With the oppressed farmers' rise against the extreme taxes, loots and exploits of the British rule as background, Palayams became the base of the revolution. Starting from Poolithevan, Ondiveeran, Azhagumuthukkoan, many other Palayams and warriors united, lateron.
Sivagangai Palayam became shelter for these warriors; Viruppaachi became their training basecamp.
Nellai - Panchalankurichi, Sethuseemai, Thanjai mandalam and Kongu mandalam were brought into this warzone.
"ஐரோப்பியர்களின் அதிகாரமும் விழும் நாளில் நிலையான கண்ணீரற்ற மகிழ்ச்சியை பெறுவோம்"
மருது சகோதரர்கள் 1801-ஆம் ஆண்டு திருச்சி கோட்டைச் சுவரில் வெளியிட்ட புரட்சிகர பிரகடனம்!
👇🏼🧵👇🏼🧵👇🏼
ஆங்கிலேயர் ஆட்சியில் கடுமையான வரி, கொள்ளை, சுரண்டல் மூலமாக ஒடுக்கப்பட்ட உழவர்களின் எழுச்சியை பின்புலமாக வைத்து பாளையங்கள் புரட்சியின் ஊற்றாயின. பூலித்தேவன், ஒண்டிவீரன், அழகுமுத்துக்கோன் எனத் துவங்கி பல பாளையங்களும், போராளிகளும் பிற்காலத்தில் ஒன்றாகினர்.
சிவகங்கைப் பாளையம் இந்தப் போராட்டக்காரர்களுக்கு அடைக்கலமானது.
விருப்பாச்சி பயிற்சிக் களமானது.
நெல்லை - பாஞ்சாலக்குறிச்சியும், சேதுசீமையும், தஞ்சை மண்டலமும், கொங்கு மண்டலமும் இப்போராட்ட கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டன.
யாரையும் தேவையின்றி விமர்சிக்க வேண்டிய கட்டாயம் எமக்கில்லை! ஆனால், ஏன் நாதகவை புறக்கணிக்கிறது மே 17 இயக்கம் என எம்மை நோக்கி கேள்வி வரும்போது எங்கள் பார்வையைச் சொல்லியாக வேண்டியது எம் கடமையாகிறது.
1/5
மே 17 இயக்கத் தோழர்கள் என்றுமே தமது கோரிக்கைகளையே முன்வைப்போமே ஒழிய, தன்னை முன்வைப்பதில்லை. இந்த அரசியல்தான் தன்னலமின்றி இனத்திற்கான சமூகத்திற்கான அரசியலை செய்ய இளம் தோழர்களையும் களம் காணச் செய்துள்ளது. அனைவரையும் இணைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.
2/5
சுப்ரமணியசாமிக்கும் சோவிற்குமான முரண்பாடுகளோ குருமூர்த்திக்கும் இந்து ராமுக்குமான முரண்பாடுகளோ பொதுவெளிக்கு வருவதில்லையென்றால், தமிழர் அமைப்புகளுக்குள்ளான முரண்கள் எதற்கு பொதுவெளியில் விவாதித்து தமிழர் மேலும் பிளவுபடுத்தப்பட வழி சமைக்க வேண்டும்?
2014 ஏப்ரல் தேர்தலுக்கு இரண்டு வாரத்துக்கு முன்னாடி ஐயா.நெடுமாறன் நடத்திய நிகழ்ச்சியில் தங்களை இணைத்து கொண்ட நாடகம் இது. இந்த கூட்டம் நடந்து 10-15 நாட்களில் அதிமுகவிற்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தை சீமான் தொடங்கினார்.
அந்த பிரச்ச்சார பயணத்தில் மே17 இயக்கத்தையும் இணைக்கக் கோரி கேட்டனர். அதிமுக ஆதரவு பிரச்சாரம் என்பதை அறிந்தவுடன் நாம் மறுத்தோம். அதிலிருந்து மே17 இற்கு எதிரான தெலுங்கர் எனும் அவதூறுப் பிரச்சாரத்தை நாதக தொடங்கியது.
👇🏼
அதிமுகவிடம் பேரம் பேச தம்மிடம் இந்த அமைப்புகள் இருப்பதாக காட்டிக்கொள்ளவே இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தது அம்பலமானதால் இவர்களிடமிரிந்து மே17 விலகியது. ஓட்டுப்பொறுக்கும் காண்ட்ராக்ட் பெறுவதற்காக சீமான் நடத்திய நாடகம் இது.
இந்தியை தமிழர்கள் மீது திணிக்கும் முயற்சி நடக்கும் போதெல்லாம் ஒரு மொழி என்பதற்காக மட்டும் இந்தியை நம் முன்னோர்கள் எதிர்க்கவில்லை. அதன் பின்னால் இருக்கும் ஆதிக்கத்திற்காகத்தான் எதிர்த்தார்கள்.
உதாரணமாக 1920இல் யங் இந்தியா பத்திரிக்கையில் எழுதிய காந்தி
”திராவிடர்கள் சிறுபான்மையினர். ஆகவே இந்தியாவில் இருக்கிற பிறபகுதிகளில் உள்ளவர்கள் திராவிடர்களுடன் பேசவேண்டுமென்றால் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றை கற்றுக்கொள்ளவேண்டும். அது சிரமம்.
அதற்கு பதிலாக திராவிடர்கள் தேசிய மொழியான இந்தியை கற்றுக்கொள்ளலாம். அதுதான் தேசிய பொருளாதாரத்திற்கு உகந்தது”.
இதில் மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றோடு முடிந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் காந்தி ’தேசிய பொருளாதாரத்திற்கு நல்லது’ என்கிறார். அது என்ன தேசிய பொருளாதாரம்.