இரண்டாவது இந்தி எதிர்ப்பு போரை பற்றி பெரியார் பேசியவற்றை எல்லாம் பெரியாரியர்கள் இப்போது பேசவோ,வெளியிடவோ தயாராக இல்லை.1948 லேயே,இந்தி வேண்டவே வேண்டாம் என்பது நோக்கமல்ல,அதை சில காரியத்துக்கு கட்டாயமாக்க வேண்டுமானால் ஆக்குங்கள் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார் ஈவேரா..(1)
அதன் பிறகு 1962 - 1967 வரை நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டதிற்கு முற்று முழுதாக எதிராகவே அவர் இருந்தார்.அன்று இந்திக்கு ஆதரவாக காங்கிரஸ்காரர்களை விட ஒரு மடங்கு மேலே பேசிக் கொண்டிருந்தார் என்பதே எதார்த்தம்.(2)
தேவநேயப் பாவாணர் மற்றும் பெருஞ்சித்திரனார் தலைமையில் வெளியான "தென்மொழி" இதழ் ஈவேராவுக்கு வலிமையான மறுப்புகளை எழுதி வந்தது.
|| இந்தி வந்தால் என்ன கெட்டுவிடும்? 13 மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் போது நீ மட்டும் எதிர்த்தால் எப்படி? || - என்று கேட்டார் ஈவேரா.(3)
இதை கடுமையாக கண்டித்து மறுப்பு எழுதினார் புலவர் வி.பொ.பழனிவேலன்.பெரியாரை தமிழின தலைவர் என்பவர்கள் மூடர்கள் என்று கண்டித்தார்.
அது மட்டுமல்ல நெடுமாறன் அவர்களின் "குறிஞ்சி" பொங்கல் சிறப்பு மலரில்(1965) பெரியாரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.👇 (4)
இந்த போராட்டம் காங்கிரஸ்ஸின் வலிமையை குறைக்க நடக்கும் போராட்டம் என்பதாக வடக்கே பார்க்கிறார்கள் என்று மெல்லமாகத்தான் காமராஜரே சொன்னார்.ஆனால் ஈவேராவோ இது காலிகளின் போராட்டம்,இதை ஒடுக்கத் தவறியது அரசு என்று பேசுகிறார்.(5)
ராஜாஜி இந்தியை எதிர்த்து 'ஒற்றுமைக்கு ஆங்கிலம்தான் வழி' என்று எழுதினார்.நீங்கள் செய்வது என் உள்ளத்திலேயே பிரிவினை உணர்ச்சியை தூண்டி விடக்கூடியதாக உள்ளது என்று சொன்னார்.அதற்கு ஈவேரா விடுதலையில் கடுமையாக ராஜாஜியை ஆதரிப்போர்களை திட்டி எழுதினார்.(6)
|| பதவிக்காக பாப்பான் காலில் விழ ஒரு கூட்டம் அணியமாகிவிட்டதால் இத்தகையை இந்தி எதிர்ப்பு செய்கைகள் வளந்து கொண்டே போகின்றன ||
- என்று ராஜாஜி காலில் விழ தயாராக ஒரு கூட்டம் என தமிழ்,திராவிட ஆதரவாளர்களை விமர்சித்தார் அப்போது.அதற்கு தென்மொழி எழுதிய மறுப்பு யாதென்றால்..👇(7)
உச்ச கட்டதுக்கு கோபமான ஈவேரா, "தேர்தலை பற்றி கவலைப்படாதீர்கள் சுதந்திரா கட்சி,கண்ணீர்த்துளி(திமுக) இரண்டையும் சட்ட விரோதம் என்று தடை செய்யுங்கள்.எல்லா செய்தி தாள்களையும் தடை செய்யுங்கள்,இந்தி எதிர்ப்பு பற்றி யாரையும் பேச விடாமல் வாய்ப்பூட்டு சட்டம் போடுங்கள்" என்றார்.(8)
"பெரியார் அணைந்த தீப்பந்தம்,சப்பிய பனங்கொட்டை,துப்பிய வெற்றிலை" என்று தென்மொழி இதழ் மறுப்பெழுதியது இதற்கு.கடைசியாக இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கலவரமாகி காவலர்கள் எரியூட்டு,மாணவர்கள் துப்பாக்கி சூடு,தற்கொலைகள் என்று நாடே குலுங்கி முடிந்தது..(9)
மாணவர்களின் கிளர்ச்சிகள்,வன்முறைகள் ஆகியவற்றுக்கும் எங்களுக்கும் ஓட்டும் இல்லை உறவும் இல்லை.இந்த போராட்டத்தை பெரியவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் ஒதுங்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்தார் அண்ணாத்துரை.
