும் தனி ஈழக் கோரிக்கையில் எள்ளளவும் மாற்றுக் கருத்தின்றி பயணிக்கும், இன்று ஒரே மேடையில் கூடியிருக்கும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஈழ மக்களுக்கான நிரந்தரத் தீர்வாக நாங்கள் கேட்பது,"
2/
"தனித்தமிழ் ஈழம், இனப்படுகொலைக்கான சர்வதேச நீதிமன்ற விசாரணை.
இதனை மறுத்து 13 ஆம் சட்டத்திருத்தை நடைமுறை முறைப்படுத்த முயலும் கயமைத்தனத்தை இம்மாநாடு முற்றிலுமாக நிராகரிக்கிறது."
“என் பிறவி காரணமாக, என் இழிவுக் குக் காரணமாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதும், என் இன மக்களாகிய தமிழர்களுடைய, என்னுடைய, தாய்நாடான தமிழ்நாட்டைப் பார்ப்பன பனியா அடிமைத் தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழவைக்க..
👇🏼
..வழி செய்வதுமான ‘தனித்தமிழ்நாடு’ பெறுவது என் உயிரினும் மேலான கொள்கை!”
இது பெரியார் முழங்கியது. சாதியத்தால் சனாதனப் பிடியில் ஊரிப்போன தமிழர்க்கான நாடாக சாதியற்ற சமவுடைமை (Socialist) நாட்டையே பெரியார் முன்வைத்தார்.
👇🏼
பிற்போக்குத்தனம் ஊறிப்போன இந்தியத் துணைக்கண்டத்தின் தேசியயினங்களின் விடுதலைக்கு, வெறும் அரசியல்ப்புரட்சியால் இன விடுதலையடைந்திட முடியுமென்ற பொதுடைமைத்துவம், உதவாது; அதற்குமுன் சாதியிலிருந்து விடுதலைப் பெற்றால் மட்டுமே சமவுடைமையை நோக்கிச் செல்ல முடியுமென்றார்.
விடுதலைப்புலிகளின் ஈழவிடுதலை அரசியலுக்கும் இந்தியாவிலுள்ள தமிழ்நாடு அரசியலுக்கும் தொடர்பில்லை என்போர் கவனத்திற்கு!
தங்களுக்கு புவிஅரசியலின் மேல் நாட்டம் இல்லாமல் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இந்துத்துவ பாசிசத்தின் அகோர வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இது மிக அவசியமானது.
👇🏼
ஜூன் 1-ஆம் தேதி திமுகவை மிரட்டும் தொனியில் ராஜபக்சே அரசுடன் இணக்கமாகப் போகச்சொன்ன சுப்பிரமணியசாமியின் பதிவை கவனிக்க. இதற்கு பின்னர் நடந்தேறியுள்ள அரசியல் நகர்வுகளைப் புரிந்துகொள்வதென்பது, இந்துத்துவ பாசிசத்தின் அதிகார முகமான இந்தியப் பார்ப்பனியத்தின் நோக்கத்தை
👇🏼
..எதிர்ப்பதற்கான அடிப்படைத் தேவை என்ற இடத்தில்தான், தலைவர் பிரபாகரன் மீதான அவதூறுகளை உடைக்க வேண்டிய இடம் வருகிறது. புலிகளை விமர்சனமே செய்யக்கூடாதா என்னும் கேள்வி எழும் எனில், யார் பார்வையில் அதை விமர்சனம் செய்கிறீர்கள் என்பதே அதற்கு பதில்.