வழிகளைக் குறிப்பதற்கு இலக்கியங்களும், கல்வெட்டுகளும் பல்வேறு சொற்களைக் குறிப்பிடுகின்றன.
அவற்றில் அத்தம், நெறி, வழி, இட்டுநெறி, பெருவழி ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களிலும், காவியங்களிலும் பயின்று வருகின்றன.
சங்க இலக்கியத் திணைக்குடி வாழ்வில் தலைவியைக் காண #இரவுக்குறி செல்லும் குறிஞ்சி நிலத்தலைவன் சென்று வந்த வழி பற்றிக் குறிஞ்சித் திணைப் பாடல்கள் பேசுகின்றன.
முல்லை நிலத்து ஆயர்கள் கால்நடைகள் மேய்த்து வந்த வழியும், முல்லை மகளிர் தயிர் விற்கச் சென்ற வழியும்...,
மன்னர்கள் போர் முடித்து நாடு திரும்பும் தேர் வழியும் முல்லைப் பாடல்கள் பேசுகின்றன.
தலைவியும் தலைவனும் உடன் போக்குச் சென்ற அத்தமும், தலைவன் பொருள் தேடச் சென்ற சுர வழிகளும், மொழிபெயர் தேயத்து வழிகளும், உமணர்களும், வணிகச் சாத்துகளும் சென்ற வணிக வழிகளும்....
பாலைத்திணைப் பாடல்களில் விரிவாகப் பேசப்படுகின்றன.
திணைகளுக்குள்ளும், திணை கடந்தும் தொடர்பை நீட்டித்துக் கொண்ட அன்றைய வாழ்வியல் தேவைகள் போக்குவரத்தையும் விரிவுபடுத்தின.
திணை கடந்த போக்குவரத்து வழிகளை ஆற்றுப்படை இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் பதிவு செய்துள்ளன.
#ஆற்றுப்படை ஐவகை நிலங்களையும் கடந்து சென்ற வழிகளைக் குறிப்பிடுகிறது.
#சிலப்பதிகாரம் சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டை அடைந்து, அங்கிருந்து சேர நாட்டை அடைந்ததைப் பேசுகிறது.
#வஞ்சிக்காண்டம் சேர நாட்டிலிருந்து இமயம் சென்று வந்தது குறித்து பேசுகிறது.
பெருவழிகளை அதன் இயல்பின் அடிப்படையில் 'செந்நிலப் பெருவழி', 'தண்பதப் பெருவழி' என்று சங்க இலக்கியம் கூறுகிறது.
#திணைக்குடிகள் தங்களின் நடமாட்டம், மேய்ச்சல், இடப்பெயர்வு ஆகியவற்றிற்காக உருவாக்கிய #அத்தம் என்ற வழிகள் காலப்போக்கில் பெருவழிகளாக மாறியுள்ளன.
அதேபோல் வழி, பெருவழி, காட்டுவழி, நாட்டுவழி என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
ஆட்களின் பெயரிலும் ஊரின் பெயரிலும், நிலத்தின் பெயரிலும், #பெருவழிகள் இருந்ததைக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
#மௌரியர் ஆட்சிக்கு முன்பே தென் இந்தியாவிலிருந்து தட்சசீலத்திற்கும், வடநாட்டு நகரங்களுக்கும் வணிகப் போக்குவரத்து நடைபெற்று...
... இருப்பதைத் தட்சசில அகழாய்வுகள் காட்டுகின்றன.
தென்னிந்தியாவிற்கும் வட இந்தியாவிற்கும் இடையே சென்ற இந்த வழியே #தட்சிணபதம் என அழைக்கப்பட்ட பண்டையப் பெருவழி. இவ்வழி பற்றி #அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது.
#தட்சிணபதம் தமிழ்நாட்டில் தகடூர், கருவூர், மதுரை, திருநெல்வேலி வழியாகக் கன்னியாகுமரியைச் சென்றடைந்தது.
இப்பெருவழி சென்ற இடங்களில் கனிமச்சுரங்கங்கள் இருப்பதாக #கௌடில்யர் குறிப்பிடுகிறார்.
இது இன்றைய தேசிய நெடுஞ்சாலை வழி எண் ஏழு என்பதாக இருக்கலாம்.
மும்பைக்கு வடக்கில் உள்ள பரோச்சிலிருந்து (பருகச்சம்) #காஞ்சிபுரம் வரை வந்த பெருவழி,
அவ்வூர்கள் பலவற்றில் உரோமானியக் காசுகளும், பொருட்களும் கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டுப் பெருவழிகள்...!