இதற்கு ஈவேரா என்ன எழுதினார் தெரியுமா? (10)
|| இந்தி ஆர்பாட்டக்காரர்களை அடக்க,எரி நெய்யும்,தீப்பெட்டியும்,கத்தியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என கழகத் தொண்டர்களுக்கு நான் கட்டளையிட்ட பின்தான் போராட்டம் அஞ்சி அடங்கியது என்று || - #விடுதலை (1965)
(11)
அதுமட்டுமல்ல,தமிழுணர்ச்சி குறித்து அவர் சொன்ன கருத்து இன்னும் அதிர்ச்சி தரக்கூடியது.(12)👇
இதையெல்லாம் இன்று பொது விவாதத்துக்கு ஏன் உட்படுத்த மறுக்கிறார்கள்? அன்றே சொன்னார் பெரியார் என்பவர்கள்,1949 - 1967 இதற்கிடைப்பட்ட பெரியாரை இருட்டடிப்பு செய்பவர்களாகவே இருப்பதன் நோக்கமென்ன? (13)
காரணம்,இவர்கள் பேசுகிற எல்லா கருத்தியலுக்கும் எதிராகவே இருந்தார் அவர்.அதிலேயே அவர் பேசிய எல்லாமே களத்தில் தோற்றுப் போனது என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.(14)
திமுக என்கிற கட்சி தமிழக அரசியலில் எழுந்ததே பெரியார் எதிர்ப்பில்தான்,அவர்கள் வென்றதே பெரியாரால் நிபந்தனை இல்லாமல் ஆதரிக்கப்பட்ட காங்கிரஸ்ஸை எதிர்த்துதான்,அதுவும் ராஜாஜி துணையோடு என்பதுதான் வரலாறு.(15)
டாட்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1. 1941 ல் காரைக்குடி கம்பன் கழகம் வெளியிட்ட தமிழ்த்தாய் படம்.
2.பாரதிதாசன் எழுதிய தமிழியக்கம் நூலின் அட்டையில் உள்ள தமிழ்தாய் படம்.
3.'சமநீதி'இதழின் சிறப்பாசிரியராக இருந்து எம்ஜிஆரே அதை நடத்தினார்.அதன் 1968 பொங்கல் மலரில் உள்ள தமிழ்தாய் படம்.(1)
4.1981 ல் அன்றைய முதல்வர் எம்ஜிஆரால் நடத்தப்பட்ட உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிட்ட தமிழ்தாய் படம்.
5.1993 ல் காரைக்குடியில் கட்டப்பட்ட தமிழ்தாய் கோவில்.. (2)
தமிழகத்தில் திராவிட இயக்க தாக்கம் தீவிரமாக செயல்பட்ட போது கூட,அதன் மூலவர்களே 'தமிழ்த்தாய்' என்கிற படிமத்தை,அதன் தெய்வ தன்மையை விட்டு கீழே இறக்கவில்லை..ஆனால் தற்போது நடந்து கொண்டிருப்பது பகிரங்கமான பண்பாட்டு படையெடுப்பு.(3)
இந்தி எதிர்ப்பும்,மூடத்தனமான தமிழ்ப்பற்றும் இங்கு எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டன.மொழி என்கிற மிக உன்னதமான கலாச்சாரச் செல்வத்தின் பெயரால் நமது சமூக வாழ்க்கையின் முகம் மிகக்கோரமாக எப்போதும் இல்லாத முறையில் அலங்கோலப்படுத்தப்பட்டது.(1)
அதைக் கண்டு அஞ்சிய அரசியல் கோழைகள் சொந்த லாபங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு இவ்வளவும் நடந்து முடிந்ததற்குப் பிறகு இந்த இந்தி எதிர்ப்புக்குப் பின்னால் ஏதோ நியாயமும் புலப்படவில்லை.அவற்றுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லை.(2)
இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கிற திமுகவினர் இந்தியைப் போலவே சம்ஸ்கிருதத்தையும் வெறிகொண்டு பகைத்தனர்.சம்ஸ்கிருத பகைமையே தமிழ்ப்பற்று என்கிற மாதிரி பல மூடப் புலவர்கள் ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலந்தொட்டு அடிமைப்புத்தியில் பரப்பியுள்ளனர்.(3)
திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் சொல்கிற இதே செய்தியைத்தான் திரு.அமித்ஷாவும் சொல்கிறார்..
