மகாவிஷ்ணு, பரசிவன் இருவரில் யார் பெரியவர்? என்பதில் எழுந்த வாதத்தின் முடிவில் வியாசருக்கு கிடைத்த சாபத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
காசி திருத்தலத்தில் கூடி இருந்த முனிவர்களுக்கு இடையே ஒரு சர்ச்சை எழுந்தது. மகாவிஷ்ணு, பரசிவன் இருவரில் யார் பெரியவர்? என்பதில் எழுந்த வாதம் அது. இரு தரப்பினரும் வியாசரை நோக்கி வணங்கி, ‘தவ சீலரே! நீங்கள் சொல்லுங்கள். பரம்பொருள் விஷ்ணுவா? சிவனா?’ என்றனர்.
வியாச முனிவரும், ‘வேதங்கள் எல்லாம் பரம்பொருள் என்று அழைப்பது மகாவிஷ்ணுவைத் தான். எனவே அவர் தான் பரம்பொருளாக இருக்க முடியும்’ என்று தன் கருத்தை தெரிவித்தார்.
சிவனிடம் பக்தி கொண்ட முனிவர்கள் சிலர், இந்தக் கருத்தை ஏற்க மறுத்தனர். ‘வியாசரே! உங்களுடைய கருத்தை காசி விஸ்வநாதர் சன்னிதி முன்பாக வைத்து கூறுங்கள், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்’ என்றனர்.
வியாசரும் கங்கை நதியில் நீராடி, விஸ்வநாதரின் சன்னிதி முன்பு நின்று, தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்தி, ‘பரம்பொருள் என்பவர் விஷ்ணுவே’ என்று உரக்க முழங்கினார்.
ஈசனின் சன்னிதி முன்பு காவல் புரிந்த நந்தியம்பெருமான், இந்த வார்த்தையைக் கேட்டு ஆத்திரம் அடைந்தார். ‘ஆதி பரம்பொருளான ஈசனின் சன்னிதி முன்பாக நின்று, விஷ்ணு தான் பரம்பொருள் என்கிறாயா?’ என்றவர், ‘உன்னுடைய இரு கைகளும், நாவும் நின்று போகட்டும்’ என்று சபித்தார்.
அவ்வளவு தான்! வியாசரால் தலைக்கு மேலே தூக்கிய கைகளை கீழே இறக்க முடியவில்லை. பரம்பொருள் விஷ்ணுவே என்று உச்சரித்த நாவால் மேற்கொண்டு எந்த வார்த்தையும் பேச முடியவில்லை.
செய்வதறியாது திகைத்த வியாசர், ‘வேதங்கள் எடுத்துரைத்த தாங்கள் தான் பரம்பொருள் என்று நான் கூறியது தவறா?’ என்று விஷ்ணுவை நோக்கி தியானித்தார்.
அவர் முன்பு தோன்றிய மகாவிஷ்ணு, ‘வேதங்கள் நான் தான் பரம்பொருள் என்று கூறினாலும், அருட்சக்தியாகிய சிவன் எங்கும் வியாபித்து இருப்பதால், அவரே ஆதி பரம்பொருள்’ என்று கூறி மறைந்தார்.
இதையடுத்து வியாசர், சிவபெருமானை நோக்கி தியானித்தார். அவர் முன் தோன்றிய ஈசன், ‘நீவிர்.. நந்தியிட்ட சாபம் நீங்க, திருப்பேரூர் சென்று வழிபடுங்கள்’ என்றார்.
வியாசரும் திருப்பேரூர் வந்து காஞ்சி நதியில் நீராடி, ஆதி அரசம்பலவாணரை வழிபட்டு மனம் உருகி தியானித்தார்.
அப்போது அவரது சாபம் நீங்கி, தலைக்கு மேல் இருந்து கைகள் கீழிறங்கியது. நாவும் வார்த்தைகளை உச்சரிக்கத் தொடங்கியது. ஆதி பரம்பொருளின் மகிமையை உணர்ந்த வியாச முனிவர், அவரை துதித்து வணங்கினார்.
இம்மாநிலத்திற்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 260-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.
இதையடுத்து நேற்று (மார்ச் 24) நடந்த பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் , சட்டசபை கட்சித்தலைவராக ஒருமனதாக தேர்வு பெற்றார். இன்று (மார்ச் 25) முதல்வராக பதவியேற்கிறார்.
நாகர்கோவில் அருகே உள்ள மண்டைக்காட்டில் பகவதி அம்மன் அருள்புரிகிறாள்.தலை வலியால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சரிசிமாவு,சர்க்கரை,வெல்லம் சேர்த்து மண்டையப்பம் எனும் பிரசாதத்தை செய்து இந்த அம்மனுக்குப் படைக்க தீரா தலை வலியும் நீங்கிவிடும்.
🙏🇮🇳1
சிவகங்கை நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி கண் சம்பந்தமான நோய்களைத் தீர்த்தருள்கிறாள்.
கோவை பெருமாநல்லூரில் கோவில் கொண்டுள்ள கொண்டத்துக்காளியம்மன்,சருமத்தில் ஏற்படும் நோய்களை நீக்கியருள்கிறாள்.
🙏🇮🇳2
திருவிடைமருதூரில் உள்ள வனதுர்க்கா பரமேஸ்வரி அம்பிகை,குழந்தை பிறப்பில் உள்ள தடைகளை நீக்கி,குழந்தை வரம் தருகிறாள்.
சென்னை- திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள எல்லம்மனுக்கு சர்க்கரைக் காப்பு செய்து வழிபட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ரொம்ப நாட்களாகவே பாண்டவ சகோதரர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
“நம்முடைய அண்ணன் தர்மர் தர்மதேவனின் புதல்வர். தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும், தானத்தில் சிறந்தவன் என்ற பெயர் கர்ணனுக்குப் போனதெப்படி?” என்பதுதான் அந்த ஐயம்.
இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன், ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார். தங்க மலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார்.
பாண்டவர்களை நோக்கி, “இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று இனி உலகம் சொல்லும்!” என்று கூறினார்.
தங்கள் நெடுநாள் பிரச்னைக்கான தீர்வாகவே இதனைப் பார்த்தார்கள் பாண்டவர்கள்.
ஒரு பெண் ஒரு மகானிடம்... "என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்துகொள்ளவதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது, என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!" என்றாள்...
ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு மகான் சொல்கிறார்...
"ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30நாள் உணவு கொடு... 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!" என்றார்...
குழப்பத்தில் இருந்தவள், "தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் போதும்!" என்ற எண்ணத்தில் தைரியத்துடன்...