பஞ்ச ஆரண்ய தலங்கள் என்பவை ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டுமுறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும்.
ஒரே நாளில் ஒவ்வொரு வேளை வழிபாட்டின்போதும் பஞ்ச ஆரண்ய தலங்களை தரிசிப்பதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை அடையலாம்.
ஆரண்யம் என்றால் காடு எனப் பொருள்படும். பஞ்ச ஆரண்ய தலங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைக் காடு அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இத்திருத்தலங்களில் விடியற்காலை காலை உச்சிவேளை மாலை அர்த்தசாமம் என ஐந்து முறை வழிபாடு நடத்தப்படுகிறது.
தஞ்சைக்கு அருகில் பஞ்ச ஆரண்ய தலங்கள்
திருஞானசம்பந்தர் தனது திருதலப் பயணத்தின்போது பஞ்ச ஆரண்ய தலங்களை முறைப்படி வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பஞ்சஆரண்ய தலங்கள் யாவும் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளன.
ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் ஒரு Code * Number உள்ளது. Google Map-ல் அதனை Type செய்தால் கோயிலை எளிதில் அடையலாம்.
திருக்கருகாவூர் முல்லைவனநாதர் - திருக்கோயில் (SCN018) > *(பதிவில்
முல்லைவனம் விடியற்கால
காணும் கோயில்) வழிபாட்டிற்குரியது கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்... இறைவன் நமக்களித்த செல்வம்! #சைவ_சமயம்
நம்முடைய பூமியில் பல விதமா தாவரங்கள் - உள்ளது என்று நாம் அறிவோம். இங்கே வில்வ மரத்தை ஏன் சிவனுக்கு தேர்வு செய்தார்கள். வில்வ மரத்தை பற்றி புரிந்தால் ரகசியம் புரியும். வில்வமரம் நெருப்பு அம்சம் இதில் உள்ள
ரசாயனம் உடலில் உள்ள நச்சு பொருளை அழிக்கும் தன்மைகளை உடையது. சிவ மந்திரம் சொல்லும்பொழுது உடல் சூடாகும் ஆன்மா விழித்து எழும்
இப்படி நடக்கும் பொழுது உடலை சீர் செய்ய வில்வம் இலை உதவி செய்யும். சிவ பெருமான் தொழிலே தவறான செயல் களை அழிப்பது தான்.
நடராஜ தத்துவமும் இதைத்தான் செய்கிறது
அவருடைய தியானம் அதற்கு சக்தி பெறும் செயல்.கருவறையில் சொல்ல படும் மந்திரத்தால் வெப்பம் மிகும். இதனால் உடல் சீர் நிலை மாறும் இதை சரி செய்ய வில்வ இலையால் முடியும்.
ஆம் வில்வத்தில் உள்ள வெப்பம் பனி மலையில் உள்ள வெப்பம்.
சக்தி தேவி முழுமையாக நெருப்பு சிவ பெருமான் மறைமுக நெருப்பு
இன்று அருள்மிகு அன்னை மீனாட்சி பாண்டிய தேசத்து பெண்ணரசியாக முடிசூடும் நாள்.
வழிவழி வம்சமாய் ராஜ குலங்களுக்கு ஆண் வாரிசு பிறப்பதும், அந்த ஆண் வாரிசு 64 கலைகளையும் கற்றுத்தேர்ந்து, பருவம் அடைந்த பின் பட்டம் கட்டி அரசாளும் பொறுப்பு வழங்கப்படுவதும் வழமை.
பாண்டிய வம்சத்துக்கு கிடைத்த பெரும் பாக்கியம், மூன்று வயது பெண்ணாக தோன்றினால் புத்திரகாமேஷ்டி என்னும் வேள்வி தீயில், 64 கலைகளையும் கற்றுத்தேர்ந்து, இந்த பாண்டிய ராஜ்யத்தின் அரசியாக பட்டம் கட்டி அரசாளும் பொறுப்பு வழங்கப்பட்டது.
பிற ராஜியங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாய், இல்லை என்ற வார்த்தை எங்கும் இல்லாதபடி சர்வ வளங்களும் கொட்டிகிடக்கும் அளவுக்கு ஆட்சி செய்தாள் பாண்டிமாதேவி, அங்கயற்கண்ணி, ஆலவாய்க்கு அரசி, அமுத நாயகி, தடாதகைபிராட்டி, அரசியார் மீனாட்சி தேவி