ஒரு பெண் ஒரு மகானிடம்... "என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்துகொள்ளவதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது, என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!" என்றாள்...
ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு மகான் சொல்கிறார்...
"ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30நாள் உணவு கொடு... 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!" என்றார்...
குழப்பத்தில் இருந்தவள், "தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் போதும்!" என்ற எண்ணத்தில் தைரியத்துடன்...
மகான் சொல்லியது போல... அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒழிந்து கொண்டாள்... மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இறை கிடைக்காத ஒரு புலிக்கு அந்த உணவு கிடைத்தது...
இப்படியே தினமும் மாமிசம் வைப்பது அந்த நேரத்தில் சரியாக புலி வருவது... என நாட்கள் பல ஓடியது... 20நாட்களுக்கு பிறகு அப்பெண் மாமிசம் வைக்கும் அதே இடத்தில் புலி படுத்திருந்தது...
இப்பெண்ணை கண்டு புலி ஏதும் செய்யவில்லை... பணிவுடன் அப்பெண்ணிடம் பணிந்து போனது... மாமிசத்தை வைத்துவிட்டு அவள் விருட்டென ஓடியேவிட்டாள்... 30வது நாளில் புலியிடமே தைரியமாக சென்று மாமிசம் வைத்தாள், உணவு உண்ட புலி அப்பெண்ணின் மடியிலேயே பாசமாக படுத்துக்கொண்டது...
31வது நாளில் அப்பெண்ணின் பின்னாலே அந்த புலி ஊருக்குள் வந்துவிட்டது புலியை கண்டு மக்கள் தெறித்து ஓட அப்பெண்ணிற்கோ பயமில்லை அந்த புலி பூனை போல அவள் காலை சுற்றி சுற்றி வந்தது,
இது என்ன சோதனை என்று முழி பிதிங்கியவள்... நேராக மகானை சந்திக்க வந்தாள், புலியுடன் வந்த பெண்ணை பார்த்தவர்கள் ஆங்காங்கே தெறித்து ஓடீவிட்டனர்...
"பார்த்தீர்களா குரு! பிரச்சினையை தீர்க்க நான் உங்களிடம் வந்தேன். இப்போது மேலும் ஒரு புதிய பிரச்சினையை எனக்கு உருவாக்கிவிட்டீர்கள், இந்த புலி பூனையாகவே மாறிவிட்டது என் காலை சுற்றி சுற்றி வருகிறது!" என்றாள்... மென்மையாக சிரித்த அந்த மகான்...
"ஒரு உயிரை கொன்று உண்ணும் இந்த கொடிய விலங்கையே உன் அன்பினால் பூனையாக மாற்றிவிட்டாய், உன் கணவர் இந்த புலியை விடவா கொடிய குணம் கொண்டவர்!" என்றார்.
மகானின் சொல்லில் உண்மை அறிந்தவள், அன்புதான் எல்லாவற்றையும் எல்லோரையும் மாற்றிவிடும் என்பதை உணர்ந்தாள்.
மகாவிஷ்ணு, பரசிவன் இருவரில் யார் பெரியவர்? என்பதில் எழுந்த வாதத்தின் முடிவில் வியாசருக்கு கிடைத்த சாபத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
காசி திருத்தலத்தில் கூடி இருந்த முனிவர்களுக்கு இடையே ஒரு சர்ச்சை எழுந்தது. மகாவிஷ்ணு, பரசிவன் இருவரில் யார் பெரியவர்? என்பதில் எழுந்த வாதம் அது. இரு தரப்பினரும் வியாசரை நோக்கி வணங்கி, ‘தவ சீலரே! நீங்கள் சொல்லுங்கள். பரம்பொருள் விஷ்ணுவா? சிவனா?’ என்றனர்.
வியாச முனிவரும், ‘வேதங்கள் எல்லாம் பரம்பொருள் என்று அழைப்பது மகாவிஷ்ணுவைத் தான். எனவே அவர் தான் பரம்பொருளாக இருக்க முடியும்’ என்று தன் கருத்தை தெரிவித்தார்.
இம்மாநிலத்திற்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 260-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.
இதையடுத்து நேற்று (மார்ச் 24) நடந்த பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் , சட்டசபை கட்சித்தலைவராக ஒருமனதாக தேர்வு பெற்றார். இன்று (மார்ச் 25) முதல்வராக பதவியேற்கிறார்.
நாகர்கோவில் அருகே உள்ள மண்டைக்காட்டில் பகவதி அம்மன் அருள்புரிகிறாள்.தலை வலியால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சரிசிமாவு,சர்க்கரை,வெல்லம் சேர்த்து மண்டையப்பம் எனும் பிரசாதத்தை செய்து இந்த அம்மனுக்குப் படைக்க தீரா தலை வலியும் நீங்கிவிடும்.
🙏🇮🇳1
சிவகங்கை நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி கண் சம்பந்தமான நோய்களைத் தீர்த்தருள்கிறாள்.
கோவை பெருமாநல்லூரில் கோவில் கொண்டுள்ள கொண்டத்துக்காளியம்மன்,சருமத்தில் ஏற்படும் நோய்களை நீக்கியருள்கிறாள்.
🙏🇮🇳2
திருவிடைமருதூரில் உள்ள வனதுர்க்கா பரமேஸ்வரி அம்பிகை,குழந்தை பிறப்பில் உள்ள தடைகளை நீக்கி,குழந்தை வரம் தருகிறாள்.
சென்னை- திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள எல்லம்மனுக்கு சர்க்கரைக் காப்பு செய்து வழிபட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ரொம்ப நாட்களாகவே பாண்டவ சகோதரர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
“நம்முடைய அண்ணன் தர்மர் தர்மதேவனின் புதல்வர். தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும், தானத்தில் சிறந்தவன் என்ற பெயர் கர்ணனுக்குப் போனதெப்படி?” என்பதுதான் அந்த ஐயம்.
இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன், ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார். தங்க மலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார்.
பாண்டவர்களை நோக்கி, “இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று இனி உலகம் சொல்லும்!” என்று கூறினார்.
தங்கள் நெடுநாள் பிரச்னைக்கான தீர்வாகவே இதனைப் பார்த்தார்கள் பாண்டவர்கள்.