பாலக்காட்டிலிருந்து கொங்கு நாட்டின் வழியாக #மாமல்லை, #புகார், #அழகன்குளம் ஆகிய துறைமுகங்களுக்குப் பெருவழிகள் சென்றுள்ளன.
கொழுமத்திலிருந்து பழனி வரை சென்ற அயிரை மலைப் பெருவழி, கொழுமத்திலிருந்து....
சோழமாதேவிப் பெருவழி, ஆனை மலையிலுந்து கொழுமம் வரை சென்ற வீர நாராயணப் பெருவழி, கருவூரிலிருந்து புகார் வரை சென்ற பெருவழி கொங்கு பெருவழி ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.
#கோவை மாவட்டம் #மதுக்கரை மலைக்காட்டுச் சரிவில் கிடைத்த கல்வெட்டில் ஆதித்ய சோழன் ஆட்சிக்காலத்தில் (கிபி. 871-907) முப்பது அடி அகலத்தில் ராஜகேசரிப் பெருவழி இருந்ததையும்,
பெருவழியை வீரர் என்று தெரியாதவண்ணம் மக்களோடு மக்களாக இருந்து கண்காணித்ததையும் அறிய முடிகிறது.
மேற்குக் கடற்கரையையும் புகாரையும் இணைக்கும் முக்கியமான பெருவழியாக "ராசகேசரிப் பெருவழி" விளங்கியுள்ளது.
#தருமபுரி பகுதியில் அதியமான் கோட்டை புறவழிச் சாலையில் உள்ள பதிகால் பள்ளத்திலும், #காரிமங்கலம் ஒன்றியம் கெங்கு செட்டிபட்டி அருகிலும், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில்...
தகடூரை ஆண்ட மன்னன் இராசராச அதியமான் காலத்தில் (கிபி. 12 ஆம் நூற்றாண்டு) "அதியமான் பெருவழி" என்று குறிப்பிடப்பட்ட இரண்டு பெருவழிக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து #சேலம்
மாவட்டம் #ஆறகழூர் வழியாகக் #காஞ்சிபுரம் சென்ற சாலைக்கு "மகதைப் பெருவழி" என்று பெயர்.
மகதேசன் பெருவழிக்கல்லில் "ஸ்வஸ்திஸ்ரீ மகதேசன் பெருவழிக்கல் காஞ்சிபுரம் “எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
"தஞ்சாவூர் பெருவழி" பற்றி (கிபி. 9 - 12) முதலாம் இராஜராஜன் காலம் முதல் முதலாம் குலோத்துங்கன் காலம் வரையில் கிடைத்துள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
அடுத்தடுத்த நாடுகளுக்கு மட்டுமல்லாமல் அடுத்த ஊர்களுக்குச் செல்லும் வழிகளுக்கும், அடுத்த தெருவுக்குச் செல்லும் வீதிகளுக்கும்...
...பெயர்கள் இருந்துள்ளன. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்லும் வழியைக் கல்வெட்டுகள் குண்டையூர்க்கு போகும் பெருவழி, மணிமங்கலத்துக்குப் போகும் பெருவழி என்று குறிப்பிட்டுள்ளன.
பெருவழிகளில் பெருவழிக் கல்லும், ஊருக்குள் உள்ள சாலைகளில் சாலைக் கற்களும் பெருவழிகளில் இருப்பது போல..
ஊருக்குள் உள்ள சாலைகளுக்கும் பெயர்கள் இருந்ததைச் சாலைக் கற்கள் மூலமும் கல்வெட்டுகள் மூலமும் அறியமுடிகிறது.
திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலையைச் சுற்றிய கிரி வலப்பாதையில் வீரபாண்டியன் காலத்தில் சாலைக்கற்கள் இருந்ததும், அச்சாலைகளுக்கு "வீரபாண்டியன் திருவீதி" என அழைக்கப்பட்டதை..
பின்வரும் கிபி. 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
“ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம பாண்டியந் திருவீதி னாலாம் வகுப்பு”
"ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம பாண்டியந் திருவீதி ஆறாம் வகுப்பு”
சுருளியாற்றின் கரையில் உள்ள சின்னமனூரில் (அரிகேசரி நல்லூர்) ஒரு சாலைக்குத் 'தெங்கம் திருவீதி' என பெயர் இருந்துள்ளது.
முதலாம் குலசேகரனின் (1293-94) 6-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு திருப்பூலாந்துறைக் கோவிலுக்குத் தேவதானமாக வழங்கிய நிலத்தின் நான்கெல்லை வகுத்ததில் #திருவீதி ஒன்று...
