#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் திருவரங்கத்தில் நம்பிள்ளையின் திருவாய்மொழி காலட்சேபம் (உபன்யாசம்/சொற்பொழிவு) மிகவும் புகழ்பெற்றது. பல்வேறு ஊர்களிலிருந்தும் நம்பிள்ளையின் விளக்கங்களைக் கேட்பதற்காகத் திருவரங்கத்துக்கு அடியார்கள் வருவது வழக்கம். ஒருசமயம் முதல் பத்து இரண்டாம் திருவாய்மொழியின்
பொருளை நம்பிள்ளை விளக்கிக் கொண்டிருந்தார். அதில் ஐந்தாவது பாசுரம்,
“அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே"
என்பது. இதற்கான விளக்கத்தை வெகு சிறப்பாக நம்பிள்ளை அளித்தார்.
விளக்கம்: மிக உயர்ந்த லட்சியமான இறைவனின் திருவடிகளை அடைந்து தொண்டு செய்ய நினைத்தால
இதர விஷயங்களில் பற்றற்றவனாக இறைவனைப் பற்றிக் கொள். ஜீவாத்மா இறைவனுக்கு சரீரம், இறைவன் ஜீவாத்மாவுக்குள்ளும் ஆத்மாவாக உள்ளான் என உணர்ந்து அவனைத் தஞ்சமாகப் பற்று.” இவ்வாறு நம்பிள்ளை கூறியவாறே, கூட்டத்திலிருந்து ஒரு பண்டிதர் எழுந்தார்.
“எந்தப் பற்றும் இல்லாத நிலைதானே முக்தி? அப்புறம்
ஏன் இறைவன் மேல் பற்றுக் கொண்டு அவனைத் தொழ வேண்டும்? நாம் இந்த உடல் இல்லை, ஆத்மா என உணர்ந்து கொண்டபின், நாம் ஏன் இறைவன் என்ற யாரோ ஒருவனுக்கு உடலாக இருக்க வேண்டும்? ஜீவாத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொண்டால் போதாதா?” என்று கேட்டார். அவரைப் பார்த்துச் சிரித்தபடி, “சுவாமி! உங்கள்
கூற்று நன்றாகத்தான் இருக்கிறது. ஆசைகளை விடுத்தவாறே ஆத்மா முக்தியடையும். அதில் சந்தேகம் இல்லை. அதற்குக் #கைவல்யம் என்று பெயர். தனிமையில் ஆத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொள்ளும் நிலை அது. ஆனால் அது உயர்ந்த லட்சியமில்லை. ஏனெனில் அனைத்து ஜீவாத்மாக்களும் இறைவனின் சொத்து. அவனுக்குத்
தொண்டு செய்வதற்காகவே ஏற்பட்டவை. அவ்வாறிருக்க ஒருவன் இறைவனுக்குத் தொண்டு செய்யாமல் தன்னைத் தானே உணர்ந்துக் கொள்வது சரியாகுமா? ஊதியம் கொடுக்கும் முதலாளிக்காக உழைக்காமல், அவரது அலுவலகத்திலே அமர்ந்து கொண்டு நமது சொந்த வேலையைச் செய்துகொள்வது போன்ற செயல் அது. அறிவற்ற பொருட்கள் தொடங்கி
அறிவுள்ள ஜீவாத்மாக்கள் வரை அனைத்தும் இறைவனுக்கு சரீரம் என்று வேதம் கூறுகிறது. எனவே இந்த உடல் எப்படி ஜீவாத்மாவின் நியமனத்துக்கேற்ப நடக்கிறதோ, அவ்வாறே ஜீவாத்மா தனக்கு உயிராக இருக்கும் பரமாத்மாவின் நியமனப்படி அவனுடைய ஆனந்தத்துக்காகச் செயல்பட வேண்டும். பிரம்மாவின் பதவியைப் பெற
விரும்புபவன் இந்திர பதவியைக்கூட விரும்ப மாட்டான். ஆத்மானுபவத்தை விரும்புபவன் பிரம்மாவின் பதவியைக் கூட விரும்பமாட்டான். அதுபோல அனைத்து கல்யாண குணங்களும் நிரம்பிய இறைவனை அடைய நினைப்பவன் ஆத்மானுபவத்தையும் நாடாமல் இறைவனின் திருவடிகளிலேயே நோக்குடையவனாக இருக்க வேண்டும் என்பதே இப்பாசுரம
வலியுறுத்தும் கருத்து!” என விளக்கினார் நம்பிள்ளை. இவ்வாறு இந்திர பதவி, பிரம்மாவின் பதவி, ஆத்மானுபவம், இவை அனைத்தையும் விட உயர்ந்த லட்சியமாக, புருஷார்த்தமாகத் திருமால் திகழ்வதால் ‘வராரோஹ:’ என்றழைக்கப்படுகிறார். ‘வர’ என்றால் உயர்ந்த என்று பொருள். ‘ஆரோஹ’ என்றால் புருஷார்த்தம்.
‘வராரோஹ:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 122-வது திருநாமம். “வராரோஹாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மிகச் சிறந்த பதவி உயர்வுகள் விரைவில் கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#இறந்தகுழந்தையை_உயிர்ப்பித்த_ராமநாமம்
கோபன்னா என்பவர் சிறந்த ராம பக்தர். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். வருடாவருடம் ஸ்ரீ ராம நவமியை மிக விமரிசையாகக் கொண்டாடுவார். கோபன்னா நடத்தும் ஸ்ரீ ராமநவமி உற்சவம் என்றால் ஏராளமான பாகவதர்கள் வந்துவிடுவர். பத்து நாள்களுக்கு இரவு
பகல் பாராமல் பஜனை நடந்துகொண்டேயிருக்கும். வருபவர்கள் அனைவருக்கும் உணவுப் பந்தி நடந்துகொண்டே இருக்கும்.