ஆங்கிலம் கூடாது என்பதோ,வேண்டாம் என்பதோ அல்ல அது..(1)
நம்மை அடக்கி ஆட்சி செய்த,நம்மை கலாச்சாரத்தை விட்டு வெளியேற்ற புகுத்தப்பட்ட அதிகார மொழியை,இந்நிலத்திற்கு வெளியே இருந்து நம்மை அடிமை செய்த மொழியின் அதிகார வீச்சை,இந்திய மனங்களில் இருந்து நீக்குவது குறித்தே அவர் பேசுகிறார்..(2)
ஆனால்,தமிழச்சி தங்கபாண்டியன் அதை தெளிவாக சொல்லியுள்ளார்..காலனித்துவ அடிமை முறைக்கு எதிரான கிளர்ச்சியானது,நமது பண்பாட்டை நோக்கி திரும்புதல் என்கிறார்.அதற்குள் மொழி,உணவு,உடை ஆகியவை எல்லாம் எப்படி பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த அடையாள அரசியலாக செயல்படும் என்கிறார்..நிற்க.(3)
இந்த மரபின் ஞானமும்,குருதி மையினால் எழுதப்பட்ட நமது வரலாறும் இன்று பலருக்கு தெரிவதில்லை.அதை அறிந்தவர்களையும் நவீன களம் மென்று தின்றுவிடுகிறது..(1)
ஒரு ஹிந்துவின் முக்தியைத் தேடும் மனநிலைக்கும்,இன்றைய உலகின் பொருளியல் - அதிகாரம் - சுயநலம் ஆகிய தளங்களுக்கும் இடையே பெரும் போரொன்று நடக்கிறது..இதில் ஒரு ஹிந்து அலைக்கழிப்பட்டு இல்லாமலாக்கப்படுகிறான்..(2)
இன்னும் சொல்லப் போனால்,இங்கே உலவும் கருத்தியல் மற்றும் அரசியல்-கலை என எதுவாக இருந்தாலும் சரி,ஒரு ஹிந்துவை இல்லாமலாக்குவது,அவனுடைய வேரினை துண்டிப்பது இவைதான் அடிப்படை நோக்கமாக உள்ளது.(3)
2011 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனித்து களம் கண்டது.அப்போது 4 மாநகராட்சி உறுப்பினர்கள்,2 நகராட்சி தலைவர்,37 நகராட்சி உறுப்பினர்,13 பேரூராட்சி தலைவர்,185 பேரூராட்சி உறுப்பினர்களை பெற்றது..(1)
2011 ல் நடந்த நேரடி தேர்தலில் அதிமுக வரலாறு காணாத வெற்றியை பெற்றது.தனித்து நின்று செல்வி.ஜெ 39% வாக்குகளுக்கு சென்றார்..திமுக,தேமுதிக, காங்கிரஸ் எல்லாம் தனித்து நின்றது..(2)
அந்த தேர்தலில் பாஜக தனித்து களம் கண்டதே 95% பேருக்கு தெரியாது..சரியாக 10 வருடம் கழித்து நகர்புற உள்ளாட்சியில் இப்போது பாஜக தனித்து களம் கண்டுள்ளது..95% பேருக்கு பாஜக தனித்து நிற்பது தெரிந்துள்ளது..(3)
சித்திரகுப்தன் என் ஏட்டைப் புரட்டிக் கொண்டிருக்கிறான் ஆகவே இளைஞர்களே! 'இந்த பண்பாட்டினையும் தேசத்தையும் காக்க வாருங்கள்' என்று பேசிக் கொண்டிருக்கும் போதே 1988 ல் அந்த மேடையிலேயே உயிர் நீத்தவர் முன்னாள் இந்து முன்னணி தலைவர் தாணுலிங்க நாடார்.(1)
1915ல் பொற்றையடி ஊரில் பிறந்தவர்.மிகச்சிறந்த தேசபக்தர் இந்துத்துவர் அதன் காரணமாக அன்றைய கேரள இந்துமிஷனின் துணைத்த தலைவரானார்
ராணுவம்,வக்கீல் என்று எல்லா பணியிலும் இருந்தவர்.பிரிக்கப்படாத கேரள எல்லைகளுக்கு முன்னால் 1948ல் திருவிதாங்கூர் சட்டமன்ற உறுப்பினரனார்.. (2)
1951ல் தமிழ்நாடு திருவிதாங்கூர் காங்கிரஸ் இருபிளவில் ஒன்றின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.தமிழகத்துடன் இணைந்தது கேரள எல்லை.அதற்கு பின்னால் 1957ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.(3)