பண்டைக் காலத்தில் மதுரையின் அமைவிடம் சாலைகளின் கூடுமிடமாக, பண்டப் பரிமாற்றங்கள் நடைபெறுமிடமாக, பன்னாட்டு வணிகர்கள் தங்குமிடமாக, பாண்டிய நாட்டின் முக்கியப் பெருவழிகளின் மையமாக எழுச்சி பெற்றதால் அதன் பெயர் #கூடல் என வழங்கியது.
திணைக்குடிகளின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பகுதிகள் காலப்போக்கில் வேளிர், வேந்தர்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றபின்;
அப்பாதைகள் வேந்தர்களின் படை நகர்ச்சிக்கும், வணிகர்களின் பயன்பாட்டிற்குமான பெருவழிகளாகவும், வணிகப் பெருவழிகளாகவும் உருவாயின.
இவை அரசின் அரசியல், பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறின.
பெருவழி எழுச்சியும், வணிகவளமும் அரசுக்குப் பெரும் வருவாயினைப் பெற்றுத்தந்தன.
எனவே அரசியல் மற்றும் வணிக முக்கியத்துவம் பெற்ற நகரமாக "கூடல் நகர்" #மதுரை விளங்கியது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வழிகளைக் குறிப்பதற்கு இலக்கியங்களும், கல்வெட்டுகளும் பல்வேறு சொற்களைக் குறிப்பிடுகின்றன.
அவற்றில் அத்தம், நெறி, வழி, இட்டுநெறி, பெருவழி ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களிலும், காவியங்களிலும் பயின்று வருகின்றன.
சங்க இலக்கியத் திணைக்குடி வாழ்வில் தலைவியைக் காண #இரவுக்குறி செல்லும் குறிஞ்சி நிலத்தலைவன் சென்று வந்த வழி பற்றிக் குறிஞ்சித் திணைப் பாடல்கள் பேசுகின்றன.
முல்லை நிலத்து ஆயர்கள் கால்நடைகள் மேய்த்து வந்த வழியும், முல்லை மகளிர் தயிர் விற்கச் சென்ற வழியும்...,
மன்னர்கள் போர் முடித்து நாடு திரும்பும் தேர் வழியும் முல்லைப் பாடல்கள் பேசுகின்றன.
தலைவியும் தலைவனும் உடன் போக்குச் சென்ற அத்தமும், தலைவன் பொருள் தேடச் சென்ற சுர வழிகளும், மொழிபெயர் தேயத்து வழிகளும், உமணர்களும், வணிகச் சாத்துகளும் சென்ற வணிக வழிகளும்....
Early Tamil society had evolved some conception of true love and norms of moral conduct. The lapses and the protests they provoked reveal the ideals held in view.
The virtues of immaculate love and true partnership in life between...
...the husband and wife find their echo in several verses of #Narrinai. One of these states that even poison offered by a real lover would not be rejected: (Stanza 355).
In passing it may be mentioned that below lines bear a tinge of similarity with the precept in Kural-586.
Love of a high order which promotes unbounded courage and unselfish sacrifice was known and appreciated.
#உணவு என்பதைப் பண்பாடு என்னும் முழுமையின் ஒரு
பகுதி எனக் கொள்வோமானால், அதனைக் குறைந்தது இரண்டு வகையான கண்ணோட்டத்துடன் அணுகலாம்.
பண்பாடு என்பது ஒரு சமூகம் அது வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் தகவமைப்பு முறை என்று அணுகுவது ஒருமுறை.
மாறாக, வாழ்வதற்கான அறிவு முறையின் வெளிப்பாடு என்று அணுகுவது மற்றொரு முறை.
சங்ககால உணவு முறையிலும், அதன் அடிசில் கலையிலும் தொடர்ச்சியான பண்பாட்டுப் பொருண்மைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பரிணமித்து இறுதியில் மருதத்திணையில் அது அறுசுவை உணவாகப் பரிமாணம் பெற்றது.
தொடக்கத்தில் சமைக்காத பச்சை இறைச்சியைத் தின்ற #பச்சூன் (பசுமையான ஊன்: பெரும்பாண். 283) தொடங்கி,
காட்டில் இயற்கையாக எழுந்த தீயில் இறைச்சியை #வக்கி (வதக்கி: மலைபடு. 247-250) உண்ட பின்னர்,
நெருப்பைக் கண்டுபிடித்து அதில் சுட்டுத் தின்னும் முறையை உருவாக்கினார்கள் (புறம். 319: 8).
பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பெண்ணிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது என்பதைத் தமிழிலக்கியங்களின் வாயிலாக அறியமுடிகிறது.
மாப்பிள்ளையின் ஆற்றலும் திறமையும் வெளிப்படத்தக்க போட்டிகளை நிகழ்த்தி அவற்றில் வெற்றிபெறும் மாப்பிள்ளையையே...
... தன் கணவனாகத் தெரிந்தெடுக்கும் வழக்கத்தைத் தமிழினத்துப் பெண்கள் பின்பற்றி வந்தனர்.
குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனும் ஐந்து நிலங்களில் வாழ்ந்த பெண்கள் தம் நில இயல்புக்கு ஏற்ற மாப்பிள்ளைத் தெரிவும் போட்டிகளையும் நிகழ்த்தினர்.
வேட்டைத் தொழிலை முதன்மையாகக் கொண்ட மலை நிலமாகிய குறிஞ்சித் திணையில் புலியை வாய்பிளந்து கொன்று,
அதன் பல்லைத் தாலியில் கோத்துக் கொணர்ந்த மாப்பிள்ளையைத் தன் கணவனாக அந்நிலத்துப் பெண் ஏற்றுக்கொண்டாள் என பின்வருமாறு சிறப்பாகக் குறிப்பிட்டனர்.