எவ்வளவு ஆயுள் காப்பீடு coverage வாங்குவது என்பது குழப்பமான ஒன்று. பல காப்பீட்டாளர்கள் death benefits-ஐ பொறுத்தவரை பலவிதமான காப்பீடுகளை வழங்குகிறார்கள்.
இப்படிபட்ட ஒரு சந்தையில், நுகர்வோர் தங்களுக்கு எவ்வளவு கவரேஜ் சரியானது என்பதை எவ்வாறு தீர்மானிக்க முடியும்?
அவர்களின் ஆயுள் காப்பீட்டுத் தேவைகளைக் கணக்கிடுவதற்கான சிறந்த வழி ஒரு எளிய அணுகுமுறை உள்ளது. இது DIME முறை என்று அழைக்கப்படுகிறது.
DIME முறையானது ஆயுள் காப்பீட்டு death benefit எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கணக்கிடுவதற்கான பொதுவான அணுகுமுறையாகும்.
கடன்: அகால மரணத்திற்குப் பிறகு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தீர்மானிக்க, ஏற்கனவே உள்ள அனைத்துக் கடனையும் சேர்க்க வேண்டும்.
எடுத்துகாட்டாக ஒரு 10 லட்சம் கடன் என்று வைத்துக்கொள்வோம்.(வட்டியும் சேர்த்து)
வருமானம்: தங்கள் இறப்புக்கு பின் எத்தனை ஆண்டுகள் தனது குடும்பத்தினருக்கு எவ்வளவு வருமானம் அவசியம் என்பதையும் தீர்மானிக்க வேண்டும்.
உதாரணமாக, பாலிசிதாரரின் 5,00,000 ஆண்டு வருமானத்தை இன்னும் 15 ஆண்டுகளுக்கு அவரது குடும்பம் நம்பியிருந்தால், 75,00,000 கவரேஜ் தேவை.
அடமானம்: பலர் வீட்டு கடன் உள்ளவர்களாக உள்ளனர், எனவே மீதமுள்ள அடமான நிலுவையை கணக்கில் எடுத்து, வாங்கிய ஆயுள் காப்பீட்டுத் தொகையுடன் சேர்க்க வேண்டும்.
உதாரணமாக, 25 லட்சம் வீட்டுக்கடன் மீதம் உள்ளது என எடுத்துக்கொள்வோம்.
கல்வி: பிள்ளைகளின் கல்விச் செலவு எவ்வளவு என்று கணக்கிட்டு, அதை கவரேஜில் சேர்க்க வேண்டும்.
உதாரணமாக, 20 லட்சம் கல்வி செலவு என எடுத்துக்கொள்வோம்.
மொத்தம் ஒரு கோடியே முப்பது லட்சத்திற்கு coverage எடுக்க வேண்டும்.
இது Time value of money யை குறிப்பில் கொள்ளாமல் எடுக்க பட்ட ஒரு உதாரணம், Time value of money மற்றும் inflation கணக்கு செய்தால் இந்த தொகை மாறுபடும்.
1.3 கோடிக்கு 28 வயதுடைய ஒருவர் மாதம் 1000 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டும் 60 வயது வரை.