கோபன்னாவுக்கேற்ற குணவதி அவர் மனைவி. ஒரு சமயம் #ஸ்ரீராமநவமி உற்சவத்தில் காலை பஜனை நடந்து கொண்டிருந்த சமயம், அன்னத்தை வடித்து வடித்து சமையலறையில் உள்ள முற்றத்தில் ஒரு
தொட்டியில் கொட்டி வைப்பது வழக்கம். உறங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையை ஓரமாக சமையல் அறையிலேயே விட்டிருந்தாள் கோபன்னாவின் மனைவி. நைவேத்ய சமயம் வந்துவிட்டதா என்று பார்க்க கூடத்திற்குச் சென்றார். மிக உற்சாகமாக பஜனை நடந்து கொண்டிருந்தது. தன்னை மறந்து சிறிது நேரம் அங்கேயே
#மகாபெரியவா
மகாபெரியவாளின் உன்னத பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர். வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர். மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டு இருப்பவர். இப்போது அவருக்கு வயது என்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம். பல வருடங்களுக்கு முன் மகானின் அருகே
அமர்ந்து சாமவேதத்தை பாராயணம் செய்து கொண்டு இருந்தார். மகான் வழக்கம் போல் பக்தர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கிக் கொண்டு இருந்த நேரம். ஒரு பக்தர் கையில் ஒரு சிறிய பையுடன் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். அவரது முறை வந்தபோது மகானிடம் ஆசிபெற்று பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அவர்
நகர முற்பட்டபோது, பெரியவரின் குரல் அவரை நிறுத்தியது. "எனக்கு கொடுக்கணும்னு கொண்டு வந்ததை கொடுக்காம போறியே"
பக்தர் திடுக்கிட்டு நின்றார். அவர் கையில் இருந்த பையில் அவர் தோட்டத்தில் விளைந்த நெல்லிக் கனிகள். அவை மகானுக்கு கொடுக்கவே அவர் கொண்டு வந்தார்.
"இங்கே நிறைய ஆரஞ்சு, ஆப்பிள்,
#ஶ்ரீகுர்ய்ஷ்ணன்கதைகள்#ஶ்ரீராமநவமி
'ராம நாமா சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை, தீய சக்திகளை, நோய்க்கிருமிகளை அழித்துவிடும். ராம நாமா அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள கோபம், வெறுப்பு, பொய், பொறாமை, சூது
போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமானவற்றை அழித்து, ராம நாம அதிர்வு சாந்தம், பொறுமை, பணிவு, உண்மை, தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ தத் பவதி’-எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்!) அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே ராம்
ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து. பிரம்மம் என்பதும் அவனே! எண்ணம், மனம், செயல், உள்ளம், உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும். இடை விடாது ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா இன்பத்தை ஶ்ரீராமன் அருள்வான் என ஸ்வாமி
#ஶ்ரீராமநவமி ராம நாமத்தின் பெருமை:
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
(கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14)
ஸ்ரீ ராமநவமியன்று அனைவரும் கம்பராமாயணத்தில் கீழுள்ள பாக்களை
பாராயணம் செய்ய வேண்டும்.
‘வேய்புனர் பூசமும் விண்ணுளோர்களும்
தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே
சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும்
நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத்
தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஓங்கவே.
ஒருபகல் உலகெலாம் உதரத்துட் பொதிந்
தருமறைக்
குணர்வரும் அவனை யஞ்சனக்
கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்ககொள் கோசலை.’
(கம்ப ராமாயணம் : பாலகாண்டம் – திரு அவதாரப் படலம்)
எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நிதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து,
#மகாபெரியவா பிராமணர்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரம். அப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு காஞ்சி மஹா பெரியவர் தன் கையால் தீர்த்தம் கொடுப்பது இல்லை. ஒரு தடவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி சதாசிவம் தம்பதிகள், கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு திரும்பி
வந்தவுடன் நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள். அவர்கள் வந்த அந்த வேளையில் பெரியவர் தன் கையாலேயே பக்தர்கள் எல்லாருக்கும் தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். சற்றும் யோசிக்காமல் சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்று விட்டார்.
[அவருக்கு இந்த ஆச்சாரம்
அனுஷ்டானம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ தெரியவில்லை!] சதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக எழுத்தாளர் நின்று கொண்டிருக்கிறார். [இவர்தான் காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவற்றைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்] காஞ்சி மடத்துக்கு ரொம்ப நெருக்கமான
#கர்மா பலவகை. இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் எடுத்திருப்போம். அத்தனைப் பிறவியிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்து வைத்துள்ளோம். அந்தத் தொகுப்பின் பெயரே #சஞ்சித_கர்மா
அதன் ஒரு பகுதியை இப்பிறவியில் அனுபவிக்கக் கொண்டு வருகிறோம். அதுவே #பிராரப்தக்_கர்மா இந்த பிராரப்தக் கர்மா
நிறைவடையாமல் இப்பிறவி முடிவடையாது, இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் விடுதலைப் பெற முடியாது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும். துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும்
ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும் அவரவர் கர்ம கதியே. இதைத் தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என நம் மதம் போதிக்கிறது. இதைத் தவிர #ஆகாம்ய_கர்மா என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல, கெட்ட செயல்களால் புதிதாக ஏற்படுவது. நம் நல்ல கெட்ட