...எல்லையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
"கீழ் எல்லை குளக்கரைக்கு மெற்கும் தென் எல்லை தெங்கம் திரு வீதிக்கு வடக்கும் மேல் எல்லை ஒள்ளத்துக்குக் கிழக்கு வட எல்லை பனையொடு செய் வடவரம்பில் மேற்கு நோக்கிப் போகும் வாய்க்காலுக்கு தெற்கில்”
அதேபோல் தென்பாண்டி மண்டலத்தில் நானாதிசைகளிலும் பல சிற்றூர்களில் மங்கம்மாள், காலத்தில் உருவான சாலைக்கு இன்றும் "மங்கம்மாள் சாலை" என்றே பெயர் வழங்கி வருகின்றது.
அது போல் சங்ககாலத்திலும் இடைக்காலத்திலும், நாயக்கர் ஆட்சிக்கு முன் பாண்டி நாட்டில் இருந்து சேர நாட்டிற்கு வைகைக் கரைவழியாகச் சென்ற பெருவழிகள் என்ன பெயர் கொண்டு அழைக்கப்பட்டன என்று தெரியவில்லை.
இனிவரும் நீள் கீச்சுக்கள் "வைகைப் பெருவழி"...
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Early Tamil society had evolved some conception of true love and norms of moral conduct. The lapses and the protests they provoked reveal the ideals held in view.
The virtues of immaculate love and true partnership in life between...
...the husband and wife find their echo in several verses of #Narrinai. One of these states that even poison offered by a real lover would not be rejected: (Stanza 355).
In passing it may be mentioned that below lines bear a tinge of similarity with the precept in Kural-586.
Love of a high order which promotes unbounded courage and unselfish sacrifice was known and appreciated.
#உணவு என்பதைப் பண்பாடு என்னும் முழுமையின் ஒரு
பகுதி எனக் கொள்வோமானால், அதனைக் குறைந்தது இரண்டு வகையான கண்ணோட்டத்துடன் அணுகலாம்.
பண்பாடு என்பது ஒரு சமூகம் அது வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் தகவமைப்பு முறை என்று அணுகுவது ஒருமுறை.
மாறாக, வாழ்வதற்கான அறிவு முறையின் வெளிப்பாடு என்று அணுகுவது மற்றொரு முறை.
சங்ககால உணவு முறையிலும், அதன் அடிசில் கலையிலும் தொடர்ச்சியான பண்பாட்டுப் பொருண்மைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பரிணமித்து இறுதியில் மருதத்திணையில் அது அறுசுவை உணவாகப் பரிமாணம் பெற்றது.
தொடக்கத்தில் சமைக்காத பச்சை இறைச்சியைத் தின்ற #பச்சூன் (பசுமையான ஊன்: பெரும்பாண். 283) தொடங்கி,
காட்டில் இயற்கையாக எழுந்த தீயில் இறைச்சியை #வக்கி (வதக்கி: மலைபடு. 247-250) உண்ட பின்னர்,
நெருப்பைக் கண்டுபிடித்து அதில் சுட்டுத் தின்னும் முறையை உருவாக்கினார்கள் (புறம். 319: 8).
பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பெண்ணிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது என்பதைத் தமிழிலக்கியங்களின் வாயிலாக அறியமுடிகிறது.
மாப்பிள்ளையின் ஆற்றலும் திறமையும் வெளிப்படத்தக்க போட்டிகளை நிகழ்த்தி அவற்றில் வெற்றிபெறும் மாப்பிள்ளையையே...
... தன் கணவனாகத் தெரிந்தெடுக்கும் வழக்கத்தைத் தமிழினத்துப் பெண்கள் பின்பற்றி வந்தனர்.
குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனும் ஐந்து நிலங்களில் வாழ்ந்த பெண்கள் தம் நில இயல்புக்கு ஏற்ற மாப்பிள்ளைத் தெரிவும் போட்டிகளையும் நிகழ்த்தினர்.
வேட்டைத் தொழிலை முதன்மையாகக் கொண்ட மலை நிலமாகிய குறிஞ்சித் திணையில் புலியை வாய்பிளந்து கொன்று,
அதன் பல்லைத் தாலியில் கோத்துக் கொணர்ந்த மாப்பிள்ளையைத் தன் கணவனாக அந்நிலத்துப் பெண் ஏற்றுக்கொண்டாள் என பின்வருமாறு சிறப்பாகக் குறிப்பிட்டனர்.