“வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று உலக வல்லாதிக்கங்களாளும் கருதப்பட்ட ஆனையிறவு இராணுவப் படைத்தளத்தை 2000-ஆம் ஆண்டு இதே நாள் (22-04-2000) விடுதலைப்புலிகள் முற்றாக
கைப்பற்றினர்.
ஆனையிறவு யாழ் நிலத்திற்கான கணவாய் என்பார்கள். இது 1760 லிலேயே போர்ச்சுகீசியர்களால் கோட்டையுடன் கூடிய பாதுகாப்பு தளமாக மாற்றப்பட்ட இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நிலம்.
இப்பகுதி வழியாகச் செல்லும் தமிழர்கள் சிங்களப் படையினரால் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டனர், பலர் காணாமலும் ஆக்கப்பட்டனர். இப்படியாக 240 ஆண்டுகளாக அந்நியர் ஆக்கிரமிப்பில் இருந்த ஆனையிறவு தளத்தை மார்ச் 26, 2000 துவங்கிய சமரின் வழியாக ஏப்ரல் 22, 2000 தமிழர் படை கைப்பற்றியது.
20,000 சிங்களப் படையினரை 4000 தமிழ் படையினர் வென்று வரலாறு படைத்தனர். தமிழீழத்தின் தமிழர் படையை தலைமை ஏற்று நடத்திய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும், உலகம் போற்றிய குடாரப்பு தரையிறக்க தளபதியாகச் செயல்பட்ட பிரிகேடியர் பால்ராசு
மற்றும் பெண்கள் அணியின் பிரிகேடியர் விதுசா உள்ளிட்ட ஏனைய தமிழர் படைத்தளபதிகளும் உலக இராணுவ போர்த்தந்திர வரலாற்றில் நீங்கா தடம் பதித்தனர். தமிழர் தலைநிமிர்ந்தனர்.
“இந்த ஒப்பந்தமானது தமிழீழ மக்களின் அரசியல், தேசிய நலன்களைப் பேணுவதாக அமையவில்லை. தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனையின் சிக்கலான பரிமாணங்களை எந்த வகையிலும் செம்மையாக அணுகவில்லை. அவற்றிக்கு பரிகாரம் காண முனையவில்லை.
மாறாக, ஈழத்தமிழரின் தேசிய பிரச்சனையை முற்றிலும் தவறான அடிப்படையில் இந்த ஒப்பந்தம் தொட்டு நிற்கிறது”
– இந்திய இலங்கை ஒப்பந்தம் – விடுதலை புலிகளின் நிலைப்பாடு, பக்கம்-3
With the oppressed farmers' rise against the extreme taxes, loots and exploits of the British rule as background, Palayams became the base of the revolution. Starting from Poolithevan, Ondiveeran, Azhagumuthukkoan, many other Palayams and warriors united, lateron.
Sivagangai Palayam became shelter for these warriors; Viruppaachi became their training basecamp.
Nellai - Panchalankurichi, Sethuseemai, Thanjai mandalam and Kongu mandalam were brought into this warzone.
"ஐரோப்பியர்களின் அதிகாரமும் விழும் நாளில் நிலையான கண்ணீரற்ற மகிழ்ச்சியை பெறுவோம்"
மருது சகோதரர்கள் 1801-ஆம் ஆண்டு திருச்சி கோட்டைச் சுவரில் வெளியிட்ட புரட்சிகர பிரகடனம்!
👇🏼🧵👇🏼🧵👇🏼
ஆங்கிலேயர் ஆட்சியில் கடுமையான வரி, கொள்ளை, சுரண்டல் மூலமாக ஒடுக்கப்பட்ட உழவர்களின் எழுச்சியை பின்புலமாக வைத்து பாளையங்கள் புரட்சியின் ஊற்றாயின. பூலித்தேவன், ஒண்டிவீரன், அழகுமுத்துக்கோன் எனத் துவங்கி பல பாளையங்களும், போராளிகளும் பிற்காலத்தில் ஒன்றாகினர்.
சிவகங்கைப் பாளையம் இந்தப் போராட்டக்காரர்களுக்கு அடைக்கலமானது.
விருப்பாச்சி பயிற்சிக் களமானது.
நெல்லை - பாஞ்சாலக்குறிச்சியும், சேதுசீமையும், தஞ்சை மண்டலமும், கொங்கு மண்டலமும் இப்போராட்ட கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டன.